தாயா தாரமா ?- கர்ம ஞான சூத்திரம்
ஓம் அகத்தீசாய நமஹ.
வீட்டுக்கு வீடு வாசப்படி.
இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் மாமியார் மருமகள் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இருவருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கணவனே.
முந்தைய பிறவியின் இரண்டு ஜென்மவிரோதிகளே இப்பொழுது மாமியார் மருமகளாக பிறக்கிறார்கள். கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறதா ? முந்தைய ஜென்ம விரோதத்திற்கு காரணமானவனே இப்போது இந்தப் பிறவியில் மகனாகவும் கணவனாகவும் வந்து இருவருக்கும் இடையில் சிக்கித் தவிப்பான்.
நேரடியாக தீர்வுக்கு வந்துவிடலாம். நீண்ட விபரங்கள் முந்தைய பதிவுகளிலும் உள்ளது. மோட்ச தீப ஞானத்தில் படித்துக் கொள்ளலாம்.
1) துன்பப்படுபவர் ( கணவன் அல்லது மனைவி ) தனது இந்தப் பிறவியின் துன்பத்திற்கு காரணமான, முந்தைய பிறவியின் செயலுக்காக மனம் வருந்த வேண்டும். குறைந்தபட்சம் 9 நாட்களுக்கு தினமும் காலை மாலை உணவிற்கு முன் ஒரு விளக்கை ஏற்றி, மனம் உருகிய வழிபாடு செய்து, மானசீகமாய் தனது வாழ்க்கைத் துணைவரை மனதில் உருவமாய் கொண்டு வந்து, அவர் பாதத்தில் தன் தலையை வைத்து தன் முந்தைய பிறவியின் தவறுக்காக தாழ்மையோடு மன்னிப்பு கேட்க வேண்டும். 9 நாட்கள் மனம் உருகிய இந்த வழிபாட்டிற்கு பிறகு தனக்குத் தானே மோட்ச தீபம் ஏற்றி ஒருமுறை வழிபட வேண்டும்.
2) மேற்கண்ட வழிபாட்டை முடித்த பின்னர், தனது வாழ்க்கைத் துணைவருக்காகவும் ஒரு மோட்ச தீபத்தை ஒரு முறை மட்டும் ஏற்றி வழிபட வேண்டும்.
3) மேற்கண்ட வழிபாட்டை முடித்த பின்னர், சம்பந்தப்பட்ட தனது தாய் அல்லது மாமியாருக்காகவும் ஒரு மோட்ச தீபத்தை ஒரு முறை மட்டும் ஏற்றி வழிபட வேண்டும்.
இந்த மோட்ச தீப வழிபாட்டை பற்றிய விரிவான குறிப்புகளை கீழே உள்ள பதிவில் படித்து தெளிவு பெறலாம்.
http://fireprem.blogspot.com/2024/10/blog-post.html?m=1
இப்படிக்கு அன்புள்ள
அகத்திய பக்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக