ஞாயிறு, 27 நவம்பர், 2022

விதியோடு விளையாடி, விதியோடு உறவாடி

  Daughter 2 Doctor


this blog started with small notes for the past 2 years. detailed structured blog will be written later.

தற்போதைக்கு இந்த  வலைப்பக்கம்  கடந்த இரண்டு ஆண்டுக்கான சிறு குறிப்புகளாகவே உள்ளது. விரிவான வலைப்பக்கம் சில நாட்களுக்குப் பிறகு எழுதி வெளியிடப்படும்.


*****###*****

மருத்துவக் கல்வியை விரும்புவோரிடம் சில கேள்விகள் :-

1) மருத்துவக் கல்வியை விரும்பக் காரணம் என்ன?

  நிறைய பணம் சம்பாதிக்கவா?

 குடும்ப கௌரவத்திற்காகவா?

 பெற்றோர் நிர்பந்தமா?

  பெருமை? பந்தா? கெத்து?

 மனித சமூகத்திற்கு சேவை செய்யவா?

 போட்டி அல்லது சவால் விட்டதற்காகவா?

எதிர்பார்ப்பில்லாத உள்ளுணர்வா? (ஆழ்மனம்)


2) நீட் தேர்வில் 600 க்கு மேல் மதிப்பெண் இலக்கு உடையவரா?

 எட்டாம் வகுப்பில் இருந்து தொடர்ந்து முதல் மதிப்பு எடுத்தவரா?

 பனிரெண்டாம் வகுப்பில்  இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக கணிதப்பாடம் எடுத்தவரா?

 நீட் முதல் தேர்வில் 500க்கு மேல் எடுத்தவரா?

ஆழ்மனத்தில் பதிந்துள்ள கர்மாவில் எத்தனை சதவிகிதம் நம்பிக்கை உள்ளது?


3) ஜாதகத்தில் அமைப்பு இல்லை, எனினும் பிடிவாதமாய் மருத்துவக் கல்வி படித்தால்?

 தாராளமாகப் படிக்கலாம், ஆனால் பிரசித்தி பெற்ற மருத்துவராக பணிபுரிய முடியாது. எங்கள் கோவை குடியிருப்பு பகுதியில் பல சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மருத்துவத்தில் M.D படித்தவர்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட எம்பிபிஎஸ் டாக்டர்தான் இங்கு "கைராசி மருத்துவர்" என்று பிரபலம். அவரிடம் தான் அதிகமான நோயாளிகள் அனுதினமும் வருவார்கள்.


4) ஜாதக அமைப்பு உள்ளது, விருப்பமும் உள்ளது, நன்றாக படிக்கக் கூடியவர். ஆனால் மருத்துவக் கல்வி கிடைக்கவில்லை. ஏன்?

 என் உறவினர் ஒருவருக்கு இதே நிலைதான். சாப்ட்வேர் இன்ஜினியராக நிறைய சம்பாதிக்கிறார், ஆனால் மருத்துவராக முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது. ஜாதகத்தில் குரு நல்ல கட்டத்தில் இருந்தும் பலன் இல்லாததற்கு காரணம், அசுர கிரகங்கள் எதுவும் குருவுக்கு அருகில் துணையாக இல்லாததே. அசுர கிரகங்களில் செவ்வாய் அல்லது கேதுவின் துணை முக்கியம். ஒருவேளை இதையும் மீறி அவர் பிடிவாதமாய் மருத்துவர் கல்வி படித்திருந்தாலும், மருத்துவராக பணிபுரிய முடியாது. அவர் மருத்துவம் சார்ந்த படிப்பில் விரிவுரையாளராகவே பணிபுரிந்து இருப்பார். 

இனி ஆழ்ந்த விருப்பத்தின் பதிவினால் தனது குழந்தையை மருத்துவராகப் பார்த்து திருப்தியாவார். மேலும் இவர் மறு பிறவி எடுத்தால் மருத்துவர் ஆவதற்கான கர்மா அதிகமாக இருக்கும்.


5) எல்லாம் நம் திறமையிலும் முயற்சியிலும் தானே உள்ளது, இந்த கர்மா குர்மா ஆழ்மனம் இதெல்லாம் தேவைதானா?

நியாயமான கேள்வி. வருட கணக்கில் பலமுறை நீட் தேர்வு எழுதியும் ஏன்

பலரால் தேர்வாக முடியவில்லை? ஏன் இத்தனை தற்கொலைகள்? வெறும் பணத்தினால் மட்டும் திறமை வந்துவிடுமா? விதி மாறிவிடுமா?


6) வெளிநாட்டில் படிக்க எவ்வளவு செலவாகும் ?

முதல் வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய். பிறகு வரும் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய். மொத்தம் ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டும் தனியாக ஓராண்டு இன்டெர்ன்ஷிப் இருக்கலாம். 

விடுதி உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், மாதம் 6000 முதல் 10 ஆயிரம் வரை அனுப்ப வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வதற்கு விமான கட்டணம் ரூபாய் 40,000 முதல் 80 ஆயிரம் வரை வரலாம்.

இந்த நாட்டில் பொருட்களின் விலை இந்தியாவின் விலையை விட மூன்று மடங்கு அதிகம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


7) வெளிநாட்டில் படிக்க எந்த மருத்துவ கல்லூரி சிறந்தது ?

உங்களுக்கு தெரிந்தவர் மூலம் எந்த கல்லூரியில் வேண்டுமானாலும் படிக்கலாம், எந்த நாட்டிலும் சென்று படிக்கலாம். எனக்குத் தெரிந்த கல்லூரி கிர்க்கிஸ்தானில் உள்ளது. எனது இ மெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டால் போன் நம்பர் தருகிறேன்.


8) வெளிநாட்டில் படித்து முடித்த பின் இந்தியாவில் வந்து மருத்துவராக வேலை பார்க்கலாமா ?

அதற்கு இந்திய அரசாங்கத்தின் fmge என்ற ஒரு பரிட்சையை  பாஸ் செய்ய வேண்டும். வெளிநாட்டில் எங்கு படித்தாலும் இங்கு அந்த பரிட்சை எழுதுபவர்கள், வருடத்திற்கு வெறும் 18 சதவீதம் தான் பாஸ் செய்கிறார்கள், மீதம் 82 சதவீதம் பெயில் ஆகிவிடுகிறார்கள். எனில் ஐந்து வருடமும் ஒரே கவனமாக படித்து பாஸ் செய்து வரவேண்டும். மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும். முக்கியமாய் தலைவிதி இருப்பது நல்லது.

=======X========


20-Oct-2016 -  morning prayer.

எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஒரு வியாழனன்று, குருநாதரை வழிபட மலர்கள் இல்லாமல் சிறிது மனவருத்தமாக நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு விசித்திர யோசனை. என் இரு மகள்களையும் அழைத்து, குருநாதர் முன்பு நிற்கச் செய்து, "மலர்ப்பாதம் உடைய மகாமுனி தெய்வமே! இன்று இந்த இரு மகள்களையும் உங்களுக்கே மகள்களாக முழுமனதுடன் நான் சமர்ப்பிக்கிறேன்.


இன்று முதல் அடியவன் நான் உங்கள் வேலைக்காரனாக உங்கள் மகள்களை வளர்த்து கடமை செய்வேன் என் எஜமானானே! இவர்கள் சாதனை பதக்கங்கள் வாங்கினாலும் சரி, சோதனை நல்அனுபவங்கள் வாங்கினாலும் சரி! இரண்டுக்கும், நீங்களே இவர்கள் தந்தையாகப் பொறுப்பு. நான் என் கடமையை மட்டும் சிரத்தையோடும் விசுவாசத்தோடும் செய்வேன்" என்று முழுமனதாய் வாக்குக் கொடுத்துவிட்டேன்.

==========================

      சரணாகத அன்பு

      ஆன்ம சுதந்திர அன்பு

      பற்றற்ற அன்பு

==========================

ஒரு பிரபல ஜோதிடர் எழுதிய பதிவு,  மருத்துவ கல்வியை பற்றியது :-

https://astrochinnaraj.blogspot.com/2014/04/blog-post_25.html?m=1


https://youtu.be/5vyEDfxmmhk?si=BQ_5sZtIuSr3xDrq


=======X========


 கீழ்க்கண்ட பதிவுகள்.  நேரம் கிடைக்கும் போது படியுங்கள். ஒரே ரகசியத்தை தான் மாற்றி மாற்றி எழுதியிருப்பேன்.

http://fireprem.blogspot.com/2022/07/blog-post.html


https://fireprem.blogspot.com/2024/05/blog-post.html?m=1


https://fireprem.blogspot.com/2023/04/blog-post.html?m=1


https://fireprem.blogspot.com/2023/03/blog-post.html?m=1

=======X========



27-Nov-2022 - conversation with my daughter about the purpose the human soul :-

[11/27, 10:42 PM] : place of soul

: difference between uyir and athma

: god inside our soul

: temple prayer

: purpose of birth

: subconscious mind or inner mind

: outer mind

: purpose of  subconscious mind

: who should dominate inner or outer mind?

: what if outer mind tried to control inner mind?

: what if inner mind tries to control outer mind?

: what are the positive if maya karma and ego?

: what are the negative of maya karma and ego?:

: what must be the daily prayer without fail?

: we should never fear of what?

: we should always fear of what?

no output without input

reverse engineering to find previous birth based on current birth output.



career path discussion with daughter.

daddy: what is your interest after school?

daughter: medical

dad: but you have not studied well in school.

dau: yes, but i will prepare well for medical.

dad: medical is very difficult. why not to become a software consultant? more money, foreign travels, enjoy personal life more and more. also, degree in software from good college is very easy and shorter period compare to medical.  no such benefits and enjoyment in medical. why can not you change your interest from medical to software?

dau: i understand. i still want medical to serve the human society. i hear the same from my inner voice. why medical is bad?

dad: as a girl, marriage at the right age is important. peace of mind in personal life is important. if choose medical, then marriage will be after age 30 or around 35. also child birth after 35 or around 40 is too late or no chance of child may be. personal life enjoyment may be very lessor.

dau: i understand. but still want to be in medical. i am ok with whatever personal life. i feel i am designed for medical to serve the humen society.

dad: well. let be check your design. allow me some time.

checking her subconscious mind through horoscope. karma is nothing but what is registered in subconscious mind from previous birth. subconscious mind is the reflector of the arrested soul particles inside the brain neuron. such particle will be liberated when it is really achieved or vice-versa. it is the fate which cannot be easily changed by humen. this is something beyond  our usual outer mind. result will be great if both subconscious and outer mind work together for the same goal. more in seperate blog.

analysed the horoscope to find the average percentage of the possibility in medical study.
1) my close friend who studied astrology as hobby. found 70% chance.
he learnt from below website.
my rating : 3.9 / 5

2) konrangi dhanasekar astrologer. found 80% chance. also he confidently told that this student has to study by spending more money. means, will not score much in neet exam. this has surprised me. i recommend him.
my rating : 4.5 / 5


3) guru bakyanathan astrologer. found 50% chance.
my rating : 4.0 / 5

5) kovai umadevi astrologer. promised 100%. she confidently "promised" that this student must study medicine or atleast medicine relevant. this has surprised me. i recommend her.
my rating : 4.5 / 5

4) paramakudi perumal kovil nearby astrologer. found 60% chance.
my rating : 4.0 / 5

calculate average percentage = ( 70 + 50 + 60 + 80 + 100 ) = 360 / 5 = 72 %.
above 70% looks ok to decide the karma. hope so.

note : just checking astrology itself will not help 100%. this just gives us approximate 50% clue for decison making. but consult atleast 5 geniune or experienced or qualified astrologers prediction and take the average percentage. it should be above 65%.

dad: i agree with your medical interest. i hope you will work hard for that. but your hard work alone is not enough. your subconscious mind should closely work with your outer mind without thicker firewall of maya, karma and ego poisons. it is very difficult to overcome this firewall.


dau: what is the procedure to overcome this firewall?

dad: you have to pray the almighty everyday in a different way. this is not like everyone pray the god. this firewall is always dependent to your physical life. so, you have to challenge that everyday without fail. i mean, pray willingly, truly with love as below.

"oh my dear god. i would like to dissolve myself at your feet as early as possible. please release me from this earth as early as possible. i am fully satisfied and happy with all my births and current human life.  i am happy to join with you. i am eagerly waiting for you every day."

இறைவா, உன் பாதம் சேரும் பாக்கியத்தை எனக்கு விரைந்து கருணையோடு அருள்வாய். உங்கள் பாதம் சேரும் பாக்கியத்தை மிகுந்த மகிழ்வோடும் ஏக்கத்தோடும்  எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.


dau: this prayer looks very strange. if i die, then how can i serve for the people. i will also have my personal life in future. does it mean i should not marry? or can i live life like others?


dad: when someone like you say "i", it always means your outer mind and the above firewall. that has to be challenged everyday. this prayer is the great technique i got from my soul master to weaken that firewall. i practice this for several years everyday without fail. i still live a normal family life and enjoy it more than others. so, you can also live your personal life like others. but self disciple is very important in the life. you can enjoy your marriage life like others. but always start your day with this prayer. read my other blogs to understand this better. you have lengthy wings to fly as high as you like. always remember that you are an angel. you will not be affected by anything or anyone. ensure that your soul master's feet is always on top of your head. the holy master can easily connect your subconscious mind to show you the right path and give the required courage.


dau: got it. thank you. i will take 1 year break to prepare neet.


dad: god bless you.


========X===========


Challenges in year 2023-24 :-

several health issues due to stress.

could not score in physics as not taken maths in higher secondary.

lost the hope of good mark in neet.

convinced to study other option.

taken admission in VLB janakiammal college for Bsc AI. 

taken admission in Krishna college for Bsc Comp. convinced to accept I.T field. course fee paid.

selected in Amrita kollam college entrance for Bio-tech. not willing to go IT field. plan change. got admitted and has to travel in one week.  convinced to stay in hostal which is for-away from home. fee paid. krishna fee refunded.

went to family doctor for medical fitness certificate for Amrita hostel. gurunathar and palaniandavar has given a twist through our family doctor.

plan changed to go foreign to study medicine. amrita fee refunded.


Poem

Pavma, dear, with heart so bright,

In medical school, you shine with light.

Your dedication, a beacon true,

A healer's path, you've chosen anew.


But let me share, with love and care,

A word of wisdom, beyond compare.

For those who seek life's joyful thrill,

Medicine's demands may make it hard to fulfill.


Long hours, intense study, and stress,

Leave little time for life's caress.

The weight of responsibility's heavy load,

May weary souls, and young hearts, implode.


If one seeks balance, freedom, and play,

Perhaps software's field would be a better way.

With coding skills, and tech's delight,

Flexibility and joy, may shine so bright.


But you, dear Pavma, have chosen this path,

With compassion, empathy, and a healer's math.

Your heart beats strong, with a desire to care,

And make a difference, beyond compare.


So though the journey may be long and tough,

Remember why you started, and don't lose your stuff.

Your passion, purpose, and love will guide,

Through late night shifts, and medical pride.


We're proud of you, dear Pavma, always,

For pursuing your dreams, with courageous gaze.

May your heart remain pure, and your spirit bright,

As you navigate medicine's challenging light.


Keep shining, dear, and never lose sight,

Of why you chose this noble fight.

You're making a difference, with every stride,

And we'll support you, side by side.

🩺👩‍⚕🩺

========X========


regards,

Agathiya Bakthan.

சிவயநம





சனி, 5 நவம்பர், 2022

சாக்த ஞானம் - உயிரின் இரகசியம்

 சாக்த ஞானம் - உயிரின் இரகசியம்


 பராசக்தியை பற்றிய சில முக்கிய யோக குறிப்புகளை குருநாதர் அருளால் இந்த பதிவில் பார்க்கலாம். நமது ரிஷிகளும் சித்தர்களும் வடிவமைத்த யோக நுணுக்கங்களைப் பற்றியது. சிறிது நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டிய பதிவு.

மானாமதுரை பஞ்சமுக பிரத்தியங்கரா தேவி கோவிலுக்கு அடியேன் குடும்பத்துடன் அடிக்கடி தரிசனம் செய்வது வழக்கம். வருடத்திற்கு இரண்டு முறையேனும் செல்வது உண்டு. கருவறைக்கு அருகில் நின்று தீபாராதனையோடு அம்பாளை தரிசனம் செய்துவிட்டு கண்களை மூடி உள்ளே பார்க்கும் பொழுது, உயிரில் ஒரு அற்புதத் துடிப்பை நம்மால் உணர முடியும். தாயான தேவி தன் உக்கிர ரூபங்களான காளி மற்றும் பிரத்தியங்கரா தேவி என வெளிப்படுத்தும்போது, ஏன் நாக்கை நீட்ட வேண்டும்? என்ற கேள்வி எனக்குள் ஒரு நாள் எழுந்தது. நமது முன்னோர்களான ரிஷி முனிவர்கள் ஏன் இப்படி ஒரு உக்கரமான ரூபத்தை நாக்கை நீட்டியவாறு வடிவமைக்க வேண்டும்?  இதற்கான யோகஞான விளக்கம் என்ன? என்ற கேள்வி எனக்குள் பெரிதாய் எழுந்தது. வழக்கம்போல் குருநாதரிடம் கேள்விகளை சமர்ப்பித்தேன்.




 சில காலம் கழித்து, ஒரு நாள் மாலை ஆழ்ந்த தியானத்திற்கு பிறகு குருநாதர் அருளால் விளக்கம் கிடைத்தது. பாண்டிச்சேரி ஜெயந்தி அன்னை மூலம் வெளிவந்த நூல்கள் எனது புரிதலுக்கு மிகவும் உதவியது. யோக விளக்கத்தை குறிப்புகளாக கீழே எழுதியுள்ளேன். குருநாதர் அருளால் புரியும். அடுத்த முறை நீங்கள் பிரத்தியங்கரா தேவியை வணங்கும் பொழுது, குருநாதருக்கு நன்றி சொல்லிவிட்டு, இந்த விளக்கக் குறிப்புகளை நினைவு கூறுங்கள். உங்கள் உயிரின் அருளாற்றல் பிரவாகமாய் விரிவதை உணரலாம். 


1) நமது புருவ மத்திக்கு உள்ளே அண்ணாக்கிற்கு மேலே நமது உயிர் இருக்கிறது. இந்த "உயிரே" நமது இயங்கு சக்திக்கு ஆதாரமாக உள்ளது.


2) சக்தியான உயிரை, நமது சித்தர்கள் பெண்பாலாக, அதாவது தாயாக வருணிக்கிறார்கள். இதற்கான விரிவான விளக்கம் "கலியுக காவியம் - ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலில் உள்ளது.


3) நம் தாயான உயிரை நமது சித்தர்கள் வாலைதாய், சக்தி, ஒற்றைஅணு, மனோன்மணிதாய், பாலா, நாதம், உகாரம், உப்பு என பல பெயர்களில் அழைக்கிறார்கள் வணங்குகிறார்கள்.


4) யோகியானவர் தமது நாவை இயன்றவரை அண்ணாக்கை நோக்கி மேல் நோக்கி ஒட்டி வைத்து, தம் உயிரான தாயை தியானிப்பார்கள். இந்த யோக நுணுக்கத்தை "கேசரி முத்திரை" என்பார்கள். இந்த யோக முறையை "கேசரி யோகம்" என்றும் அழைப்பார்கள். இந்த யோக விளக்கத்தை சுட்டிக்காட்டவே பராசக்தி தன் நாவை நீட்டி நமக்கு கேசரி யோகத்தை விளக்குகிறாள். 



நம் குருநாதர், கீழ்க்கண்ட பாடலில் இவளை "கேசரியாள்" என அழைக்கிறார்.


https://saumyasagaram.blogspot.com/2016/04/377-at-pinnacle.html?m=1


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எந்த மின்னணு சாதனமும் இல்லாமலேயே, ஒரு உயரிய யோக நுணுக்கத்தை இன்று வரை பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதற்காகவே நமது முனிவர்கள் சித்தர்கள் இப்படியான தேவி ரூபங்களை வெளிப்படுத்தினார்கள்.




5) பராசக்தி வெளிப்புறமாக நீட்டிய நாவை அதே அளவில், உட்புறமாக மேல் நோக்கி மனதால் பார்த்தால், நமது உயிரின் இருப்பிடத்தையே காட்டும். கீழே உள்ள படத்தில் அடியேன் சுட்டிக்காட்டி உள்ளேன். கீழ்நோக்கிய முக்கோணத்தை மேல் நோக்கிப் பாருங்கள், நன்கு புரியும்.



6)  கேசரி என்றால் "சிங்கம்" என்று பொருள்படும். பிரத்தியங்கரா தேவி சிங்க முகத்தை காட்டுவதன் மூலமும், நாவை நன்றாக நீட்டி காட்டுவதன் மூலமும் தாயான சக்தி, கேசரி முத்திரையின் மூலம் தன்னை ( உயிரை ) யோக மார்க்கமாக வழிபடும் முறையை தெளிவுபடுத்துகிறாள்.


7)  நமது உயிரான பராசக்தி அல்லது ஒற்றை அணு பல ஆயுதங்களை ஏந்திய உக்கிர தோற்றத்துடன் காளியாக காட்டுவது ஏனெனில் நமது சிரசில் இருக்கும் அசுரர்களான மாய கர்ம ஆணவத்தை அழிப்பதற்காகவே.  இத்தனை போராட்டங்களும் இரவு நேரத்தில் நமது மூளை நரம்பணுக்களில் நடக்கிறது. மாய கர்மா ஆணவத்தால் நரம்பணுக்களில் சிறைப்பட்ட ஆன்ம துகள்களை மீட்பதற்காகவே இந்த போராட்டத்தை தாயான பராசக்தி செய்கிறாள். இவள் தான் பயணிக்கும் மூளை பகுதியின் தன்மைக்கு ஏற்றவாறு தனது உருவத்தையும் ஆற்றலையும் மாற்றிக் கொள்கிறாள். இதனாலேயே பல அவதாரங்களாக சக்தி தேவி வெளிப்படுகிறாள்.  இதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை கீழ்கண்ட நூலில், ஆதிசக்தி அணு என்ற அத்தியாயத்தில் நீங்கள் படிக்கலாம்.



8) சென்ற மாதம் காளி மாதாவைப் பற்றிய ஒரு வட இந்திய பக்தி வீடியோவை youtubeல் பார்க்க நேரிட்டது.  இந்த வீடியோ காட்சிகள் மிக அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.  தேவியானவள் தான் செல்லும் இடத்திற்கு ஏற்றபடி தனது நிறத்தை நீலம் மற்றும் கருமை நிறமாக மாற்றி காளியாக உருவெடுக்கிறாள், பல ஆயுதங்களை எடுக்கிறாள்,  அசுரர்களோடு போராட்டம்,  சிறைப்பட்ட சிறு குழந்தையான ஆன்மத்துகளை மீட்டு தன்னோடு அணைத்து சேர்த்துக் கொள்கிறாள். 



கடைசியாக தனது உக்கிரமான வெப்ப ஆற்றலை தணித்துக் கொள்வதற்காக, உயரிய "குளிர்ந்த காந்த ஆற்றல்" வேண்டும் என்ற தேவை உருவாகிறது. இதற்காக ஆன்மாவான சிவனை தனது காலால் மிதிப்பது ( இடகலை என்ற காற்று நுணுக்கத்தால். கால் என்றால் காற்று என்று பொருள் ) போன்ற ஒரு நரம்பிழை நுணுக்கத்தின் மூலம் குளிர்ந்த காந்த ஆற்றலை வீரியமாக ஈர்த்துப் பெற்று தன்னை குளிர்வித்துக் கொள்கிறாள். இந்த புரிதலோடு கீழ்கண்ட யூடூயூப் வீடியோவை பாருங்கள். 

ஓம் அகத்தீசாய நமஹ.



 இங்கே ரத்தபீஜன் என்பது  அனைத்து வகையான புற்றுநோய்களைக் குறிக்கிறது. முக்கியமாக மூளை புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோய்.
பராசக்தியை சிம்மவாஹினி என்று அழைத்ததன் பொருள்,  சிம்மம் என்ற கேசரி முத்திரைக்கு மேலே இருப்பவள், கேசரி முத்திரையை வாகனமாகக் கொண்டவள் என்பதே.


நமது குருநாதர், காயத்திரி தேவியை "காயாஸ்திரி" என்று தனது நூலான "சௌமிய சாகரத்தில்" குறிப்பிட்டுள்ளார்.

காயம் + ஸ்திரி = காயாஸ்திரி.

அதாவது, காயம் என்ற நம் உடலில் இருக்கும் பெண் தெய்வமான "வாலை சக்தி".  கீழே நம் குருநாதரின் பாடலைப் பாருங்கள். இதற்கு மேல் யாரால் சொல்லமுடியும்? நாம் பக்தியோடு இறைவனை வணங்கும்போது, அதன் தத்துவம் மற்றும் இறைவனின் இருப்பிடத்தையும் தெரிந்து உள்ளுணர்ந்து வணங்கினால், பலன் மிக அதிகம்.


சௌமிய சாகரம் - பாடல் 460.

காணுகின்ற சுழிதனிலே சுழலாமல்தான, 
கருவான காயாஸ்திரி விஞ்சை கேளு,
ஊணுகின்ற விஞ்சையடா மவுன ஞானம்,
உண்மையென்ற ஞானமடா மந்திரவாலை,
தோணுகின்ற வாலையடா மந்திர ரூபி,
சுயஞ் சோதியான ஜெக ஜோதிதன்னை,
பூணுகின்ற சித்தமதாய் தானே நின்று,
பூரணமாய்க் கேசரியைப் பூசைபண்ணே.


பாடல் 459.

பாரப்பா பரஞான மூலமான
பத்தியுள்ள காயாஸ்திரி விஞ்சை தன்னை
நேரப்பா அறியாமல் மதங்கள் பூண்டு
நிசமில்லா ஆதிமறை யோர்கள் கூடி
வீரப்பா கொண்டதொரு அட்சரத்தையோதி
வீணிற் பலநாள் அலைந்து விசையுங் கெட்டு
தூலப்பா அடிப்படையும் தகர்ந்து நல்ல
சுழிவான சுழிதனிலே சுழன்றார் காணே.


9) பெண்ணரசி - காகபுஜண்டர்

நமது பழமையான கோயில்களில் பெண் சிலைகளின் வடிவங்கள் மிகவும் எடுப்பான உடல் அமைப்போடு செதுக்கப்பட்டு இருப்பதை பார்க்கும் பொழுது, சித்தர்கள் இதில் ஏதோ சூட்சமம் வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. நம் குருநாதர் ஆழ்மனத்திலிருந்து ஏதோ ஒரு முக்கியமான சூட்சுமத்தைக் க்ற்றுக்கொடுக்க வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். குருநாதர் நடத்தும் பாடம், 2019 ஆம் ஆண்டு காகபுஜண்டர் ஞானம் 80 என்ற நூலைப் படிக்கும் பொழுது தான் புரிந்தது. 44 ஆவது பாடலை கீழே காணலாம்


"இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
      என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா!
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்;
      ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
      புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்

மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே
      வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே.  பாடல் 44."


youtube song

https://www.youtube.com/watch?v=oEHIfXtjHWw


இப்போது மேற்கண்ட பாடலில் சில சொற்களை மட்டும் நன்றாகக் கவனியுங்கள். 
கம்பம், 
பெண்ணரசி,
 முன் பார்த்தால் புருட ரூபம்,
 பின் பார்த்தால் பெண் போல் ரூபம்.
 இந்த வரிகளை பொருளோடு பார்க்கும் பொழுது காகபுஜண்டரின் நுணுக்கமான யோகம் மற்றும் மருத்துவ அறிவியலை வியந்து பார்க்கிறேன்.
 கம்பம் என்பது உள்மூளை தண்டைக் குறிக்கிறது ( brain stem ).
 பெண்ணரசி என்பது  பீனியல் சுரப்பிக்கு மிக அருகே இருக்கும் உயிர் சக்தி ஆகும். பீனியல் சுரப்பியை seat of the soul என்று மருத்துவ அறிவியலில் குறிப்பிடுவார்கள்.
இப்போது கீழ்கண்ட உள்மூளைத்  தண்டின் பின்பக்க அமைப்பைப் பாருங்கள். பெண்ணின் உடலைப் போலவே இருக்கிறதா?




இப்போது நமது கோவிலில் உள்ள பெண் தெய்வங்களின் உடல் அமைப்பைக் கவனித்துப் பாருங்கள்.


 உள்மூளை தண்டின் பின்பக்கம்  பீனியல் சுரப்பியுடன். அசல் படம்.



வெப்ப ஆற்றலான உயிர்ப் பெண்ணிடம் இருந்து எப்படி காந்த ஆற்றலான அகார வெள்ளம், அல்லது அமிர்தம் கிடைக்கும் என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறேன். அதுவரை இந்த அமிர்தப் பெண்ணான மோகினியுடன் திருமாலின் யோகமார்க்கத் தொடர்பு என்ன என்பதை  யோசித்துக் கண்டுபிடிங்களேன் பார்க்கலாம்.


நமது ரிஷி முனிகள் வடிவமைத்த தத்ரூபமான சிலைகளின் பரிபாசையைப் புரிந்து கொள்ள முடியாமல், ஆபாசமாய் பார்த்துவிட்டோமே !!

புருடன் என்றால் ஆண் அல்லது ஆண் குரங்கைக் குறிக்கும். உள்மூளை தண்டின் "முன் பார்த்தால் புருட ரூபம்" என்று காகபுஜண்டர் பாடி இருப்பார். இப்போது கீழ்கண்ட பிட்யூட்டரி  சுரப்பியுடன் கூடிய மூளையின் உருவத்தைப் பாருங்கள். மூக்கு நீண்ட, வயிறு பெருத்த ஆண் தோற்றத்தைப் பார்க்கிறீர்களா?








மூக்கு நீண்ட ஒரு வகைக் குரங்கு.


இந்தக் குரங்குகளின் வயிறு இயல்பாகவே பெருத்த தோற்றம் உடையது.


இவ்வாறு  உள்முகமாகக் உள்மூளை உறுப்புகளை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி (visuvalise ), நமது உள்மூளையை நோக்கி தவம் செய்யும் பொழுது, சில ஆண்டுகளில் எளிதாக வாலை எனும் உயிரை உணர முடியும். 


10) வாசியோகம் - பெண்ணோடு போகம் :-

நமது மனதை ( வெளிமனம் ) வகாரம் அல்லது வாயு மூலக்கூறு என்று சித்தர்கள் கூறுவார்கள். இதற்கான குறியீடு "வா".

 நமது உயிர், வெப்பத்தன்மை கொண்டது. இயங்கு சக்திக்கு ஆதாரமானது.  ஆழ்மனத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டது. சித்தர்கள் நமது உயிரை  பல பெயர்களில் அழைப்பார்கள். கன்னிப் பெண், உகாரம், வாலை, சிகாரம், வன்னி என்ற பல பெயர்கள் உண்டு. இதற்கான குறியீடு "சி".

     இங்கே "வா" என்ற வெளிமனத்தை "சி" என்ற உயிர் அல்லது ஆழ்மனத்தோடு இணைப்பதையே, "வாசி"யோகம் என்று அழைக்கிறார்கள்.

தன் மனதை, தன் உயிரை நோக்கி செலுத்தும் பொழுது உடனே பலவிதமான எண்ணங்கள் குறுக்கீடு செய்து தடை செய்து விடும். அது அவ்வளவு சுலபம் அல்ல.  நீண்ட காலம் தொடர்ந்து பயிற்சிகள் செய்ய வேண்டும். கர்மாவை நீக்கிக் கொள்ள வேண்டும். மாயா மற்றும் ஆணவத்தில் நல்ல தெளிவு இருக்க வேண்டும்.

 போகநாதர் (பழனி) என்ற சித்தர் இந்த வாசியோகத்தின் மூலம், கன்னிப் பெண்ணான உயிரை தன் மனதோடு இணைத்து அல்லது புணர்ந்து அல்லது போகத்திலேயே இருந்ததால் அவருக்கு "போகர்" என்ற பெயர் உண்டாச்சு. இப்போது உங்களுக்கு புரிகிறதா? ஒருவர் தன் தமிழறிவை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த பாடல்களைப் புரிய முயற்சி செய்யும் பொழுது, என்ன ஆபத்து வரும் என்று ?

   அடியேன் எனக்கு இந்த சிறிய சூட்சுமம் புரிந்து கொள்வதற்கு ஆறு வருடங்களுக்கு மேல் ஆனது. பல ஆயிரக்கணக்கான  சித்தர் பாடல்களைப் படித்தும், யோகப் பயிற்சி செய்தும், ஓரளவிற்கு தான் புரிந்தது.  பாண்டிச்சேரி ஞானாலயத்தின் முக்கியமான நூலான "கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலை  படித்தபின் குருநாதர் அருளால் நன்றாகப் புரிய ஆரம்பித்தது.

அதிகாரம் உள்ளோர் தவறாகப் புரிந்து கொண்டால் வரும் விளைவு :-

 சித்தர் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு பெரிய தமிழ் அறிஞரானாலும் அல்லது தமிழ் பேராசிரியரானாலும் இயலாது.  சித்தர்கள் தன் உயிரோடு தன் மனதை இணைப்பதை, கன்னிப் பெண்ணோடு புணர்ந்தேன், அதனால் ஆயுள் நீடிக்கும், ஆரோக்கியம் நீடிக்கும் என்றெல்லாம் பாடல்களில் சொல்லி இருப்பார்கள். இதை சிலர் தவறாக புரிந்து கொண்டு கன்னிப் பெண்களை ஏமாற்றியோ மிரட்டியோ புணர்ச்சி செய்வது மூடநம்பிக்கையானது  சாபக்கேடானது. இதில் சிலர் எதேச்சையாகவே தன் விதிப்படிக்கு 90 வயதிற்கு மேல் நீண்ட காலம் வாழ்ந்து விடும்பொழுது, இந்த சாபக்கேடான செயலினால் தான் தன் ஆயுள் நீடித்ததாக அவரது வாரிசுகளும் நம்பி விடுவார்கள். இதனால் கன்னிப் பெண்களை மிரட்டி கற்பழிப்பதும், பிறகு அதை அதிகாரத்தால் மறைத்து விடுவதும் இந்த  கலியுக எல்லைக்காலத்தின் கொடுமையான செயல்.
11)  இறுதியாக கேசரி முத்திரையை பற்றிய சித்தர்களின் சில பாடல்களை பார்க்கலாம்.
திருமூலர்.
நாவில் நுனியை நடுவே விசிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லைச் சதகோடி யூனே
-திருமந்திரம் 803.


காகபுசுண்டர் ஞானம்
பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
    பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
    நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
    மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
    கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
ஒலி வடிவில் கேட்க,


சட்டைமுனி ஞானம் பின் - பாடல் 44.
சோமப்பால் சுழித்தோடுங் கேசரியைக் கண்டால்
சொல்லாத முத்திரையைச் சொல்லு றேனே.
சட்டைமுனி ஞானம் முன் - பாடல் 47.
தேனென்ற மொழியுடைய னமனாந் தத்தைத்,
தேவி பதம் என்ற கேசரி தான் காணே.


குறிப்பு: தேவி பதம் என்பது கேசரிதான் என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்த வரியின் கடைசியில், இதைக் காண் ( கண்டுகொள் )  என்றும் சொல்லிவிட்டார். இனியும் சந்தேகமா?
 நமது குருநாதர் - பாடல் 51 அகத்தியர் ஞான சைதன்யம்.
ஆழ்ந்துப் பார் சுழினைதனை அகாரத்தாலே
 அருமையுடன் குறித்து விட்டேன் நடுமூலத்தை
 வாழ்ந்திருக்க ஓரிதழைச் சுழியில் நாட்டி 
 வைத்தாக்கால் மெய்ச் சோதிமயஞ் சொன்னேன் முற்றே.
 குறிப்பு: ஓரிதழ் என்றால் நாக்கு என்று இப்பாடலில் பொருள்படும்.


 பராசக்தி பார்வையில் :-
நோய்க்கும் பார்! பேய்க்கும் பார்! என்று ஒரு மருத்துவ பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நோய்க்கு மட்டும் மருந்து கொடுத்து பலன் இல்லை, பேய்க்கும் நாம் மருந்து கொடுக்க வேண்டும். இங்கே பேய் என்பதை நமது பொல்லாத கர்ம வினை என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்குத்தான் நமது உயிரான பராசக்தி பல ரூபங்களை எடுக்கிறாள், அதாவது நீலி சூலி காளி சண்டி சாமுண்டி எனவும் பல வடிவம் எடுக்கிறாள்.

 குருநாதர் அருளால் நான் புரிந்து கொண்ட ஒரு ரகசிய சூத்திரம் இருக்கிறது. ஆனால் அதை நான் எனது உற்றார் உறவினரிடம் சொல்லும் போது அவர்கள் என்னை மிகவும் கோபித்துக் கொள்கிறார்கள். நான் என்ன நினைத்துக் கொள்வேன் எனில், சரிதான்! உண்மை கசக்கத்தானே செய்யும்!


ஞானாலைய நூல்களை 2018-19 ல் படித்த பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் எனது சிந்தனையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. குருநாதர் அருளால் எனது புரிதலையும் சில கேள்விகளையும் இங்கு வைக்கிறேன். உங்கள் கருத்தை நீங்களும் சொல்லுங்கள்


அடியேன் புரிதல் :-
 நமது முந்தைய பிறவிகளின் பதிவுகள் அல்லது கர்ம வினைகள் ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. 
ஆழ்மனம் என்பது சிறைப்பட்ட ஆன்ம துகள்களின் எண்ணத்தொகுப்பு. 
நமது ஒட்டுமொத்த கர்ம வினைகளின் ஒரு Plan Drawing அல்லது Overview என்பது நமது ஜாதகத்தில் இருக்கும்.
இவை அனைத்திற்கும் ராணியாக இருப்பவள், நமது உயிர் அல்லது வாலை அல்லது பராசக்தி அல்லது ஒற்றை அணு.

 இவள் நினைத்தால் மட்டுமே ஒரு கர்மவினை அல்லது சிறைப்பட்ட ஆன்மத்துகள், சமாதானமாகி விடுதலை அடைய முடியும். அதாவது முந்தைய பிறவியின் கர்மத்தால் வந்த நோய் அந்த சமயத்தில் தான் அந்த காலகட்டத்தில் தான் குணமாகும் என எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஜாதகர் தனது முந்தைய பிறவியின் கர்மநோயை இந்த குறிப்பிட்ட திசை மற்றும் புத்தி காலகட்டத்தில் அதை அனுபவித்து தீர்க்க வேண்டும் என்பது விதி ஆகிறது.


மனதில் தோன்றும் கேள்விகள் :-  

(1)  தெய்வச்சிலை என்பது யோக நுணுக்கம் தான் எனில், பக்தி வழிபாடு தேவையா?
பக்தி வழிபாடு கண்டிப்பாகத் தேவை. இதுவே மனது ஒருமுகமாக்கி பின் மனமுருகும்போது நம் உயிரை உணரலாம், இறைவனின் தொடர்பைப் பெறலாம். ஆனால் உங்கள் உயிரின் இருப்பிடத்தை நீங்கள் கண்டிப்பாய்த் தெரிந்திருக்கவேண்டும்.


(2)  ஒரு ஜாதகர் தனது முந்தைய பிறவியில் ஜமீன்தாராக இருக்கும்பொழுது பத்தாண்டு காலம் கடுமையான வேதனைகளை பலருக்கும் கொடுத்திருக்கிறார். இந்தப் பிறவியில் அவரது சனி திசையில் அதே பத்தாண்டு காலம் நோய்களால் துன்பப்படுகிறார், வலி வேதனைகளை அனுபவிக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். இங்கே இவரது கர்ம நோய்க்கு ஒரு வைத்தியர் கொடுக்கும்  மருந்து உடனே வேலை செய்ய வேண்டும் என்று என்ன கட்டாயம் இருக்கிறது? எப்படி வேலை செய்யும்? என்னதான் அற்புதமான அதிசயமான மருந்தாக இருந்தாலும், அந்த வைத்தியம், கர்ம வினையை அவர் முற்பிறவியில் கொடுத்த வேதனையை தீர்த்து விடுமா?

நம் உயிரான பராசக்தி அந்த வேதனையை எப்படி மன்னித்து குணப்படுத்துவாள்? தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதையாக வல்லவா இது இருக்கிறது?
ஆங்கில வைத்தியம் கர்ம வினைகளை பைபாஸ் செய்து ஷார்ட்கட்டில் போய் நோயை குணப்படுத்துகிறதா? எனில் அந்த நிறைவேற வேண்டிய கர்மவினைகள் ஒன்று சேர்ந்து என்னவாக மாறுகிறது?
மேலும் பல ஞான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


இப்படிக்கு,
அகத்திய பக்தன்.


   ----------------


இது தொடர்பான அடியேனின் பிற பதிவுகள் :-

1#  கர்மாவைப் பற்றிய அடியனின் ஒரு அனுபவப் பதிவை கீழே படிக்கலாம்.

http://fireprem.blogspot.com/2022/03/blog-post_12.html?m=0


2#   உச்சிஷ்ட கணபதியின் மூலம் ஒரு சிறப்பு கேசரி யோக நுணுக்கத்தை கீழே உள்ள பதிவில் படிக்கலாம்.

http://fireprem.blogspot.com/2022/03/blog-post.html?m=0

 

3#  உயிரான ஒற்றை அணுவின் சுய விபரங்களை கீழே உள்ள பதிவில் படிக்கலாம்.

http://fireprem.blogspot.com/2022/04/blog-post.html?m=1


4#    நமது குருநாதர், ஒற்றை அணு அல்லது வாலைத்தாயிடம் இருந்து எப்படி அருளைப் பெற்றார் என்ற குறிப்புகளை கீழே உள்ள பதிவில் படிக்கலாம்.

http://fireprem.blogspot.com/2020/10/blog-post_10.html?m=1






புதன், 19 அக்டோபர், 2022

ஒளியை நோக்கிய வாழ்வியல்

 

 பொதுவாக 40 வயது வரை நமது பிறவி நோக்கத்திற்கான ஆன்மீகப் பயிற்சிகளை பற்றி யோசிப்பதில்லை. ஏனெனில் நமது கவனம் முழுமையாக இல்லறம் மற்றும் பொருளீட்டலிலேயே இருக்கும்.   நமது பிறவியின் நோக்கத்தை நாம் 40 வயதிலாவது புரிந்து கொள்ள வேண்டும்.  உடனே நாம் நாற்பது வயதிலேயே பிரம்மச்சாரி ஆகிவிட வேண்டும் அல்லது சன்னியாசி ஆகி விட வேண்டும் என்று பொருள் இல்லை. 
 ஸ்விட்ச் போட்டவுடன் லைட் எரிவது போல் அறுபது வயதிற்கு மேலே  மன அமைதி மற்றும் பிறவி நோக்கத்திற்கான ஆன்மீகப் பயிற்சிகள் எளிதில் கைகூடி விடும், என்று நினைப்பது சாத்தியமாகாது. இதற்குரிய தயார்படுத்துதலை நாம் 40 வயதிலிருந்து 60 வயது வரை சிறிது சிறிதாக பயிற்சிகளை செய்து கொண்டிருக்க வேண்டும்.

 பாண்டிச்சேரி ஞானாலயத்தின் வாழ்வியல் என்ற நூலைப் படிக்கும் பொழுது, அடியேன் எனக்கு இதை எப்படி திட்டமிட்டு அட்டவணைப் படுத்துவது என்ற யோசனை வந்தது. குருநாதர் அருளால் கீழே ஒரு  அட்டவணையை தயாரித்துள்ளேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


வழிபாடு மற்றும் ஆன்மீக பயிற்சி

தினசரி ஈடுபாடு %.   
(
இல்லறம் மற்றும் தொழில் பாதிக்காத வகையில்)
















மேற்க்கண்ட சதவிகிதம் என்பது விழித்திருக்கும் தினசரி நேரத்தில்.
உதாரணமாக நீங்கள் ஒரு நாளில் விழித்திருக்கும் நேரம் 12 மணிநேரம் எனில், அதில் 5% என்பது 36 நிமிடங்கள்.



















இப்படிக்கு
அகத்திய பக்தன்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

மாரடைப்பு - ஆன்ஜியோ - ஸ்டன்ட்

 மாரடைப்பு - ஆன்ஜியோ - ஸ்டன்ட் வைத்தல்

குருநாதர் அருளால் ஒரு அனுபவ பதிவு.



மூலிகை வைத்தியம்.

 மூலிகை வைத்தியரின் முகவரி கீழே.

அடியேன் நெருங்கிய உறவினரின் அனுபவ பகிர்வு.




 மூலிகை வைத்தியத்திற்க்கு பத்தியம் கட்டாயம் உண்டு. உப்பு புளி இனிப்பு அசைவ உணவு கூடாது. 

மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு மருந்து எடுக்கவேண்டும்.




 ஆங்கில வைத்தியத்தில் பத்தியம் இல்லை. ஏனெனில் உப்புக்கு ஒரு மாத்திரை, இனிப்புக்கு ஒரு மாத்திரை, அசைவ உணவுக்கு ஒரு மாத்திரை,  இதனால் வரும் வயிற்று அல்சருக்கு ஒரு மாத்திரை,  என பல பல மாத்திரைகள். கீழே ஒரு உதாரணம் ( 70 வயது முதிய தாயார் ).





மேற்கண்ட மூலிகை வைத்தியத்திற்கு அடுத்தபடியாக "அடல் 54" என்ற ஹோமியோ மருந்தும் நன்கு வேலைசெய்யும். பக்க விளைவு இல்லாதது. உலகப் புகழ் பெற்றது. நீண்ட கால பயன்பாட்டுக்கு உகந்தது. எளிமையானது.








இயற்கை மருந்துகள் அனைவருக்கும் நன்றாகவே வேலை செய்யும். சிலரின் முந்தைய கால உணவுப்பழக்கம் மற்றும் இறுகிய கர்மவினையால் சிறிது தாமதமாக குணமாகலாம். ஆனால் இயற்கை நிச்சயம் குணமளிக்கும்.
ஆங்கில மருந்துக்கு கர்மா என்றோ மறுபிறவி என்றோ  கவலைப்படாது. அதைப் பொருத்தவரை வாழ்வா சாவா என்பது மட்டுமே. அடியேன் எனது அனுபவத்தில் ஆங்கில மருந்தை முற்றிலுமாக தவிர்க்க இயலாது. அது தான் கலியுகத்தின் தலைவிதி. உங்கள் தினசரி வாழ்வில் ஆங்கில சொற்களை பயன்படுத்தாமல் வாழ முடியுமா? இயன்றவரை குறைக்கலாம், அவ்வளவுதான்.

