வியாழன், 5 ஜனவரி, 2017

agathiyar saranam



ஓம்

அகத்தீச ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

கும்பமுனி தேவனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

குருமுனி அப்பனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

முதல் இலக்கணம் தந்தவனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வேலவன் மைந்தனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

ஆராதார ஜோதியே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வெட்டவெளி ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

சுழுமுனை சுடரே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வாசிமுனி தெய்வமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வர்மமுனி ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

வைத்தீச ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

காயசித்தி கற்பமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

குருநாடி தெய்வமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

சகலக்கலை ஞானமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

ரசவாத ராஜனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

ஞானத்தின் காவியமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

தீட்சா விதி தீபமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

நயன விதி நாதனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

பரிபூரண ஞானமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

பஞ்சகாவியம் பகர்ந்தவனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

முப்பூவின் முழுமையே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மெய்ஞ்ஞான ஜோதியே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

அகாரத்தின் அருளே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

உகரத்தின் உண்மையே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மகாரத்தில் இருப்பவனே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மௌன குரு மந்திரமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

சிவ வாலை சிங்கமே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மனோன்மணி ஜோதியே,

வந்தே அருளேவேண்டும்.

ஓம்

மகத்தான மாமுனியே,

வந்தே அருளேவேண்டும்.

உன் திருப்பாதம் சரணம் சரணம் சரணம்.

தலை முதல் கால் வரை, பொது மருத்துவம்

நானும் என் மனைவியும் நல்ல இணையதளத்தில் இருந்து  தொகுத்தது.  இதில் தலை முதல் கால் வரை, பொது மருத்துவம் மற்றும் பொது குறிப்புக்கள் என அடுக்கியிருக்கிறோம்.

https://drive.google.com/file/d/0B4eezlYyQs6dX080U2xxOHpxLXVmRUQ3SmgtOFQzNl9ycU9N/view?usp=sharing

பிரேம்கலை

புதன், 4 ஜனவரி, 2017

மயக்கமா.. கலக்கமா.. மனதிலே குழப்பமா.. வாழ்க்கையில் நடுக்கமா..

மயக்கமா.. கலக்கமா.. மனதிலே குழப்பமா.. வாழ்க்கையில் நடுக்கமா.. ?

"நாடப்பா அகத்தீசர் என்று கூறு

நடுக்கம் வந்தால் என் மேலே பழியைப் போடு

கூடப்பா என் குருவே என்று கூடு

கும்பமுனி குழந்தை என்றே விருது நாட்டு

பாடப்பா என்புகழை பரிந்து பாடு

பாரத்திலே உனதிடுக்கம் தீர்ப்போம் கண்டாய்

தேடப்பா சிவ வாசி ஞானியோரை

தேடினால் உனது கர்மம் தீர்ந்து போச்சே  "

- அகத்தியர் மெஞ்ஞானம் 

நிலவேம்பு கியாழம் - கடுமையான காய்ச்சல்

   நேற்று (20.10.2016) என் மகள் (11 வயது) பள்ளியில் இருந்து மதியம் போன் செய்து, அவளுக்கு கடுமையான காய்ச்சல், வந்து அழைத்து போகும்படி சொல்லிவிட்டார்கள். உடனே என் மனைவி பள்ளிக்கு சென்று நிலவேம்பு பொடிமட்டும் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். சிறிது பரவாயில்லை, ஆனால் ஜுரம் குறையவில்லை, மிக கடுமையாக இருந்தது. நான் அலுவலகத்தில் இருந்து மாலை வரும்போது எனக்கு தெரிந்த நாட்டு மருந்து கடையில் நிலவேம்பு கியாழம்  வந்து 15 மில்லி ( கடுமையான காய்ச்சல் ) மாலை 6 மணிக்கு  அகத்தியரை வணங்கி கொடுத்தேன். 4 மணி நேரத்தில் காய்ச்சல் குறைய ஆரம்பித்தது. நன்றாக தூங்கிவிட்டாள்.  காலையில் முழுவதுமாக குணம் ஆகிவிட்டது

சனி, 31 டிசம்பர், 2016

பிடிவாத வாதத்தை பிடிப்பதெவ்வாறு ?

ஓம் அகத்தீசாய நமஹ.

      பிடிவாத வாதத்தை பிடிப்பதெவ்வாறு ?

மானிடரின் வாழ்க்கையெல்லாம் மாயம்தானே,
மாயத்துள் மாயமென்றால் நோய்கள்தானே.
உட்கார்தே பணிபுரிந்தேன் பலகாலம் நானே,
மதிதன்னை கூராக்கி உழைத்திட்டேனே,
உழைத்ததனால் வந்ததெனுக்கு உயர்வுதானே,
உயர்வோடு கிடைத்தது இடுப்பில் வாதம்தானே.
வாதமென்றால் கொடுவாதம் காலுக்கிறங்கும்,
இப்படியே ஈரைந்து ஆண்டு போச்சு.
சிறுவாதம் என்றாகாள் மூலிகை உண்டு,
கெடியான வாதமென்றால் கொடுமைதானே.
கொடுமையென்றால் இருநாழிகை உட்கார்ந்துவிட்டால்,
வந்துவிடும் வாதமது இடுப்பில் தானே.

எனையீன்ற அற்புதமே! அகத்தியராஜா!
உன்பாதமே சரணமென்று அழுத்திட்டேனே.

"அன்பான என்மைந்தா சொல்லக்கேளு,
கூரான சூட்சுமங்கள் உனக்கு உண்டு,
பரிவாக சொல்லுகிறேன் பணிந்து கேளு.
உந்தனது பகுதியிலே ஒரு ஆசானுண்டு,
வர்மமென்ற புள்ளியிலே வகையுமுண்டு.
கும்பமுனி குழந்தையென்று சொல்லி்ப்பாரு,
சனியான வாதத்தை சாய்ப்பான் பாரு,
கெடியான புள்ளிதனை உனக்கும் சொல்வான்,
பணிவாக கேட்டுப்பார் உன் பிணிதான் போச்சு".

--பிரேம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

my favourite websites



1)     எல்லா கேள்வி பதில்களையும் படித்துவிடுங்கள். மிக முக்கியம். முடிக்க சில நாட்கள் ஆகும்.
http://www.machamuni.com/



http://machamuni.blogspot.in/



2)     நான் மூலாதாரத்தில் மட்டும் வாசி செய்து என் குரு அகத்தியரை எல்லா சக்கரத்திலும் தியானம் செய்வேன். என் சொந்த அனுபவம், இல்லறத்தில் இருப்பவர் மட்டும் செய்தல் நலம். இனி உங்கள் விருப்பம். குரு அருளால் இல்லறம் இனிதாக இருக்கும்.
http://www.siddharyogam.com/yoga/yogapalagu/vasiyogam



3)     அருமையான பதிவுகள்.
http://yogicpsychology-research.blogspot.in/



4)     6 ஆண்டுகளுக்கு முன்  இந்த தளத்தை பார்த்த பிறகுதான் எனக்கு அகத்தியர் மேல் பக்தி வந்தது. அகத்தியரின் லட்சுமி காயத்ரி மந்திரம் பலமுறை ஜெபம் செய்து நிறைய வெளிநாடு வாய்ப்புகள் பெற்று எனது பொருளாதாரத்தை  உயர்திக்கொண்டேன். அகத்தியரின் அனுமன் வாசிக்கட்டு மந்திரம் ஜெபம் செய்து என் தேவை இல்லா பயத்தை போக்கிக்கொண்டேன்.


http://www.siththarkal.com/

my question 1 - கேள்வி

அன்புள்ள அப்பா,

எனக்கு வெகுநாளா ஒரு கேள்வி மனதில் ஓடுகிறது.

நாம் கேள்விப்படும் கடந்த 200 ஆண்டுகளில், எத்தனையோ யோகிகள் ஞானிகள் ( ஜட்ஜ் பலராமைய, கன்னையா யோகி, கடப்பை சச்சிதானந்த யோகீஸ்வரர், சித்திரமுத்து அடிகள், மற்றும் நிறைய )  சித்தர்கள் அருளால் வாசி யோகம், காயகற்ப யோகா ஆராய்ச்சி, ரசவேதை பல செய்து பல நூல்களும் எழுதினார்கள். ஒரு சாதாரண கூலிவேலை விவசாயம் செய்யபவன் கூட பழைய சோற்றை உண்டுவிட்டு 100 வருடம் ஆரோக்கியமாக வாழ்த்தை நாம் பல கேள்விப்படுகிரோம். ஆனால் இவ்வளவு வாசி, காயகற்பம், ரசவாதம் செய்த ஞாநி யோகிகளால் ஏன் ஒரு 100 ஆண்டுகள் கூட உயிருடன் வாழ முடியவில்லை ? தாப்பா ஜெகநாத ஸ்வாமிகள் 145 வயதிற்கும் மேல் வாழ்ந்தார் என அறிந்தேன். இந்த அளவுக்கு இல்லாவிடினும், அற்பமான 100 வயதாவது வாழ இயலாமல் இவர்கள் மாண்டுபோவது ஏனோ ? இவர்களின் ஞான அனுபவத்தை நூல்கள் மூலம் அறியமுடிகிறது, ஆனால் ஒரு தாழ்ந்த உலோகத்தை தங்கமாக மாற்றவும், பலருக்கும் ஞான அறிவு அருளவும் ஆற்றல் உடையவருக்கு, ஏன் தன் உடலை ஒரு 100 ஆண்டுகள் உயிருடன் வைக்க முடியவில்லை ?  ஒருவேளை இது கலிகாலத்தில் சாத்தியம் இல்லையா ? பல கோடிபேர்க்கு ஒரேயொரு தப்பா ஜெகந்நாதர் தானா? அனேக வாசி, காயகல்பம், ரசவாதம் செய்த பலன்தான் என்ன ? இவர்கள் ஞானம் எத்தகையது?

தங்கள் மகனான எனக்கு அதிக ஆண்டுகள் வாழ்வதில் பிடிவாத ஆசை இல்லை. விதியை மாற்றும் ஒரு வாசி காயகல்ப ரசவாத யோகிக்கு ஒரு 100 வயதை அளவுகோலாக வைக்கலாமா ?

நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். தங்கள் மகனாக இந்த காரணத்தை அறிய தாழ்மையோடு கேட்கிறேன்.



உங்கள் மகன்.

பிரேம்.

சற்குரு வெள்ளிங்கிரி ஆண்டவரின் ஞானபாதங்களில் சிறுவனின் சிறுகவிதை.