பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - பகுதி 4
*இதற்கு முன்பு உள்ள முதல் பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.
எண்ணிற்கேற்றபடி பெயரின் எழுத்துக்களை மாற்றும்போது, இனிஷியலையும் சேர்த்து கணக்கில் எடுக்கவேண்டும். உதாரணமாக, இனிஷியல் மற்றும் பெயர் எழுத்துக்கள் சேர்ந்து நாற்பத்தியாறு வந்தாலே சரிதான். அதோடு, பெயர்மட்டும் தனியாகவும் அதிஷ்டமான எண்ணில் அமைந்தால் இன்னும் சிறப்பு. ஆனால் அப்படி அமைப்பது சிறிது சவாலானது. நீங்கள் உங்கள் பெயர் எண்ணை, ஓரளவிற்கு அர்த்தம் மற்றும் ஓசை மாறாமல் பெயர் எழுத்துக்களை மாற்றியபின், ஒரே ஒரு எண் குறைபாட்டில் சவாலாக நிற்கும். அந்த சூழ்நிலையில் பொதுவாக "அம்பாளுக்கு உரியதும் அகரமுமான" “A” என்ற எழுத்தை இனிஷியல் முன் சேர்த்துக்கொள்வார்கள். யாரேனும் ஏன் "A " என்ற அதிகப்படியான இனிஷியல் என்று கேட்டால், உங்கள் குலதெய்வம் "அம்மன்", அதனால் "A " என்ற அதிகப்படியான இனிஷியல் காரணம் சொல்லலாம்.
எனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை சிறிதே மாற்றி 41 எண்ணில் அமைத்தபின், எனது தாத்தாவின் பெயர் "சின்ன ராமசாமி" என்பதில் "C" எழுத்தை எடுத்துக்கொண்டேன். முடிவாக C.R.Prammendran ( 5+41=46 ) என்று சரியாக அமைந்தது. இந்த அதிஷ்டபெயரை எழுத ஆரம்பிப்பதற்கான கோடில்லாத நோட்டுகள் வாங்கி, அதில் சரியான இடைவெளியில் ஒருநாளைக்கு நாற்பத்தியாறு கோடுகள் வீதம், நாற்பத்தியாறு நாளைக்கு கோடுகள் கிழித்து, பெயர் எண்ணிற்க்கான அதிஷ்டதேதியில் ப்ரம்மமுகூர்த்தத்தில் எழுந்து, குளித்து, வழிபட்டு எழுத ஆரம்பித்தேன்.

இறைவன் அருளால் வெற்றிகரமான நாற்பத்தியாறு நாட்களுக்குப்பின், பெங்களூரின் பிரபல கணினி மென்பொருள் நிறுவனத்தில் மாதம் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தவறாமல் பதவி உயர்வுடன் குறைந்தது இருபத்தி ஐந்து சதவிகிதம் சம்பள உயர்வும் இறைவன் அருளால் கிடைத்தது. குடும்பத்தோடு வீட்டை ஓசூரில் அமைத்துக்கொண்டு, தினமும் பெங்களூர் வேலைக்கு சென்றுவந்தேன். அருளான இரண்டு பெண் குழந்தைகள். எம்பெருமான் நாராயணன் கருணையோடு மண், பொன் மற்றும் பெண் என்று மகத்தான மூன்று செல்வத்தையும் அருளினார். ( இதை படிக்கும்போது, நானே உங்கள் பெயரை மாற்ற உதவவேண்டும், அல்லது யாரேனும் உதவுவார்களா ? என உங்களுக்கு கேட்க தோன்றும். நான் யாருக்கும் இந்த வகையில் உதவுவதில்லை. இறைவன் அருளை நீங்கள் மனமுருகி பணிந்து பெற்றுவிட்டால், நீங்கள் யாரைத் தேடியும் போய் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை. இறைவன் அருளால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி உங்களை தேடி வரும். இப்படியெல்லாம் நடக்குமா? என்ற சந்தேகம் வேண்டாம். அடியேன் என் வாழ்வே சாட்சி. மேலும் நவீன எண்ணியல் பற்றி நீங்களே படித்து உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள, நான் முன் பகுதியில் குறிப்பிட்ட "அதிஷ்ட விஞ்ஞானம்" என்ற நூலை வாங்கி படியுங்கள். http://scienceoffortune.com/numerology/
அடியேன் நான் என் அனுபவித்தை சொல்லும்போது, உங்களில் பெருன்பாலானவர்க்கு, நான் ஏதோ அனைத்தையும் திறமையாக திட்டமிட்டு பெற்றதாக தோன்றும், அல்லது அனைத்தும் கட்டுக்கதை என்றே தோன்றும். கடினமாக உழைத்தேன்... படித்தேன்.. உண்மைதான். ஆனால் இறைவன் அருள் கிடைத்த பின்பே சரியான பலன் சரியான வழியில் கிடைத்தது.
எல்லாம் சரிதான், ஆனால் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையும் உண்டு என்பதை சில வருடங்கள் கழித்தே நான் உணர்ந்தேன். மேலும், அடுத்த தொடரில் இறைவன் அருளால் கிடைத்த ராசிக்கல் மோதிரம் பற்றி சொல்கிறேன். என்னடா இவன் ஜோதிடம் மோதிரம் என்று ஏதோ சொல்கிறானே, என்று நினைப்போர், தொடரின் முதல் பகுதியின் முதல் பத்தியை மீண்டும் படித்து இறைவனின் கருத்தை எடுத்துக்கொள்ளவும். எந்த சாஸ்திரமும் மனமுருகிய தெய்வ வழிபாட்டிற்க்கு ஈடாகாது.
தொடரும்...
இப்படிக்கு,
அகத்திய பக்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக