1) கருணையோடு உபதேசித்த பரிமள குரு அன்னையின் பாதம் போற்றி.
2) குரல் பதிவு கொடுத்த ஜெயந்தி அன்னைக்கு நன்றி.
https://youtube.com/playlist?list=PLCJnWPDB9CD-kBw69fiYaw62VpSvcXJHr&si=fjXB1alKthRKsMD1
3) சில பதிவுகளை எடுத்துருவாக கொடுத்த வனிதா அம்மாவிற்கு நன்றி.
xxx
நரம்பணுக்கள் - 1
மனித மூளையே அண்டமாம்.
கண்கள் கொண்டு அறிதலே விஞ்ஞானமாம்.
கருத்தினை கொண்டு புரிதலே
மெய்ஞ்ஞானமாம்.
கண்கள் +கருத்துக்கள் இணைந்தால்
மெய்ஞ்ஞானமாம்.
மெய்ஞ்ஞானத்தின் ஒரு பகுதியே விஞ்ஞானமாம்.
அதுவே உணர்வு நிலையாம்.
புரிதல் என்பதே பக்குவமாம்.
சிசு கருவாகி உருவாகி தோன்றுவதே நச்சுக்கழிவுகளாம்.
அவையே நரம்பிழை களாம்.
நச்சான அமிலக்கழிவுகளே நரம்பணுக்களாம்.
மையமே மூளை எனும்
தலைமைச்சுரபியாம்.
மையத்திலிருந்து
பல்வேறு வழித்தடங்களாய்
தோன்றுபவையே
நரம்பிழை களாம்.
அவை உருவாக்கும் வெற்றுக்கூடுகளே சவ்வுப் படலமாம்.
அக்கூட்டில் தோன்றுபவையே
நரம்பணுக்களாம்.
வெற்றுக்கூடுகள் பெரிதாய் இருந்திடின் ஐந்து நரம்பணுக்கள் தோன்றுமாம்.
சிறியவை எனில் அதில் தோன்றுபவையும் குறைவேயாம்.
வெற்றுக்கூடுகள் எதற்காக?
வளர்ச்சி மேம்படுத்தலுக்காக.
அவையே ஆத்மக்கருக்களின் வசிப்பிடமாம்.
அதுவே அவற்றை பாதுகாத்து உணவு அளித்து
விடுதலை அளிக்கும் இடமாம்.
இதை மெய்ஞ்ஞானத்தால்
அறிய வேண்டின்..
ஒற்றைஅணு உணவூட்டும்
ஐந்து வாசல்களே ஐம்புலன்களாம்.
வாசல்களின் சாவி ஒற்றை அணு வசமாம்.
தாயான ஒற்றைஅணு
விரும்பும் வாசல் வழி
பயணித்து உணவூட்டுமாம்
தன் பிள்ளைகளான
அணுக்களுக்கு.
அறிவினை துறந்தால் உணர்தல் சித்திக்குமாம்.
தெய்வபக்தியும் சரணாகதமுமே
மெய்ஞ்ஞானத்தை அடையும்
மார்க்கங்களாம்.
நரம்பணுக்களே சந்திரசுரபியாம்.
இவையே விண்முகட்டில்
தோன்றும் சந்திர சுழல்களாம்.
மும்மலங்கள் தோன்றும் இடம்
சவ்வுப் படலமாம்.
சவ்வுப் படலம் கழிவுகளால் அடைத்துக்கொள்ளுமாம்.
இதன் விளைவாய்..
ஒற்றை அணுவால் கருக்களுக்கு சரிவர
உணவூட்ட முடிவதில்லையாம்.
எனில் நேர்வது என்ன?
மனக் கவலை, குழப்பமே.
தீர்க்கும் வழியாதெனில்
தியானம், இறைநாமம், மந்திர உச்சாடனமாம்.
மனதை ஒருநிலைப்படுத்திட வழியாம் இவை.
ஆத்ம கரு உருவாகிய
நரம்பு மண்டலத்தில் பிரிபடாமல் சிறைபடுபவையும்
ஆத்ம கருக்களேயாம்.
மனம் தூய்மை..
எண்ணங்களால் தூய்மை..
சவ்வுப் படல அடைப்புகள் நீக்கும் வழியாம்.
அனுதினமும் ஆற்றும் செயல்களின் பலாபலனை
அக்னிகுண்டத்தில் எரித்திட
அனைத்தும் நீங்கிவிடுமாம்.
பிறர்தவறை மன்னித்து
மறப்பதுடன் சந்திரதேவனையும்
பணிந்து வணங்கினால்
பேரானந்தம் பெற்றிடலாமாம்.
அருமையாய் சொல்லிட்டார் அம்மா..
நம் ஆரோக்கியம் காத்திட வே.
காலத்தால் அழியா கல்வெட்டுக்கள் இவை.
இணைந்து கற்போம்.
உணர்ந்து செயல்படுவோம்.
இறையே குருவே சரணம்🙏
xxx
நரம்பணுக்கள் - 2
மூல ஆற்றல் என்பது யாதெனில்
வெட்டவெளியில் உருவாக்கப்படும்
பாதரச காந்த சக்தியாம்.
ஆன்மாக்கள் புவியில் அவதரிப்பது எவ்வாறு?
அறிந்திட லாம் வாருங்கள்.
பாதரச துகள்கள்
ஒன்றிணைந்து.. சூரியக்கோளாய் உருமாறி.. பின் உராய்தல் மூலம் ஆற்றல்களை பெருக்கி...
பல கோள்களை யும் உருவாக்கி.. நிலைத்திட்டனவாம்.
அவையே ஆன்மாக்களாய் உருக்கொண்டு புவியில் அவதரிக்கின்றனவாம்.
அணுக்களின் பல்வேறு
அவதாரங்களே பல்வேறு உயிரினங்களாகவும் தாவரங்களாகவும் பஞ்சபூத மூலக்கூறுகளாகவும் திரிகின்றனவாம்.
அணுக்களின் ஆற்றல் கள் பிளந்து கொண்டே சென்று
பல்வேறு பரிமாணங்கள் எடுக்கின்றனவாம்.
அவற்றில் ஒன்றே நரம்பணுக்களாம்.
அணுக்களின் ராணி
யாரென அறிவோம்.
ஒற்றை அணுவே உயிர் அணுவாம்.
இதுவே
அண்டத்து அணுக்களுள்
மிக உயரிய படைப்பாகும்.
ஓர் ஆத்ம கருவினை கொண்டு
இமயமலையையும்
ஆழ்கடலையும்
உருவாக்கிட இயலுமாம்.
எனில் மனிதமூளை என்பது என்ன?
அண்டத்து பாதரச துகள்கள் பிளவினால் உருவான இரு ஆத்ம கருக்கள் இணைந்து உருவாக்கிய அற்புத படைப்பாம்.
பரமாத்மா எவ்வாறு உருவாகிறது?
ஒன்றிணைந்த அண்டத்துகள்களின் மூலமே.
இதுவே சூரியன்.
எனில் ஜீவாத்மா?
சூரியன் அணுக்கள் பிளவுகொண்டு படைப்பதாம்.
சுருங்கக்கூறிடின்
ஒன்றிணைந்த அணுக்கள் பரமாத்மா.
பிளவுபட்ட அணுக்கள்
ஜீவாத்மா.
மனித மூளை சுயமாய் உடலை படைக்கிறது.
அதன் உயர்வான படைப்பு
நரம்பணுக்களே.
அணுக்கள் என்பது யாது?
பாதரச தன்மை கொண்டவையே அணுக்களாம்.
ஆத்மக்கரு என்பதும் பாதரசத்துகளே.
பரமாத்மா வீற்றிருக்கும் இடம் எது?
அணுக்களின் மையத்தில்..
அணுவினுள் அணுவாய்.
"ஐந்தெழுத்து மந்திரத்தில்
அந்தரங்கம் உள்ளது.
அன்பு கொண்டு ஆதரிக்க
பகிரங்கமாயிடும்"
சித்தர்கள் வாக்கு.
இதன் அர்த்தம் என்ன?
"நமசிவாய" என்பதே ஐந்து எழுத்து மந்திரமாம்.
ஐந்து எழுத்துக்களே
ஐந்து வாயில்கள்.
ஐந்து வாயில்கள் என்பவை
ஐம்புலன்களாம்.
நரம்பணுக்கள் யாவும் ஐந்து வாயில்கள் கொண்டிருப்பின்
அங்கே இறைவன் வசிக்கிறார் என்பதேயாம்.
அனைத்து மதங்களும் போதிப்பவை..
இந்த ஐந்து வாயில்களான ஐம்புலன்களைதாம்.
"சிவனில்லையேல் சக்தியில்லை.
சக்தியில்லையேல் சிவனுமில்லை" - இதன்
அர்த்தம் அறிவோம்.
நரம்பணுக்கள் எனும் வட்ட அணுக்களில் புதையுண்ட
ஆத்மக் கருக்கள் யாவும்
ஒற்றை அணுவினால்
ஆதரிக்கப்படுகிறது எனவும்
விடுபட்ட ஆத்ம துகள்கள்
ஆதிசக்தி எனும்
ஒற்றை அணு விற்கு எரிபொருளை ஈர்த்து வழங்குகிறது.
விடுபட்ட ஆத்ம துகள்கள் இல்லையேல்
ஒற்றைஅணு வால் தனித்து
இயங்கிட இயலாது.
அதேபோல் ஒற்றைஅணு
இல்லையேல்
ஆத்மக்கரு க்களுக்கு
உணவு இல்லை.
இதுவே சிவசக்தி தத்துவமாம்.
மேலும் விளக்கிடின்..
விடுபட்ட ஆத்ம துகளே
சிவனாகும்.
ஒற்றை அணு வே சக்தியாகும்.
மெய்ஞ்ஞானம் சித்தித்தால்
விஞ்ஞானம் எளிதில் வசப்படும்.
பொருள்மார்க்கம் வினைகளை பெருக்கி
துன்பம் விளைவித்திடும்.
அருள்மார்க்கம் ஆனந்தம் நல்கிடும்.
அகச்செயல்களை பெருக்கினால் வினைகள் கழிவுறும்.
புறச்செயல்களுக்கு ஈடாய்
அகச்செயல்களை ஆற்றிடின்
அணுக்கள்
பதப்பட்டு சமனமுறும்.
மெய்ஞ்ஞான மார்க்கமே
ஆத்மக் கருவினை அறியும் வழி.
புறப்பணி என்பது யாது?
தான தர்மங்கள் செய்வதுடன்
பிறர்க்கு உதவுவதாம்.
எனில் அகப்பணி?
1.ஆன்மாவை தொழுவது.
2.ஒற்றை அணுவாம் உயிரினை போற்றுவது.
3.உயிர் ஆற்றலை ஏற்று இயங்கிடும் சிரசு மற்றும்
உடலினை பூஜிப்பது.
4. ஆழ்நிலை தியானம் புரிவது.
5. அனைத்திற்கும் மூல காரணமான பரமாத்மா வை உணர்ந்திட போராடுவதுமாகும்.
ஆன்மாவை தொழுதிட
இறையாற்றல்கள் பெருகிடும்.
பரமாத்மா வை தொழுதிட
பூரண ஞானம் சித்திக்கும்.
மாயப்பொருட்கள் அறிவோம்.
பணம்.. பொருள்.. பெருமை..
என்பனவே.
அன்பு. பண்பு.. பணிவு..
இவையே ஆத்ம ஞானமாம்.
அன்னையின் கேள்விகள்:
கண்கள் படைக்கப்பட்டது எதற்காக?
காண்பதற்கா?
அறிவினை பெருக்குவதற்கா?
சிந்தியுங்கள்.
அன்னையின் வருத்தம்:
விடுபட்ட வட்ட மலர்களே..
மாயையில் சிக்கி வருந்தாதீர்கள்.
இறையை அறிய முற்படுங்கள்.
விஞ்ஞானமா?
மெய்ஞ்ஞானமா?
போதிக்க காத்திருக்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களை மீட்க..
எத்தனை பாடுகள் அம்மா..
உள்ளம் உருகுதம்மா..
கண்களில் கண்ணீர் பெருகுதம்மா..
உருகி.. பணிந்து.. கரைகின்றோம் அம்மா. 🙏
xxx
நரம்பணுக்கள் - 3
அறிவு மாயையினால் மறைக்கப்பட்டால்..
அஞ்ஞானம் வெளிப்படுமாம்.
அறிவு சுயமாய் அழிந்திட..
ஞானம் பெருக்கெடுக்குமாம்.
விஞ்ஞான மார்க்க பயணம்..
ஒளி கூடிய விழிகளை பெற்றுத்தருமாம்.
மெய்ஞ்ஞான மார்க்க பயணம்..
ஒளி கூடிய உடலினை
பெற்றுத்தருமாம்.
உணர்தலும் புரிதலும்
அடிப்படை அறிவினை
தூண்டிடும் மார்க்கங்களாம்.
நரம்பணுக்கள் குறித்து
மெய்ஞ்ஞானத்தத்துவங்கள்
அறியப்பட்டால் இறை தொடர்பு கிட்டுமாம்.
விஞ்ஞான அறிவு..
எல்லையை கடந்தால்.. ஞானத்திற்கும் வழிவகுக்குமாம்.
அறிதல்..
விழிகளின் திறவுகோலாம்.
விஞ்ஞானம்..
அறிவின் வாயில்களாம்.
மெய்ஞ்ஞானம்...
ஆராய்தலுக்கு அப்பாற்பட்ட
உயர்நிலை விஞ்ஞானமாம்.
சமனமுறும் தத்துவமே.. மெய்ஞ்ஞான சத்தியமாம்.
சமனமுறா அணுக்களே..
விஞ்ஞான தத்துவமாம்.
உணர்வுகள் என்பதே
அறிவின் உச்சக்கட்டமாம்.
சுய ஆராய்ச்சி ஒன்றே
உயரிய பலன்களை நல்கிடுமாம்.
ஐந்து வாயில் கொண்ட
நரம்பணுக்கள் மட்டுமே
ஆத்மக்கரு க்களை
சுமந்திட இயலுமாம்.
நரம்பு மண்டலம்.. .
தாவர வேர் எனில்
நரம்பணுக்கள்..
கனிகள் போன்றவையாம்.
நரம்பணுக்களில் மூன்று வகையான ஆத்ம கருக்கள்
வசித்திருக்குமாம்.
1. ஏற்றிட்ட இப்பிறவியில்
சிறைகண்ட அணுக்கள்.
2. முற்பிறவியில் சிறைகண்ட அணுக்கள்.
3. பலபிறவிகளாய் சிறை கண்ட அணுக்கள்.
என்பனவாம்.
நரம்பணுக்களில் மட்டும்
ஆத்மகருக்கள் வசிப்பதேன்?
எவ்விதம் அவை தேர்வுறுகின்றன?
ஐந்து வாயில் நரம்பணுக்களில் வசிப்பவை..
முதல், இரண்டாம் வகை அணுக்களாம்.
வாயில்கள் மூன்றெனில்..
அங்கு வசிப்பவை
மூன்றாம் வகை அணுக்களாம்.
ஏழு வாயில்களில் வசிப்பவை..
ஆத்மக்கரு க்களுக்கு உதவிடும் பொருட்டு ஆற்றல்களை பெருக்கி டுமாம்.
ஓர் ஆசை உருவாகி தீவிரம் அடையும் தருணம்..
ஏழு வாயில்கள் கொண்ட நரம்பணுக்கள் யாவும்
துணை அணுக்களை
உருவாக்கி..
அவற்றை ஐந்து வாயில்கள் கொண்ட அணுக்களுக்குள் உட்செலுத்திடுமாம்.
ஆசையே அனைத்திற்கும் காரணமாம்.
ஆசையை உருவாக்குவதில் தவறில்லையாம்.
. ஆனால்.
. பேராசை.. பிறரை துன்புறுத்தும் முறையில் உருவாகும் ஆசை தவறாம்.
அவை மாற்று முறையில்
பணியாற்றிடுமாம்.
தீய எண்ணங்களினால்
உருவாக்கப்படும் அணுக்கள் யாவும் சமச்சீர் அற்றவையாம்.
ஆசைகள் உதிக்காவிடில்..
வாழ்வும் இனிக்காதாம்.
ஆத்மக்கரு க்கள்
சிறைபட்டால் மட்டுமே விடுபடவும் இயலுமா ம்.
விஞ்ஞானத்தின் உச்சத்தினை
தொடும்போது
அற்புத ஞானம் சித்திக்குமாம்.
ஆத்மக் கருக்களை
தீண்டிடும் ஆற்றல்..
ஒற்றை அணு விற்கு மட்டுமே உண்டாம்.
பல்வேறு மதங்களும்..
தெய்வங்களின் உருவாக்கமும்...
மாறுபட்ட நரம்பணுக்களை குறித்திடவேயாம்.
மெய்ஞ்ஞான ம்.. ..
இறைவனை..
துதிக்கவும் உணரவும்
எடுத்துரைக்குமாம்.
ஒரு மனிதனால்
சுயமுயற்சிமேற்கொண்டு..
தன் சுயத்தினை
மாற்றி அமைத்திட இயலுமா ம்.
முக்தியினை பெற..
தவங்கள்...தியானங்கள்..
ஆற்றப்படவேண்டுமென்பதே
மெய்ஞ்ஞான விதியாம்.
குழந்தைகளுக்கு
கல்வி கற்கும்பருவத்தில்..
சரணாகதம் எனும்
உயரிய ஞானத்தினை
வித்தாய் விதைத்திடின்..
அக்குழந்தைகள் உயர்நிலையை அடைந்திடுமாம்.
சரணாகதம் என்பது என்ன?
இறைவனை பரிபூரணமாய் நம்புவதேயாம்.
நீர் எடுத்து நிலம் விடுக்கும்
பிராத்தனையால்
குருதி கலக்கமற்று தெளிவுறுமாம்.
வெளிப்படும்
மென்பொருட்களும் சீராகவே அமைந்திடுமாம்.
பணிவு.. பக்தி.. சரணாகதம்..
உயரிய செயல்களுக்கு
தூண்டுகோலாக அமையுமாம்.
உள்ளார்ந்த பிரார்த்தனைகள்..
எண்ணங்களால் இயற்றப்படல்
வேண்டுமாம்.
தனிமையில்.. அமைதியான..
மனநிலையில்..
உருவாக்கப்படும் செயல்களே
சுமூகமாய் முடியுமாம்.
சுயதிரை முழுமையாய்
விலகாதவர்களே
சுய பெருமைகளை
எடுத்துரைப்பராம்.
மூளையின் செயல்பாடுகளை
அறிந்து..
அன்பு கொண்டு ஆராய்ந்தால்
கடினமான செயல்களும்
எளிதாய் பூர்த்தியுறுமாம்.
அறிந்து செயல்புரிந்தால் ஆனந்தமே.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உரைத்திட்டார் அன்னை..
உணர்ந்து செயலாற்றுவதே
நம் பணி என அறிவோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
xxx
நரம்பணுக்கள் - 4
கதிரவனின் ஒளியில்
கலப்புற்றிருப்பவை
பரமாத்மா வின் ஆற்றல்களாம்.
மனித மூளையில்
கலப்புற்றிருப்பது
ஜீவாத்மா வின் ஆற்றல்களாம்.
விஞ்ஞானம் என்பது..
மனித மூளையின்
ஆராய்ச்சி யாம்.
மெய்ஞ்ஞானம் என்பது..
மனித மூளை யின் ஆற்றல்களை எடுத்துரைப்பதாம்.
பத்தாம் வட்டம் எனும்
உயரிய வட்டம் நரம்பணுக்களால் பிணைக்கப்படுவதில்லையாம்.
மற்ற ஒன்பது வட்டங்களும்
பிணைக்கப்பட்டு
ஆத்ம கருக்களின் வசிப்பிடமாய் அமைந்திருக்குமாம்.
அணுக்கள் என்பது
துணை அணுக்களின்
எண்ணிக்கையை கொண்டே
நிர்ணயிக்கப்படுகிறதாம்.
அணுக்களின் அடர்தன்மை
வட்டத்திற்கு வட்டம்
மாறுபடுமாம்.
கலி வட்ட நரம்பணுக்களில்
புதையுண்ட நிறை என்பது
அதிகளவில் காணப்படுமாம்.
Electrons.. . Protons எனப்படும்
எதிர்.. நேர் மின்ஊக்கிகள்
சரிசமமாய் அமைந்தால் மட்டுமே
ஆத்ம கருக்கள் வசித்திடுமாம்.
உருவாக்கப்படும்
ஆசை என்பது எத்தனை துணை அணுக்களில் பதியப்படுகிறதோ
அதனை கணக்கில் கொண்டே ஒரு அணுவின் உருவாக்கம் நிகழும்.
ஒற்றை அணு ஆற்றிடும்
அற்புத செயல்...
அணுக்களை வடிவமைப்பதாம்.
எண்ணிக்கைக்கு ஏற்ற..
எலக்ட்ரான்.. புரோட்டான்
அணுக்களை இணைத்து..
அதன்மூலம் நியூட்ரான்
அணுக்களுக்கு ஓர் வசிப்பிடம்
உருவாக்கித்தந்திடுமாம்.
ஒத்த எண்ணிக்கையுள்ள அணுக்கள் ஒரு வட்டத்தில்
கூட்டமாய் அமைந்திருக்குமாம்.
இதனால் ஒற்றை அணுவால்
எளிதாய் உணவூட்டஇயலுமாம்.
இப்பிறவியில் சிறைகண்ட
ஆத்ம கருக்கள்..
ஐந்து வாயில்கள் கொண்ட
நரம்பணுவில் அமைக்கப்படுமாம்.
முற்பிறவியில்
சிறைகண்ட வை...
அதன்
ஆற்றல்,எண்ணிக்கை,
நிறைக்கேற்ப..
முதல் மூன்று வட்டங்களிலே
நிலை நிறுத்தப்பட்டு..
வாயிலை கடந்து உட்புறம்
சென்றுவிடும் வண்ணம்
ஆழமாய் புதைக்கப்படுமாம்.
திரைகள் எனும் அமிலக்கழிவுகள் யாவும்...
முற்பிறவி அணுக்களால்
அதிகளவில் உருவாக்கப்படுமாம்.
எவ்வாறெனில்..
ஒற்றைஅணு அளித்திடும்
ஆற்றல்களை பெறுவதற்காக அவை
விரைந்து முன்னோக்கி
பயணிக்குமாம்.
இதனால் உராய்தல் ஏற்பட்டு..
அதிக அமில கழிவுகளை
வெளிப்படுத்துகின்றனவாம்.
இதன்பொருட்டே திரைகளும்
வலுக்கின்றனவாம்.
உறக்கம் ஏற்காது செயற்கை ஒளிதனில் இயங்குபவர்கள்
அனைவரும் முற்பிறவி
அணுக்களுக்கு
உணவளிக்க இயலாது வாட்டமுறுவராம்.
எவ்வாறெனில்...
அனைத்து நரம்பணுக்களும்
ஒற்றை அணு தரும்
மெலட்டனின எனும் உயிர் திரவத்தை ஏற்கவேண்டியது
அவசியமாகிறதாம்.
ஆழ்ந்த உறக்கம் அடைந்தால்தான் அவை உணவு பெறவும்
விடுதலை பெறவும் இயலுமாம்.
அன்றி..
கழிவுகளை பெருக்கி..
திரைகளை வலுவுற செய்து..
புதைகுழிகளாக்கி...
ஆத்ம கருக்களை ஈர்த்து அழிக்கின்றனவாம்.
கோபம்.. பயம்.. பொறாமை.
அதிகளவில் உள்ள ஒருவர்
பல பிறவிகளாய்..
பிரிபடாத அணுக்களையே
கொண்டுள்ளார் என பொருள்படும்.
நிறைவேறிடாத ஆசைகள் யாவும் பலபிறவிகளாய்
நிலைத்து விட்டால்..
அவை
மூன்றிழை நரம்பிழைகளிலே
நிறுத்தப்பட்டு...
புற்றுநோய் தோன்றிட எளிதாய் வழிவகுக்குமாம்.
விஞ்ஞானம் - அறிவு. அணுக்களாம்.
மெய்ஞ்ஞானம் - அறிவு அணுக்களை உற்பத்தி செய்யும் ஆத்ம கருக்களையே சாருமாம்.
ஆத்மா உதிக்கவில்லையெனில்
மனிதனின் உருவாக்கமும் நிகழ்ந்திடாதாம்.
அறிவு அணுக்களும் பெருகிடாதாம்.
மெய்ஞ்ஞானம்..
உடலின் உள்உறுப்புகளையும்
வடிவமைப்பை யும் சார்ந்ததாம்.
துன்பநிலையில் வாழ்பவர்கள் அதன் காரணத்தை ஆராய்ந்திடின்..
புதையுண்ட ஆத்ம கருக்கள் வெளிப்பட்டு திரைகள் பல நீங்கிவிடுமாம்.
மெய்ஞ்ஞானம்...
அனைத்திற்கும் மூல காரணம் ஒன்றுண்டு.
காரணமே காரியம்.
காரணம் என்பது காரியத்தின்
அடிப்படை ஆற்றலாய் மலர்கின்றது.
காரணங்களின் காரணகர்த்தா பரமாத்மா என எடுத்துரைக்கின்றது.
இறைவன் - மெய்ஞ்ஞானம்.
அணுக்களின் இயக்கம் - விஞ்ஞானம்.
உயரிய, சீரான,
விடுதலை அடைந்த அணுக்களை உடையவர்களே
முன்னோடிகளாம்.
அவர்களே தெய்வங்களாம்.
சிறைபட்ட ஆத்ம கருவினை..
சிறைபடாத அணுக்களே
வெளியில் நின்று செயலாற்றி
பிரித்தெடுக்க இயலுமாம்.
ஒற்றையணு சாவியாய் கருதப்பட்டாலும்..
அதை இயக்குவது விடுபட்ட ஆத்ம கருக்களேயாம்.
இறைவழிபாடு செய்கையில் மன இறுக்கம் தளர்ந்து..
துன்பம் நீங்குவதை உணர்கிறோமே அது எவ்வாறு?
இறையின்..
உயர் தெய்வங்களின்..
ஆத்ம கருக்களில் ஒன்று
நம் சிரசினுள் புகுந்து..
ஆற்றல்களை அளித்து..
சிறைபட்ட ஆத்ம கருக்களை
விடுவிக்குமாம்.
அதன்பொருட்டே துன்பங்கள்
நீங்கி இன்பம் பிறந்திடுமாம்.
சீராய் இறைவழிபாடு தொடர்ந்தால்..
அணுக்களின் கட்டமைப்பு
மாற்றி அமைக்கப்பட்டு..
மேம்பட்ட தொடர்பு நிலைகள்
உருவாக்கப்படுமாம்.
உணர்ந்து செயல்புரிந்தால் ஆற்றல்கள் பன் மடங்காய் பெருகிடுமாம்.
சிரசினுள் உள்ள உயிர் அணு
வழிபடபட்டால்..
அதிக அளவில் அமிர்தம் சுரந்திடுமாம்.
உடன் அணுக்கள் யாவும் கருக்களை விடுதலை செய்து கரைத்து உருக்கிடுமாம்.
இறைவழிபாட்டில் விழிகளில் நீர் பெருகுவது ஏன்? அதன் பலன் என்ன?
துணை அணுக்கள் உருகத் துவங்கினால் விழிகளில் நீர் பெருகுமாம்.
உயரிய
உணர்வுநிலை சித்தித்து..
அமில கழிவுகளும் நீங்குமாம்.
ஆன்மா விடுதலை அடைவதுடன்..
சூழ்கின்ற ஆன்மாக்கள் விடுவிப்பதே..
ஞானத்தின் உச்சமாகும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உணர்ந்து செயல்படுவோம்
உத்தம நிலையை அடைந்திடுவோம். 🙏
xxx
நரம்பணுக்கள் - 5
காலத்தின் சூழலுக்கேற்ப
மறைபொருள் யாவும் வெளிப்படும் என்பதே நியதியாம்.
ஞானம் மிகுந்தவர்களே..
மெய்ஞ்ஞான மார்க்கத்தை உணர இயலுமா ம்.
இறைதத்துவம் என்பது
ஞான அணுக்களின் தொடர்பு அமைந்தால் மட்டுமே சித்திக்குமாம்.
பத்து வட்ட அணுக்கள் குறித்த சிந்தனை எழுந்தால்..
ஞானம் உதிக்குமாம்.
காந்த ஆற்றலின் அருளும் புலப்படுமாம்.
பத்து வட்ட அணுக்களே...
விஞ்ஞானத்தை உணர்த்திடுமாம்.
மெய்ஞ்ஞானத்தையும் ஏற்றிடுமாம்.
ஆலய மையத்தில்
அமைக்கப்படும் சிலைகளை..
கற்சிலை என எண்ணுவது
விஞ்ஞானமாம்.
தெய்வம் என எண்ணுவது
மெய்ஞ்ஞானமாம்.
தெய்வம் என நோக்கிடில்..
கருணை பிறக்கும் என்பதே நியதியாம்.
பஞ்சபூத மூலக்கூறுகள்..
ஐந்து வாயில்கள் வழியாக..
ஒவ்வொரு நரம்பணுவிற்கும்
செலுத்தப்படுமாம்.
விண்குருதி...
மண்குருதி எனும் உடல்குருதியில்..
ஐந்து வகை மூலக்கூறுகளுமே
கலப்புறுமாம்.
ஒவ்வொரு வகை
நரம்பணுவும் இதனை
உணவாய் ஏற்றிடுமாம்.
நரம்பணு என்பது
எத்தனை வகை வாயில்களை
கொண்டுள்ளதோ
அத்தனை வகை மூலக்கூறுகளையே
பெற்றிட இயலுமா ம்.
நரம்பணுவின் கட்டமைப்பு
ஐ வகை மூலக்கூறுகளில்
மாத்திரமே அடக்கமாம்.
ஐந்து வாயில்கள் கொண்ட
நரம்பணுக்கள் மாத்திரமே
ஆத்ம கருவினை
சுமந்திட இயலுமாம்.
ஏனெனில்..
ஐந்து வாயில்கள் வழியேதான்
மூலக்கூறுகளை
உட்செலுத்தவும் ஆத்ம கரு விரைந்து விடுபடவும்
இயலுமா ம்.
உயரிய ஞானம் என்பது
ஆத்மாவின் இருப்பிடம் அறிவதேயாம்.
ஒரு நரம்பணுவில் உள்ள
ஆத்மக்கரு என்பது ஒரே இடத்தில் நிலைத்திருக்காதாம்.
ஓர் அணுவிற்குள்..
ஓர் ஆத்மக்கரு மட்டுமே
இடம்பெற இயலுமா ம்.
எனினும்..
பல அணுக்கள் ஒரே ஒரு
நரம்பணுவில்
உதித்திட இயலுமா ம்.
ஐந்து வாயில்
கொண்டவை களில்..
ஒன்றோ.. அதற்கு மேற்பட்டோ..
ஆத்மக்கரு க்கள்
வசித்திட இயலுமா ம்.
ஒத்த எண்ணிக்கையுடைய
சமச்சீர் அணுக்கள் யாவும்..
ஒன்றிணைந்தே..
ஒரு நரம்பணுவில் வசித்திருக்குமாம்.
ஒரு நரரம்மணுவின் தகுதி...
ஐந்து வாயில்கள் மட்டுமல்ல..
அதன் சுற்றளவு,
உள் மற்றும் புற அமைப்பு,
அதன் இயக்கு சக்தி
ஆகியவையும்
ஒற்றைஅணு வினால் துல்லியமாக கணக்கிடப்படுமாம்.
மனிதனின் ஐந்து விரல்களை
போன்றே ஐந்து வாயில்கள்
அமைந்திருக்குமாம்.
ஆகாய மூலக்கூறின் பயணம்
பெருவிரல் வழித்தடத்தின் மூலமே..
வெப்ப மூலக்கூறு - ஆள்காட்டிவிரல் வழியே.
வாயு - நடுவிரல் வழியே.
நீர் - மோதிரவிரல் வழியே.
நில - சுண்டுவிரல் வழியே.
ஒரு நரம்பணுவின்..
நீளம், அகலம் என்பது
விரல்களை ஒத்தே அமைந்திருக்குமாம்.
அற்புத அறிவு கொண்ட
ஒற்றைஅணு..
ஆத்மக்கரு அமைந்திருக்கும் இடத்தை அறிந்து சென்று உணவளித்திடுமாம்.
இடம் பெயரும் ஆற்றல்
ஆத்ம கருக்களுக்கு உண்டு
எனினும்..
அவை ஒரு நரம்பணுவில்
இருந்து மற்ற நரம்பணுவிற்கு
சென்றிட இயலாதா ம்.
உள்ளே மாறி மாறி
எங்கும் பயணித்திடுமாம்.
எந்த ஒரு வாயிலின்
அருகிலும் வசித்திடுமாம்.
ஐ வகை மூலக்கூறுகளும்..
ஆத்மக்கருவிற்கும்
துணை அணுக்களுக்கும்
உணவாக பகிரப்படுகின்றனவாம்.
எனினும்..
ஆகாய மூலக்கூறு எனும்
காந்த ஆற்றல் மாத்திரமே
ஆத்ம கருவிற்கு
உணவாக இயலுமா ம்.
இறைவன் பஞ்சபூத வடிவினன்
என உரைக்கின்றனர்.. ஞானிகள்.
இது
சித்தாந்தமோ வேதாந்தமோ அல்ல..
பூரண விஞ்ஞானம்.
இறைவனுக்கு உணவளிப்பது
என்பது ஒரு வழிபாட்டு முறையேயாம்.
அதன் அடிப்படை காரணம்..
ஆத்ம கருக்களுக்கு உணவளிப்பதேயாம்.
திட, திரவ, வாயு, வெப்ப உணவு
இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
அனுதினமும்..
ஒருவன் ஏற்கும்
உணவினை இறைவனுக்கு
படைத்திட்டான் எனில்
அவை ஆத்ம கருக்கள் ஏற்கும்
உணவிற்கு சமமாம்.
அறிவு அணுக்களான எலக்ட்ரான்...
நில, நீர், திட உணவுகளை ஏற்குமாம்.
நேர்மறை புரோட்டான்..
வெப்பம், வாயு ஏற்குமாம்.
புறத்தில் செய்யப்படும்
தீபஜோதி, கற்பூர ஆராதனை..
வெப்பமூலக்கூறுகளை
இறைக்கு அளித்திடுமாம்.
புகை எனும் தூபம்..
வாயு வடிவில்..
புரோட்டான்களுக்கு
உணவு அளித்திடுமாம்.
ஆகாய மூலக்கூறுகளே
ஆத்மக்கரு க்களுக்கு.... நியூட்ரான் எனும் உணவாய் அமைந்திடுமாம்.
மெய்ஞ்ஞான தத்துவத்தில்
செய்யப்படும் ..
வழிபாடுகள்..
ஆராதனைகள்..
யாவும் ஒருமித்த மனதுடன்
செய்திடல் அவசியமாம்..
புறத்தே ஆற்றப்படும் ஒவ்வொரு செயலும்
அகத்தோடு இணைய வேண்டும் என்பதே நியதியாம்.
எண்ணம் என்பது
ஆகாய மூலக்கூறாம்.
இறைவனுக்கு படைக்கப்படும்
உணவுகள் யாவும்
இந்த ஐவகை மூலக்கூறுகள்
ஒன்றிணைந்தால் மாத்திரமே
ஒரு ஆற்றல் நிறைவடைய இயலுமா ம்.
பஞ்ச பதார்த்தங்கள் என்பதும் இவையே யாம்.
அன்பு, பக்தி, சரணாகதம் கலந்த நிலையே சமர்பிக்கப்படல் வேண்டுமாம்.
ஏனெனில்... அவையே
ஆகாய மூலக்கூறுகளின்
வடிவத்தினை ஏற்றிடுமாம்.
பல்வேறு உணவினை மனிதன்
சமர்பித்திடினும் அதில்
அன்பும் பக்தியும் இல்லையெனில்...
அவ்வுணவை இறைவன் ஏற்பதில்லையாம்.
ஐவகை மூலக்கூறுகளை
உள்ளடக்கியதே ஒரு
முழுமையான உணவாம்.
விண்குருதியும் அதுவேயாம்.
'என்னால் இயன்ற உணவை
சமர்பித்துள்ளேன் இறைவா
ஏற்று அருள் புரி ந்திடல் வேண்டும்' என...
பக்தி மனப்பாங்கு உருவானால் மாத்திரமே..
புறத்தினில் வழிபாடென்பது
நிறைவடையுமாம்.
அக ஆன்ம கருக்களும்
நிறைவான உணவை பெற்றிடுமாம்.
மெய்ஞ்ஞான தத்துவம் என்பது
எண்ணங்களை யே பூரணமாய்
சார்ந்துள்ளதாம்.
உணர்வுகள் என்பவை ஆகாயமூலக்கூறுகளுக்கு நிகரானவையாம்.
தீய உணர்வுகள் உதித்திடின்..
ஆகாய மூலக்கூறுகள்
தீய ஆற்றலால் சூழப்பட்டு..
அமிலக்கழிவுகளால்
சிறைகொண்டுள்ளது என அறிந்திடல் வேண்டுமாம்.
ஆத்ம கருக்கள் யாவும்
விடுதலை அடையும் தருவாயில் நிலைத்திருந்தால்..
அல்லது
பெரும்பான்மையானவை
விடுதலை அடைந்திருந்தால் மட்டுமே..
பக்தி பாவமும் சரணாகதநிலையும் இறைவனோடு ஒருங்கிணைந்த நிலையும்
தோன்றி டுமாம்.
எண்ணங்களை ஒருமுகப்படுத்தி..
அகப்புற பணிகளை செய்திட்டால்..
பேராற்றல் பெருகிடுமாம்.
உயிரினை குறித்து ம் ஆத்மாவினை குறித்து ம்
அறியாத பலருக்கும் அதிகமான ஆத்மக்கரு க்கள்
சிறைபட்டிருக்குமாம்.
பலரோ...
குழப்ப நிலையில்
இயங்கிடுவராம்.
கலிகாலத்தில்..
அறியாமை திரைகள்..
அனுதினமும் உருவாகின்றனவாம்.
முயன்று முயன்று நீக்கினாலும்
அனுதினமும் உருவாவதே
அமிலக்கழிவுகள் மற்றும் திரைகளாம்.
அனைவரும்..
ஆகாய மூலக்கூறான
சரணாகதி நிலையில் நின்றால் மட்டுமே இதை களைவது சாத்தியமா ம்.
காந்த ஆற்றல் ஒன்றே..
நஞ்சு கள் எனும் கலியினை
அழித்திட வல்லதாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பணிவு, பக்தி, சரணாகதம்,
எண்ணங்களால் தூய்மை
கொண்டு அகமும் புறமும் இன்புற வாழ்ந்திடுவோம் 🙏
xxx
நரம்பணுக்கள் - 6
சிந்தனை என்பது அகமார்க்கத்தில் நிலைத்துவிட்டால்..
இறை லயம் சித்திக்குமாம்.
மூளையே மனிதன் உருவாக மூலக்காரணமாம்.
மூளையை உருவாக்குவது ஆன்மத்துகள்களாம்.
ஆன்மாக்கள் உருவாக்கிடும் பரமாத்மா விற்கு...
மனிதர்கள் மூளையை குறித்து ஆராய்ந்து அனுதினமும் நன்றியுரைத்திடல் வேண்டுமாம்.
இச்செயல் அமிலக்கழிவுகளை நீக்கி ஆன்மாவினை விடுவிக்கும் ஆற்றல் பெற்றதாம்.
மூளைப்பகுதியின்..
மையத்தில் ஒளிர்கின்ற
ஆன்மத்துகளும் உயிரும்
ஒற்றை அணுவால் நிலை
நிறுத்த ப்பட்டுள்ளனவாம்.
மனிதனின் மூளைப்பகுதி எதன் அடிப்படையில் அமைக்கப்படுகிறது?
ஒவ்வொரு மனிதனின் மூளையும் மாறுபட்ட நரம்பணுக்களை கொண்டிருக்குமாம்.
பிரிபட்ட, பிரிபடாத அணுக்களின்
கூட்டு எண்ணிக்கை,
எடை, நிறை, தன்மை.. ஆகியவற்றை கொண்டே ஆன்மா மூளைப்பகுதியை நிர்மாணிக்கிறதாம்.
ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் புவியின் பங்கு என்ன?
புவியின் இயங்குசக்தி என்பது
கருவில் வளர்கின்ற
குழந்தை யின் நரம்பிழைகளை
உருவாக்குவதில் பெரும்பங்கு
வகித்திடுமாம்.
புவிக்கோள் என்பது அனுதினமும் சூரியனின் ஆற்றலை ஈர்த்தே பெற்றாலும் சந்திரனின் ஆற்றலையும் அதிகளவில் ஈர்த்தே பெறுகிறதாம்.
சூரிய, சந்திர ஒளி ஆற்றல்கள்..
கருவில் வளர்கின்ற குழந்தையின் மூளை யை உருவாக்க உதவிடும் எனினும்
ஓர் உடலினை உருவாக்கிட உதவிடும் தாய்தந்தை
ஆகிய இருவரின் ஆன்மக்கருந்துகள்கள்.. காலநேரம் அடிப்படையாக கொண்டே செயல்படுமாம்.
ஓர் ஆன்மா ஓர் உடலினை தேர்வு செய்யும் முன் நிகழ்வது என்ன?
பிரிபடாத கருந்துகள்கள் யாவும் முதலில் கணக்கிடப்படுமாம்..
எத்தனை பிறவிகளாய்
பிரிபட வில்லை என்பதும் கணக்கிடப்படுமாம்.
இப்பிறவியில் எத்தனை துகள்கள் கீழிறக்கப்படலாம்
என்பதும் நிர்ணயிக்கப்படுமாம்.
இவை யாவும் ஒரு மனிதனின் ஆன்மா மற்றும் உயிர் இணைந்து தீர்மானித்திடும் நிலைகளாம்.
ஓர் உடலினை தேர்வு செய்யும் முன்னரே அனைத்தும்
தீர்மானிக்கப்பட்டுவிடுமாம்.
ஆத்மக்கருக்கள் வசிப்பதற்கு
தேவையான இல்லங்கள் மூளை பகுதியில் உருவாக்கப்படுமாம்.
ஒரு குழந்தையானது முழுநிலவு நாளில் கருவாக உருக்கொண்டால்..
அல்லது
வளர்பிறையின் உச்சத்தில் உருக்கொண்டால்
பிரிபடாத கருக்கள்
குறைவாக உள்ளது என அறியலாமாம்.
தேய்பிறையில்..
சந்திர ஆற்றல் குன்றியுள்ள காரணத்தால் நரம்பிழைகளை சீராக அமைவதில்லையாம்.
சந்திரசுரபி ஈர்த்து அளித்திடும் நரம்பணுக்கள் யாவும்
சீரான அமிலக்கழிவுகளை பெற்றிடும் எனினும்
சவ்வுப் படலமும் சீராக உருவாக்கப்பட்டு ஐந்து இழைகளும் உருவாக்கப்படுமாம்.
சந்திர கோளில் இருந்து
சந்திர சுரபி...
சீரான ஆற்றல்களை
பெற்றால் மட்டுமே நரம்புமண்டலமும் நரம்பணுக்களும் சீராக அமைக்கப்படுமாம்.
பல கோள்களின் இணைப்பாற்றல்,
சூரிய, சந்திர ஆற்றல்
என பல காரணங்களும் நரம்பிழைகளின் வளர்ச்சிக்கு மூல காரணமாய் அமையுமாம்.
முற்பிறவியில் பிரிபடாத ஆன்மக்கருக்கள் யாவும்
ஏன் மூவிழை கொண்டிருக்கிறதெனில் அவற்றால் நில. நீர் மூலக்கூறுகளை ஏற்றிட இயலாததால்.
அவை ஏற்றிட்டால் அழிந்திட நேரிடுமாம்.
அவ்வகை
ஆத்ம கருவினை
சூழ்ந்திருக்கும்
எலக்ட்ரான, புரோட்டான் யாவும் இறுகியே காணப்படுமாம்.
விளைவாய்..
இயக்கம் குன்றி,
அசையா தன்மை உருவாகி,
அணுக்கள் உணவு பெறுவதும் இயலாததாகிவிடுமாம்.
எலக்ட்ரான் எனும் வெப்ப அணுக்களை கொண்ட
துணை அணுக்களும்
மாறுபட்ட ஆற்றலை யே கொண்டிருக்கும்.
எனவே பஞ்ச பூத மூலக்கூறுகளையும்
நான்கு கனிம வளங்களையும் மூவிழை ஆற்றல்களை யும் ஈர்த்து பெற்றிடவேண்டும் என்றே முனைந்திடுமாம்.
இதனால் மைய அணுக்களுக்கு உணவு கிட்டாதென்பதனாலேயே அவை ஒற்றை அணு வினால் உறங்க வைக்க படுகின்றனவாம்.
நில, நீர் மூலக்கூறுகளில் உப்பின் தன்மை அதிகம்.
உப்பும் ஒருவகை நஞ்சாற்றலே.
இவை அளித்திடும்
உப்பு படிமங்கள் யாவும் வலுவான திரைகளை உருவாக்கிடுமாம்.
பல பிறவிகளாய் பிரிபடாத அணுக்களின் தன்மை மாறுபட்டிருக்குமாம்.
ஒருவிதமான உப்பு படிமங்கள்
ஆத்மகருக்களை தாங்கியுள்ள நியூட்ரான் அணுக்கள் மீது படிந்திருக்குமாம்.
அதன் காரணமாய்..
ஆத்ம கருக்கள்..
ஒற்றைஅணு அளித்திடும் ஆற்றல்களை எரிபொருளாய் பெற்றுவிட இயலாதாம்.
இதனால் தனது ஆற்றல்களை துணை அணுக்களுக்கு பகிர்ந்திட இயலுவதில்லையாம்.
ஏற்றுள்ள பிறவியில் அதிக அமில தன்மை கொண்ட
நில, நீர் மூலக்கூறுகள் யாவும்
ஐந்தாம் வாயில் வழியே உட்செலுத்தப்பட்டால்
ஆத்ம கருவினை சூழ்கின்ற
உப்பு படிமங்கள் மேலும் அதிகரித்துவிடுமாம்.
அதன்பொருட்டே..
அவ்விரு வாயில்களும் நீக்கியே நரம்பிழை அமைக்கப்படுகிறதாம்.
ஒற்றைஅணுவானது அவற்றில் மட்டுமே பிரிபடாத கருக்களை முதன்மையயாய் உட்செலுத்தி டுமாம்.
அவை வாயு, வெப்பம், ஆகாயம் மூலக்கூறுகளை மட்டுமே உணவாய் பெற இயலுமா ம்.
காந்த, வெப்ப ஆற்றல்களை மாத்திரமே அவை
பெற்றிட இயலுமா ம்.
நஞ்சிழை ஆற்றல்களை ஈர்த்திட இயலாதாம்.
எனினும் நான்கு கனிம வளங்களையும் பெற்றுக்கொள்ளு ம் வண்ணம்
அவை அமைக்கப்பட்டிருக்குமாம்.
அவ்வகையில் நல்ல ஆற்றல்களை மட்டுமே உட்செலுத்தி..
ஆத்ம கருக்களின் மீது படிந்துள்ள உப்பு படிமங்களை நீக்கிட வே ஒற்றைஅணு தீவிரமாய் முயன்றிடுமாம்.
ஞானம் என்பது யாதெனில் நரம்பணுக்களின் அமைப்பினை அறிவதாகும்.
ஒருவர் இறையாற்றலை உணராததன் காரணம் என்ன?
ஒரு மனிதன் மாயையில் மூழ்கி இறையாற்றலை உணராது செயல்புரிந்தால்..
அவனுக்கு மாயத்திரைகள் வலுத்துள்ளது எனவும்,
அவன் பெரும் பிணிகளிலும் ஏழ்மை நிலையிலும் துன்புற்றால்
அவனுக்கு கர்மத்திரை வலுத்துள்ளது எனவும்,
அருளும் பொருளும் அதிகமாய் இருந்தாலும் அவன் ஆணவம் கொண்டு
பிறரை துன்புறுத்தினால் அவனுக்கு ஆணவத்திரை வலுத்துள்ளது எனவும் அறிந்ததிடலாமாம்.
ஆழ்நிலை தியானத்தின் பயன்கள் என்ன?
ஆழ்நிலை தியானம் புரிந்து உள்மூளையினை..
எண்ணங்களால் தீண்டினால்.. நரம்பணுக்களின் நிலைப்பாட்டினை நன்கு உணரலாமாம்.
மேலும்
சுயபரிசோதனை செய்து ஆத்மக்கருக்களை பிரித்தெடுப்பதற்கும் எத்தகைய அணுக்கள் சிரசில் பெருகியுள்ளது என உணரவும் பேருதவி புரிந்திடு மாம்.
எண்ணங்களை குவித்து ஆழ்ந்து தியானிக்கையில் எளிதாய்
நியூட்ரான் அணுக்களை
தரிசிக்க இயலுமாம்.
ஆத்ம கருக்கள் அடங்கிய
நி யூட்ரான் அணுக்கள்.. தன்னுள் உயரிய ஒளிரூபத்தை தாங்கி நிற்கும் உயரிய பாதரச இழையினையும் எளிதாய் உணர இயலுமாம்.
ஒளியை நோக்கிய உன்னத பயணம் என்பது அக நிலை தியானமேயாம்.
ஆழ்நிலை தியானம்...
சுய ஆராய்ச்சி புரிந்து தத்தம் கருக்களை தாமே பிரித்தாண்டிட உதவிடும்.
பலருக்கும் இது வசப்படாததால்
குருமார்கள் துணையையும் மந்திரங்களையும் ஏற்கிறோம்.
ஆழ்நிலை தியானத்திற்கு ஓசை உதவி புரியுமாம்.
ஆத்மக் கருவினில்
ஒளி, ஓசை எனும் இருவேறு இழைகளும் உள்ளடங்கி இருக்குமாம்.
மெய்ஞ்ஞானத்தால் அடைவது என்ன?
புற ஆற்றல்கள் கொண்டு
அக ஆற்றல்களை தீண்டுவதே..
மெய்ஞ்ஞானம்.
இக்கலை தெரிந்தால்
அறிவு அணுக்களாம்
துணை அணுக்களை
எளிதாய் உறக்கத்தில் ஆழ்த்திடலாமாம்.
மேலும்..
நரம்பணுக்களை வெற்று கூடுகளாக உருமாற்றி நிர்மலத்தன்மையினையும் ஏற்று விடலாமாம்.
மும்மலஙங்களை
சுயமாய் நீக்கி
சூரிய, சந்திர தரிசனம் கண்டிடலாமாம்.
மத்தியிலே ஒளிர்கின்ற அக்னியையும் உணர்ந்திடலாமாம்.
அமிர்த ஆற்றலையும் சுவைத்திடலாமாம்.
காயகல்ப தேகம் பெற்றிடலாமாம்.
விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒன்றென பிணைத்திட்டால் உயர்வு நிலைகள் சித்திக்குமாம்.
மந்திரம் உச்சரித்து உணர்வுநிலை பெருக்கினால் ஆழ்நிலை தியானம் சித்திக்குமாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
xxx
நரம்பணுக்கள் - 7
ஞானாலய பகுதியில்..
பூத்திட்ட ஒவ்வொரு மலர்களும் காந்த சக்தி படைத்தவர்கள்.
அதன்பொருட்டே அப்பகுதி..
காந்தப்புலமாக அறியப்படுகிறது
என்கிறார் அன்னை.
ஈசனின் காந்த சக்தியே மெய்ஞ்ஞானமாம்.
குரு அன்னையின் வெப்பசக்தியே
விஞ்ஞானமாம்.
உணர்வு நிலையில் ஏற்றிட்டால் ஈசஅருளை
பெருக்கிடலாமாம்.
பசி, தாகம் போன்றே
அன்பு, கருணை என்பதும்
அனைத்து உயிரினங்களும்
உணர்ந்து ஏற்க கூடியதாம்.
விஞ்ஞானம் பற்றி அன்னை
உரைப்பதன் காரணம்..
அறியாமை திரைகளை
நீக்குவதற்காகவாம்.
கலிமானிடர்களின் விழித்திரைகள்..
வலுத்துள்ள காரணத்தால் உயிர், ஆன்மா குறித்து
அறிய முயற்சிக்காமல்
அவை உருவமாய் புறத்தில் நிலைத்திட வேண்டும் என்றே எண்ணுகின்றனர்.
நரம்பணுக்கள்..
ஒத்த வடிவு, ஆற்றல்,
எடை, நிறை என..
அவையாவும் வெவ்வேறு குணநலன்கள் படைத்தவையாம்.
விழிகளில் திரைகளற்ற ஞானியரால்..
மனித மூளையை ஊடுறுவி காண இயலுமாம்.
வெட்டவெளி முதல் சிறு ஆன்மத்துகள்கள் வரை அனைத்துமே மூளைக்குள் அடக்கமாம்.
நரம்பணுக்கள் யாவும்
1 முதல் 10 வரை நரம்பிழைகளை புறத்தினில் கொண்டிருக்குமாம்.
எனினும் அவை
முழுமையடையாத,
மாற்றுவழி அமைத்திடும் நரம்பிழைகளாகவும் அமைந்திருக்குமாம்.
நரம்பணுக்களை பிணைக்கும் வழித்தடமே வாயில்களாம்.
நரம்பணுக்கள் எத்தகைய வாயில்கள் கொண்டுள்ளதோ
அத்தகைய ஆற்றல் பெற்றிருக்குமாம்.
ஆற்றல் என்பது யாதெனில்
அதன் எரிபொருளினை குறிப்பதாகும்.
நரம்பணுக்களின் மையப்பகுதி என்பது ஆற்றல்களை சேமித்திடும் பெட்டகமாகவும் உடல்பிணிகளை நீக்கிடும் மருத்துவ பொருளாகவும் திகழ்ந்திடுமாம்.
நரம்பணுக்கள் யாவும் பல வாயில்கள் கொண்டிருக்குமாம்.
மேலும் உள்ளும் புறமும்
பயணித்திட இரு வழித்தடங்களையும் கொண்டிருக்குமாம்.
அவை உடல்குருதி
பயணித்திட ஒன்றும்
விண்குருதி பயணித்திட ஒன்றுமாம்.
இவ்விரு ஆற்றல்களும் கலப்புற்று உருவாக்கப்படும் உயரிய வேதியல் மற்றும்
ரசாயன நுண்பொருட்கள் யாவும் ஒவ்வொரு நரம்பணுவின் மையத்தில் சேமிக்கப்படுமாம்.
உயரிய மருத்துவ பொருளான அவை உடலில் எந்த ஒரு இடத்தில் நோய் தோன்றினாலோ..
எந்த ஒரு உறுப்பு செயல் இழந்தாலோ..
உடன் நரம்பணுவின் மைய ஆற்றல் வெளியேற்றப்பட்டு உடலினை சீர் செய்திடுமாம்.
கலிகாலத்தில்.. அமிலக்கழிவுகள் அதிகரிப்பால் வாயில்களும் உட்புறமும் உப்புபடிமன்களால் அடைக்கப்பட்டுள்ளதால் நரம்பணுக்கள் யாவும் பாதிக்கப்படுகின்றனவாம்.
ஒவ்வொரு மனிதரும் மூன்று
பணிகளை அடிப்படையாக ஆற்றுகின்றனர்.
1. உணவு உண்பது
2. உணவின் ஆற்றல்களை ஏற்று பணிபுரிவது
3. ஓய்வெடுப்பது
ஏற்கின்ற உணவின் வடிவம் வேறு.
அவை ஆற்றல்களாம் பிரிக்கப்பட்டால் மாற்றுவடிவம்தனையே ஏற்றிடும்.
பின்னர் கழிவுகளும் தோன்றி டும்.
மனிதர்கள்.
உண்பது, இயங்குவது, மற்றும் கழிவுகளை நீக்கிட உறங்குவது போன்ற முப்பெரும் பணிகளை செய்திடும் வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளனராம்.
ஏழு வாயில்கள் கொண்ட. முதல் கலி வட்ட அணுக்கள்.. நில, நீர் மூலக்கூறுகளை
ஏற்றி ட
இரண்டிரண்டு வழித்தடமும்,
வாயு, வெப்பம், ஆகாயம் மூலக்கூறுகள் உட்சென்றிட ஒவ்வோர் வழித்தடமும் கொண்டிருக்குமாம்.
நில,நீர் மூலக்கூறுகள் இரண்டிரண்டு வழித்தடம் கொண்டிருப்பதன் காரணம்..
எலக்ட்ரான் எனும் அறிவு அணுக்கள் உற்பத்தி செய்திடும் கூடமாக இவை விளங்குகின்றனவாம்.
நீர் மூலக்கூறுகளில் குருதி எனும் தாமிர ஆற்றல் அதிகரித்திட வேண்டும் எனில் நில மூலக்கூறுகளில் அதன் மென் பொருட்களான இரும்பு ஆற்றல் குருதியில் பெருகிட வேண்டுமாம்.
வாயு, வெப்பம், ஆகாயம் மூலக்கூறுகள் இருவழித்தடம் அமைத்திட இயலாது ஏனெனில் அவை பூமியில் உருவாவதில்லை.
நியூரான்ஸ் யாவும் அதிக துணை அணுக்களை நிலைநிறுத்தி எலக்ட்ரான் எனும் வெப்ப அணுக்களை உற்பத்தி செய்திடுமாம்.
தலைமை சுரபியின் காந்த ஆற்றலின் துணைகொண்டே எலக்ட்ரான்ஸ் தனித்து உருவாகிறதாம்.
தாமிர ஆற்றல், இரும்பாற்றல், காந்தஆற்றல் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்படுவதே எலக்ட்ரான்ஸ் எனும் துணை அணுக்களாம்.
இதன் ஆற்றல்கள் மூலமே அவை ஆத்மக்கருக்களை ஈர்த்து முழு அணுவாக உருக்கொள்கிறதாம்.
ஒவ்வொரு முறையும் ஆசை எனும் பற்று உருவாகும் தருணம் அவை ஏழு வாயில்கள் கொண்ட நரம்பணுக்களில் பதியப்படுகின்றனவாம்.
அங்கு அமைந்துள்ள துணை அணுக்களே பதிவுகளை ஏற்று பின்னர் அவை ஐந்து வாயில்கள் கொண்ட நரம்பணுக்களுக்கு மாற்றப்படுகின்றனவாம்.
அதன்பின்னரே
ஆத்மக்கரு வானது ஈர்க்கப்பட்டு.. ஒன்றிணைக்கப்பட்டு..
முழுமை வடிவம் பெறுகிறதாம்.
மெய்ஞ்ஞானத்தில்..
ஏழு வாயில்கள் கொண்ட
நரம்பணுக்கள் யாவும்
பிரம்மா எனும் படைக்கும் தெய்வம் எனவும்
ஐந்து வாயில்கள் கொண்டவை..
மகாவிஷ்ணு எனும் காக்கும் தெய்வம் எனவும்
மூன்று வாயில்கள் கொண்டவை அழிக்கும் தெய்வமான சிவன் எனவும் அறிந்ததிடலாம்.
அறிவு அணுக்களாகிய எலக்ட்ரான் படைக்கப்படுவதினால்
பிரம்மா படைக்கும் கடவுளாகவும் சரஸ்வதி தேவி கல்வி அறிவை பெருக்கும் கடவுளாகவும் அறியப்படுகின்றார்.
தாமிர ஆற்றல், இரும்பாற்றல், விண்குருதியில் உள்ள
தாமிர கனிமம், நஞ்சாற்றல்.. ஆகியவை அதிக அளவில் கிடைக்கப்பெற்றால் அறிவு அணுக்கள் பெருகிடுமாம்.
அறிவு பெருக்கம் நன்மையே என்றாலும் அவை ஆத்மக்கருக்களை சிறை கொள்ள முனைந்தால் பல்வேறு பதிவுகளை அவை நிரந்தரமாக ஏற்க நேரிடுமாம்.
எலக்ட்ரான் எனும் துணை அணுக்களை சிறுவயது முதல் பெருக்கிடல் வேண்டுமாம்.
புறத்தினில்..
கால்சியம் நிறைந்த
copper, zinc, Iron ஆற்றல்களை அதிக அளவில் ஏற்றி ட வேண்டுமாம்.
கல்வி அறிவு ஏற்கப்பட்டு கற்றவை யாவும் நினைவில் நின்றிட இவை
பெரும் துணை புரியுமாம்.
ஆசைகளும் பற்றுகளும் அதிகரித்தால்..
நினைவாற்றல் குன்றிவிடுமாம்.
சரஸ்வதி தேவி ..
வெண்ணிற ஆடை அணிந்து வெண்தாமரையில் வீற்றிருப்பதன் காரணம்...
அவர் அதிக அளவில் விண்குருதியினை
ஈர்த்து அளித்து அதன்மூலம் துணை அணுக்களின் பெருக்கத்திற்கு உதவிடுவார் என்பதை குறிப்பதற்காகவேயாம்.
மகாவிஷ்ணு ஐந்து வாயில்கள் உடையவராம்.
அவர் ஆத்ம கருக்களை காத்து அவை பிரிபட உதவிடுவாராம்.
புறத்தினில் நரம்பணுக்களை காண இயலாதாம்.
மேலும் அவை இறைதன்மையினையும் உணர்வுகளையும் நல்குவது இல்லையாம்.
உள்விழி திறவுகொண்டால் அனைத்தும் புலப்படுமாம்.
விழிகள் திரைகளால் மறைக்கப்பட்டுள்ளதால் ..
காண இயலாதென்பதினால் புற உருவங்களாக.. சிலைகளாக சித்தரிக்கப்படுகின்றனவாம்.
மூன்று வாயில்கள் உடைய சிவன் ...
ஆழ்ந்து புதைந்துள்ள கருக்களை எளிதாய் நீக்கி ஆணவ திரைகளை நீக்கிடுவாராம்.
ஒற்றைஅணு பெண் தெய்வமாக சித்தரிக்கப்பட்டு எங்கும் பரவி செயலாற்றுவதால் மற்ற தேவியர்கள் முப்பெரும் தேவியருக்கு உதவி புரிவதுபோன்று மெய்ஞ்ஞான தத்துவங்களை விளக்குகின்றனவாம்.
மெய்ஞ்ஞானம்...
அரிய இயலாத நுண்ணிய செய்திகளையும் உணர்வு அலைகளாய் போதிக்கவல்லதாம்.
ஞானம் பூர்த்தியுற்றால் அஞ்ஞானம் அகன்றுவிடுமாம்
அணுக்களும் அமைதியுறுமாம்.
ஞானியர் அகவழிபாடு செய்து உயிரினை தேவியாய் போற்றிடுவர்.
ஆன்மாவை ஈசனாய் போற்றிடுவர்.
கலி காலம் ஆத்ம கழிவுகளால் இயங்கும் காலம்.
பிரளய நோய் சிரசில் உருவாகவும் புறத்தினில் பல்வேறு அழிவுகள் உருவாவதற்கும்
மூலகாரணம் ..
பலகாலமாய் விடுபடாத ஆத்ம கருக்களேயாம்.
எனவே
புறத்தினில் இறைவழிபாடு செய்கையில்..
பிறவா வரம் வேண்டும்.
முக்தி வேண்டும் என்றே பிராத்தனை செய்யுங்கள்
என்கிறார் நம் குரு அன்னை.
புறவழிபாடுகள் யாவும் அகமார்க்கத்தை தெளிவுறுத்துமாம்.
உணர்ந்து செயலாற்றி.
உத்தம நிலையை அடைந்திடுவோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
xxx
நரம்பணுக்கள் - 8
முன்னேறிச்செல்.
உயர்வுகளை எய்திவிடு.
உச்சத்தை அடைந்துவிடு.
இவையே..
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் உரைப்பவையாம்.
திரைகள் வலுப்பது எதனால்?
பொருள் ஒன்றே உயர்வு.
புகழ் ஒன்றே உன்னதம்.
அழகொன்றே நிலை.
புறவாழ்வொன்றே நிரந்தரம்.
போன்ற எண்ணங்கள் உதிப்பதன் விளைவாம்.
அணுவின் தன்மை என்ன? எலக்ட்ரான் ஓரிடம் நில்லாது பயணித்துக்கொண்டே இருப்பதேயாம்.
ஆடாது அசையாது நிற்கும் ஈசனும் ஓர் அணுவேயாம்.
வெப்பத்தை உமிழ்வது ஒருவகை அணுக்கள் எனில் காந்த சக்தி நிறைந்த குளிர்ச்சியானவையும் அணுக்களேயாம்.
ஒரு மனிதனின் மூளையில் பலகோடி அணுக்கள் உண்டாம்.
அவையாவும் நரம்பணுக்களாகவும்
துணை அணுக்களாகவும் ஆத்மக்கரு எனும் பாதரச அணுக்களாகவும்
அமைந்திட லாம் எனில் அணு என்பது இறையம்சம் பொருந்திய, ஆராய்ச்சி க்கு அப்பாற்பட்டவை என்றே அறிந்திடுவோம்.
உள்மூளை என்பது பத்து
வட்ட அணுக்களை அடிப்படையாக்கொண்டு இயங்குவதாம்.
ஒற்றைஅணு இருப்பிடம் துவங்கி தலைமைசுரபி வரை அவை பரவியே செயல்படுமாம்.
முதல் கலி வட்டம் தலைமை சுரபியை ஒ ட்டியே காணப்படுமாம்.
இச்சசுரபி அதிகளவில் தன் ஆற்றல்களை முதல்வட்ட அணுக்களுக்கே பகிர்ந்திடுமாம்.
மனிதமூளையில் உள்ள தலைமை சுரபி, ஆத்மக்கரு எனும் பாதரசதுகளினை ஏற்று செயல்புரிந்தால் மாத்திரமே எலக்ட்ரான்ஸ் எனும் வெப்ப அணுக்களை உருவாக்க இயல்கிறதாம்.
வலிமை வாய்ந்த ஒரு அணுவினால் மாத்திரமே மற்றவகை அணுக்களை உருவாக்கிட இயலுமாம்.
தாய்தந்தையரின் இரு ஆத்மக்கருக்களும் உராய்தல் மூலமே பல்வேறு துணை அணுக்களை உருவாக்குகின்றதாம்.
ஒரு குழந்தையானது தாயின் கருவறையில் உதிக்கின்ற தருணம் வரை இரு ஆத்மக்கருக்களும் தலைமை சுரபியில் வீற்றிருக்குமாம்.
அதன்பின்னர் அவை இரு விழிகளையும் நாடி சென்று அமர்ந்துவிடுமாம்.
அவை தொடர் செயலாய் எலக்ட்ரான் உற்பத்தி செய்தவண்ணமே செயல்புரியுமாம்.
ஒற்றைஅணு ..
தலைமை சுரபி யிடம் காந்த ஆற்றல்களை ஈர்த்து பெற்றவுடன் ..
இடது விழி நோக்கி பயணிக்கும்.
அது ஒரு நாழிகை நேரம்
இடது விழியில் உள்ள ஆத்ம கருவிற்கு உணவளிக்கும் என்றும் பின்னர் ஒரு நாழிகை நேரம் வலது விழியின் ஆத்ம கருவிற்கும் உணவளிக்கும் என்றே வேதநூல்கள் கூறுகின்றனவாம்.
அத்தருணத்தில்..
ஓர் அற்புத நிகழ்வாய்..
இடது மற்றும் வலது விழியில் உள்ள ஆத்மக்கரு வும் ஒன்றென இணைக்கப்படுமாம்.
ஒற்றைஅணு தரும் உணவினை ஏற்றபின் இருவிழிகளில் உள்ள ஆத்மக்கரு வும் தலைமை சுரபியை வந்தடையுமாம்.
ஒற்றையணு இறுதி ஒரு நாழிகை நேரம் பத்து வட்ட அணுக்களில் புதையுண்டுள்ள ஆத்மக் கருக்களுக்கு உணவளிக்கும் என்றும் அதன் பின்னரே நிர்மலத்தன்மை கொண்டு சிரசின் உச்சி நோக்கி பயணித்து கபால வாயில் மூலம் உட்புகும் ஆற்றலை ஏற்றிடுமாம்.
பிரம்ம முகூர்த்தம் துவங்கிடும் ஒரு நாழிகை முன்னர் ஒற்றையணு அனைத்து ஆத்மக் கருக்களுக்கும் உணவளித்திடுமாம்.
உயரிய அத் தருணத்தில் இரு விழிகளில் அமர்ந்திட்ட ஆத்மக்கருக்கள் இரண்டும் மீண்டும் தலைமை சுரபியின் மையத்திற்கு பயணித்து ஒன்றிணைந்து உராய்தல் மூலம் துணை அணுக்களை உற்பத்தி செய்திடுமாம்.
அவை யாவும் உடனடியாக ஏழு வாயில்கள் கொண்ட நரம்பணுவிற்கு கடத்தப்படுமாம்.
பின்னர் ஆத்ம கருக்கள் இரண்டும் மீண்டும் தன் இருப்பிடம் சென்று அமர்ந்துவிடுமாம்.
அனுதினமும் தொடர் செயலாய் இது நடைபெறுமாம்.
ஒற்றைஅணு..
நிர்மலத்தன்மை அடைந்ததும் ஆத்மகருக்கள் யாவும் ஒன்றிணைந்து ஆற்றல் பரிமாற்றம் நிகழ்த்திடுமாம். பல்வேறு புதிய துணை அணுக்களும் தோன்றிடுமாம். துணை அணுக்களாம் அறிவு அணுக்கள் உறங்கி டும் தருணத்தில் பல அணுக்களின் இடமாற்றம் நடைபெறுமாம்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதன் பயன் என்ன?
பிரம்ம முகூர்த்தத்தில் புதிய துணை அணுக்கள் யாவும் உற்பத்தி செய்யப்பட்டு பதிவுகள் ஏதுமின்றி
ஏழு வாயில் கொண்ட நரம்பணுவில் உட்செலுத்தப்படுமாம்.
அத்தருணத்தில். எந்த ஒரு பதிவினையும் எளிதாய் ஏற்றுவிட இயலுமாம்.
கல்விதனை கற்றறிவது,
புதிய கலைதனை பயில்வது என அனைத்து நிகழ்வுகளும் அத்தருணத்தில் எளிதாய் ஏற்கப்படுமாம்.
ஞானம் எனும்
காந்தஆற்றல் சிரசு முழுவதும்
பரவி புதிய துணை அணுக்களை அடையுமாம்.
அதன்பொருட்டே பற்பல வினாக்களுக்கு அத்தருணத்தில் விடை அளித்திடவும் இயலுமாம்.
மனிதனின் விதி எனப்படும் கர்மப்பலன் மூலமே அவனது அறிவுத்திறன் அமைந்திடும் என்பது நியதியாம்.
சிறுவயதில் மனிதனின் அறிவுத்திறன் அதிகரித்தும் முதிய வயதில் குன்றியும் காணப்படுவதன் காரணம்..
முதிய வயதில் அறிவு அணுக்களின் உற்பத்தி நிகழாது குன்றிவிடுவதாலாம்.
அறிவு அணுக்களின் பெருக்கம் எவ்வாறு நிகழும்?
இருவிழிகளிலும் உள்ள ஈன்றவர்களின் பாதரச துகள்கள் எத்தருணத்தில் உராய்ந்தாலும் வெப்ப அணுக்களை உற்பத்தி செய்திடுமாம்.
எனினும் அவை இரு விழிகளின் பின்புறம் அமைந்திட்ட மும்மலங்களை விட்டு வெளியேறிட வேண்டுமாம்.
தனது இருப்பிடத்தை விட்டு அவை தலைமை சுரபியை அடைந்து நிலைத்தால் மாத்திரமே அறிவு அணுக்கள் பெருக்கப்படுமாம்.
திரைகள் வலுத்திருந்தால் விழித்துகள்கள் இரண்டும் இடம்பெயர்ந்து வெளிவர இயலாதாம்.
வயது கூடினால் வினைப் பயன்கள் மூலம் கழிவு கூடி திரைகள் வலுத்திடுமாம்.
அத்தருணம் ஆத்ம கருக்கள் இரண்டும் இரு விழிகளின் பின்புறம் கடந்து வெளிவர இயலாது வாட்டமுறுமாம்.
திரைகள் வலுத்திருந்தால்..
ஒரு நாழிகை நேரத்தில் ஒற்றைஅணு தரும் உணவினை ஆத்மக்கரு வெளித்தோன்றி ஏற்றிட இயலாதா ம்.
அரை நாழிகை நேரத்தில் வெளிவந்தால் அவை முழு ஆற்றலையும் பெற இயலாது குன்றிவிடுமாம்.
தாய்தந்தையரின் கர்ம வினைகளும் இதில் அடக்கமாம்.
திரைகளை நீக்கி, துணை அணுக்களை பெருக்கி டும் வழி என்ன?
மும்மலங்கள் கழியும் வழி என்ன?
1.சிறுவயது முதலே கல்வி தந்திடும் ஆசிரியர்களை
பணிவது.
2.முதியவர்களை பணிவது.
- அமிலக்கழிவுகளை நீக்கும் வழியாம்.