புரிதல் அவசியம் :-

 பழைய அம்பாசிடர் காரை புதிய போர்டு காராக நிச்சயம் மாற்ற முடியாது. எனினும் பழைய காரை ஓரளவிற்கு சிலகாலம் ஓடும்படி செய்ய முடியும். கொடுக்கப்பட்ட இந்த குறிப்பிட்ட சில காலமும், நீங்கள் பிறவி எடுத்தது இறைவனோடு சேரவேண்டும் ( முக்தி ) என்பதை புரிந்து கொள்வதற்காக மட்டுமே. அன்றி மீண்டும் புற வாழ்க்கையில் வயோதிகரை வீரியமாய் ஓடச்செய்வதற்காக அல்ல. இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் முப்பது வயதைக் கடக்கும் போதே கீழே உள்ள உணவுப்பழக்கத்தை கவனிக்கவும்.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

 சைவமோ அசைவமோ, உங்கள் தினசரி உடல் உழைப்புக்கு ஏற்றபடி உணவு உண்ணுங்கள்.  வியர்வை சிந்த கடின உடல் உழைப்பு உள்ளோர் மட்டும் அசைவ உணவைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் அசைவம் தவிர்க்கலாமே ?. 
"என் அசைவம் என் உரிமை" என்றால் இனி உங்கள் இஷ்டம்.  நாற்பது வயதைக் கடந்தவர்கள் உணவுப் பழக்கத்தை சரி செய்யாவிடில், ஒரு 10 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 10 நாட்கள் உடனிருந்து உங்களை கவனிக்க ஒரு ஆளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். 
( இல்லத்தரசிகள், டாக்டர், இன்ஜினியர், வியாபாரி, பைனாஸ் தொழில் செய்வோர் மற்றும் ஓய்வுபெற்றோர் கவனத்திற்க்கு )
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு ஒரு மரியாதையும் இருக்காது. பரிதாபம் தான்.

உழைப்பிற்கேற்ற உணவு, அல்லது உணவிற்கேற்ற உழைப்பு.

 இறைவனின் அருளை பெற்ற தூதர்களான இயேசுநாதர், முகமது நபி, சீரடி சாய்பாபா போன்றோர்கள், மாமிசம் உண்பதை  தவறாக சொல்லவில்லை. தாராளமாக மாமிசம் உண்ணலாம் என்று அறிவுறுத்தினார்கள். ஏனெனில் இவர்கள் வாழ்ந்த காலத்தில் இயல்பான அன்றாட வாழ்க்கையிலேயே அதிக உடல் உழைப்பு இருந்தது. அன்றைய காலத்தில், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், இயந்திர வாகனங்கள் என்ற எந்த ஒரு உடல் உழைப்பை குறைக்கும் இயந்திரமும் இல்லை. அதனால் அன்றைய காலத்தில், மாமிசம் உண்பதால் எந்த  பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது அன்றாட வாழ்க்கையில், உடல் உழைப்பு என்பது மிக மிக குறைந்து விட்டது. மாமிச உணவு இன்றைய பெண்களுக்கு உடலில் துன்பத்தையும், ஆண்களுக்கு உயிரில் துன்பத்தையும்  தருகிறது.
 தினசரி கடினமான உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு மாமிச உணவு அவசியமானது. ஆனால் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களும் மாமிச உணவை உண்பதால், அதன் விலையும் கூடிவிட்டது, தரமோ குறைந்துவிட்டது.

 இதனால் அதிக உடல் உழைப்பு உள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மாமிச உணவானது, அவர்களால் தினசரி வாங்க முடியாத விலைக்கு ஏறி விட்டது. இது மிகப்பெரிய பாவமாகும். இந்தப் பாவம், உடல் உழைப்பில்லாத, அவசியமே இல்லாமல் மாமிச உணவு உண்பவர்களையே சாரும்.

 இதனால்தான் இறைதூதர்களால் அளிக்கப்பட்ட,  யுனானி, சித்தா, ஆயுர்வேதா போன்ற இயற்கை மருந்துகள் வேலை செய்வதில்லை. ஆங்கில மருந்தையே அதிகம் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.


கீழ்க்கண்ட வேலைகளை கடின உழைப்பு என கருதலாம். ( தினசரி வேலை ).

( சூரிய ஒளியில் அல்லது அக்கினியில் )
 விவசாய வேலை, விறகு வெட்டுதல்,
 கல் உடைத்தல்,  கட்டிட வேலை,
 இரும்பை உருக்கி அடித்தல், 
வியர்வை சிந்த கடின உழைப்பு,
சூரிய ஒளி படும் இடத்தில் ஆட்டாங்கல், அம்மிக்கல், துவைக்கும் கல் தினசரி உபயோகிக்கும் இல்லத்தரசிகள் மற்றும் கால்நடை பராமரிப்பு.

அசைவம் உண்ணும் உங்களிடம் மேற்கண்ட ஏதேனும் ஒன்று உள்ளதா ???

மிகக் கடின உழைப்பு உள்ளோர்க்கான உணவை, நீங்கள் உண்பதை உங்கள் ஆன்மா (இறைவன்) ஏற்றுக்கொள்வாரா?


About 94 % of young patients, who suffered a heart attack, were non-vegetarians, according to a report released by Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research.

more information in below article.



அதிக உடல் உழைப்பு இல்லாத பெண்கள் மாதவிடாய் இருக்கும்வரை இதய ஆபத்து வெளியே தெரியாது. மட்டன் பிரியாணியோ சிக்கன் வறுவலோ வெலுத்துக்கட்டலாம். ஆனால் இதயவலி ஆபத்து, மாதவிடாய் நின்றபின்தான் தெரியும். எதற்கும் ஒரு பத்து லட்சம் ரூபாய் ரொக்கமாகவோ அல்லது மருத்துவ காப்பீடோ எப்போதும் தயாராய் வைத்துக்கொள்ளுங்கள் தாய்மார்களே.

50+ வயது பெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வரும்.


இதுபற்றிய கட்டுரை கீழே.







இப்படிக்கு
அகத்திய பக்தன்.


ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

போராளி

 போராளியின் வரவு



 கலிஎல்லை என்னும் இந்த கொடிய காலத்தில், கார்த்திகேயன் எனும் போராளி இல்லத்திற்கு வருகை தரட்டும்.




பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியான, அலைபேசி விளையாட்டுகளும் பயனற்ற கார்டூன் படங்களிலிருந்து குழந்தைகளைக் காக்க ஒரு போராளி வரட்டும்.




அல்லற் படுத்தும் அடங்கா முனியான,  மெகா சீரியலில் இருந்து மூத்த பெண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் போன்ற  பேஸ்புக் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் இருந்து இளம் பெண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் போன்ற நவீன அழகு சாதன பொருட்கள், நவீன உடைகள் மற்றும் அழகு சாதன யூடியூப் சேனல்களில் இருந்து பெண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் ஆன  வட்டித் தொழில், ஷேர் மார்க்கெட் மோகத்தில் இருந்து ஆண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் ஆன  அரசியல் மற்றும் சினிமா செய்திகளிலிருந்து அனைத்து மக்களையும் காக்க ஒரு போராளி வரட்டும்.


சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்.







ஞாயிறு, 3 ஜூலை, 2022

இரகசியம் கண்டுபிடி

 இரகசியம் கண்டுபிடி


மனோ தத்துவத்திற்கான எனது மானசீக குரு சிக்மண்ட் பிராய்டின் ஆய்வைப் பற்றி நான் படிக்கும்போது எனக்கு ஒரு யோசனை வந்தது.  கீழே உள்ள 25 கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்க முயற்சி செய்தால் இரகசியம் புலப்படும்.

நீங்கள் என்ன பதிலைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. நீங்கள் பதிலை யோசிக்கும்போதே உங்கள் புறமனதிற்க்கும் ஆழ்மனத்திற்கும் நடுவே ஒரு சிறு சமிக்கை பாயும் என நம்புகிறேன்.




 சரி தவறு என கவலைப்படாமல் இயன்றவரை முயற்சி செய்யுங்கள். பதிலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது நமது ஆழ்மனத்தின் தாக்கத்தை உணர ஒரு ஆய்வுப் பதிவு.




1) ஆழ்மனத்தின் நோக்கம் என்ன?

A) கேள்வி புரிகிறது. பதிலை யூகிக்க முடிகிறது.

B) கேள்வி புரிகிறது. ஆனால் பதிலை யூகிக்க முடியவில்லை.

C) கேள்வி புரியவில்லை.

D) கருத்து தெரிவிக்க விருப்பமில்லை


2) மனிதருக்கு ஆழ்மனம் ஏன் தேவைப்படுகிறது?


3) ஆழ்மனதிற்கும், வெளி மனத்திற்கும் என்ன வேறுபாடு?


4) ஆழ்மனம் & வெளிமனம் இரண்டில் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது? ஆற்றல் வாய்ந்தது எது?











5) உயர்ந்தது தாழ்ந்ததை கட்டுப்படுத்த வேண்டுமா? அல்லது தாழ்ந்தது உயர்ந்ததை கட்டுப்படுத்த வேண்டுமா? எது சரி? சிங்கத்திற்க்கு பூனை உத்தரவிட முடியுமா? ஆழ்மனம் பற்றி நீங்கள் யூடூப்பில் பார்த்த போதனைகள் சாத்தியம்தானா?


6) நல்ல மனம் கொண்டவர்கள் நல்லவர்கள், தீய மனம் கொண்டவர்கள் தீயவர்கள்.  எனில், நல்ல ஆழ்மனம் & தீய ஆழ்மனம் என்ற இரண்டு வகை உள்ளதா?


7)  நமது ஆழ்மனம் வாழ்வின் அனைத்தையும் பதிவு செய்து கொண்டே இருப்பதன் நோக்கம் என்ன? ஏன்?


8) உங்கள் ஆழ்மனத்தில் உள்ள 100% தகவலையும் உங்களால் கண்டறிய இயலுமா?


9) உங்களாலேயே (உங்கள் வெளிமனத்தால் ) கண்டுபிடிக்க முடியாத ஒன்று, உங்களுக்குள்ளேயே இருப்பதன் நோக்கம் என்ன?


10)  ஆழ்மனம் எந்த நேரத்தில் வெளிப்படும்? எதற்காக வெளிப்படும்?











11) ஆழ்மனம் தனது நோக்கத்தை, வாழ்நாள் முழுமைக்கும் நிறைவேற்ற முடியாத பட்சத்தில், என்ன நடக்கும்? ஆழ்மனம் மரணித்து விடுமா?


12) புரோட்டான் நியூட்ரான் எலக்ட்ரான் இதில் ஆழ்மனம் எந்த வகையைச் சார்ந்தது ?


13) ஆழ்மனம் செயல்படும் பொழுது மூளையின் நரம்பணுக்களில் என்ன வகையான தாக்கம் இருக்கும்?


14) மேற்கண்ட தாக்கம், ஓசை அல்லது அதிர்வாக இருக்குமா?


15) இந்த மூளை அதிர்வை, EEG அல்லது MRI ஸ்கேனில் அளக்க முடியுமா? (ஆல்பா பீட்டா காமா தீட்டா ).


16)  ஆழ்மனம், கர்மா(தலைவிதி), கனவு மூன்றையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடியுமா?


17) ஆழ்மனம் ஆண்பாலா? பெண்பாலா?


18)  ஆழ்மனத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?


19) ஆழ்மனமும் சூச்சும சரீரமும் ஒன்றா? வேறுபட்டதா?


20)  உங்கள் ஜாதகத்தின் நெருங்கிய தொடர்பு ஆழ்மனத்தோடா? அல்லது புறமனத்தோடா?


21) ஆழ்மனத்தால் உங்கள் கர்மவினைகளை எளிதில் வேகமாக கடக்கமுடியும். எனில், கீழ்கண்ட எந்த வேண்டுதல் மிகவும் சரியானது?

    A) இறைவா! உன் பாதத்தோடு விரைந்து சேரவேண்டும்! என்ற வேண்டுதலோடு தன் அன்றாட கடமைகளை செய்துகொண்டு வாழ்வது.

    B) இறைவா! எனது துன்பத்தைப் போக்கி இன்பமான வாழ்வைத் தரவேண்டும்.

    C) இறைவா! எனது வாழ்வில் துன்பமோ நஷ்டமோ வரவே கூடாது. எப்போதும் பணமும் செல்வமும் இலாபமும் நிறைய கிடைக்க வேண்டும்.


22) ஒருவர் ஆழ்மனம் / ஜாதகப்படி, வாதாடுவதில்  சிறந்த வல்லமை கொண்டவர். அதாவது மிகச்சிறந்த வக்கீலாக உருவாக வேண்டியவர்.  ஆனால் புறமனத்தின் தாக்கத்தால் வலுக்கட்டாயமாக அவர் ஒரு டாக்டராகவோ அல்லது இன்ஜினியராகவோ வந்தால் என்னவாகும்? அவர் அத்துறையில் சராசரியா? அல்லது பிரகாசிப்பவரா?


23)  கீழ்கண்ட கோட்பாடுகளைக் கொண்டவர்கள், ஆழ்மனம் சார்ந்தவரா? அல்லது (வெளி) மனம் சார்ந்து வாழ்பவரா? 

      A) "இருப்பது ஒரு வாழ்க்கை, இதில் என்ன பெரிதாக?" 

     B) "வாழ்க்கை வாழ்வதற்கே! Enjoy"

      C) சினிமா நடிகர்களை தனக்கு முன் உதாரணமாக ஏற்பவர்.

      D) தனது மனம் சொல்வதெல்லாம் சரிதான். தான் என்பது தன் மனமே, என நம்புபவர்.

      E) தனக்கு ஆன்மா என்று ஒன்று உள்ளது. தான் என்பது தன் ஆன்மாவே, என நம்புபவர்.

      F) தனது மனதின் நோக்கமும், தனது ஆன்மாவின் நோக்கமும் வேறுபட்டது- என நம்புபவர்.

      G) தனது ஆன்மாவை உணரும் முயற்சியை வெருப்பவர், பயப்படுபவர், புறக்கணிப்பவர். ( தன் ஆன்மா இருக்கும் இடத்தை 10 நிமிடங்கள் கூட கவனிக்க இயலாதவர்கள் / சளித்துக்கொள்பவர்கள் ).

      H) லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பாஆல்வேஸ் பி ஹாப்பி.

      I) அதிகம் கவலைப்படுபவர். தான் விரும்புவது நடக்காவிடில் கவலை /  கோபம் / அழுகை.

24) மகாபாரதத்தில் : துரியோதனனுக்கு ( வெளிமனம் / அறிவு ) எப்போதும் எப்படியேனும் ஜெயிப்பதிலேயே குறிக்கோள்.

அர்ஜுனனுக்கு (  ஆழ்மனம் / உயிர் ) எப்போதும் தன் இறைவன் கண்ணபிரான் அருகில் இருப்பதிலேயே குறிக்கோள். வெற்றி தோல்வி, இன்பம் துன்பம் என்பதில் கவனம் இல்லை.

எனில் ஜெயிப்பவர் யார்? அர்ஜுனனை எப்படியேனும் ஜெயிக்கவைப்பதில் யாருக்கு முழுப் பொறுப்பு?

இதில் நீங்கள் யார்?









25) போராட்டத்தில், தன்னை உடலாய் உணர்பவன், தான் மரணித்துவிடக்கூடாது என்ற சிறப்பு கவனம் அல்லது பயத்தோடு போராடுவான். தன்னை உயிராய் உணர்பவன் ( கிருஷ்ணர் அர்ஜுனருக்கு உணர்த்தியது ), மரணத்திற்க்கு பயமில்லாது போராடுவான். எனில், யார் பலம் அதிகம்?


என்ன? இந்தக் கேள்விகள் குழப்பமாக உள்ளதா? இந்த கேள்விகள் அவசியம்தானா என்று தோன்றுகிறதா?

 உங்களுக்காக ஒரு எளிய குறிப்பை, குருநாதரின் அருளால் தருகிறேன். அதன்மூலம் பதிலை அறிய முயற்சி செய்யுங்கள்.

 "ஆழ்மனம் தனது அக உலகின் நோக்கத்திற்காக புற உலகில் செயல்படுகிறது. 

புற உலகின் செயல்பாட்டிற்கு வெளிமனம் தேவைப்படுகிறது.

எனில் யார் முதலாளி, யார் தொழிலாளி? 

பொறுப்பு மாறிப்போனால் வரும் ஆபத்து என்ன ?

".


உங்கள்,

அகத்திய பக்தன்.