வெள்ளி, 1 நவம்பர், 2024

திருமண வாழ்க்கை - கர்ம ஞான சூத்திரம்


திருமண வாழ்க்கை -  கர்ம ஞான சூத்திரம்


ஓம் அகத்தீசாய நமஹ.


 திருமண வாழ்க்கையில் முரண்பாடு, மன உளைச்சல் என்பது இன்றைய குடும்பங்களில் சகஜமானது தான். அவை அன்றைக்கே சமாதானமாகி, கணவன் மனைவிக்குள் அன்பு மலர்ந்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இது நீண்ட கால மன உளைச்சல், கருத்து வேறுபாடு,  வன்புணர்வு, சில குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் அடிதடி, ஏன் கொலை அல்லது தற்கொலை வரையும் கூட சென்று விடுகிறது. 




தொலைக்காட்சிகளில்  தம்பதியர்களின்  வெறுப்புணர்விற்கான விவாத மேடைகள்  மற்றும் உளவியல் சார்ந்த  ஆலோசனைகளும் பெருவாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை அத்தனையும் வெளிமனத்தின் பார்வையில் இருந்தே பார்க்கப்படுகிறது. ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் கர்மாவின் விளைவாக இதைப் பார்ப்பவர்கள் மிகக் குறைவு.


துன்பத்திற்கான காரணம்

இது என்ன ஆழ்மனம், கர்மா என்ற புது குழப்பம் என்று தோன்றுகிறதா ? ஒரு மனித உயிர் இந்த பூமியில் பிறக்கும் பொழுதே, அதன் முந்தைய பிறவிகளின் நிறைவேறாத கர்ம பதிவுகளோடு தான் பிறக்கிறது. இந்த நிறைவேறாத கர்மப் பதிவுகளில் முக்கியமானது தனது வாழ்க்கைத்  துணைவருடனான கர்ம பதிவுகளே. கர்மாவிற்கு நன்மை, தீமை என்ற பேதம் இல்லை.



 நீண்ட காலமாக வெறுப்புணர்வோடு வாழும் கணவன் மனைவிக்குள் எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் வெறுப்பு வருவதாக நாம் கருத முடியாது.  இதை மனநல ஆலோசகரிடம்  இருவரையும் உட்கார வைத்து எவ்வளவு நேரம் பேசினாலும் இந்த வெறுப்பை சரி செய்யவும் இயலாது. ஏனெனில் கணவனால் மனைவிக்கு துன்பம் வர வேண்டும் என்பது முந்தைய பிறவியின் கர்ம கணக்காக இருக்கும். 


 உதாரணமாக, 

ஒரு குடிகாரன் தினமும் குடித்து விட்டு தன் மனைவியை மட்டும் குறிப்பிட்டு அடிப்பான், தகாத வார்த்தைகளால் மன உளைச்சலை அவளுக்குக் கொடுப்பான், மனைவியின் உடைகளை எரிப்பான், வீட்டு பொருட்களை உடைப்பான். அவன் ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் ஒரே நோக்கம் அவன் மனைவிக்கு  குறிப்பிட்ட நீண்ட காலத்திற்கு, துன்பத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் என்பதே. இதில் குடிப்பழக்கம் ஒரு காரணமாகத்தான் இருக்கும். 

இவ்வளவு ஏன், நன்கு படித்த குடும்பங்களிலேயே  குடிப்பழக்கம் இல்லாத கணவன், தன் மனைவிக்கு பல  துன்பங்களைக் கொடுப்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள். வெளி மனத்தின் பார்வையில் இருந்து நாம் பார்க்கும் பொழுது கணவன் மேல் தானே குற்றம்!  கணவனை எப்படி சரி செய்வது? என்றே யோசித்துக் கொண்டே இருப்போம், ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருக்கும். நம்ப முடியாத உண்மை ஒன்றை குருநாதரின் அருளால் சொல்கிறேன். கணவருக்கு குடிப்பழக்கம் அல்லது தீய ஒழுக்கம் இருப்பது, அவர் மனைவிக்கு துன்பத்தைக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான்.  மனைவி இவரால் துன்பப்பட வேண்டும் என்பது விதி. கணவன் மனைவி இருவரின் ஆழ்மனத்திலும் இதுவே நன்றாக பதிந்திருக்கும், அதுவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.  இன்றைய மனநல மருத்துவர்களாலும் உடைக்க முடியாத அளவிற்கு ஆழ்மனத்தின் கர்மா / விதி, வெகு பத்திரமாக பூட்டப்பட்டிருக்கிறது. 

இதை ஓரளவுக்கு புரிந்து கொள்ள நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஜோதிட சாஸ்திரம்  சிறிதளவுக்கு உதவும். ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து இரண்டு மற்றும் ஏழாம் இடம்,  சுக்கிரன் நின்ற நிலை,  இந்தக் கட்டத்தின் மேல் மற்ற பாப கிரகங்களின் பார்வை என ஆய்வு செய்யலாம். ஆனால் 100% துல்லியமாக கணிக்கும் ஜோதிடர்கள் இப்போது கிடையாது. நீண்டகால வெறுப்புணர்வு என்ற ஒரு குறிப்பே போதும், முந்தைய பிறவியின் கர்ம கணக்கு என்று புரிந்து கொள்வதற்கு.


எல்லாம் சரிதான்! கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாக தான் இருக்கிறது, ஆனால் வெறுப்பை நீக்கும் தீர்வு என்ன? படிப்படியாக இந்த விதியை எப்படி குறைத்து நீக்குவது? இந்தப் பிறவியில் துன்பத்தைக் கொடுப்பவர் முந்தைய பிறவியில் அதே துன்பத்தை அனுபவித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை இன்னும் விவரமாக  புரிந்துகொள்ள "கர்ம ஞானம்" என்ற தனிப் பதிவில் எழுதியுள்ளேன். அதற்கான இணைப்பு பதிவின் கீழே உள்ளது.

 

கணவன் மனைவி வெறுப்புணர்வு மற்றும் துன்பத்தை நீக்குவதற்கான தீர்வு :-

1)  துன்பப்படுபவர் ( கணவன் அல்லது மனைவி )  தனது  இந்தப் பிறவியின் துன்பத்திற்கு காரணமான, முந்தைய பிறவியின் செயலுக்காக மனம்  வருந்த வேண்டும்.  குறைந்தபட்சம் 9 நாட்களுக்கு தினமும் காலை மாலை உணவிற்கு முன் வீட்டில் ஒரு விளக்கை ஏற்றி, மனம் உருகிய வழிபாடு செய்து, மானசீகமாய் தனது வாழ்க்கைத் துணைவரை மனதில் உருவமாய் கொண்டு வந்து, அவர் பாதத்தில் தன் தலையை வைத்து தன் முந்தைய பிறவியின் தவறுக்காக  தாழ்மையோடு மன்னிப்பு கேட்க வேண்டும். 9 நாட்கள் மனம் உருகிய இந்த வழிபாட்டிற்கு பிறகு கோவிலில் தனக்குத் தானே மோட்ச தீபம் ஏற்றி  ஒருமுறை வழிபட வேண்டும்.


2)   மேற்கண்ட வழிபாட்டை முடித்த பின்னர், தனது வாழ்க்கைத் துணைவருக்காகவும் கோவிலில் ஒரு மோட்ச தீபத்தை ஒரு முறை மட்டும் ஏற்றி வழிபட வேண்டும்.


 இந்த மோட்ச தீப வழிபாட்டை பற்றிய விரிவான குறிப்புகளை கீழே உள்ள பதிவில் படித்து தெளிவு பெறலாம்.

http://fireprem.blogspot.com/2024/10/blog-post.html?m=1


மேற்கண்ட மோட்ச தீப  வழிபாட்டை செய்த சில நாட்களிலேயே நல்ல பலன்களைத் தருவதை  நிச்சயமாக உணரலாம்.

உங்கள் ஆன்மாவை சிறைப்படுத்தும் அனைத்து கர்ம வினைகளிலிருந்தும் விடுபடுவது உங்கள் உரிமை மற்றும் கடமை. இதை நீங்கள் சுயமாக சிந்தித்து புரிந்து தனிப்பட்ட முறையில்  முடிவு செய்து கொள்ள வேண்டும்.  உங்கள் வாழ்க்கை  துணைவருக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ இதை புரிந்து கொள்வதற்கு சில காலம் ஆகலாம். ஆகையினால் அவர்களின் அனுமதி பெற்று இந்த வழிபாடை செய்வது சிறிது சவாலான காரியம். இந்த வழிபாடை உங்களுக்காகவும் உங்கள் வாழ்க்கை துணைவர் அல்லது சார்ந்தவர்க்காக நீங்களே முடிவு எடுத்து எப்படியாவது செய்து விடுங்கள். அனுமதிக்காகவோ புரிதலுக்காகவோ காத்திருக்காதீர்கள். இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வாய்ப்பு.  காலம் தாழ்த்தாதீர்கள் தவற விடாதீர்கள்.

உங்கள் மனதில் எழும் கேள்வி :-

 மேலே உள்ள தீர்வில், ஏற்கனவே துன்பத்தைக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைவரை மனதில் உருவமாக அவர் பாதத்தில் தலை வைத்து  தினமும் மன்னிப்பு கேட்க சொல்கிறீர்கள். நான் எந்தத் தவறும் செய்யாமல் எனக்கு துன்பம் கொடுத்தவரிடம்  மனோபாவமாக மன்னிப்பு கேட்பது நியாயம் தானா?  வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல் உள்ளதே ?
 பதில் : காரணம் இல்லாமல் காரியம் இல்லை.  நீண்டகால வெறுப்புணர்வுக்கு உங்கள் வெளிமனத்திலேயே காரணத்தை தேடுவது  போதுமானதல்ல. இந்த விதி ஏற்படுவதற்கான ஆழ்மனத்தின் பதிவை சிறிது யோசிக்க வேண்டும். என் மகளே / மகனே !, உன் வாழ்க்கைத் துணைக்கு தண்டனை  அல்லது விவாகரத்து கொடுப்பதால் யாருக்கு என்ன பலன்? மாறாக அந்த  முற்பிறவி விதியிடமே மன்னிப்பு கேட்டு விட்டால், தனது ஆழ்மனத்திலும், தனக்குத் துன்பம் கொடுப்பவரின் ஆழ்மனத்திலும்  பதிந்துள்ள இந்த எதிர்மறைப் பதிவு நிச்சயம் சமாதானம் ஆகிவிடும். துன்பத்தைக் கொடுத்தவர் தானாகவே அன்பாய் மாறி விடுவார் அல்லது துன்பத்தைக் குறைத்துவிடுவார். ஆழ்மனம் சமாதான பின்பும், அவர் வெளி மனமாய் மீண்டும் துன்பத்தைக் கொடுக்க முடியாது. ஏனெனில் அவர் ஆழ்மனமே அவருக்கு எதிரியாகிவிடும். புரிகிறதா ?
தொடர்ந்த 9 நாட்களுக்கான இந்த மன்னிப்புடன் கூடிய வழிபாடு மற்றும் மோட்ச தீபம்  இருவரின் ஆழ்மனத்தையும் ஊடுருவி சென்று எதிர்மறைப் பதிவை நீக்குவதற்கே.


தீதும் நன்றும் பிறர் தர வாரா.
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


இப்படிக்கு அன்புள்ள 
அகத்திய பக்தன்


மனம் உருகிய வழிபாட்டில் வைக்கப்படும் எண்ணங்கள், தூரத்தில் உள்ளவரிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா?  
AI பதில் ஆங்கிலத்தில்.








இன்னும் சந்தேகமா? கேள்வியா?


கர்ம ஞானம் - தனிப்பதிவு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக