வெள்ளி, 30 செப்டம்பர், 2022

மாரடைப்பு - ஆன்ஜியோ - ஸ்டன்ட்

 மாரடைப்பு - ஆன்ஜியோ - ஸ்டன்ட் வைத்தல்

குருநாதர் அருளால் ஒரு அனுபவ பதிவு.



மூலிகை வைத்தியம்.

 மூலிகை வைத்தியரின் முகவரி கீழே.

அடியேன் நெருங்கிய உறவினரின் அனுபவ பகிர்வு.




 மூலிகை வைத்தியத்திற்க்கு பத்தியம் கட்டாயம் உண்டு. உப்பு புளி இனிப்பு அசைவ உணவு கூடாது. 

மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு மருந்து எடுக்கவேண்டும்.




 ஆங்கில வைத்தியத்தில் பத்தியம் இல்லை. ஏனெனில் உப்புக்கு ஒரு மாத்திரை, இனிப்புக்கு ஒரு மாத்திரை, அசைவ உணவுக்கு ஒரு மாத்திரை,  இதனால் வரும் வயிற்று அல்சருக்கு ஒரு மாத்திரை,  என பல பல மாத்திரைகள். கீழே ஒரு உதாரணம் ( 70 வயது முதிய தாயார் ).





மேற்கண்ட மூலிகை வைத்தியத்திற்கு அடுத்தபடியாக "அடல் 54" என்ற ஹோமியோ மருந்தும் நன்கு வேலைசெய்யும். பக்க விளைவு இல்லாதது. உலகப் புகழ் பெற்றது. நீண்ட கால பயன்பாட்டுக்கு உகந்தது. எளிமையானது.








இயற்கை மருந்துகள் அனைவருக்கும் நன்றாகவே வேலை செய்யும். சிலரின் முந்தைய கால உணவுப்பழக்கம் மற்றும் இறுகிய கர்மவினையால் சிறிது தாமதமாக குணமாகலாம். ஆனால் இயற்கை நிச்சயம் குணமளிக்கும்.
ஆங்கில மருந்துக்கு கர்மா என்றோ மறுபிறவி என்றோ  கவலைப்படாது. அதைப் பொருத்தவரை வாழ்வா சாவா என்பது மட்டுமே. அடியேன் எனது அனுபவத்தில் ஆங்கில மருந்தை முற்றிலுமாக தவிர்க்க இயலாது. அது தான் கலியுகத்தின் தலைவிதி. உங்கள் தினசரி வாழ்வில் ஆங்கில சொற்களை பயன்படுத்தாமல் வாழ முடியுமா? இயன்றவரை குறைக்கலாம், அவ்வளவுதான்.

புரிதல் அவசியம் :-

 பழைய அம்பாசிடர் காரை புதிய போர்டு காராக நிச்சயம் மாற்ற முடியாது. எனினும் பழைய காரை ஓரளவிற்கு சிலகாலம் ஓடும்படி செய்ய முடியும். கொடுக்கப்பட்ட இந்த குறிப்பிட்ட சில காலமும், நீங்கள் பிறவி எடுத்தது இறைவனோடு சேரவேண்டும் ( முக்தி ) என்பதை புரிந்து கொள்வதற்காக மட்டுமே. அன்றி மீண்டும் புற வாழ்க்கையில் வயோதிகரை வீரியமாய் ஓடச்செய்வதற்காக அல்ல. இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் முப்பது வயதைக் கடக்கும் போதே கீழே உள்ள உணவுப்பழக்கத்தை கவனிக்கவும்.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

 சைவமோ அசைவமோ, உங்கள் தினசரி உடல் உழைப்புக்கு ஏற்றபடி உணவு உண்ணுங்கள்.  வியர்வை சிந்த கடின உடல் உழைப்பு உள்ளோர் மட்டும் அசைவ உணவைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் அசைவம் தவிர்க்கலாமே ?. 
"என் அசைவம் என் உரிமை" என்றால் இனி உங்கள் இஷ்டம்.  நாற்பது வயதைக் கடந்தவர்கள் உணவுப் பழக்கத்தை சரி செய்யாவிடில், ஒரு 10 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 10 நாட்கள் உடனிருந்து உங்களை கவனிக்க ஒரு ஆளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். 
( இல்லத்தரசிகள், டாக்டர், இன்ஜினியர், வியாபாரி, பைனாஸ் தொழில் செய்வோர் மற்றும் ஓய்வுபெற்றோர் கவனத்திற்க்கு )
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு ஒரு மரியாதையும் இருக்காது. பரிதாபம் தான்.

உழைப்பிற்கேற்ற உணவு, அல்லது உணவிற்கேற்ற உழைப்பு.

 இறைவனின் அருளை பெற்ற தூதர்களான இயேசுநாதர், முகமது நபி, சீரடி சாய்பாபா போன்றோர்கள், மாமிசம் உண்பதை  தவறாக சொல்லவில்லை. தாராளமாக மாமிசம் உண்ணலாம் என்று அறிவுறுத்தினார்கள். ஏனெனில் இவர்கள் வாழ்ந்த காலத்தில் இயல்பான அன்றாட வாழ்க்கையிலேயே அதிக உடல் உழைப்பு இருந்தது. அன்றைய காலத்தில், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், இயந்திர வாகனங்கள் என்ற எந்த ஒரு உடல் உழைப்பை குறைக்கும் இயந்திரமும் இல்லை. அதனால் அன்றைய காலத்தில், மாமிசம் உண்பதால் எந்த  பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது அன்றாட வாழ்க்கையில், உடல் உழைப்பு என்பது மிக மிக குறைந்து விட்டது. மாமிச உணவு இன்றைய பெண்களுக்கு உடலில் துன்பத்தையும், ஆண்களுக்கு உயிரில் துன்பத்தையும்  தருகிறது.
 தினசரி கடினமான உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு மாமிச உணவு அவசியமானது. ஆனால் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களும் மாமிச உணவை உண்பதால், அதன் விலையும் கூடிவிட்டது, தரமோ குறைந்துவிட்டது.

 இதனால் அதிக உடல் உழைப்பு உள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மாமிச உணவானது, அவர்களால் தினசரி வாங்க முடியாத விலைக்கு ஏறி விட்டது. இது மிகப்பெரிய பாவமாகும். இந்தப் பாவம், உடல் உழைப்பில்லாத, அவசியமே இல்லாமல் மாமிச உணவு உண்பவர்களையே சாரும்.

 இதனால்தான் இறைதூதர்களால் அளிக்கப்பட்ட,  யுனானி, சித்தா, ஆயுர்வேதா போன்ற இயற்கை மருந்துகள் வேலை செய்வதில்லை. ஆங்கில மருந்தையே அதிகம் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.


கீழ்க்கண்ட வேலைகளை கடின உழைப்பு என கருதலாம். ( தினசரி வேலை ).

( சூரிய ஒளியில் அல்லது அக்கினியில் )
 விவசாய வேலை, விறகு வெட்டுதல்,
 கல் உடைத்தல்,  கட்டிட வேலை,
 இரும்பை உருக்கி அடித்தல், 
வியர்வை சிந்த கடின உழைப்பு,
சூரிய ஒளி படும் இடத்தில் ஆட்டாங்கல், அம்மிக்கல், துவைக்கும் கல் தினசரி உபயோகிக்கும் இல்லத்தரசிகள் மற்றும் கால்நடை பராமரிப்பு.

அசைவம் உண்ணும் உங்களிடம் மேற்கண்ட ஏதேனும் ஒன்று உள்ளதா ???

மிகக் கடின உழைப்பு உள்ளோர்க்கான உணவை, நீங்கள் உண்பதை உங்கள் ஆன்மா (இறைவன்) ஏற்றுக்கொள்வாரா?


About 94 % of young patients, who suffered a heart attack, were non-vegetarians, according to a report released by Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research.

more information in below article.



அதிக உடல் உழைப்பு இல்லாத பெண்கள் மாதவிடாய் இருக்கும்வரை இதய ஆபத்து வெளியே தெரியாது. மட்டன் பிரியாணியோ சிக்கன் வறுவலோ வெலுத்துக்கட்டலாம். ஆனால் இதயவலி ஆபத்து, மாதவிடாய் நின்றபின்தான் தெரியும். எதற்கும் ஒரு பத்து லட்சம் ரூபாய் ரொக்கமாகவோ அல்லது மருத்துவ காப்பீடோ எப்போதும் தயாராய் வைத்துக்கொள்ளுங்கள் தாய்மார்களே.

50+ வயது பெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வரும்.


இதுபற்றிய கட்டுரை கீழே.







இப்படிக்கு
அகத்திய பக்தன்.


ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

போராளி

 போராளியின் வரவு



 கலிஎல்லை என்னும் இந்த கொடிய காலத்தில், கார்த்திகேயன் எனும் போராளி இல்லத்திற்கு வருகை தரட்டும்.




பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியான, அலைபேசி விளையாட்டுகளும் பயனற்ற கார்டூன் படங்களிலிருந்து குழந்தைகளைக் காக்க ஒரு போராளி வரட்டும்.




அல்லற் படுத்தும் அடங்கா முனியான,  மெகா சீரியலில் இருந்து மூத்த பெண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் போன்ற  பேஸ்புக் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் இருந்து இளம் பெண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் போன்ற நவீன அழகு சாதன பொருட்கள், நவீன உடைகள் மற்றும் அழகு சாதன யூடியூப் சேனல்களில் இருந்து பெண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் ஆன  வட்டித் தொழில், ஷேர் மார்க்கெட் மோகத்தில் இருந்து ஆண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் ஆன  அரசியல் மற்றும் சினிமா செய்திகளிலிருந்து அனைத்து மக்களையும் காக்க ஒரு போராளி வரட்டும்.


சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்.