*இதற்கு முன்பு உள்ள பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.
பெங்களூர் பணியில் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஒருமுறை விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் அன்னவள் ஊரான ராம்நாடு சென்றிருந்தேன். அப்போது எனது மைத்துனர்கள் சரவணன் மற்றும் பேங்க் சரவணன் எதேச்சையாக ஒருவரை அறிமுகம் செய்தார்கள். அவர் ஒரு ஜோதிடர் மற்றும் இரத்தின கற்களைப்பற்றி படித்து பட்டயம் பெற்றவர், என்று அவரைப்பற்றி கூறினார்கள். அப்போதும் நானும் விளையாட்டாக, எனக்கு பொருத்தமான இரத்தின கல் மோதிரம் செய்ய முடியுமா? என கேட்டேன். அதற்கென்ன... தாராளமாக.. என்று சொல்லி, மோதிரம் செய்து வாங்கித் தரும் பொறுப்பை மைத்துனர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். ஒரு மாத காலம் கழித்து மோதிரம் என்னிடம் வந்து சேர்ந்தது. வெறும் கல் தானே, கம்மியான விலைதான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், 2008 ஆம் ஆண்டிலேயே மூன்று ரத்தினக் கல்லிற்ற்கு மட்டும் ரூபாய் ஐந்தாயிரம் தாண்டிவிட்டது. தங்க மோதிரத்தின் விலை தனி.
அந்த ஜோதிடர், என் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து குற்றமில்லாத இரத்தின கற்களை கவனமாக தேர்ந்தெடுத்து, நிறைய நுணுக்கமான விஷயங்களுடன் மோதிரத்தை வடிவமைத்திருந்தார்। அவர் தனக்கோ அல்லது வேறு யாருக்கும்கூட இவ்வாறு நேர்த்தியாக வடிவமைத்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது । இந்த மோதிரம், எம்பெருமான் எனக்காக வடிவமைத்த ஒரு அற்புத எந்திரம் ।
இந்த மோதிரத்தில் ஒரு பக்கம் குருவுக்குரிய மஞ்சள் புஸ்பராகம், மறுபக்கம் புதனுக்குரிய பச்சை மரகதம் மற்றும் நடுவிலே சூரியனுக்குரிய மாணிக்கம் என்று மூன்று கற்களை உள்ளடக்கியது। இங்கே அதன் புகைப்படங்களை இணைத்துள்ளேன்। மூன்று கற்களின் பின்பக்கமும் திறந்த நிலையில் என் உடலோடு இணைப்பை வைத்திருக்கும். இதில் பச்சை மரகதக்கல் மட்டும் சிறிது துருத்திக்கொண்டு என் விரல் நரம்பை சிறிது அழுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். ஜோதிடர் ஆலோசனைப்படி ஒரு நல்ல நாளில் எம்பெருமானை வணங்கி மோதிரத்தை அணிந்தேன். மேலும் அன்றிலிருந்து ஒரு மண்டல காலம் சூர்ய காயத்திரி, குரு காயத்திரி மற்றும் புதன் காயத்திரி மந்திரத்தை தினமும் பத்து முறை எழுதி பணிந்து வணங்கினேன். ( போகிற போக்கில் என் குருநாதர் அருளால் ஒரு பரம ரகசியத்தை உங்களுக்காக சொல்லிவிட்டு போகிறேன்। இறைவனை மனமுருகி பணிந்து வணங்கும்போது, முதலில் நம் கண்களில் கண்ணீர் வழியும் । பிறகு நமது அண்ணாக்கிற்கு மேலிருந்து சிறிது சிறிதாக சளி கீழிறங்கும் । பின்பு அண்ணாக்கிற்கு மேலே எப்போதும் முடியே உள்ள ஒரு மெல்லிய சவ்வு சிறிதே திறந்து, விரும்பியதை நடத்திக்காட்டும் பிரபஞ்ச பேராற்றலை நமது சிரசுக்குள் ஈர்த்துக்கொடுக்கும்। அதன்பிறகு சிலமணி நேரங்களுக்கு உங்கள் மனம் ஒரு இனம் புரியாத மனஅமைதியோடு மிகவும் லேசாக இருப்பதை உணரலாம் । ஓம் அகத்தீசாய நமஹ )
இந்த மோதிரத்தை அணிந்த மூன்றே மாதத்தில், என் வாழ்க்கையில் முதன் முறையாக வெளிநாடு ( அமெரிக்கா ) செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நான் பணிபுரிந்த நிறுவனம் H1B விசாவில் குடும்பத்தோடு நிரந்தரமாக அமெரிக்கா அனுப்பிவைக்க தயாராக இருந்தது.। ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை என்று கூறி குறுகிய கால பயணத்திற்கு மட்டும் சம்மதித்தேன். இரண்டு மாத காலம் அமெரிக்கா பயணம் எனக்கு வியப்பாக இருந்தது. எம்பெருமான் தன் பிரியமான பக்தனை எப்படியெல்லாம் உயர்த்திப்பார்க்கிறார்!!! அடியேன் என் கண்ணீரால் என் தாயான நாராயணப் பெருமான் திருவடிகளை பூஜித்து நன்றி செலுத்தினேன். சரிதான். அதன்பிறகு தொடர்ந்து பத்து வருடங்கள் அவ்வப்போது உலகின் பல நாடுகளுக்கு பயணித்தேன். ஸ்விட்ஸ்ர்லாண்ட், ஜெர்மனி, அமெரிக்க நாடுகள், சீனா, கொரியா, மெக்ஸிகோ, சிங்கப்பூர் என நீண்டு கொண்டே சென்றது. இதில் ஒரு வருட காலம் ஸ்விஜர்லாண்ட்த்தில் பணிபுரிந்தது எம்பெருமான் எனக்கு கொடுத்த பெரிய வரம். வெறும் 800 ரூபாய் மாத சம்பளத்தில் அல்லாடி கொண்டிருந்தவனுக்கு அதைவிட பல நூறு மடங்கு வெளிநாட்டு சம்பளம்.
மிகவும் சாதாரண கல்லூரியில் மிகவும் சுமாரான படிப்பு படித்த நான், IIT மற்றும் IIM போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மேனேஜராக பணிபுரிந்தது அதிசயமாக உள்ளது. இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பதற்கு அடியேன் என் வாழ்வே சாட்சி. ஓம் நமோ நாராயணாய.
இறைவன் அருளால் நாம் விருப்பியது எல்லாம் இனிதே நடந்தாலும், "ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு" என்பது இயற்கையின் நியதி. இது மனிதனுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கும் பொருந்தும். நியூமெராலஜிபடி அமைக்கப்பட்ட எனது பெயர், ராசிக்கல் மோதிரம் மற்றும் எப்போதும் கிழக்கு பார்த்த வீட்டிலேயே குடியிருந்தது போன்றவை, எனது உடலிலும் உயிரிலும் சூரியபகவானின் ஆற்றலை நாளுக்கு நாள் பெருக்கிக்கொண்டே இருந்தது.
சூரியனின் மனைவி, தன் கணவன் சூரியனின் உஷ்ணத்தைத் தாங்கமுடியாமல் பிரிந்து சென்றுவிடுவாளாம். இது ஏதோ புராணக்கட்டுக்கதை என்றுதான் நானும் நினைத்தேன். உண்மையில் இது சூரியனின் அதிக ஆற்றல் கிடைக்கும்போது ஏற்படும் எதிர்விளைவு என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து வியந்தேன். ஆம்! நான் என் மனைவியோடு தொடர்ந்து ஆறு மாதங்கள்கூட வாழ முடியாமல் அடிக்கடி பிரிந்து வாழும் நிலை பனிரெண்டு வரை ஆண்டுகள் நீடித்தது. சேர்ந்து வாழ்ந்த காலத்திலும், என் அருகாமை சுட்டெரிக்கும் சூரியனைபோல் மிகுந்த உஷ்ணமாக இருப்பதாக அன்னவள் அடிக்கடி கூறுவாள். மேலும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள், மனோஸ்தாபம் ஏற்படுவதும், சமாதானமாவதும் வாடிக்கையாக இருந்தது. என் திருமண வாழ்வில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக கடைபிடித்து வருவதுண்டு. எங்களுக்குள் என்ன கருத்து வேறுபாடு மனோஸ்தாபம் ஏற்பட்டாலும், அப்போது நான் உலகின் எந்த நாட்டில் எந்த நேரத்திலிருந்தாலும், இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் எப்படியாவது சமாதானம் செய்துவிடுவேன்.
அன்பால் சமாதானம் செய்ய முடியவில்லையெனில் மிரட்டியெனும் சமாதானம் செய்வேன். அதுவும் முடியாத பட்சத்தில், அன்னவளின் பாசத்திற்குரிய சகோதரிகளிடம் சொல்லி சமாதானம் செய்துவிடுவேன். கருத்து வேறுபாட்டின் தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு முறையும், அன்னவளுக்கு ஆடை ஆபரணங்கள் பரிசாக கொடுப்பதும் வழக்கம்.
என்னைப் பொறுத்தவரை அந்த இருபத்தி நாலு மணி நேரக்கேடு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ( அதன் பின் குருதெய்வத்தை சரணடைந்து சாப நிவர்தியானது )
தொடரும்…
1 கருத்து:
வணக்கம் ஐயா.... மிகவும் முக்கியமான தெய்வ அனுபவம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நானும் தங்களைப் போலவே எம்பெருமான் முருகப்பெருமான் பெருமாள் அப்பச்சி தாயார் எம்பெருமான் வெள்ளியங்கிரி ஆண்டவர் மனோன்மணி தாய் அன்னை லோபமுத்திரை தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை இவர்களையே சரணடைந்து வாழ்கின்றோம்....
கருத்துரையிடுக