ஓம் அகத்தீசாய நமஹ.
ஆன்மீக நண்பர்களே!
வரும் ஜனவரி இரண்டாம் தேதி காலை ( 2-Jan-2021 ) நமது குருநாதர் அகத்தியர் மகாசித்தருக்கு ஜனன நட்சத்திர பூஜை *வெள்ளக்கோவில் சித்தர்கள் சிவாலயத்தில்* நடக்க இருக்கிறது. இந்த நாளில் காலை நேரம் சுமார் 11 மணி அளவில் என்னிடம் உள்ள பழைய புத்தகங்களை கோயில் செலவிற்காக ஏலம் விடலாம் என திட்டமிட்டிருக்கிறோம். இதை மிகக் குறைந்த விலையில் ஏலம் விடுகிறோம். இதில் வரும் தொகை அனைத்தையும் கோயில் பராமரிப்பு செலவிற்கு காணிக்கையாக கொடுக்கலாம் என விரும்புகிறோம். இதுபோல நீங்கள் வைத்திருக்கும் பழைய புத்தகங்களையும் இங்கு கொண்டுவந்து ஏலம் விட்டு வரும் தொகையை கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்கலாம். இதன் மூலம் நமக்குள் புத்தக சுழற்ச்சி நடைபெறும், மேலும் கோயில் பராமரிப்பு செலவிற்கு காணிக்கை கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்.
எனவே அனைவரும் தவறாமல் ஜனவரி இரண்டாம் தேதி காலை வெள்ளக்கோவிலில் உள்ள சித்தர்கள் சிவ ஆலயத்திற்கு வந்து நமது குருநாதரின் அருளை பெற்று, புத்தகங்களையும் குறைந்த விலைக்கு பெற்றுச்செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கோவில் முகவரி :-
அகத்தியரின் சித்தர்கள் சிவாலயம், கரூர் மெயின் ரோடு, ஒத்தகடை பஸ் ஸ்டாப், நாட்ராயன் கோவில் வழி சாலை, கே வி பழனிசாமி நகர் அருகில், *வெள்ளகோவில்* திருப்பூர் மாவட்டம்.
🙏🙏🙏 மேற்கண்ட செய்தியை தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு இயன்றவரை தயவுசெய்து பகிருங்கள். அவர்கள் அருகே இருந்தால் வருவார்கள்.
திருப்பூர், காங்கேயம், பல்லடம், கரூர், கோவை.
ஓம் அகத்தீசாய நமஹ
ஸ்ரீ அகத்தியர் குடும்பம், கோவை.