ஞாயிறு, 12 மே, 2024

மகளே நீ மறவாதே

மகளே நீ மறவாதே




 குருநாதரின் பிரியமான மகளாய் வாழ்ந்து குருநாதரின் பாதம் சேர உன்னை அன்போடு வாழ்த்துகிறேன். உனக்கு தெளிவற்ற மனோநிலை எப்போதெல்லாம் இருக்கிறதோ அப்போது இதை ஞாபகப்படுத்துவாய். தீதும் நன்றும் பிறர் தர வாரா. எந்த சூழ்நிலையிலும் உன் வாழ்வில் இறைவனின் அருளோடு உற்சாகமாய் வாழ்வாய்.


 தினசரி காலை குறைந்த பட்சம் 15 நிமிடம் உடற்பயிற்சி செய். யோகா சிறந்தது.

 தினசரி காலை குறைந்தபட்சம் 10 நிமிடம் மனம் உருகிய இறைவழிபாடு செய்.


 மனம் உருகினால் -> உயிரை உணர்வாய் ( ஆழ்மனமும் )°

 உயிரை உணர்ந்தால் -> இறைவனை உணர்வாய்°

 இறைவனை உணர்ந்தால் -> பிரபஞ்ச பேராற்றலை நீ பெறலாம்°


இந்த இறையாற்றலே உன்னை எந்த சூழலிலும் உற்சாகமாகவும் மன நிம்மதியோடும் வாழ வைக்கும். வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும், ஆனால் அதற்கு அப்பாற்பட்ட உற்சாகமும் மனநிம்மதியும் இறையருளால் தினசரி உனக்கு கிடைக்கும். உனக்கான தெய்வ உலகில் தினமும் குறைந்த பட்சம் பத்து நிமிடமாவது வாழப்பழகு.


 தினமும் நேரத்தே உறங்கி, அதிகாலை விழித்து விடு. பதினோரு மணிக்கு மேல் விழிக்க வேண்டாம், 6 மணிக்கு மேல் உறங்க வேண்டாம். எனக்கு நேரமில்லை என வருந்தவும் வேண்டாம்.


 தினசரி உனக்கு வரும் இன்ப துன்பங்களில் மயங்கி விடாதே. அது மாறிக்கொண்டே இருக்கும். அறிவியல் மற்றும் மனோதத்துவம் சார்ந்த புத்தகங்களை மாதம் ஒன்றாவது படிக்கப் பழகு. புத்தகம் உன் வாழ்வின் சிறந்த நண்பன். உனக்கு கொடுத்த பயிற்சிகளையும் அறிவுரைகளையும் உனக்கான தனிப்பட்ட விஷயமாக பத்திரப்படுத்திக் கொள். ஏனெனில் ஆன்மீகம் என்ற பெயரில் உன்னை யாரேனும் தவறாக வழி நடத்த அனுமதிக்காதே. எந்த சூழலிலும் ஒழுக்கம் தவறாதே. உன்னை அறியாது சிறிது தடம் மாறினாலும் உடனே சுதாரித்து நல்வழிக்கு வந்துவிடு. ஒழுக்கமில்லாதவர்களின் பழக்கத்தை உடனே அறுத்துவிடு.


 குருநாதரின் ஆசியும் எனது அன்பும் உன்னை எப்போதும் நன்றாக வழி நடத்தும். தர்மம்  தாமதமானாலும் நம்மை எப்போதும் கைவிடாது.


my dear daughter,

the above blog in tamil may be vague or myth to you. so, let me try with some modern scientific psychology to explain you better.

please note that your subconscious mind is more powerful than your outer mind. whatever i explained you sofar is to make you understand about your own subconscious mind.

 இப்படிக்கு  உன் அன்பு அப்பா,

 அகத்திய பக்தன்.