http://fireprem.blogspot.com/2020/06/blog-post.html?m=0
ஞாயிறு, 19 ஜூலை, 2020
Our Gurunathar's Light
http://fireprem.blogspot.com/2020/06/blog-post.html?m=0
சனி, 13 ஜூன், 2020
தர்மம் செய்வோர்க்கு மட்டும்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த உறவுமுறையும் இல்லாமல், எந்த மத சார்பும் இல்லாமல் - குறைந்தது ₹ 100 ஐ அருகில் உள்ள ஆதரவற்றோர்க்கு உதவினால், விரும்பிய ஒரு மின்னூல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்ப முயற்சிப்போம்.
வெள்ளி, 1 மே, 2020
குமரனின் குழந்தைப் பாட்டு
வேலவன் வல்லமை பாருங்கள்,
மூளை நூலைக் கேளுங்கள் !
தேனும் திணையும் தந்தவனாம்,
நாளும் கோளும் சொன்னானே !
இரும்புச் சனிக்கு நிலமாகும்,
நிலத்தின் சுவையோ உப்பாமே !
தாமிர செவ்வாய் நீராகும்,
நீரின் சுவையோ புளிப்பாமே!
வெள்ளிச் சுக்கிர காற்றாகும்,
காற்றின் சுவையோ கசப்பாமே !
தங்கக் குருவாய் தீயாகும்,
தீயின் சுவையோ காரமாமே!
பாதரச புதனாய் ஆகாசம்,
ஆகாச சுவையோ இனிப்பாமே!
குருதி படைத்தவன் செவ்வாயாம்,
வெப்பநீர்மம் கொண்டவனே !
சுக்கிரபுதனும் வெள்ளணுவாய்,
காந்த ஆற்றல் கொண்டவரே !
சனிகுருவாம் சிவப்பணுவாய்,
வெப்ப ஆற்றல் கொண்டவரே !
சந்திரன் அமைத்திடும் நரம்பிழையாம்,
குருதி பரவிட எளிதாமே !
குமரன் சொல்லக் கேளுங்கள்,
குன்றத்தோனைப் பணியுங்கள் !
உரசி உரசி வந்தோரை
அணுக்கள் என்றே சொன்னாரே !
கலியால் வந்த அமிலத்தை,
வலிய வந்து ஏற்றாரே !
முருகன் பாதம் பற்றிடுக,
ஞானம் எல்லாம் பெற்றிடுக !
பாடலின் மூலநூல் : முருகப்பெருமான் அருளிய மூளை எனும் தலைமை சுரபி.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
நூலைப்பெற,
https://www.amazon.in/Muulai-Ennum-Thalamai-Surabi-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/dp/8194254337
http://enlightenedbeings.org/
வெள்ளி, 14 பிப்ரவரி, 2020
முருகப்பெருமானின் மூளை
முருகப்பெருமான் அருளிய "மூளை எனும் தலைமை சுரபி" என்னும் தெய்வீக நூல், பாண்டிச்சேரி ஞானாலயத்திலிருந்து வெளிவந்தபின் எனது வீட்டு முகவரிக்கு நூல் வரும்படி பதிவு செய்தேன்। கடந்த மாதம் ஒருநாள், வீட்டிற்கு வந்த நூலை என் மனைவி பெற்று, முருகப்பெருமானை வணங்கி பூஜை அறையில் வைத்துவிட்டாள்। அடியேன் நான் அலுவலகம் முடிந்து வந்தபின், பணிவோடு முருகப்பெருமானையும் குருநாதரையும் வணங்கி படிக்க ஆரம்பித்தேன் । இந்நூலை 48 அத்தியாயங்களாக அருமையான வகையில் அறிவியல் மற்றும் ஞான மணிகள் கோர்த்த வேத மாலையாக முருகப்பெருமான் தொடுத்திருக்கிறார் ।
முதல் அத்தியாயத்தை படிக்கும்போது "அறிவுத்திருக்கோவில் வேதாத்திரி மஹரிஷியின்" பிரபஞ்ச மற்றும் ஜீவ காந்த தத்துவங்களே எனக்கு ஞாபகம் வந்தது । அப்படியென்றால் முருகப்பெருமானின் இந்த "மூளை" புத்தகமும் வேதாத்திரி மஹரிஷியின் புத்தகங்களை போல்தான் இருக்குமோ? என்ற எண்ணம் வந்தது । ஆனால் அடுத்துவரும் அத்தியாயங்களை படிக்கும்போது இந்த "மூளை" நூல் முற்றிலும் வேறுபட்டது மிகவும் நுணுக்கமானது என்று புரிந்துகொண்டேன் ।
இந்த "மூளை" நூல் ஞானாலயத்தின் மற்ற வெளியீடுகளான "கலியுக கவியும் - ஆன்மாவின் சுயசரிதை" மற்றும் "வாழ்வியல்" நூல்களோடு சிறிது தொடர்பு உடையதாக இருக்கும்படி அமைத்திருக்கிறது। எனினும் "மூளை" நூலை ஒரு தனிப்பட்ட நூலாகவும் யாவரும் படிக்க மிகவும் பொருத்தமான நூலாகவும் உள்ளது । இந்த நூலை முழுமையாக படிக்கும்போது, சித்தர்கள் அனைவரும் பணிந்து வணங்கும் முருகப்பெருமானின் பார்வையில் நமது மனித மூளை எப்படி அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஒரு மாபெரும் மருத்துவ அறிவியல் நூலாகவே தோன்றும் । ஆனால் அடியேன் என் பார்வையில், ஆறுமுக தெய்வம் இந்நூலை குறைந்தது "ஆறு பரிணாமங்களில்" மிகவும் நுணுக்கமாக அருளியதாக தோன்றுகிறது । இதில் தமிழ் , மருத்துவ அறிவியல் , யோகஞானவியல் , பிரபஞ்ச இயற்பியல் , உயிர் கணிதவியல் மற்றும் உயிர் வேதியியல் போன்ற ஆறு பரிணாமங்களை அடியேன் உணர்ந்தேன் । இந்தப்பதிவை அடியேன் நான் எழுத ஆரம்பிக்கும்போது ஒரு தெய்வத்தின் நூலை விமர்சிக்க எனக்கு என்ன தகுதி உள்ளது? என்ற அச்சம் வந்தது । முருகப்பெருமான் நம் குருநாதருக்கு அப்பன் எனில், அடியேன் எனக்கு பாட்டன் என்ற உரிமை உள்ளது, என்று மனம் தெளிந்து இப்பதிவை தொடர்ந்து எழுதுகிறேன், பாட்டன் முருகப்பெருமான் கருணையோடு ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன் ।
இந்நூலை படிக்கும் உங்களுக்கு உங்கள் விருப்ப பாடங்களைப்பொறுத்து பல நுணுக்கங்களை சூட்சுமமாக உணர்வீர்கள் । நீங்கள் இந்நூலை முழுமையாக படிக்கும்போது ஒரு பிரமாண்டத்தை உணர்வீர்கள் । பெருவாரியான கலியுக மனிதர்கள் நூலின் அனைத்து அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் படிக்கமாட்டார்கள் என்பதை முருகப்பெருமான் சரியாக கணக்கிட்டுள்ளார் । எனவேதான், ஒரு அத்தியாயம் முடிந்தபின் அதன் சாராம்சத்தை சுருக்கமாக அடுத்த அத்தியாயங்களில் மீண்டும் கூறியிருப்பார் । இது படிப்பவர் காலஅவகாசம் எடுத்து, சிறிது சிறிதாக படித்தாலும் நூலின் முழு தொடர்பு விடாமல் புரிந்துகொண்டு படிக்க ஏதுவாகும் । மேலும் ஒரே விஷத்தை மீண்டும் மீண்டும் சொல்கிறாரரெனில் அந்த விஷயமே முக்கிய கோட்பாடாக மனதில் ஆழமாக பதியவைக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் । எனது விருப்பப்பாடம் "யோகஞானவியல்" என்பதால் குருநாதர் அருளால் அடியேன் நான் உணர்ந்த சில குறிப்புகளை மட்டும் இங்கே காண்போம் । இந்த குறிப்புக்கள் இந்த நூலைப்பற்றி ஒரு குறிப்பிட்ட பரிணாமத்தில் தோன்றும் சிறிய உதாரணங்களே. நீங்கள் இந்நூலை முழுமையாகப் படிக்க இந்த பதிவு ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன் ।
பக்கம் 100 : உயிரின் உறைவிடம் => விழித்திரையின் மத்தியில் உள்ள கூடு என்பது உயிர்த்துகளின் உறைவிடமாக உள்ளது । நிர்மலம் என்றால் என்னவென்று முருகப்பெருமான் கூறுகிறார் ।
பக்கம் 169 : பரிபூரண ஞானத்தை பெற்று ஒளியுடல் பெரும் வழி।
பக்கம் 281 : மூலாதார சுரபியிலிருந்து பாதரச ஆற்றல் மீண்டும் மேலேறி புதன் சுரபியினை அடையும் । புதன் சுரபியின் உயரிய பாதரச எரிபொருளானது தலைமை சுரபியினை மீண்டும் அடைகிறது । தலைமை சுரபி உபரியான எரிபொருளினை மீண்டும் ஒற்றை அணுவிற்கு அனுப்பும் தருணத்தில், அந்த மனிதரை உயர்நிலைக்கு ஏற்றிடும் । அவர் ஓர் உயரிய குருவாகவும், தெய்வநிலையிலும் போற்றப்படுகிறார் ।
=> எனது புரிதலில் , குண்டலினி சக்தி மூலாதார சக்கரத்திலிருந்து மேலேறி ஆக்கினை சக்கரத்திற்கு வந்து ஒளியாய் ( வாலை) நிற்கும் ।
பக்கம் 201 : சிறு குழந்தைகளை காணும்போது ஏன் அன்பும் ஆனந்தமும் பெருகுகிறது ? உயரிய குருமார்கள் தனது உயர்ந்த எரிபொருளை சுற்றியுள்ள ஆன்மாக்களுக்கு பகிரும் நிலை ।
பக்கம் 235 : தலைமை சுரபியினை சீர்செய்யும் முக்கிய மூன்று வழிமுறைகள் யாது ?
பக்கம் 226 & 227 : பன்னிரெண்டு நரம்பிழைகளால் செயல்படும் சூரிய சூழலின் ஆற்றல் பெற்றது தலைமை சுரபி => எனது புரிதலில் இது பின்கலையை நினைவுபடுத்துகிறது ।
சந்திர சுரபி பதினாறு நரம்பிழை தடங்களை கொண்டிருக்கும் । அனைத்து சுரபிகளுடனும் தொடர்பு கொண்டிருக்கும் => எனது புரிதலில் இது இடகலையை நினைவுபடுத்துகிறது ।
பக்கம் 229 : தலைமை சுரபியோடு மற்ற ஆறு சுரபிகள் "சக்கர" வடிவில் உள்ளது । உயிர் கூடு கூம்பு வடிவுடன் , அதன் கீழ் அமைந்த ஒற்றை அணுவானது அகண்ட நிலையில் இணைந்திருப்பது "சங்கு" வடிவில் காட்சி தருகிறது ।
பக்கம் 291 & 292 : சூட்சுமத்தின் சூட்சுமம் என்பது சந்திரசுரபியினை அறிவதே । மூளையின் ஆக்கத்திற்கு தலைமை சுரபியே பெரும் உதவி புரிகிறது । மூளையின் அடக்கம் எனும் செயலிழப்பிற்கும் மூலகாரணமாக அமைவது சந்திரசுரபியே என்றே உணர வேண்டும் ।
=> எனது புரிதலில், மனிதரின் ஆன்ம சக்தி இழப்பிற்கு காரணமானது இடகலை ( சந்திர சுரபி )। ஆன்ம சக்தி கூடுவதற்கு காரணமானது பிங்கலை ( சூரியன் என்னும் தலைமை சுரபி )। மூளையின் இயக்கம் குன்றியவர் மனநிலை பாதித்தவரை "Lunatic" என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் । "Lunar" என்றல் சந்திரன் ( சந்திர சுரபி )।
பக்கம் 396 & 397 : ஆன்ம விடுதலை அடைந்தால் உயிரின் கூடானது எளிதாய்க் கரைந்திடும் । உயிர்க்கூடு என்பது கரையத் துவங்கினாலும் , அதன் நஞ்சாற்றல் சிரசினில் கலப்பு கொண்டிடும் । உயிர்க்கூடு எனும் நஞ்சுப்படலமானது மிகவும் கொடிய நஞ்சினைத் தங்கியே செயல்புரியும் । உயர் ஆன்மாக்களின் ( அகத்தியர் , முருகப்பெருமான் , சப்த ரிஷி முனிகள் ) துணை கொண்டு முறையாக நீக்கப்பட்டால் மாத்திரமே மூளை எனும் உறுப்பிற்கு பாதகம் விளைவித்திடாது ।
=> எனது புரிதலில், முருகப்பெருமானின் இந்த குறிப்பு மிக மிக முக்கியமான குறிப்பு என்றே தோன்றுகிறது । நாம் ஏன் ஞானாலயம் சென்று தீட்சைகள் பெறவேண்டும் என்பதை உணர்த்துகிறது । மேலோட்டமாக பார்க்கும்போது ஞானாலய தீட்சைகள் உப்பு சப்பு இல்லாத வெறும் செயல்பாடாக தோன்றலாம் , ஆனால் இந்த தீட்சைகள் மகா சித்த தெய்வங்களால் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் । என்றோ திரேதா யுகம் , துவாபர யுகம் மற்றும் கலியுக ஆரம்பத்தில் நமது சித்தர்கள் எழுதிய வாசியோக பாடல் நுணுக்கங்களை வைத்துக்கொண்டு இன்றைய கொடிய கலியுக கடைசியில் பலரும் வெறித்தனமாக பயிற்சி செய்கிறார்கள் । xyz வாசியோகம் , xyz ஹடயோகம் , xyz சித்த வித்தைகள் , abc யோகக்கலை என பல பல யோகமுறைகளை மனித குருமார்கள் பயிற்சி கொடுக்கிறார்கள் । ஒருவேளை இந்த யோகமுறைகள் உயிர்க்கூடை கரைத்தாலும், நஞ்சு படலத்தின் நஞ்சு பாதிப்பை நாம் யோசிக்கவேண்டும் । பாண்டிச்சேரி ஞானாலயத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று எதுவென்றால் , இங்கு வெளியிடப்பட்ட சித்தர்களின் நூல்களே । இதை பொறுமையாக படித்தால் தான் புரியும் ।
பக்கம் 398 : உயிர்க் கூடு கரைந்து விட்டால் உயிரின் தரிசனம் கிட்டும் எனினும் , விடுதலை அடைந்த ஆன்மாக்களுக்கே இச்செயலானது சாத்தியமாகும் । சிரசில் உள்ள அனைத்து பாதரச துகள்களும் முழுமையாக வெளியேறினால் மாத்திரமே உயிர்க்கூடு கரைய வேண்டும் அன்றி , சில துகள்கள் பிரிபடாது நிலைத்துவிட்டாலும் உயிர்க்கூடு கரைவது பெரும் துன்பத்தை விளைவிக்கும் ।
=> எனது புரிதலில், இதற்க்கு மேலே சொன்ன அதே குறிப்பை ( பக்கம் 396 & 397 ) கவனமாக படிக்கவும் । எச்சரிக்கை ।
பக்கம் 403 to 405 : மூளைக்குள் கழிவுகள் தேங்காமல் காப்பது எப்படி ?
பக்கம் 420 : ஒளியுடல் சாத்தியமாகும் நிலை । சந்திர சுரபியினை கையாண்டிடும் கலைதனை அறிவதே ஞானமாகும் । சந்திர சுரபியினை செயலிழக்க செய்வதே பரிபூர்ண ஞானமாகும் । தலைமைசுரபி தனது ஆற்றலை கூட்டி , ஒற்றை அணுவோடு இணைத்து தனது செயலிழப்பினை ( தலைமை சுரபியின் ) உருவாக்கினால் , மானுடன் தெய்வ நிலைதனை எட்டிடலாம் ।
=> எனது புரிதலில், நாம் ஏற்கனவே சந்திர சுரபியை இடக்கலையோடும் , தலைமை சுரபியை சூர்யகலையோடும் ( பிங்கலை - சூரியன் ) ஒப்பிட்டுப்பார்த்தோம் । இந்த 48-ஆம் அத்தியாயத்தில் முருகப்பெருமான் கூறியபடி , இடகலை என்னும் சந்திரனை குறைத்து பரிபூரண ஞானத்தை பெறுவதை சுட்டிக்காட்டும் விதமாக, சிவபெருமான் குறைந்துபோன பிறைச்சந்திரனை தனது தலையில் சூடியுள்ளார் । சந்திரன் முழுமையாக செயலிழந்தபின் , ஒரு யோகிக்கு சூரியன் மட்டும் செயல்படுகிறது । பின்னர் வழிகாட்டும் உயர் ஆன்மாக்களின் ( மஹா சித்தர்கள் ) கருணையினால், அந்த சூரியனும் செயலிழந்து அந்த யோகி மூச்சற்ற நிலையில் தெய்வ நிலையோடு ( ஈஸ்வரனாக ) வாழ்வார் । மேலும் புரிந்துகொள்ள நீங்கள் "கலியுக காவியம் - ஆன்மாவின் சுயசரிதம் " என்ற நூலினையும் படிக்கவேண்டும் । அந்த நூலில் குறிப்பிட்டபடி , துவாபர யுக மூளை கிடைக்கும்போது ஒருவர் திட உணவை விடுத்து திரவ உணவை உண்பார் । பின்னர் திரேதா யுக மூளை கிடைக்கும்போது ஒருவர் திரவ உணவை விடுத்து காற்று உணவை ( சூரியனில் ) உண்பார் । பின்னர் சத்திய யுக மூளை கிடைக்கும்போது ஒருவர் காற்று உணவை விடுத்து ஒளி உணவை உண்பார் । ஹ்ம்ம் , ஞானாலயத்தின் நான்கு நூல்களையும் ( *கலி அணுக்களை நீக்கியபின்* ) நீங்கள் இணைத்துப்பார்த்தால் ஒரு ரஹஸ்ய வரைபடம் குருவருளால் தெரிய நல்ல வாய்ப்பு உண்டு । மேலும் சொல்ல எனக்கு உத்தரவு இல்லை ।
பக்கம் 426 : முத்தாய்ப்பாக முருகப்பெருமான், இந்நூலினை அறிந்து , புரிந்து , உணர்ந்து ஏற்பவர்கள் ஐவகைப் பலன்களை பெற்றிடுவர் என்கிறார் ।
அதை நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள் । இதற்கு மேல் எழுதினால், ஞானாலயத்தார் என்னை சும்மா விடமாட்டார்கள் । நிற்க ।
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புத்தக விபரங்களை பெறலாம்
http://www.enlightenedbeings.org/books.php
ஞானாலயத்தின் மற்ற நூல்களை பற்றிய பதிவுகளை கிழே உள்ள இணைப்புகளை அழுத்தி படிக்கலாம் ।
ஓம் அகத்தீசாய நமஹ.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
திங்கள், 6 ஜனவரி, 2020
பூங்கதவே.. தாள் திறவாய்… – “வாழ்வியல்”
பூங்கதவே.. தாள் திறவாய்… – “வாழ்வியல்”
“பூங்கதவே.. தாள் திறவாய்…
பூங்கதவே.. தாள் திறவாய்…
பூவாய்… பெண் பாவாய்..
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்…”
கேட்பதற்கு இதமான மென்மையான பழைய பாடல். இந்த பதிவின் தலைப்போடு "வாழ்வியல்" என்ற சொல்லும் சேர்க்கப்பட்டதன் பொருளை கீழே படிக்கலாம். இந்த குறுகிய கால சிங்கப்பூர் பயணத்தில், முருகப்பெருமான் அருளோடு இப்பதிவை அடியேன் எழுதுகிறேன்.
சிங்கப்பூர் விடுதியிலிருந்து அலுவலகத்திற்கு வந்த முதல் நாளே என் அலைபேசியை நான் பயணித்த டாக்ஸியிலேயே மறந்து விட்டுவிட்டேன். நமக்கு உள்ளூரிலேயே அலைபேசி ( smartphone ) இல்லையென்றால் உயிரற்ற நடைப்பிணமாக உணர்வோம், நான் வெளிநாட்டில் என் அலைபேசியை தொலைத்துவிட்டு எப்படி இருப்பேன் என உங்களால் யூகிக்க முடியும்.
அடேங்கப்பா ! நான் இதை எதிர்பார்க்கவில்லை. குருதெய்வமே! இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? நானும் ஒரே ஒரு துளி மௌனம் கொடுங்கள் என்று மன்றாடினால் எனக்கு ஆயிரத்தியெட்டு சோதனைகள் வைக்கிறீர்கள், உங்கள் மகள் சொல்லிவிட்டால் சிட்டாய் பறந்து மாயம் செய்வது ஞாயமா? என புலம்பினேன். எல்லாம் சரிதான். இப்போது எப்படி இந்த இரண்டு நாட்களைக் கடத்துவது ? சட்டெனெ ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. கடந்த மாதம் "பாண்டிச்சேரி ஞானாலயம்" சென்ற போது வாங்கிய "வாழ்வியல்" என்ற புத்தகம் என் லேப்டாப் பையில் இருந்தது । இந்த புத்தகம் முருகப்பெருமான் அருளியது ( ஆமாம் சார்!!!, தமிழ் கடவுள் முருகப்பெருமான் தான்! ). இந்த கலியுகத்தில் முருகப்பெருமான் அருளிய புத்தகம் என்றவுடன் உங்கள் அனைவருக்கும் சந்தேகம் வருவது இயற்கைதான். கிராமத்து கோவில்களில் திடீரென்று ஒரு கிழவி தலைவிரிகோலமாய் "அடேய், நான் காளியாத்தா வந்திருக்கேன்டா " என்று அருள்வாக்கு சொல்வார்கள், அதுபோல் முருகப்பெருமான் பெயரில் இவர்களாகவே ஒரு புத்தகத்தை எழுதினார்களோ ! என்ற சந்தேகம் எனக்கு இந்தமுறை வரவில்லை. ஏனெனில் கடந்த வருடம் வால்மீகி மகரிஷி அருளிய "கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதம் (click here to read the blog )" என்ற நூலை வாங்கும்போது, இதுபோல் சந்தேகப்பட்டு, பிறகு முழுமையாக படித்தபின் ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டேன்.
முருகப்பெருமான் அருளிய "வாழ்வியல்" புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் சுவாரசியமும் வியப்புமாக இருந்தது. உங்களில் உள்ள "ஞான தேடல் - ஆத்ம தேடல் - இறை தேடல் - நான் ஏன் பிறந்தேன்? என் பிறவி நோக்கம் என்ன ?" போன்ற அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தை ஒருவர் பிறந்ததிலிருந்து கடைசிக் காலம் வரை வயது வாரியாக அற்புதமாக முருகப்பெருமான் உரைத்துள்ளார். உதாரணத்திற்கு, முருகப்பெருமான் உரைத்த ஒரு கருத்தை மட்டும் எனது புரிதலில் சொல்கிறேன்। "வாழ்வியல்" புத்தகத்தில் பக்கம் 82 இல் ( என்னது ? எட்டும் இரண்டுமா? என வாசியோக அன்பர்கள் திகைப்புடன் படிப்பதை என்னால் உணரமுடிகிறது ), நம் உயிராகிய சிவன் எங்கிருக்கிறார் ? அவரை தரிசிக்க தடையாக இருக்கும் உயிர் கூடு ( shell ) எது ? அந்த உயிர் கூடு எப்படி தனது தாளை ( lock ) திறக்கும் ? என்று அருமையாக விளக்கி யிருப்பார். அதாவது, உயிராகிய சிவன் நேர்மறை ஆற்றலான காந்த ஆற்றல் எனில், எனது புரிதலில் உயிர்சக்தியை "ஆண்பால்" எனக்கொள்ளலாம் ( உயிரை தாங்கியவர் ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி ) அப்படியெனில் அந்த உயிரை சூழ்ந்திருக்கும் உயிர் கூடு ( shell ) எதிர்மறை ஆற்றலான வெப்ப ஆற்றலால் உருவாக்கப்பட்டது. எனவே உயிர் கூட்டை நாம் "பெண்பால்" எனக்கொள்ளலாம்.
பெண்ணாகிய உயிர் கூடு தனது தாளை ( lock ) திறக்க வேண்டுமெனில் நாம் எப்படி பணிந்து இனிமையாக அதனிடம் சொல்ல வேண்டும் என்பதை முருகப்பெருமான் சொல்லியிருப்பார். இந்த கலியுகத்தில் எந்த பெண்ணிடமும் அதிகாரம் செய்து காரியம் சாதிக்க முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மீறி பெண்ணிடம் ஒருவர் அதிகாரம் செய்தால், அவர் நிம்மதி இழந்து வாழ வேண்டியதுதான். சரி, இப்போது இந்த பதிவின் ஆரம்பத்தில் உள்ள பாடலை உங்கள் மனதில் ராகத்தோடு பாடிப்பாருங்கள். என்ன? உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா? அல்லது புரிந்தும் புரியாதது போல் உள்ளதா? அப்படியெனில் நீங்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கவேண்டும். இதுபோல் பல சூட்சமங்களை அள்ளி வீசியுள்ளார் முருகப்பெருமான். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புத்தக விபரங்களை பெறலாம். உடனே நீங்கள், இவனுக்கு ஞானாலயத்திலிருந்து ஒரு புத்தகத்திற்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? ஒரு நையா பைசா கூட கிடைக்காது. மேலும் என்னை யாரென்று ஞானாலயத்தில் யாருக்கும் தெரியாது. என்னைப் போல் தேடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த பதிவை எழுதி பகிரவேண்டும் என்ற பொறுப்பு மட்டுமே (அதுவும் என் ஆழ்மனம் என்னை தூங்கவிடாமல் தடுப்பதால் ). ஒருவேளை இதற்காகவே நம் குருநாதர் என்னை அவ்வப்போது தனிமைப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து புத்தக விபரங்களை பெறலாம்
http://www.enlightenedbeings.org/books.php
ஓம் சரவணபவ
ஓம் அகத்தீசாய நமஹ
இப்படிக்கு
அகத்திய பக்தன்.
செவ்வாய், 26 நவம்பர், 2019
அகத்தியர் பல்கலைக்கழகம் ( University of Agasthya )
sorry. in progress
http://www.enlightenedbeings.org/
https://siththanarul.blogspot.com/?m=1
http://senthilmanickam.blogspot.com/?m=1
http://www.atharvanabathrakalli.org/
http://machamuni.com/
http://yogicpsychology-research.blogspot.com/?m=1
https://siddharyogam.com/
http://www.siththarkal.com/?m=1
http://tamilmarmayogam.blogspot.com/?m=1
http://classroom2007.blogspot.com/?m=1
பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - பகுதி 5
*இதற்கு முன்பு உள்ள பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.
பெங்களூர் பணியில் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஒருமுறை விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் அன்னவள் ஊரான ராம்நாடு சென்றிருந்தேன். அப்போது எனது மைத்துனர்கள் சரவணன் மற்றும் பேங்க் சரவணன் எதேச்சையாக ஒருவரை அறிமுகம் செய்தார்கள். அவர் ஒரு ஜோதிடர் மற்றும் இரத்தின கற்களைப்பற்றி படித்து பட்டயம் பெற்றவர், என்று அவரைப்பற்றி கூறினார்கள். அப்போதும் நானும் விளையாட்டாக, எனக்கு பொருத்தமான இரத்தின கல் மோதிரம் செய்ய முடியுமா? என கேட்டேன். அதற்கென்ன... தாராளமாக.. என்று சொல்லி, மோதிரம் செய்து வாங்கித் தரும் பொறுப்பை மைத்துனர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். ஒரு மாத காலம் கழித்து மோதிரம் என்னிடம் வந்து சேர்ந்தது. வெறும் கல் தானே, கம்மியான விலைதான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், 2008 ஆம் ஆண்டிலேயே மூன்று ரத்தினக் கல்லிற்ற்கு மட்டும் ரூபாய் ஐந்தாயிரம் தாண்டிவிட்டது. தங்க மோதிரத்தின் விலை தனி.
அந்த ஜோதிடர், என் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து குற்றமில்லாத இரத்தின கற்களை கவனமாக தேர்ந்தெடுத்து, நிறைய நுணுக்கமான விஷயங்களுடன் மோதிரத்தை வடிவமைத்திருந்தார்। அவர் தனக்கோ அல்லது வேறு யாருக்கும்கூட இவ்வாறு நேர்த்தியாக வடிவமைத்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது । இந்த மோதிரம், எம்பெருமான் எனக்காக வடிவமைத்த ஒரு அற்புத எந்திரம் ।
இந்த மோதிரத்தில் ஒரு பக்கம் குருவுக்குரிய மஞ்சள் புஸ்பராகம், மறுபக்கம் புதனுக்குரிய பச்சை மரகதம் மற்றும் நடுவிலே சூரியனுக்குரிய மாணிக்கம் என்று மூன்று கற்களை உள்ளடக்கியது। இங்கே அதன் புகைப்படங்களை இணைத்துள்ளேன்। மூன்று கற்களின் பின்பக்கமும் திறந்த நிலையில் என் உடலோடு இணைப்பை வைத்திருக்கும். இதில் பச்சை மரகதக்கல் மட்டும் சிறிது துருத்திக்கொண்டு என் விரல் நரம்பை சிறிது அழுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். ஜோதிடர் ஆலோசனைப்படி ஒரு நல்ல நாளில் எம்பெருமானை வணங்கி மோதிரத்தை அணிந்தேன். மேலும் அன்றிலிருந்து ஒரு மண்டல காலம் சூர்ய காயத்திரி, குரு காயத்திரி மற்றும் புதன் காயத்திரி மந்திரத்தை தினமும் பத்து முறை எழுதி பணிந்து வணங்கினேன். ( போகிற போக்கில் என் குருநாதர் அருளால் ஒரு பரம ரகசியத்தை உங்களுக்காக சொல்லிவிட்டு போகிறேன்। இறைவனை மனமுருகி பணிந்து வணங்கும்போது, முதலில் நம் கண்களில் கண்ணீர் வழியும் । பிறகு நமது அண்ணாக்கிற்கு மேலிருந்து சிறிது சிறிதாக சளி கீழிறங்கும் । பின்பு அண்ணாக்கிற்கு மேலே எப்போதும் முடியே உள்ள ஒரு மெல்லிய சவ்வு சிறிதே திறந்து, விரும்பியதை நடத்திக்காட்டும் பிரபஞ்ச பேராற்றலை நமது சிரசுக்குள் ஈர்த்துக்கொடுக்கும்। அதன்பிறகு சிலமணி நேரங்களுக்கு உங்கள் மனம் ஒரு இனம் புரியாத மனஅமைதியோடு மிகவும் லேசாக இருப்பதை உணரலாம் । ஓம் அகத்தீசாய நமஹ )
சனி, 1 ஜூன், 2019
பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - 4
*இதற்கு முன்பு உள்ள முதல் பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.
எண்ணிற்கேற்றபடி பெயரின் எழுத்துக்களை மாற்றும்போது, இனிஷியலையும் சேர்த்து கணக்கில் எடுக்கவேண்டும். உதாரணமாக, இனிஷியல் மற்றும் பெயர் எழுத்துக்கள் சேர்ந்து நாற்பத்தியாறு வந்தாலே சரிதான். அதோடு, பெயர்மட்டும் தனியாகவும் அதிஷ்டமான எண்ணில் அமைந்தால் இன்னும் சிறப்பு. ஆனால் அப்படி அமைப்பது சிறிது சவாலானது. நீங்கள் உங்கள் பெயர் எண்ணை, ஓரளவிற்கு அர்த்தம் மற்றும் ஓசை மாறாமல் பெயர் எழுத்துக்களை மாற்றியபின், ஒரே ஒரு எண் குறைபாட்டில் சவாலாக நிற்கும். அந்த சூழ்நிலையில் பொதுவாக "அம்பாளுக்கு உரியதும் அகரமுமான" “A” என்ற எழுத்தை இனிஷியல் முன் சேர்த்துக்கொள்வார்கள். யாரேனும் ஏன் "A " என்ற அதிகப்படியான இனிஷியல் என்று கேட்டால், உங்கள் குலதெய்வம் "அம்மன்", அதனால் "A " என்ற அதிகப்படியான இனிஷியல் காரணம் சொல்லலாம்.
எனது பெயரின் ஆங்கில எழுத்துக்களை சிறிதே மாற்றி 41 எண்ணில் அமைத்தபின், எனது தாத்தாவின் பெயர் "சின்ன ராமசாமி" என்பதில் "C" எழுத்தை எடுத்துக்கொண்டேன். முடிவாக C.R.Prammendran ( 5+41=46 ) என்று சரியாக அமைந்தது. இந்த அதிஷ்டபெயரை எழுத ஆரம்பிப்பதற்கான கோடில்லாத நோட்டுகள் வாங்கி, அதில் சரியான இடைவெளியில் ஒருநாளைக்கு நாற்பத்தியாறு கோடுகள் வீதம், நாற்பத்தியாறு நாளைக்கு கோடுகள் கிழித்து, பெயர் எண்ணிற்க்கான அதிஷ்டதேதியில் ப்ரம்மமுகூர்த்தத்தில் எழுந்து, குளித்து, வழிபட்டு எழுத ஆரம்பித்தேன்.
இப்படிக்கு,
பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - 3
*இதற்கு முன்பு உள்ள முதல் பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.
அடுத்ததாக எந்தப் பெண்ணை முதலில் பார்ப்பது? என யோசித்தோம். உடனே அடியேன் மனதிற்குள் வேகமாய் ஒரு கணக்குப் போட்டேன். தொலைதூரம் என்றால் பேரூந்துக் கட்டணம் அதிகமாய் இருக்கும் என்பதை யோசித்து, அதை வெளியே சொல்லாமல், "அருகில் உள்ள ஊர் பெண்ணை முதலில் பார்த்து அதுவே அமைந்துவிட்டால் தொலைதூர அலைச்சல் வேண்டாமே.." என்றேன். ஆனால் மாசிலா பெரியம்மா அந்தத் திட்டத்தை அப்படியே திருப்பிப் போட்டார். "முதலில் தொலைதூர இராம்நாடு பெண்ணை பார்த்தபின் மற்ற பெண்களைப் பார்த்தால், எளிதாக ஒப்பீடு செய்து தேர்ந்தெடுக்கலாம்" என்றார். இறைவன் விளையாட களமிறங்கிவிட்டார் என்பது புரியாமல் நானும் "சரி. அப்படியே செய்யலாம்" என்று ராம்நாடு கிளம்பினோம். மதுரையை தாண்டிப்போகாத நான் முதன்முதலாக ராம்நாடு வந்து பெண் பார்த்தோம். அப்போது பெண்ணின் தாயார், மிகவும் தயங்கி பெண்ணின் கையை எடுத்து காண்பித்து, "பெண்ணின் மணிக்கட்டில் ஒரு சிறு குறை உள்ளது" என்றார். அங்கே ஒரு சிறு நிசப்தம் நிலவியது. ஆனால் அடியேன் என் மனதில் மட்டும் ஆகாவென்று பட்டாம்பூச்சி பறந்தது. "என் மகனே! உனக்காக குறிப்புகளை காட்டிவிட்டோம். இனி சமர்த்தாகப் பிடித்துக்கொள்ளடா" என்று இறைவன் உணர்த்தினார். இன்று வரை அன்னவள், அடியேன் நான் தான் பெரிய தியாகி மிகவும் உயர்ந்தவன்... என்று பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அனைத்தும் "இறைவன் கணக்கின் அடையாளம்" என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.
நான் “இந்தப் பெண்ணே சம்மதம்” என்றவுடன், பெண்வீட்டார் உடனே மறுநாளே திண்டுக்கல் வந்து பார்க்கிறோம் என்றார்கள். பிறகென்ன? மற்ற இரண்டு பெண்களை பார்ப்பதை கைவிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். மாப்பிள்ளை தனியார் கம்பெனியில் மிக மிகக் குறைந்த சம்பளம் வாங்குகிறார், மேலும் தொலைதூரத்தில் இருப்பதால் குடும்ப பின்னணியும் முழுதாக தெரியாது, போக்குவரத்தும் கடினம்.. என்ற காரணங்களால் பெண்ணின் உறவுக்காரர்கள் இந்த மாப்பிள்ளை வேண்டாமே! என வாதித்திருக்கிறார்கள். ஆனால் பெண்ணின் தாயார் "முருகப்பெருமான் அருளால் இந்த மாப்பிள்ளைதான்" என்றும், பெண்ணின் சகோதரர் "நாராயண பெருமாள் அருளால் இந்த மாப்பிள்ளைதான்" என்றும் சேர்ந்து ஒரு மனதாக உறுதியாக நின்றுவிட்டார்கள். ஹ்ம்ம்... இந்த முருகப்பெருமானும் எம்பெருமான் நாராயணனும் எங்கிருந்து எங்கு வந்து எனக்காக அடித்து விளையாடுகிறார்கள் என்று பாருங்கள். ஓம் நமோ நாராயணாய. ஓம் முருகா போற்றி.
ஒருவழியாக திருமணம் நிச்சயம் ஆனபின், எங்கள் குடும்ப நண்பர் ஒருவரும், என் உடன் பணிபுரியும் ஒருவரும் தானாகவே முன்வந்து குறைந்த வட்டிக்கு கடனாக திருமண செலவிற்கு பணம் தந்தார்கள். திருமண நாள் நெருங்க நெருங்க, எந்த நேரத்திலும் எதிர்பாராமல் திருமணம் நின்றுவிடலாம் என்ற பயம் எனக்கு கூடிக்கொண்டே இருந்தது. காரணம், என் தந்தையார் மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தைவிட்டு பிரிந்து கோவையில் கர்மவினையால், எங்கு எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. எப்போதும் மது மயக்கத்தில் இருப்பவரை, நெடுந்தொலைவு திருமணத்திற்கு யாரால் எப்படி கூட்டி வரமுடியும்? தாலிகட்டும்வரை யார் அவரை சமாளிப்பது? என்பது பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால் அனைத்து உறவுகளும் பக்கபலமாக இருந்தார்கள். இறைவன் அருளால் அவரும் வந்துவிட்டார். எப்படியோ திருமணம் நடந்தால் சரிதான், என்று நினைத்த எனக்கு ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மகாராஜா தலைமையில் ஜாம்ஜாம் தடபுடலாக திருமணம் நடந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது. அன்னவளின் கழுத்தில் தாலியை கட்டிய மறுநிமிடம் தான் அடியேன் என் முதுகுத்தண்டை நிமிர்த்தி "அப்பாடி, இறைவன் நடத்தி விட்டாரடா" என நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
திருமணம் நல்லபடியாக இறையருளால் நடந்தது. இனி வசந்த காலம்தான் என்று பெரிதாக மகிழ முடியவில்லை. ஏனெனில், திருமண கடனுக்கான வட்டி போக மீத சொற்ப வருமானத்தில் எப்படி குடும்ப செலவுகளை பார்ப்பது என்ற கவலை சிறுது எட்டிப் பார்த்தது. திருமணமான நாளிலிருந்து சரியாக தொண்ணூறு நாட்களில் கோவையிலுள்ள ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிடித்தம் போக மாதம் ரூபாய் 6500, அதுவும் மென்பொருளின் நவீன தொழில்நுட்பத்தில். சில போராட்டங்களுக்குப் பின், பழைய நிறுவனத்திலிருந்து இறையருளால் கோவையிலுள்ள நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். வீடு வாடகை மற்றும் குடும்ப செலவிற்கு (நான், அம்மா மற்றும் மனைவி) இந்த புதிய சம்பளம் அன்றைய 2004 கால கட்டத்தில் மிகச்சரியாக இருந்தது. சிக்கனமாகத்தான் வாழவேண்டும் என்ற கட்டாயம். பழைய நிறுவனத்தின் Provident Fund பணத்தை வைத்து திருமணக் கடனை அடைந்துவிட்டேன். நவீன தொழில்நுட்பத்தில் புதிய வேலை ஆர்வமாக சென்றது. இந்நிலையில் சிலமாதங்களில் அன்னவள் கருத்தரிக்கும் போதுதான் அடுத்தகட்ட வாழ்க்கைக்கான பணத் தேவைக்கு என்ன செய்வது என்ற கவலை வந்தது. அடிக்கடி மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்வதற்கும் மருந்து செலவிற்கும் மிகவும் சிரமமாக இருந்தது. சத்து மாத்திரை வாங்கவே சிரமப்பட்டேன். மருத்துவர் முக்கிய பரிசோதனையை தம்பதியர்கள் எடுக்க வேண்டும் என்று சொல்லியும், அதற்க்கு செலவாகுமே, என்று கடைசி வரை எடுக்கவில்லை. வழக்கம்போல் எம்பெருமான் நாராயணனிடம் மனமுருகி பிராத்தனை செய்தோம் ( இந்த முறையிலிருந்து பிராத்தனை செய்ய அடியேனுக்கு இன்னும் இரண்டு கரங்கள் கிடைத்துவிட்டது ( மனைவியின் கரங்களையும் சேர்த்து ) . இப்படித்தான் நம் கடவுள்களுக்கு பெரும்பாலும் நான்கு கரங்கள் போலும்).
ராம்நாட்டில் குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது. உடனே பணிவிடுப்பு எடுத்து ராம்நாட்டிற்கு வந்துவிட்டேன். உறவுகளின் வாழ்த்துக்கள் ஒருபக்கம், எப்பெருமானே! இனி செலவை சமாளிப்பது எப்படி என்ற யோசனை மறுபக்கம்.
தொடரும்...
பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - 2
*இதற்கு முன்பு உள்ள முதல் பகுதியை படித்துவிட்டு இந்த பதிவை படியுங்கள்*.
மறுநாள் மதிய உணவை வேகமாக முடித்துக்கொண்டு என் ஜாதகத்தோடு நண்பரை சந்தித்தேன். அவர் நிறைய கணக்குகளை எழுதினார், எனக்கும் நிறைய ஜோதிட தத்துவங்களையும் பாவ புண்ணிய கணக்குகளையும் சொன்னார். அடியேனுக்கு ஓரளவுக்குத்தான் புரிந்தது, முழுவதுமாக புரியவில்லை. ஓம் அகத்தீசாய நம. அடுத்து வரும்போது, என் சகோதரி, தாய்மாமன் மற்றும் சகோதரியின் குழந்தைகளின் ஜாதகத்தையும் (நான் அவர்களுக்கு தாய்மாமன்) கொண்டுவரச்சொன்னார். இது அவர்களின் ஜாதகம் வழியாக என் ஜாதகத்திற்குள்ள தொடர்புகளை ஆராய்வதற்கு. இப்படியாக தினமும் மதியம் அரைமணி நேரம் சோதிட ஆராய்ச்சி மாதக்கணக்கில் நடந்தது! ஒருவனின் ஜாதகத்தின் மூலம் அறியும் பாவ புண்ணியங்கள், அவை முன் ஜென்மங்கள் மூலம் வருவது, என் ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் எப்படியெல்லாம் அடிபட்டு தன் பலத்தை இழந்தது, பாபகிரகங்களின் தாக்கம் என பல விஷயங்களை எனக்கு சொன்னார். இதில் என் மனைவி ஸ்தானம் மற்றும் அமைப்பை அதிக நாட்கள் எடுத்து பொறுமையாக சொன்னதுதான் இறைவன் அவர்மூலம் எனக்கு வழிகாட்டியதாக கருதுகிறேன். அவர் முதலில் கூறியது, "நண்பரே, உமது ஜாதகப்படி சுபக்கிரகங்கள் பலமில்லாததும், பாபகிரகங்கள் தாக்கம் இருப்பதும் உண்மைதான். இது முன்ஜென்ம கர்மங்கள் என எடுத்துக்கொள்ளலாம். எனினும், இறைவன் அருளால் ஒரு பொருத்தமான மனைவி உமக்கு அமைந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை நல்லநிலைக்கு வந்துவிடும். கவலை வேண்டாம். இறைவனை தினமும் நன்கு மனமுருகி வழிபடுங்கள். முக்கியமாக பிரதோஷ நாட்களில் சிவன் கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வழிபடுங்கள். அது உங்கள் பாவங்களை நிச்சயம் நீக்கும். பிரதோஷ நேரத்தில் செல்ல இயலாவிடினும், அன்று மாலை அலுவலக பணி முடிந்தபின் சென்று வழிபட சொன்னார். அத்துடன், நல்ல மனைவி அமைய எம்பெருமான் நாராயணனை வாரம் ஒருமுறையேனும் கோவிலுக்கு சென்று வணங்குமாறு அறிவுறுத்தினார். எனக்கு பொருத்தமான மனைவியை பற்றி சொன்ன விஷயங்கள் அப்போது ஆச்சர்யமாக இருந்தது.
அன்னவள் எந்த திசையில் வசிக்கிறாள். அவளின் குடும்பத்திற்கான சமூக அந்தஸ்து, அவளின் நடை, உடை, உடல் ஆரோக்கியம், ஆபரண விருப்பங்கள், நிறம், எங்களுக்குள் இருக்கப்போகும் ஈர்ப்பு, மணபொருத்தம், சண்டை சச்சரவு, யார் யாரை அதிகம் அனுசரிபார் (தினப்பொருத்தம், கணப்பொருத்தம், வசியம் மற்றவை...), முக்கியமாக எளிதில் காணும்படியாக ஒரு மிகச்சிறிய உடல்குறை இருக்கும் என்று சொன்னார். இறுதியாகவும் உறுதியாகவும் அவர் சொன்னது "இறைவனை சரணடைவதே ஒரே வழி". என்னிடமிருந்து ஒரு சிறு எதிர்பார்ப்பும் இல்லாமல் நையாபைசாவுக்கும் பிரயோசனமில்லாத என்னை அவர் மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொண்டார். இறைவனே எனக்காக இவரை அனுப்பிவைத்தார் போலும்.
அவர் கூறும் ஜோதிட கணிதம் எனக்கு புரியவில்லையே என வருந்தினேன். அவர், "கவலை வேண்டாம். இந்த கலியுகத்தில் ‘நியூமராலஜி’ என்ற ஆங்கில எண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீன சாஸ்திரம் உள்ளது. அது கலியுக மனிதர்களுக்கு பெரும்பாலும் பொருந்துகிறது. இந்த கலியுக பாஷையான ஆங்கிலம் கற்ற நம் பாரத தேசத்தார் நல்ல சம்பாத்தியம் செய்து, பொருளாதாரத்தில் உயர்ந்துவருகிறார்கள். இந்த சாஸ்திரத்தை புரிவதும் எளிது. நீங்கள் உங்கள் பிறந்த தேதியையே ஒரு மையமாக வைத்து நியூமராலஜி சாஸ்திரத்தை படித்துப்பாருங்கள்" என ஒரு குறிப்பு கொடுத்தார். அன்றுமுதல் தினமும் அலுவலகம் வரும்வழியில் உள்ள திண்டுக்கல் NGGO காலனி முருகன் கோவில் செல்வது, சனிக்கிழமை தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில், பிரதோஷமன்று அபிராமி அம்மன் கோவிலில் உள்ள சிவன் மற்றும் பைரவர் வழிபாடு என்பது வாடிக்கையானது. மேலும் சகோதரன் சிவராம ராஜாவை சந்திக்க அடிக்கடி பழனி செல்லும்போது, பழனி முருகப்பெருமானை மலையேறி வழிபடுவது மிகுந்த ஆறுதலாக இருக்கும். தினமும் மாலை பணி முடிந்தவுடன் செயின்ட் மேரிஸ் ஸ்கூல் அருகிலிருக்கும் நண்பன் சுதாகர் கடைக்கு செல்வது வழக்கம். என்னால் அவனுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லாவிட்டாலும், ஓசியில் டீ வாங்கிக்கொடுத்து தினமும் அன்போடு வரச்சொல்பவன் அவன்தான். அவனது ரேடியோ கடையில் மாலைநேரம் தான் நல்ல வியாபாரம் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அவன் அதிகம் பேசி வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். நான் அதிக நேரம் அவனுக்காக காத்திருக்கநேரிடும். அதனால், அவன் கடைக்கு அருகிலுள்ள "நியூ செஞ்சுரிஸ்" புத்தக நிலைய விற்பனையாளரிடம் என்னை அறிமுகப்படுத்தி, அங்குள்ள புத்தகங்களை ஓசியில் எவ்வளவு நேரம்வேண்டுமானாலும் நான் படித்துக்கொள்ளும்படி ஒரு அருமையான ஏற்பாடு செய்தான். இறைவனே எனக்கு ஆசிரியனாக இருந்து பாடம் கற்பிக்கும் அழகை என்னவென்று சொல்வது.
சில மாதங்கள் கழித்து ஒருவழியாக என் தாய்மாமாவும் மாசிலா பெரியம்மாவும் கலந்துரையாடி மதுரையில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் எனக்காக பதிந்தார்கள். என்ன ஆச்சர்யம்!, உடனே இருபத்தியிரண்டு பெண்களின் ஜாதகங்கள் கிடைத்தது. அதில் அடியேன் குறித்துவைத்த நியூமெராலஜி குறிப்புகளை வைத்து மூன்று பெண்களின் ஜாதகங்ளை நானே தேர்வு செய்து, ஜாதகபொருத்தம் பார்க்க வீட்டாரிடம் கொடுத்தேன். அதில் ஒன்று வத்தலகுண்டு, இரண்டாவது நிலக்கோட்டை, மூன்றாவது ராம்நாடு. "ஜாதகங்களை தேர்வு செய்யும் அளவுக்கு இவனுக்கு என்ன பெரிய சாஸ்திரம் தெரியும்?" என என்னை கோவித்தார்கள். அவர்கள் அந்த இருபத்தியிரண்டு ஜாதகங்களையும், மாமாவிற்க்குத் தெரிந்த திண்டுக்கல் கோர்ட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஜோதிடரிடம் எடுத்துச் சென்று ஆராய்ந்தார்கள். அந்த ஜோதிடரும் அதே மூன்று ஜாதகங்களைத்தான் தேர்வு செய்தார்! அடுத்ததாக, யார் யார் பெண் பார்க்க செல்வது? எந்த பெண்ணை முதலில் பார்ப்பது? என்ற கலந்துரையாடல் நடந்தது. மாசிலா பெரியம்மாவும், தண்டபாணி மாமாவும் என்னையும் கூட்டிக்கொண்டு பெண் பார்க்க செல்லும் பொறுப்பை மகிழ்வோடு ஏற்றார்கள். எனக்காக குடும்பத்தார்கள் பொறுப்பெடுத்துக்கொள்வது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் மறுபக்கம் சிறிது பயமாகவும் இருந்தது. ஏனெனில், அனைவரும் நான் சம்பளத்திலிருந்து திருமண செலவிற்காக நிறைய சேர்த்துவைத்துள்ளேன் என நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், MCA படிப்பிற்காக சேமிப்பினையெல்லாம் செலவு செய்வதால், அடியேனிடம் ஒரு நையா பைசா கூட கிடையாது என்பது யாருக்கும் தெரியாது.
தொடரும்...
திங்கள், 27 மே, 2019
பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - 1
பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தாள்… - பகுதி 1
ஓம் அகத்தீசாய நமஹ.
நீண்ட நாட்களாக எழுத நினைத்த ஒரு முக்கிய அனுபவத்தை, இந்த குறுகியகால கொரியா பயண இடைவெளியில், குருவருளால் எழுதுகிறேன். கடந்த பதிவுகளில் நான் எழுதிய ஜோதிடம் தொடர்புடைய அனுபவத்தை படித்ததில், ஒரு சிலருக்கு ஜாதகம் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டு நல்ல ஜோதிடர் யார் என தேடியிருக்கலாம். இன்றைய காலகட்டத்தில், நல்ல திறமையான, இறைவன் அருள்கொண்ட ஜோதிடரை காண்பது எளிதல்ல. எனது நோக்கமும் நீங்கள் உங்கள் ஜாதகத்தை உடனே ஆராயவேண்டும் என்பதல்ல. உங்கள் வாழ்வு உயர மிக எளிய நல்ல வழி, இறைவனை வணங்கி உங்கள் இஷ்ட குருவை தினமும் தியானம் செய்து உங்களால் இயன்ற தான தர்மங்களை ஆதரவற்றோருக்கு கொடுப்பதேயாகும். உங்கள் இஷ்ட குரு பதினெண் சித்தர்களில் ஒருவரோ அல்லது சாய் பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், யோகிராம் சூரத் குமார், வேதாத்ரி மகரிஷி, யேசுநாதர் என யாரோ ஒருவராக இருக்கலாம். ஜோதிட சாஸ்திரம் என்பது இறைவன் அருளுவதற்கான பல ஆயிரம் "எந்திரங்களில்" இதுவும் ஒன்றுதான். இதுபோன்ற சாஸ்திர எந்திரங்களுக்கு உள்ளே இருந்து ஆட்டுவிப்பவன் "இறைவன்" என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே எல்லாம்வல்ல ஈஸ்வரனை முழுமையாக சரணடையாமல், வெறும் சாஸ்திர எந்திரங்களை மட்டும் நம்பினால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். இவையனைத்தும் வெறும் மூடநம்பிக்கை என வீண்விவாதம் செய்யவேதொன்றும்.
சரி... இனி என் அனுபவத்தை பார்ப்போமா? இந்த அனுபவ காலகட்டம், சனிதிசை முடிந்து புதன் திசையின் காலகட்டம். ஆரம்பகட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் கணிப்பொறி தட்டச்சு வேலையில் முதலில் வாங்கிய சம்பளம் மாதத்திற்கு 800 ரூபாய். ஒவ்வொரு வருடமும், பத்து வட்டிக்கு (நூறு ரூபாய்க்கு மாதம் பத்து ரூபாய் வட்டி) ரூபாய் ஆயிரத்தை "பிச்சைக்காரன்" (அவர் பெயரே அதுதான்) என்ற ஒரு வட்டிக்கு விடுபவரிடம் பணம் வாங்கி என் B.Com பட்டப்படிப்பை படித்தேன். தீபாவளி போனசில் கடனை அடைப்பது வழக்கம். எனது பட்ட படிப்பு முடிந்து, திண்டுக்கலில் பகுதிநேர படிப்பாக MCA சேர்ந்துவிட்டேன். பட்டப்படிப்பு தகுதியுடன் கணிப்பொறி வல்லுனராக, பிடித்தம்போக மாதம் 3500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. வீட்டு செலவிற்குப்போக மீதத்தை MCA படிப்பிற்கு செலவு செய்தேன். எனது 25 ஆம் வயதில் எனது சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் ஒரு மந்தநிலை காணப்பட்டது. பணிபுரியும் நிறுவனத்தில் நான் மிகவும் மதிக்கும் ஒரு அதிகாரியிடம் எனது நிலைபற்றி பேசினேன். அவர் என்னை அவருக்கு பழக்கமான ஒரு ஜோதிடரிடம் அழைத்து சென்றார். நான் வாழ்க்கையில் முதன்முதலாக என் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சென்றேன். ஜோதிடர் என் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து என் பெற்றோர் பற்றியும், தாத்தா, பாட்டி குடும்பம் என மிக நுணுக்கமான விஷயங்களை மிக சரியாக சொன்னது வியப்பாக இருந்தது. அந்த முன்பின் தெரியாத ஜோதிடர் என் ஜாதகத்தை ஆராய்ந்துவிட்டு, என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை ஒருபக்கம் வியப்பிலும் மறுபக்கம் அங்கிருந்தோர்கள் மத்தியில் பெருத்த அவமானத்திலும் தள்ளியது. என்னிடம் கேட்ட கேள்விகளில் சில...
நீ சிறுவயதிலிருந்து மிகுந்த துன்பமும் மனவேதனையோடும் வளர்ந்தாயா? ஆம்.
உன் தகப்பனுக்கு இரண்டு மனைவிகளா? ஆம்.
உன் தந்தைவழி தாத்தாவுக்கும் இரண்டு மனைவிகளா? ஆம்.
உன் மாமாவுக்கும்... என்று சொல்லவரும்போது, அவரை நான் அழுகாத குறையாக பார்த்ததை புரிந்துகொண்டு பேச்சை நிறுத்தினார். முழுதுமாக வேர்த்துவிட்டது. மேலும் என் தந்தைவழி தாத்தாவின் முதல் மனைவிக்கு (என் அப்பத்தா) இத்தனை குழந்தைகள் மற்றும் இரண்டாவது மனைவிக்கு இத்தனை குழந்தைகள் என்னும்போது, நான் வியப்பின் உச்சத்தில் இருந்தேன்.
நான் பிறந்தது போடி, வளர்ந்தது கோவை, அப்போது வேலைசெய்துகொண்டிருந்தது திண்டுக்கல்லில். எனது உறவுக்காரர்களுக்கே தெரியாத விஷயத்தை இவரால் வெறும் கட்டங்களை மட்டும் பார்த்து எப்படி சொல்லமுடிந்தது? அடேங்கப்பா. (சும்மாவா? என் தாய்வழி பாட்டி, என் பிறந்த நேரத்தை மிகத்துல்லியமாக குறித்துவைத்து, அரண்மனை ஜோதிடரிடம் எனக்கு ஜாதகம் எழுதினார். இன்றைக்கு ஏனோதானோவென்று ஒரு நேரத்தை குறித்துவிட்டு, குறைந்த செலவில் ஒரு ஜாதகம் எழுதிவிட்டு, ஒட்டுமொத்தமாக ஜோதிட சாஸ்திரமே பொய்.. எல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்வார்கள். அதேசமயத்தில், இறைவன் நினைத்தால் சாபமெல்லாம் வரமாகும், வரமெல்லாம் சாபமாகும் என்பதை நினைவில் கொள்க.)
எனது வருங்காலம் பற்றி ஏதேனும் உண்டா? என்றேன். அவர், "உன் ஜாதகத்தில் எந்த கிரகமும் சொல்லும்படி பலமாக இல்லை. பொருத்தமான மனைவி அமைந்தால் வாழ்க்கை மாறலாம்" என்றார். கடைசியாக தயக்கத்துடன் நான் "சாமி எனக்கு எத்தனை மனைவிகள் இருப்பார்கள்?" எனக்கேட்டேன். அவர், "முதலில் உனக்கு திருமணம் ஆகிறதா என பார்க்கலாம். அப்படி நடந்தால் ஒரு தாரம் தான்" என்று சொல்லி ஜாதக நோட்டை மூடிவிட்டார். ஏற்கனவே இனம்புரியாத கவலையில் இருந்த எனக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருந்தது.
மறுநாள், வீட்டாரிடம் ஜாதகம் பார்த்ததையும் திருமண அவசியத்தையும் சொன்னேன். முதலில் யாரும் நம்புவதாக இல்லை. சில மாதங்கள் கழித்து எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால், ஒன்றும் அமைவதாக இல்லை. என் பயோ-டேட்டாவை எப்படி பெண் வீட்டாருக்கு பிடிக்கும்படி கவர்வது என யோசித்தேன். மாப்பிள்ளைக்கு அரசாங்க வேலை இருந்தால் நிச்சயம் யோசிக்காமல் பெண் கொடுப்பார்கள் என திட்டமிட்டு, மத்திய மற்றும் மாநில போட்டி தேர்வுகளுக்கு படித்து போட்டியிட்டேன். வேலை பார்த்துக்கொண்டே கிடைத்த நேரமெல்லாம் இரவு பகல் பாராமல் படித்து, பலமுறை தேர்வுகள் எழுதினேன். அதுவும் ஒன்றும் அமைவதாக இல்லை. சரி, பெரிய நகரங்களில் உள்ள பெரிய தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்தால், ஏதேனும் மாற்றம் நிகழலாம் என யோசித்து பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, நேர்முக தேர்வுக்கும் சென்றேன். அதுவும் ஒன்றும் அமைவதாக இல்லை. கடைசியாக, நாமே களத்தில் இறங்கி காதலித்துப் பார்த்திடலாம் என யோசித்தேன். ஆனால், அடியேன் எனக்கு வேலை மற்றும் படிப்பில் இருந்த சாமர்த்தியம், பெண்களின் மனதை கவர்வதில் இல்லை என்பதை புரிந்துகொண்டேன்.
யாரிடம் போய் சொல்ல? இறைவனையே நொந்துகொண்டேன். இறைவா! ஏன் எனக்கு அனைத்திலும் தோல்வியையே தருகின்றாய்? என கோவித்தேன். (ஆனால், அனைத்து தோல்வியும் வரும்காலத்தின் வெற்றிக்கே என்பது அப்போது புரியவில்லை). ஒருவன் வெற்றி பெற கடின உழைப்பு மற்றும் திறமை மட்டும் இருந்தால் போதாது, இறைவன் அருளே முக்கியம் என்பதை புரிந்துகொண்டேன்.
தொடரும்...
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.