சனி, 12 மார்ச், 2022

கர்ம ஞானம்

 கர்மாவின் லக.. லக.. லக..


 சில ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ஜோதிகா நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் கொடூர சிரிப்பொலியான "லக லக லக" வை நீங்கள் நிச்சயம் மறந்திருக்க முடியாது. முற்பிறவியில் தன்னையும் தன் காதலனை கொலை செய்த, வேட்டையன் ராஜாவை கொல்லத் துடிக்கும் நாட்டியக்காரி ஆவி, ஜோதிகாவின் உடலில் புகுந்து தன் கோபத்தை வெளிப்படுத்தும். கிளைமாக்ஸில் வேட்டையன் ராஜாவை கொல்வது போல் காட்டி, அந்த நாட்டியக்காரி ஆவியை சமாதானம் செய்வது தான் இந்த கதையின் முக்கிய சாராம்சம்.  அறிவியல் பூர்வமான மனோதத்துவமாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.



இப்போது நாம் புரிந்துகொள்ள போகும் ஒரு அற்புதமான சூட்சுமத்தை இங்கு பார்க்கலாம். அதற்கு முன் நமது குருநாதரையும், எனது முற்பிறவிகளிலிருந்தே எனக்கு ஆசானாகவும் அப்பனாகவும் அன்னையாகவும் ஞானம் புகட்டிய பரிமள குரு அன்னையின் பாதங்களையும் பணிந்து வணங்கி நம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம்.


 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நாம் இந்தப் பிறவியிலோ அல்லது கடந்த பிறவியிலோ, பிற உயிர்களை நோக்கி செய்த காரியங்களின் எதிர்வினையே கர்மா.

எனது சாப்ட்வேர் அனுபவப்படி சொல்லவேண்டுமெனில், ஒரு அவுட் புட் இருக்கிறது எனில் அதற்குரிய இன்புட் நிச்சயமாக இருந்தாக வேண்டும். every output must have its relevant input.

 ஒவ்வொருவரும் அவரின் கர்மாவை அதற்கு உரிய காலத்தில் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்பது விதி. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. எனினும் இந்த கர்மா என்னும் தலைவிதியின் வீரியத்தை குறைக்கும் அல்லது அழிக்கும் ஆற்றல் ஒற்றை அணுவுக்கு மட்டும் உண்டு. இந்த ஒற்றை அணு தான் பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். இதுவே ஒவ்வொருவரின் சிரசிலும் உயிராக உள்ளது. இந்த ஒற்றை அணு வீரியமாய் செயல்படுவதற்கான ஆற்றலைப் பெற வேண்டுமெனில், நாம் "இறைஞ்ச" வேண்டும்.  அதாவது இறைவனை பணிந்து வணங்க வேண்டும். அவ்வாறு பணிந்து வணங்கும் பொழுது விண் ஆற்றல் இந்த ஒற்றை அணுவிற்கு அதிகமாய் கிடைக்கும்.

 கர்மாவின் காரணத்தால் சிறைப்பட்ட ஆன்ம துகள்களை விடுவிக்கும் ஆற்றல் ஒற்றை அணுவிற்கு உண்டு.

 அடியேன் எனது அனுபவம் மற்றும் புரிதலின்படி கடுமையான கர்மாக்கள்,  நாம் விரும்பத்தகாத கனவுகளாகவும் வெளிப்படுவதும் உண்டு. சிறைப்பட்ட ஆன்மத்துகள்கள் முழுமையாக விடுதலை ஆகும்வரை, இது போன்ற விரும்பத்தாக கனவுகள் தொடர்ச்சியாக வரும்.


 உதாரணமாக ஒருவர் பலரோடு திருமணபந்தம் மூலமோ அல்லது வேறு மார்க்கத்திலோ உறவு கொள்ள வேண்டும் என்ற தலைவிதி இருந்தால், அந்த விதியை ஒற்றை அணுவால் கனவுகளாக வெளிப்படுத்தி சாமாதானம் செய்து சிறைப்பட்ட ஆன்மத்துகள்களை விடுதலை செய்யமுடியும். முக்கியமாக ஆழ்ந்த பக்தி வழிபாட்டிலோ அல்லது சக்திவாய்ந்த ஆலயங்களுக்கு யாத்திரை செய்து விட்டு வந்த பிறகோ, அதிகமான விரும்பத்தகாத கனவுகள் ஏற்படுகிறது எனில், அவரது சிறைப்பட்ட  ஆன்மத்துகள்கள் விடுபடுகிறது என்று பொருள்.  இதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை, இறைவன் உங்களை வழி நடத்துகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.


 இனி மீதமுள்ள தகவல்களை நீங்கள் கீழே உள்ள பட குறிப்புகளிலிருந்து புரிந்துகொள்ளலாம். எனினும் விவரமாக புரிந்து கொள்ள பாண்டிச்சேரி ஞானாலயத்தின் நூல்களை வாங்கிப் படித்து பயன் பெறுங்கள்.












ஒற்றை அணு - சுய விபரம் - கீழே உள்ளது

http://fireprem.blogspot.com/2022/04/blog-post.html?m=1



உங்கள்,

அகத்திய பக்தன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக