எட்டிலே கிட்டும் அதிர்ஷ்டம்
எனது முந்தைய பிறவிகளில் நான் பெற்று வளர்த்த எனது குழந்தைகளே இப்போது என்னிடம் நேரடியாகவோ அல்லது எண்ணங்களின் மூலமோ ஆன்ம தொடர்பில் இருக்கிறார்கள். எனது இருபது ஆண்டுகால அனுபவத்தை இயன்ற அளவு சுருக்கி எனது குழந்தைகளுக்காக இப்பதிவை எழுதி வைக்கிறேன். இந்தப் பதிவு எனது வாழ்விலும், என்னை சூழ்ந்து இருக்கும் எனது உறவினர்கள் நண்பர்கள் உடன் பணிபுரிபவர்களின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஆய்வு செய்து எழுதப்பட்ட ஒரு ஆழ்ந்த அனுபவ பதிவு. இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? என்றால் என்னால் நிரூபிக்க முடியாது.
இந்த கலியுகத்தில் ஆங்கில தேதியான 8 தேதிகளில் அதாவது 8, 17, 26 இந்த மூன்று தேதிகள் அவ்வளவாக சிறப்பு பொருந்தியதாக கருதப்படுவதில்லை. இந்த மூன்று தேதிகளும், மேலும் 8 என்ற எண்ணையும் கூட துரதிஷ்டமாகவே பார்க்கப்படுகிறது. நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் உண்மையில் 8 தேதியின் சிறப்புகளை பிறகு நன்கு ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்தேன். உண்மையில் 8 தேதிகள் பயந்து ஓட வேண்டிய தேதிகள் அல்ல. இந்த தேதிகள் மிகவும் அதிர்ஷ்டமான தேதிகளாக எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரிந்து இருக்க வேண்டும்.
சரி இனி பதிவின் முக்கிய நோக்கமான முக்கிய குறிப்புகளை கீழே ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக பார்க்கலாம்.
1) 8 தேதிகள் என்றால், 8 17 மற்றும் 26ஆம் தேதிகளைக் குறிக்கும்.
2) இதைப்போல் 1 தேதிகள் என்றால், 1 10 மற்றும் 19 இந்த மூன்று தேதிகளை குறிக்கும்.
17) இறைவன் என்னும் போலீஸ் அதிகாரி, தீயவர்களை அடையாளம் காண மாறுவேடத்தில் வீரியமாய்க் காத்திருக்கும் நாட்களில், நல்லவர்கள் மௌனமாய் செயல் இழந்து இருப்பார்கள். அடியேன் நான், சீட் பெல்ட் போடவில்லை, ஒரிஜினல் லைசன்ஸ், காரின் கண்ணாடி ஒளி ஊடுருவும் தரத்தில் இல்லை, அறியாமல் ஒருவழிப்பாதையில் வந்தேன் - என பலமுறை அபராதம் செழுத்திய நாட்கள் இந்த 8 தேதிகளே. இத்தனைக்கும் பதில் சொல்லிவிட்டு சாலையைக் கடக்க முற்ப்பட்டபோது, "பாதாள சாக்கடை உடைந்ததால் மாற்றுப் பாதையில் செல்லவும்" என தடுப்புப் பலகை இருக்கும். இத்தனை சோதனை செய்த அந்த அதிகாரி இதை முன்பே சொல்லியிருந்தால் நான் அப்படியே திரும்பியிருப்பேனே...
நான் அதிக அனுபவ பாடங்களையும் கற்றிருக்கிறேன். அந்த அதிகாரி, அந்த நாளில், "போலீஸா... பொறுக்கியா..." என்ற சினிமா வசனத்திற்கேற்றபடி கெடுபிடியாகத்தான் இருப்பார்.
18) நீங்கள் நன்கு கவனித்துப் பார்த்தால், இந்த நாட்களே உங்களுக்கு அதிக கோபம், வாய் தகராறு, அடிதடி எண்ணங்கள் அதிகமாய் இருக்கும். மௌனத்திற்குள் ஓடிவிடுங்கள் என் செல்லக்குட்டிகளே. போலிஸ் அதிகாரி வந்துகொண்டிருக்கிறார். கவனம்.
19) ஒருவர் 8 தேதிகளில் இயல்பாகவே சோதனைகளை அனுபவிக்கிறார் எனில் அவருக்கு சூரியனின் ஆற்றல் மிகுந்து கிடைக்கிறது என்று பொருள். அவர் கூடிய விரைவில் அற்புதமான பொருட் செல்வத்தையும் அருட் செல்வத்தையும் பெறப் போகிறார் என்ற மகிழ்வான செய்தியை, எனது அனுபவத்தின் மூலம் சொல்கிறேன். இந்த நாட்களில் மௌனத்துடன் கூடிய தியானத்தில் ஈடுபட்டால் சூரிய ஆற்றல் பல மடங்கு பெருகும்.
முக்கிய குறிப்பு : குருநாதரின் அருளால் கர்மாவை நீக்கும் பயிற்சியோடு ஒரு வரி ஞானத்தை தினசரி பிரார்த்தனை செய்து வந்தேன். இதனால் சில ஆண்டுகளிலேயே வீரியமான கர்ம வினைகள் அனைத்தும் குறைந்து படிப்படியாக நீங்குவதை உணர்ந்தேன். இதற்குப் பிறகு இந்த எட்டு தேதிகளில் வரும் பிரச்சனைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை, மற்ற தேதிகளை போலவே எட்டு தேதியும் சாதாரணமாக மாறிவிட்டது.
20) திருமணத்திற்காக காத்திருக்கும் என் செல்லக் குழந்தைகளுக்கான பதிவை கீழே எழுதியுள்ளேன்.
http://fireprem.blogspot.com/2021/07/blog-post_20.html?m=1
21) ஈஸ்வர தியானத்திற்கு பௌர்ணமி, பிரதோசம், ஷஷ்டி போன்ற பல சுப நாட்கள் இருந்தாலும், 8 தேதிகள் தியானத்திற்கு அதிக பலன் அளிக்கும். ஏனெனில் அந்த நாட்களே நம் கர்மா வீரியமாய், நம் எண்ணங்களாக வெளிப்பட முயற்சிக்கும். அதை மௌனமாய் நாம் கவனித்தாலே போதும்.
கலியுக எண் சாஸ்திரத்திற்கான என் மானசீக குரு தெய்வத்திரு பண்டிட் சேதுராமன் அய்யா பாதம் பணிந்து நன்றி தெரிவித்து இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
இப்படிக்கு உங்கள்,
அகத்திய பக்தன்.
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக