செவ்வாய், 20 டிசம்பர், 2016

my question 1 - கேள்வி

அன்புள்ள அப்பா,

எனக்கு வெகுநாளா ஒரு கேள்வி மனதில் ஓடுகிறது.

நாம் கேள்விப்படும் கடந்த 200 ஆண்டுகளில், எத்தனையோ யோகிகள் ஞானிகள் ( ஜட்ஜ் பலராமைய, கன்னையா யோகி, கடப்பை சச்சிதானந்த யோகீஸ்வரர், சித்திரமுத்து அடிகள், மற்றும் நிறைய )  சித்தர்கள் அருளால் வாசி யோகம், காயகற்ப யோகா ஆராய்ச்சி, ரசவேதை பல செய்து பல நூல்களும் எழுதினார்கள். ஒரு சாதாரண கூலிவேலை விவசாயம் செய்யபவன் கூட பழைய சோற்றை உண்டுவிட்டு 100 வருடம் ஆரோக்கியமாக வாழ்த்தை நாம் பல கேள்விப்படுகிரோம். ஆனால் இவ்வளவு வாசி, காயகற்பம், ரசவாதம் செய்த ஞாநி யோகிகளால் ஏன் ஒரு 100 ஆண்டுகள் கூட உயிருடன் வாழ முடியவில்லை ? தாப்பா ஜெகநாத ஸ்வாமிகள் 145 வயதிற்கும் மேல் வாழ்ந்தார் என அறிந்தேன். இந்த அளவுக்கு இல்லாவிடினும், அற்பமான 100 வயதாவது வாழ இயலாமல் இவர்கள் மாண்டுபோவது ஏனோ ? இவர்களின் ஞான அனுபவத்தை நூல்கள் மூலம் அறியமுடிகிறது, ஆனால் ஒரு தாழ்ந்த உலோகத்தை தங்கமாக மாற்றவும், பலருக்கும் ஞான அறிவு அருளவும் ஆற்றல் உடையவருக்கு, ஏன் தன் உடலை ஒரு 100 ஆண்டுகள் உயிருடன் வைக்க முடியவில்லை ?  ஒருவேளை இது கலிகாலத்தில் சாத்தியம் இல்லையா ? பல கோடிபேர்க்கு ஒரேயொரு தப்பா ஜெகந்நாதர் தானா? அனேக வாசி, காயகல்பம், ரசவாதம் செய்த பலன்தான் என்ன ? இவர்கள் ஞானம் எத்தகையது?

தங்கள் மகனான எனக்கு அதிக ஆண்டுகள் வாழ்வதில் பிடிவாத ஆசை இல்லை. விதியை மாற்றும் ஒரு வாசி காயகல்ப ரசவாத யோகிக்கு ஒரு 100 வயதை அளவுகோலாக வைக்கலாமா ?

நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். தங்கள் மகனாக இந்த காரணத்தை அறிய தாழ்மையோடு கேட்கிறேன்.



உங்கள் மகன்.

பிரேம்.

கருத்துகள் இல்லை: