ஆகம வேதம்
மகாமுனி அகத்தியரையும், சித்தர்களையும் வணங்கும் ஆன்மாக்கள் உலகெங்கும் உள்ளனர். அவர்கள் ஒவ்வருவருக்கும் கண்டிப்பாக ஒரு ஆசை இருக்கும். ஆம், என்றாவது ஒருநாள் அன்பான அகத்திய முனி நம்முள் வந்து அருள்பலிப்பாரா? நம்மையும் சித்தர் நிலைக்கு உயர்த்துவாரா ? என்ற ஆசை நம்முள் இருக்கும்.
இதற்க்கு முந்தய பிலாக்கில் "கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதம்" என்ற நூலை பற்றி சிறிய முன்னுரையை அடியேன் எழுதியிருந்தேன். ( லிங்க் கிளிக் செய்யவும் ). இந்த நூலுக்கு அடுத்து எனக்கு மற்றுமொரு தெய்வீக நூலை படிக்கும் பாக்கியம் கிடைத்தது.
"பரதவசி" என்னும் பரத்வாஜர் முனிவரால் உரைக்கப்பட்ட "ஆகம வேதம்" என்கின்ற இந்த நூல் உலகெங்கும் சித்தர்களை வணங்குவோர்க்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். இந்த நூலில் பாரத்வாஜ முனிவர் அவர்கள், கீழ்கண்ட விஷயங்களை மிக விரிவாக அழகாக உரைத்துள்ளார்.
* ஒரு பக்தனின் சிரசில் உள்ள எந்த தகுதியை வைத்து "அகத்திய முனிவர்" உள்ளே வர விரும்புவார்,
* எந்த விஷயம் அவர் வருவதை தடுக்கும், எது அவர்க்கு மகிழ்வை தரும்?
* அவர் ஒரு சிரசை தேர்தெடுக்க ஒரு பக்தன் என்ன என்ன முன்னேற்பாடுகளை செய்தல் வேண்டும்,
* ஒரு பக்தனின் சிரசில் அமர்ந்து அணுக்களை உயிர்பித்து செயலாற்றும்போது, என்ன என்ன வெளிப்பாடுகள் தோன்றும்? அதை எப்படி எதிர்கொள்வது ?
* அகத்தியர் முழுமையாக சிரசில் செயலாற்றியபின் பக்தனுக்கு கிடைக்கும் பலன்களை யாவை? , ஆற்றல் பெற்ற பக்தனின் கடமைகள் யாவை.
* முந்தய யுகங்களில் அகத்தியர் வருகை எப்படி எளிதாக இருந்தது?, ஏன் கலியுகத்தில் அவரால் எளிதில் நம் சிரசில் வரமுடியவில்லை ?
* நம் குழந்தைகளுக்கு எதை எப்படி எந்த வயதில் கற்றுக்கொடுக்க வேண்டும்?
* நமக்கு எளிதில் கிடைக்கும் சூரியனின் சக்தியை எப்படி நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு முழுமையாக பயன்படுத்துவது.
மேலும் பல அற்புதமான சூட்சமங்களை வெளித்திறந்து அருளியிருக்கிறார் "பரதவசி" என்னும் பரத்வாஜர் மகரிஷி.
மேலும் விபரங்கள் கீழே உள்ள இணையதளத்தில் உள்ளது.
http://www.enlightenedbeings.org/books.php
http://www.enlightenedbeings.org/books.php
இதைப்படிக்கும் உங்கள் ஆன்மாவிற்கு அகத்தியர் அருள் கிட்ட அகத்தியரை வணங்குகிறேன்.
ஓம் அகத்தீசாய நமஹ.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
2 கருத்துகள்:
Hi sir I too happened to see their interview just after finishing bairavar Pooja at home so I kind of feel like it's gods message :D
So got their books recently and while reading sithanarul blogpost saw your comment!
Just curious Have you visited gnanalayam personally and got Deeksha? Or have you know anyone who has got Deeksha from them?
Given my situations I'm not able to go there directly anytime soon that's why asking:-)
Wonderful and thankyou .....nice blog... Is this book available in PDF....my number 9443408018
கருத்துரையிடுக