3.பெற்றவர்களை பணிவது. - மாய கழிவுகளை நீக்கும் வழியாம்.
4. உயர் ஞான குருமார்களை பணிவது.
5.இறைவனை பணிவது.
- ஆணவ கழிவுகளை நீக்கும் வழியாம்.
திரைகளைநீக்கினால் ..
துணை அணுக்களை பெருக்கிடலாமாம்.
துணை அணுக்கள் பெருகினால் ..
அறிவு பெருகிடுமாம்..
அறிவு பெருகினால்.. பொருட்செல்வமும் பெருகிடுமாம்.
அருளினை நாடிடும் மனப்பக்குவமும் சித்திக்குமாம்.
பணிவு என்பது..
அணுக்களை இளக செய்து ..
ஒரு ஆன்மாவிலிருந்து மற்றொரு ஆன்மாவிற்கு ஆற்றல் பரிமாற்றம் நிகழ்த்திடுமாம்.
1. விடியலில் துயில் எழுவது.
2. இறைவழிபாடுகள்.
3. சூரிய வழிபாடு.
4. பஞ்ச மூலக்கூறுகளை வணங்கி ஏற்பது.
ஆகிய இவையே கலியுக மனிதனின் முன்னேற்றத்திற்கு வகுக்கப்பட்ட பாதைகளாம்.
இறைவனின்..
அருளும் அன்பும் ஆசியும் பலகோடி மடங்கு உயர்வுகளை நல்கிடும் என்பது
சத்திய வாக்காம்.
பணிவோடு ஏற்போர் ..
நற்பலன் அடைவர்.
எதிர்நின்று உணராது பயணிப்போர் ..
இறுதியில் அழிவினையே நாடிடுவர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உணர்வினில் ஏற்றிடுவோம்.
உன்னதநிலையை அடைந்திடுவோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நரம்பணுக்கள் - 9
வயிற்றுப்பசி எவ்விதம் உணரப்படுகிறதோ அவ்விதமே உயிரின் பசி உணரப்பட வேண்டும்.
சிந்தனைகளை உள்முகமாய் செலுத்தினால் மாத்திரமே... சிரசு அணுக்களின் தேவை
என்ன?
எவ்விதம் அவற்றை நிவர்த்தி செய்திடலாம் என்ற எண்ணம் உதிக்கும்.
தியானங்கள், தவங்கள், மந்திர உச்சாடனங்கள், பூஜைகள், விரதங்கள் பலனலிக்கின்றதா என்பதை பற்றி ஆராயாமல் இருப்பதே மூடத்தனம்.
சிரசின்..
அணு கழிவுகளை நீக்கி, நரம்பிழைகளை தூய்மையுறுத்தி,
உயிர் ஆற்றல் சிரசினில் பரவிட உதவினால்
ஞானம் எனும் தூய்மையான இறையாற்றல் ஆன்மாவினின்று எளிதாய் பொழியப்படும்.
சிரசு அணுக்கள் அடைப்புகளின்றி தூய்மையுற்றால் ஞானம் உதிக்கும்.
இன்ப துன்ப நிலைகள் சமனமுறும்.
புறச்சூழல்களால் மனமும் எண்ணமும் மாற்றமடையாது நிலைப்பதொன்றே ஞானம்.
நரம்பணுக்கள் யாவும் அடைப்புகள் இன்றி சீராய் இயங்கினால் மட்டுமே அறிவினால் ஏற்றுவிட இயலும்.
நரம்பணுக்கள் யாவும் பல வாயில்கள் கொண்டு இயங்கினாலும் அதன் பணி என்பது ஆத்மக்கருக்களை விடுவிப்பது ஒன்றே.
ஓர் ஆன்மாவானது மனித உடலை கூடுபோல் உருவாக்குவதன் மூல காரணம் இறை ஆற்றலை சேமிப்பதற்காகவே.
அமிர்தம் நிறைந்த கூடாக உருவாக வேண்டிய
மனித உடல்...
அமிலக்கழிவுகள் நிறைந்த கூடாக உருமாறி வருகிறது.
மனித உடல் உறுப்புகள் ஓவ்வொன்றும் ஞானத்தால் உருவாக்கப்பட்டவை.
ஞானம் வேண்டும் என போராடுபவர்..
உடல் உறுப்புகளை பற்றி அறிந்து கொண்டால் தனக்குள் புதையுண்டு கிடக்கும் ஞானத்தை எளிதாய் அடைவர்.
உள்ளே அமைந்துள்ள உறுப்புகளே
ஞானத்தின் வெளிப்பாடு எனில் இதை இயக்குகின்றன மூளை எத்தகைய ஞானம் வாய்ந்தது என சிந்தியுங்கள்.
விழிகளில் பின்புறம் உள்ள திரைகள் முற்றிலுமாக நீங்கினால் மாத்திரமே துணை அணுக்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அறிவு அணுக்கள் எனப்படும் துணை அணுக்கள் யாவும்.. பதிவுகளை ஏற்காத வரையில் அறிவற்ற அணுக்களே.
வெள்ளை, சிவப்பணுக்கள் ..
மிக உயரிய செயல் ஆற்றிடும். இந்த மென்பொருட்களை சுமக்கும் குருதி ..
பெரும் ஆற்றல் படைத்தவை.
நரம்பணுக்களின் முக்கியபணி குருதியின் மென்பொருட்களை ஏற்று சேமிப்பதாகும்.
ஏழு வாயில் கொண்ட நரம்பணுக்கள்..
தலைமை சுரபி யிடம் அதிக அளவில் எலக்ட்ரான் அணுக்களை பெற்றுக்கொண்டாலும் குருதியின் மென்பொருட்களை ஏற்காத வரையில் அவை பயனற்றதாகவே இருக்கும்.
குருதியின் மென்பொருட்கள் சீராய் பெருகினால் மாத்திரமே துணை அணுக்கள் யாவும் இயக்கப்படும்.
குருதி..
புதிய மென்பொருட்களை உற்பத்தி செய்த வண்ணமே உள்ளது.
எனினும் அவை எலக்ட்ரான் அணுக்களின் மாறுபட்ட எண்ணிக்கை மற்றும் அளவுகளில் பதியப்படுகிறது.
பதிவு ஐம்புலன்கள் வழியே நடைபெறுகிறது.
ஆழ்ந்த சிந்தனையின் மூலம் நல்ல எண்ணங்கள் உருவாக்கப்பட்டு ..
மென் பொருட்களில் பதிய வைக்கவேண்டியது அவசியம்.
ஆசை, பற்றுக்கள் மூலம் ஒரு ஆத்மக்கரு வானது கீழிறக்கப்பட்டு சிறை கொள்கிறது எனில்
அதன் மூல காரணம்... குருதியின் மென்பொருட்களே.
ஒரு எலக்ட்ரான் அணு சிறைகொள்ள வேண்டுமெனில் சிவப்பு அணுக்களை மட்டுமே முழுமையாய் ஏற்கவேண்டும்.
ஒவ்வொரு சிவப்பணுவிலும் மையக்கரு உண்டு.
அந்த மையக்கருவே எலக்ட்ரானில் பதிவுகளாய் உருமாறுகின்றன.
கல்வி கற்பது,
மற்ற கலைகள் கற்பது போன்றவை
ஆத்ம கருக்களை ஈர்க்காது. காரணம் ..
குருதியின் வெள்ளை அணுக்களே.
துணை அணுக்களில் வெள்ளை அணுக்கள் பதிந்துவிட்டால் அவை காந்த ஆற்றல் கொண்டவை யாக மாறிவிடும்.
நல்ல பதிவுகள்....
அன்பு, சரணாகதம் போன்றவை வெள்ளை அணுக்களால் பதிவுகளாக ஏற்கப்படும்.
குருதியின் வெள்ளை அணு ஒரு துணை அணுவில் பதிந்துவிட்டால் அவை சாத்வீகமாக மாறிவிடும்.
ஏழு வாயில்கள் கொண்ட நரம்பணுவில்
வசிக்கின்ற அனைத்து
துணை அணுக்களும்
ஒரு வெள்ளை அணுவை குருதியிடம் இருந்து பெற்றுவிட்டால்
உயரிய பலன் கிட்டும்.
அதன் பொருட்டே..
இறைவழிபாடு களும்,
தியான, தவங்களும் இயற்றப்படுகின்றன.
குருதியில் வெள்ளை அணுக்கள் யாவும்
பெருகிடல் வேண்டும் என்றும்
அவை யாவும் துணை அணுக்களை சென்றடைய வேண்டும் என்றும் நரம்பிழைகளில் உள்ள அடைப்புகள் நீங்க வேண்டும் என்றும்
குருதி சீராய் சென்று அடைய வேண்டும் என்றும்
பிராத்தனை செய்திடுங்கள்.
இறைவழிபாடு..
காந்த ஆற்றலை ஈர்க்க வல்லது.
அனைத்து ஆத்ம கருக்களும் பிரிந்து சென்றுவிட்டால் எலக்ட்ரான் உறங்கி விடும்.
அத்தருணமே மேல் வட்ட அணுக்களின் ஆற்றல்
கீழ் வட்டத்தினை வந்தடையும்.
அமிர்தம் என்பது சுரக்கப்பட்டால் ..
அணுக்கள் புத்துணர்ச்சி பெற்று விடும்.
நரம்பணுக்கள் என்பவையும் கரைந்து விட்டால்
வெற்று நிலை பூரணமாய் உணரப்படும்.
Electron - இயக்கத்தினால் உருவாகும் அமிலக்கழிவுகள் மாயத்திரையை உருவாக்கிடும்.
Proton - கர்ம கழிவுகளை பெருக்கிடும்.
Neutron - நிர்மல அணுக்கள் ஆத்ம கருக்களை விடுவிக்க இயலாது போராடும் தருணமே ஆணவக்கழிவுகள் சுரக்கின்றன.
இறைவனை எந்த ஒரு ரூபத்தில் எண்ணி , உருகி பிராத்தனை செய்தாலும்
ஒரு வெள்ளை அணு ..
துணை அணுவில் பதிந்துவிடும் என்றும் அவ்வணு ஒன்றே
ஞானத்தை அறிய உதவிடும் எனவும் அறிந்திடலாம்.
ஞானம் என்பதே பேரானந்தம் தந்திடும்.
அதனை அறிவினால்
உணரும் தருணமே..
உணர்வுநிலை சித்திக்கும்.
ஒளிரூபம் ஒன்றே இறைவனின்
உண்மை சொரூபமாகும்.
என்கிறார் குரு அன்னை.
உணர்ந்து ஏற்று உத்தம நிலைதனை அடைந்திடுவோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
xxx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக