ஞாயிறு, 27 மார்ச், 2022
முருகரின் பஞ்ச கனிம நுண்ணோக்கி
செவ்வாய், 22 மார்ச், 2022
மூளைக்குள் ஐந்து தொழில்கள்
மூளைக்குள் ஐந்து தொழில்கள்
முருகப்பெருமான் அருளிய "மூளை எனும் தலைமை சுரபி" என்னும் நூலில் இருந்து அடியேன் எனது புரிதலில் சில வரைபடங்கள்.
1) மேலே உள்ள செயல்படத்தில் முதலில் வெளிப்படுவது நஞ்சு.
இரண்டாவதாக வெளிப்படுவது அணுக்கள்.
மூன்றாவதாக வெளிப்படுவதே அமிர்தம்.
இதன்மூலம் மேலும் இரண்டு விசயங்களை நாம் புரிந்துகொள்ளலாம்.
2) பார்கடலைக் கடையும்போது முதலில் நஞ்சு, இரண்டாவதாக செல்வம், இறுதியாக அமிர்தம்.
3) நமது கர்மா இறைவனால் நீக்கப்படும்போது,
- ஆன்மாவை சிறைப்படுத்தும் கர்மா அழியும்போது முதலில் வெளிப்படுவது துன்பம் என்ற நஞ்சு. சோர்ந்து போகாதீர்.
- இரண்டாவதாக வெளிப்படுவது செல்வமும் புகழும். மயங்கி விடாதீர்கள்.
- மூன்றாவதாக வெளிப்படுவது அமிர்தமான இறையாற்றல். இனி சூழ்ந்திருப்போர் உங்களிடம் பிராத்தனை வைப்பார்கள். அடக்கமாய் அதை இறைவனிடம் சமர்பியுங்கள்.
இந்த நூலைப்பற்றிய முதல் பதிவு கீழே.
http://fireprem.blogspot.com/2020/02/blog-post.html?m=1
உங்கள்,
அகத்திய பக்தன்.
ஞாயிறு, 20 மார்ச், 2022
பொறுப்புள்ள தந்தையின் வேண்டுதல்
பொறுப்புள்ள தந்தையின் வேண்டுதல்.
- இறைவனோடு விரைவில் தன் உயிர் சேரவேண்டும் என்ற நோக்கமே ஞானம்.
- மேற்கண்ட ஞானத்தோடு தன் அன்றாட கடமைகளை செய்துகொண்டிருப்பதே கர்மயோகம்.
- இன்ப துன்பத்தில் கவனம் வைக்காமல் உற்சாகமாய் இருப்பதே உயர்வு.
- இறைவனோடு விரைந்து சேரவேண்டும் என்ற ஞானத்தை, தினமும் தவறாமல் பணிந்து ஏக்கத்தோடு பிராத்திக்கவேண்டும்.
- இந்த பிராத்தனையோடுதான் ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கவும் முடியவும் வேண்டும்.
- சிறிதும் சந்தேகம் இல்லாமல் உண்மையாக தினமும் இந்த ஞானத்தை வேண்டிப் பிராத்தனை செய்பவருக்கு, இன்பமும் துன்பமும் அடிபணியும்.
- இயற்கை உன்னைக் காதலிக்கும்.
- மரணத்திற்கு அஞ்சாதவரைக் கண்டு சூழ்ந்திருப்போர்கள் வணங்குவார்கள். தீயோர்கள் அஞ்சுவார்கள்.
- நம் ஆன்மா புவியீர்ப்பு சக்தியோடு மும்மலக் கயிற்றால் பிணைக்கப்பட்டுள்ளது.
- மும்மலக் கயிற்றை விரைந்து அழிக்கக்கூடியதே மேற்குறிப்பிட்ட ஞானம்.
- புவியீர்ப்பிலிருந்து விடுபட்ட ஆன்மாவாய் பூமியில் வாழ்வோரே உயர்குலத்தோர்.
- ஆன்மாவை சிறைப்படுத்தும் கர்மா அழியும்போது முதலில் வெளிப்படுவது துன்பம். சோர்ந்து போகாதீர். மேற்குறிப்பிட்ட ஞானத்தை தொடர்ந்து பிராத்தியுங்கள்.
- இரண்டாவதாக வெளிப்படுவது செல்வமும் புகழும். மயங்கி விடாதீர்கள். மேற்குறிப்பிட்ட ஞானத்தை தொடர்ந்து பிராத்தியுங்கள்.
- மூன்றாவதாக வெளிப்படுவது அமிர்தமான இறையாற்றல். இனி சூழ்ந்திருப்போர் உங்களிடம் பிராத்தனை வைப்பார்கள். அடக்கமாய் அதை இறைவனிடம் சமர்பியுங்கள்.
- உங்கள் அன்பிற்குரியவர்களும் விரைந்து இறைவனிடம் சேரவேண்டும் என பிராத்தியுங்கள்.
- நீங்கள் வெருப்பவரும் மன்னிக்கப்படட்டும். அவரும் விரைந்து இறைவனிடம் சேரவேண்டும் என பிராத்தியுங்கள்.
- ஆன்ம விடுதலை என்பது தற்கொலை அல்ல. ஆன்மாவின் புவியீர்ப்பை விரும்பித் துறப்பது.
- ஆன்ம விடுதலை என்பது பரதேசியாய் திரிவது அல்ல. சாமியாராகவோ பிரம்மசாரியாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை.
- முந்தைய பிறவியில் நானே உன்னைப் பெற்று வளர்த்திருப்பேன்.
- எனது குழந்தைகளே என்னைச் சூழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
- எனது குழந்தைகள், ஒழுக்கமும் இறைபக்தியும் கொண்டவர்கள்.
- எனது ஆன்ம தொடர்பை விரும்புவோர் என்னை தன் தந்தையாக ஏற்கலாம்.
- நாசிக்குக் கீழே என் சுவாசம் முமுமையாக நின்றபின் என்னை நம்பலாம்.
கலியுகத்தின் வீரியத்தை அடியேன் குரு அருளால் உணர்ந்து எழுதிய மற்றொரு பதிவு கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்.
http://fireprem.blogspot.com/2021/05/blog-post.html?m=1
பெரிதினும் பெரிது கேள் ! இறைவனிடம் இறைவனையே கேள் !!.
உங்கள்,
அகத்திய பக்தன்.
சனி, 12 மார்ச், 2022
கர்ம ஞானம்
கர்மாவின் லக.. லக.. லக..
சில ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ஜோதிகா நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் கொடூர சிரிப்பொலியான "லக லக லக" வை நீங்கள் நிச்சயம் மறந்திருக்க முடியாது. முற்பிறவியில் தன்னையும் தன் காதலனை கொலை செய்த, வேட்டையன் ராஜாவை கொல்லத் துடிக்கும் நாட்டியக்காரி ஆவி, ஜோதிகாவின் உடலில் புகுந்து தன் கோபத்தை வெளிப்படுத்தும். கிளைமாக்ஸில் வேட்டையன் ராஜாவை கொல்வது போல் காட்டி, அந்த நாட்டியக்காரி ஆவியை சமாதானம் செய்வது தான் இந்த கதையின் முக்கிய சாராம்சம். அறிவியல் பூர்வமான மனோதத்துவமாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது நாம் புரிந்துகொள்ள போகும் ஒரு அற்புதமான சூட்சுமத்தை இங்கு பார்க்கலாம். அதற்கு முன் நமது குருநாதரையும், எனது முற்பிறவிகளிலிருந்தே எனக்கு ஆசானாகவும் அப்பனாகவும் அன்னையாகவும் ஞானம் புகட்டிய பரிமள குரு அன்னையின் பாதங்களையும் பணிந்து வணங்கி நம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நாம் இந்தப் பிறவியிலோ அல்லது கடந்த பிறவியிலோ, பிற உயிர்களை நோக்கி செய்த காரியங்களின் எதிர்வினையே கர்மா.
எனது சாப்ட்வேர் அனுபவப்படி சொல்லவேண்டுமெனில், ஒரு அவுட் புட் இருக்கிறது எனில் அதற்குரிய இன்புட் நிச்சயமாக இருந்தாக வேண்டும். every output must have its relevant input.
ஒவ்வொருவரும் அவரின் கர்மாவை அதற்கு உரிய காலத்தில் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்பது விதி. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. எனினும் இந்த கர்மா என்னும் தலைவிதியின் வீரியத்தை குறைக்கும் அல்லது அழிக்கும் ஆற்றல் ஒற்றை அணுவுக்கு மட்டும் உண்டு. இந்த ஒற்றை அணு தான் பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். இதுவே ஒவ்வொருவரின் சிரசிலும் உயிராக உள்ளது. இந்த ஒற்றை அணு வீரியமாய் செயல்படுவதற்கான ஆற்றலைப் பெற வேண்டுமெனில், நாம் "இறைஞ்ச" வேண்டும். அதாவது இறைவனை பணிந்து வணங்க வேண்டும். அவ்வாறு பணிந்து வணங்கும் பொழுது விண் ஆற்றல் இந்த ஒற்றை அணுவிற்கு அதிகமாய் கிடைக்கும்.
கர்மாவின் காரணத்தால் சிறைப்பட்ட ஆன்ம துகள்களை விடுவிக்கும் ஆற்றல் ஒற்றை அணுவிற்கு உண்டு.
அடியேன் எனது அனுபவம் மற்றும் புரிதலின்படி கடுமையான கர்மாக்கள், நாம் விரும்பத்தகாத கனவுகளாகவும் வெளிப்படுவதும் உண்டு. சிறைப்பட்ட ஆன்மத்துகள்கள் முழுமையாக விடுதலை ஆகும்வரை, இது போன்ற விரும்பத்தாக கனவுகள் தொடர்ச்சியாக வரும்.
உதாரணமாக ஒருவர் பலரோடு திருமணபந்தம் மூலமோ அல்லது வேறு மார்க்கத்திலோ உறவு கொள்ள வேண்டும் என்ற தலைவிதி இருந்தால், அந்த விதியை ஒற்றை அணுவால் கனவுகளாக வெளிப்படுத்தி சாமாதானம் செய்து சிறைப்பட்ட ஆன்மத்துகள்களை விடுதலை செய்யமுடியும். முக்கியமாக ஆழ்ந்த பக்தி வழிபாட்டிலோ அல்லது சக்திவாய்ந்த ஆலயங்களுக்கு யாத்திரை செய்து விட்டு வந்த பிறகோ, அதிகமான விரும்பத்தகாத கனவுகள் ஏற்படுகிறது எனில், அவரது சிறைப்பட்ட ஆன்மத்துகள்கள் விடுபடுகிறது என்று பொருள். இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை, இறைவன் உங்களை வழி நடத்துகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.
இனி மீதமுள்ள தகவல்களை நீங்கள் கீழே உள்ள பட குறிப்புகளிலிருந்து புரிந்துகொள்ளலாம். எனினும் விவரமாக புரிந்து கொள்ள பாண்டிச்சேரி ஞானாலயத்தின் நூல்களை வாங்கிப் படித்து பயன் பெறுங்கள்.
ஒற்றை அணு - சுய விபரம் - கீழே உள்ளது
http://fireprem.blogspot.com/2022/04/blog-post.html?m=1
உங்கள்,
அகத்திய பக்தன்
வெள்ளி, 4 மார்ச், 2022
கணாபத்திய ஞானம்
கணாபத்திய ஞானம்
உச்சிஷ்ட கணபதி :-
இது குறைந்தது 12 ஆண்டுகள் யோக ஞான மார்க்கத்தில் உள்ளோர்க்கு மட்டும். மற்றோரும் அறிந்துகொண்டால் சிறப்பு. நம் கோவில் சிற்பங்களின் ஞானத்தை அறிவார்கள். ஒரு நாளின் இறுதி நாழிகை அதாவது அறுபதாம் நாழிகை அல்லது பிரம்ம முகூர்த்தத்திற்கு முந்தைய நாழிகையில் பராசக்தி என்ற உயிர் எந்த ஆற்றலும் இல்லாமல் நிர்மல தன்மையோடு இருக்கும். இதையே நிர்மலா தேவி என்று சித்தர்கள் அழைப்பார்கள். அவளின் நீல நிறம் நிர்மல தன்மையையும், இருளும் வெளிச்சமும் சந்திக்கும் நேரத்தையும் குறிக்கிறது.
இந்த அபூர்வமான நேரத்தில் கணபதி என்ற சுழுமுனையை நிர்மலா தேவியாக இருக்கும் நாதத்தோடு பொருத்தி இருப்பதே உச்சிஷ்ட கணபதி என்று பொருள்படும்.
இது கேசரி யோகத்தின் ஒரு சிறப்பு நுணுக்கம். அகம் மற்றும் புறம் நுணுக்கத்தின் மூலம் நாதத்தோடு இணைதல். இந்த உச்சிஷ்ட கணபதி யோக நுணுக்கம், யோகிக்கு அரிய பல சித்திகளை தரவல்லது. ஆனால் யோகியானவர் குறைந்தது 12 ஆண்டுகள் இறைவனோடு சேர வேண்டும் என்ற வேண்டுதலோடு யோகத்தில் இருந்திருக்க வேண்டும்.