ஆதிபராசக்தியின் செல்லப்பிள்ளை
பாகம் 1
ஓம் அகத்தீசாய நமஹ.
ஓம் வால்மீகி தேவாய நமஹ .
நம் குருநாதர் பொதிகை மலையில் தனக்கு மிகவும் பிரியமான மைந்தருக்கு காட்சி தந்த அபூர்வ புகைப்படம் . அந்த புனிதர், அடியேன் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அன்போடு கொடுத்தார் . அடியேன் இதுவரை யாருக்கும் பகிர்ததில்லை . இன்று அந்த புனிதரிடம் உங்களுக்காக அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று பணிவோடு அந்த புகைப்படத்தை இங்கு பகிர்கிறேன் .
ஓம் அகத்தீசாய நமஹ.
நமது குருநாதர் அய்யா ஈஸ்வரனுக்கு சமமானவர் என்பதால் அவருக்கு அகத்தீஸ்வரன் அல்லது அகத்தீசன் (அகத்து ஈசன் ) என்று பக்தியோடு அழைக்கப்படுவது நீங்கள் அறிந்ததே. மேலும் அய்யவைப்பற்றிய பல புராணக்கதைகள், அய்யா என்றும் அழியாத மஹாகாரண ஒளியுடன் வாழ்பவர் என்பவை யாவும் நீங்கள் அறிந்ததே . என்னதான் மஹாசித்தர் என்ற பட்டம் பெற்றாலும் எப்படி ஒருவரால் 4000 வருடங்களுக்கும் மேலாக வாழ முடியுமா ? நமக்கு எப்படி அருள் செய்ய முடியும் ? அவர் எங்கு வாழ்கிறார் ? என பல கேள்விகள் என்னுள் ஆரம்பத்தில் இருந்தது . ஹனுமத் தாசனின் "நாடி சொல்லும் கதைகள்" ஐந்து பாகங்களை படித்தபின் பல சந்தேகங்கள் தீர்த்தன. இந்த அறிய பதிவுகளை இணையத்தில் படிக்க விரும்புவோர் https://siththanarul.blogspot.com/ வலைத்தளத்தில் சென்று பழைய பதிவுகளை பின்னோக்கி சென்று படிக்கலாம் .

நமது குருநாதர் அய்யாவை பற்றிய மிக அபூர்வமான செய்திகளை "கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதை " என்ற நூலில் படிக்கும்போது வியப்பின் உச்சிக்கே நம்மை கொண்டு செல்லும். இந்த நூலை அருளியவர் வால்மீகி முனிவர். சித்த மார்க்கத்தின் பல அபூர்வ தகவல்களை இந்த நூலில் சித்தர்களே சொல்லும்போது நிச்சயம் மெய்சிலிர்க்கும் . புத்தகம் வாங்க இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யலாம். https://www.enlightenedbeings.org/
வால்மீகி முனிவர் அருளிய இந்த நூலிருந்து நமது குருநாதரை பற்றிய சில குறிப்புகளை மட்டும் பார்க்கலாம் . இந்த குறிப்புகள் சிறு துளிகள் மட்டுமே. இந்த புத்தகத்தை முழுமையாக படித்தால் பல அரிய விஷயங்களை குருவருளால் தெரிந்துகொள்வீர்கள்.
=> நமது ஆன்ம ஒளி தரிசனத்திற்கு தடையான மூளை அணுக்களை பிரிக்கும் வல்லமை கொண்டவர் அகத்தியர் . நமது அணுக்களின் நல்ல ஆற்றலை வெளிக்கொணரும் வல்லமை கொண்டவர் .
=> அவர் ஓர் சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, ஒரு அன்பான தாய் .
=> உப தெய்வங்கள் அதற்குரிய மூளை அணுக்களின் மைய ஆற்றலை மட்டுமே வெளிக்கொணர்வர் . ஆனால் அதை உடைத்து ஆற்றலை வெளிப்படுத்துவது அகத்தியர் மட்டுமே . அதனாலேயே தெய்வங்களிலேயே உயர்ந்த பதவி அகத்தியருக்கே வழங்கப்பட்டுள்ளது. எனவேதான் அவர் தெய்வங்களையும் ஆளும் தகுதியைப் பெற்றார்.
=> ஆதிசக்தியான அந்த ஒற்றை அணு ( நம் மூளையில் இருக்கும் வாலை தெய்வம் ) வேறு எந்த அணுவையும் தன்னோடு சேர்க்காது . அப்படிப்பட்ட ஆதிசக்தி அணுவின் ஆற்றலை முழுமையாக புரிந்து, பணிந்து கலந்தவர் அகத்தியர் . எந்த ஒரு ஞானியும், விடுதலை அடைந்த ஆத்மாவினை உடையவரும் மற்றவர்களின் மூளையில் உள்ள ஆதிசக்தி ஒற்றை அணுவோடு ( வாலை தெய்வம் ) கலக்க இயலாது . அகத்தியர் ஒருவரே இதை செய்ய இயலும் !!!
( குறிப்பு : சித்த மற்றும் பலவித யோகமார்க்கத்தில் உள்ளோர் கவனிக்க வேண்டியது . நீங்கள் என்னதான் தலைகீழாய் நின்று தண்ணி குடித்தாலும் , என்ன யோகா சித்த வாசி நுணுக்கம் செய்தாலும் " குருநாதர் அகத்தியர்” அய்யா வராமல் ஒரு பலனும் கிடையாது மக்களே ).
=> ஆதிபராசக்தி என்னும் ஒற்றை அணுவே அகத்தியர் வாழும் கூடு .
=> ஈசனை காட்டிலும் இயங்கிநிற்கும் ஆதிபராசக்தியவளே அகத்தியருக்கு உகந்தவள், உயர்ந்தவள்.
=> ஈசனின் செயலாளர் ஆதிசக்தி. ஆதிசக்தியின் செயலாளர் அகத்தியர்.
=> காற்றோடு காற்றாய் , தியோடு தீயாய் , நீரோடு நீராய் , நிலத்தோடு நிலமாய் சக்தியவள் கலந்து கரையும் இடமெல்லாம் அகத்தியரும் கலந்தே இருப்பார் . அகத்தியர் மட்டுமே இதில் முழுமைத்துவம் பெற்றவர் . சூட்சும சரீரம் கொண்டு ஈசனின் உலகம் வரை எட்டிப் பார்த்தவர் .
=> ஈசன் தன் படைப்பான அகத்தியரின் ஆத்ம அணுவை தேவியின் காவலுக்கு என்றே நிறுத்திவிட்டார். அகத்தியரின் வசிப்பிடமே தேவியின் இருப்பிடம் என்பதால் தேவியின் மைந்தராகவே கருதப்பட்டு ஆதவனாலும் பூஜிக்கப்படுகிறார்.
=> தேவியின் செல்லப்பிள்ளையாகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றவும் பணிக்கப்பட்டவர் அகத்தியர் .
சித்த மார்க்கம் , வாசி மார்க்கம் , யோக மார்க்கம், பக்தி மார்க்கம் வாழ்வோர் மனதில் வரும் பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள் .
[1] நான் மிகவும் விரும்பும் மாமிச உணவை விட்டுவிட மனமில்லை . ஆனால் சித்த மார்க்கத்தில் பயணித்து சித்தர்கள் அருளை பெறவேண்டும் , ஆன்ம முன்னேற்றம் வேண்டும் , ஈசனை அடையவேண்டும் . இது சாத்தியமா ?
பதில் : மன்னிக்கவேண்டும் . வாய்ப்பு இல்லை . "கலியுக மனிதர்கள் " மாமிச உணவை விட்டுவிட்டு சாத்வீக உணவே உண்ணவேண்டும் என ஒளியுடல் பெற்ற சித்தர்களும் , குருநாதரும் , முருக பெருமானும் தெள்ள தெளிவாக அறிவியல் பூர்வமாக விளக்கி சொல்லியிருக்கிறார்கள் . "கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதை " என்ற நூலில் முழுமையாக விளக்கியுள்ளார் . இதையும் மீறி மாமிசம் உண்போர்க்கு "புற்று நோய்" வரும் என்று சொல்லிவிட்டார்கள் . அதிர்ச்சியாக உள்ளதா? இது மடத்தனம் என்கிறீர்களா? மேலும் படியுங்கள் .
[2] எனது மருத்துவரே மாமிச உணவை உண்ண சொல்கிறார். என்ன செய்வது?
பதில் : மாமிசம் உண்ணும் மருத்துவர் வேறு எப்படி சொல்லுவார் ? அன்பான மருத்துவரே, நீங்கள் எனது மாமிச சாபத்தையும், தீய கர்மாவையும் வாங்கிக்கொள்கிறீர்களா ? என்று கேட்டால் வாய்மூடிக்கொள்வார்.
[3] கண்ணப்ப நாயனார் மாமிச உணவை ஈசனுக்கு படைத்து ஈசனை அடைந்தார் . சிவவாக்கிய சித்தர் வாடா.. போடா.. என்று பலவாறு பாடியிருக்கிறார் . இவ்வளவு ஏன் ? நமது குரு நாதரே பல சித்த வைத்திய நூல்களில் மாமிச உணவை சொல்லியிருக்கிறாரே ? மாமிசம் உண்டால் ஞானம் வராதா ? ஈசனை அடைய முடியாதா ?
பதில் : மன்னிக்கவேண்டும் . நாம் இப்போது வாழும் "கலியுக எல்லைக் காலத்தில்" அதற்க்கு வாய்ப்பே இல்லை . மாமிச சத்து இரத்தத்தில் கலந்து மூளைக்கு செல்லும்போது நஞ்சு அணுக்களாக மூளையின் வெளிவட்டங்களில் படியும் . கலியுக எல்லையில் வாழும் நமது மூளையில் இந்த நஞ்சு அணுக்கள் படியும் இடம் முடிந்துவிட்டது . இனி மூளையில் இடம் இல்லை பாஸ் . இந்த நஞ்சு அணுக்களே இறுகி புற்று நோயாக வெடிக்கும் . இதுஎன்னடா புதுக்கதை என்கிறீர்களா ? மேலே குறிப்பிட்ட வால்மீகி முனிவரின் புத்தகத்தை படியுங்கள் . பாண்டிச்சேரி ஞானாலயம் சென்று வாருங்கள் .
[4] எனது மதிப்பிற்குரிய குரு என்னை “மாமிசம் உண்பதால் தவறில்லை” என்று சொல்கிறார் . ஊக்கப்படுத்துகிறார். அப்படியெனில் எனது குரு தவறானவரா ?
பதில் : மாமிசம் உண்பதை ஊக்கப்படுத்தும் உங்கள் குரு தாயினும் உயர்ந்தவர் , புனிதமானவர். நீங்கள் மாமிச உணவில் முழுமையாக நிறைவடைந்து, அதை விடும்வரை உங்களின் கர்மாவை உங்கள் குரு விருப்பத்தோடு முழுமனதுடன் தானே ஏற்றுக்கொள்கிறார் . உயர்ந்த ஆத்மாக்களான ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர் போன்றோர் தங்களின் கடைசி காலகட்டத்தில் கடுமையான நோயால் துன்புற்றது எதனால் தெரியுமா ? தனக்கு கர்மா இல்லாமல் புனிதமாய் வாழ்ந்தாலும் அவர்களின் மாணவர்களின் கர்மாவை வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்டதே காரணம் . உங்கள் குரு உங்களின் மாமிச கர்மாவை அவரே விரும்பி தாயன்போடு ஏற்றுக்கொள்கிறார் . குரு தனது கடைசி காலகட்டத்தில் கடும் நோயால் துன்புறும்போது அவர்களின் மாணவர்கள் அவரை சுற்றி அமர்ந்து அழுவார்கள் . ஆனால் அந்த மாணவரின் கர்மாவைதான் குரு ஏற்று அனுபவிக்கிறார் என்பது அந்த மாணவருக்கும் தெரியாது , குருவும் அதை கடைசிவரை சொல்லவே மாட்டார் . ஹ்ம்ம் உங்கள் குருவிற்கு சாபகர்மாவை சேர்க்கும் மாணவரா நீங்கள் ? இனி உங்கள் இஷ்டம் .
[5] மாமிச உணவை கைவிடவே விரும்புகிறேன் , ஆனால் மாமிசம் விட்டவுடன் மிகவும் சோர்வாக உணர்கிறேன் . கை கால் எலும்பு மூட்டுகளில் வலிக்கிறது . என் உயிரின் ஒரு பகுதியை இழந்ததாக உணர்கிறேன் . உற்றார் உறவினர்கள் என்னை மிகவும் ஏளனம் செய்கிறார்கள் . நான் என்ன செய்ய ?
பதில் : மாமிசத்தை விடவேண்டும் என்று நீங்கள் நினைத்தவுடன் நமது மூளையில் இருக்கும் கலி அணுக்கள் உடனே ஆக்ரோஷமாகி பல மாயா உணர்வுகளையும் சோர்வையும் ஏற்படுத்தும் . திடீரெனெ நமக்கு பலவித நோய்கள் வந்துவிட்டதாக பூச்சாண்டி காட்டும் . இந்த தாக்கம் மூன்று மாதத்திற்கு கடுமையாக இருக்கும் . இந்த காலகட்டம் தான் உங்களுக்கான சவாலான காலகட்டம் . கவலை வேண்டாம் . எனது அனுபவத்தில் குருநாதர் அருளால் கீழ்கண்ட வழிமுறைகளில் இதை எளிதாக எதிர்கொள்ளலாம் .
(௧) அடிக்கடி தரமான நாட்டு பேரிச்சம் பழம் உண்ணலாம் .
(௨) சில நாட்களுக்கு தினமும் அரை ஸ்பூன் அஸ்வகந்தா லேகியம் உண்டு பசும்பால் அருந்தலாம் . இது நல்ல பலன் தரும் . ஆனால் டோஸ் கொஞ்சம் கூடினால் சிறிது வாய் துடுக்காக பேச தோன்றும் ( தன்னம்பிக்கையை இந்த மூலிகை வெகுவாக கூட்டும் ). உங்கள் விருப்பப்படி அளவை குறைத்துக்கொள்ளுங்கள் . உங்கள் சித்த ஆயுர்வேத மருத்துவரை ஆலோசிக்கலாம் . ஆனால் உங்கள் மருத்துவரே ஒரு “மாமிச விரும்பி”யனால் உங்களை கரைசேர விடமாட்டார் . ஜாக்கிரதை .
(௩) ( ஆண்கள் ) உங்கள் மீசையை மஹாகவி பாரதியாரை போல் சிறிது முறுக்கிவிடுங்கள் .
மேலும் அடுத்த பதிவில் நம் குருநாதரை பற்றிய அற்புதமான பல தகவல்களோடு தொடர்வோம் .....
நன்றி : குடும்பத்தில் முக்கியமான பல கடமைகளுக்கு மத்தியில் பல தடைகளை கடந்து இந்த பதிவை எழுதிமுடிக்க கருணையோடு அனுமதித்த குருநாதரின் செல்ல மகள்களான என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அன்புடன் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .
தொடரும் ....