வியாழன், 23 ஜூன், 2022

விண்ணைத் தாண்டி வரத்தான் வேண்டுமா ?

விண்ணைத் தாண்டி வரத்தான் வேண்டுமா ?


 சென்ற ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா? என்ற எனது முந்தைய பதிவில் இந்த கலியுக எல்லைக் காலகட்டத்தில், ஏன் நல்ல சூழலில் வாழ தகுதியான குழந்தைகள் பிறப்பது இல்லை, என்று எழுதியிருந்தேன். இதைப் படிக்காதவர்கள் இப்பதிவுக்கு சென்று படித்துவிட்டு வரலாம். 



முன்பு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு விஷயம் இப்போது ஏற்றுக் கொள்ளப்படுகிறது, எனில் அந்த விஷயம் பெருகிக் கொண்டிருக்கிறது என்று தானே பொருள்?  என்னடா பொடி வைத்து எழுதுகிறேன், என பதட்டப்பட வேண்டாம். இந்த பதிவில் வரப்போகும் பிரச்சனைக்கு நல்ல தீர்வு இப்பதிவின் இறுதியில் உள்ளது. நீங்களும் என்னைப்போல் ஒரு ஆய்வு மாணவனின் மனநிலையில் இப்பதிவை தொடர்ந்து படியுங்கள். இந்த வாரம் வந்த ஒரு செய்தி கலியுக எல்லைக்கான காலகட்டத்தை ஆழமாக யோசிக்க வைத்தது. அந்த செய்தி, உலகின் பல பெரிய நிறுவனங்கள் ( இந்தியா உட்பட ) மாற்று பாலினத்தவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு தர முடிவு செய்து இருக்கிறது. இதை முக்கியமாக மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிவோர் நன்கு புரிந்து கொள்வார்கள். இதுவரை பெரும்பாலும் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள் இனி படிப்படியாக சமத்துவம் பெறுவார்கள். இது உண்மையில் வரவேற்கக் கூடிய விஷயம் தான். ஆனால் இதன் பின்புலமாக இருக்கும் செய்தி, அதாவது இறைவன் நமக்கு கொடுக்கும் செய்தியை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நமது தனிப்பட்ட ஆய்வை பார்ப்பதற்கு முன் சமூக வலை தளங்களில் இதைப் பற்றிய ஆய்வுகளை முதலில் கீழே உள்ள ஸ்க்ரீன்ஷாட் களின் மூலம் படித்துக் கொள்வோம். அப்போது தான் தற்போதைய நிலை உங்களுக்கு நன்கு புரியும்.


உலகளவில் நிலவரம்


பாரத தேசத்தின் நிலவரம்



எண்ணிக்கை. மாற்றுப்பாலினத்தில் முக்கியமாக திருநங்கைக்கான சாத்தியக்கூரே அதிகம்.



சுற்றுப்புற சூழல்


வருத்தமாக உள்ளது 😒


 இந்த செய்திகளை படித்த உடன் உங்களுக்கு ஏளனமாகவும் வெறுப்பாக தோன்றுகிறதா? தயவுசெய்து அவ்வாறு எண்ணாதீர்கள். இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் தலைமுறை மிகவும் மோசமான சூழலில் தான் வாழ வேண்டியிருக்கும், என்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் நாம் அடுத்த பிறவியில் பிறக்கப்போகும் சூழல்தான். அதைப்பற்றி இப்போது நான் ஏன் கவலைப்பட வேண்டும், என்கிறீர்களா? அட! உங்கள் பேரன் பேத்திக்கு யார் குழந்தையாக பிறப்பார்கள்? வேறு யார், நீங்கள் தான்!!. இது காதில் பூ சுற்றுவது போல் தோன்றுகிறதா? உங்கள் மருத்துவரிடம் சென்று உங்களுக்கு அடிக்கடி வரும் நோயின் மூல காரணம் என்ன? என்று கேட்டால், அதற்கு அந்த மருத்துவர் கூறும் பதில் "உங்கள் முன்னோருக்கு அந்த நோய் இருந்து இருக்கும்" என்பார். இந்த பதிலை நீங்கள் ஆழ்ந்து யோசித்தால் இந்த மறுபிறப்பு விஷயம் உண்மைதான் என்று உங்களுக்கே தெரியும்.

 சரி, இந்த மாற்றுப் பாலின சமூகம் அதிகமாவதற்கு மூலகாரணம் என்ன? பெண்மையை ( பெண்களைத்தான் ) எண்ணம், சொல், செயலால் நாம் இழிவு படுத்தியதே ஆகும். எங்கே, உங்கள் மனசாட்சிக்கு பொதுவாக ஒரு உண்மையை சொல்லுங்கள். நீங்கள் அன்றாடம் பார்க்கும் பெண்களை எத்தனை முறை இழிவாக எண்ணியிருக்கிறீர்கள்? உங்கள் குழந்தைகள் (2000மாம் வருடத்திற்கு மேல் பிறந்தவர்கள்- 2K ), அலைபேசி என்னும் கலியுக மாயக் கருவியில் அடிக்கடி பார்க்கும் ஆபாச வக்கிர காட்சிகள் எத்தனை எத்தனை? இப்படி பெண்மையை இழிவு செய்யும் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிந்து, அதுவே நம் குழந்தைகளின் ( 2K தலைமுறை ) மரபணுக்களில் ஆழமாக பதிந்து விட்டது. இனி இவர்களுக்குப் பிறக்கும் அடுத்த தலைமுறை என்ன லட்சணத்தில் இருக்கும்? இவர்கள் பத்து வயதிற்கு மேல் மாற்றுபாலினமாய் மாறப் போகிறார்கள் என்பதை, எந்த இரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிப்பது? இனி இதற்கும் ஒரு மரபணு தடுப்பூசி கண்டுபிடிப்பார்கள்.


பெண்மையை, எண்ணம் சொல் செயலால் இழிவு செய்த ஆன்மாக்கள் இனி மாற்று பாலினமாய் பிறந்து அந்த பெண்மையையே உணரும். இதைத்தான் சார் கர்மா என்கிறோம். நாம் கொளுத்த வேண்டிய மடமை தான் இனி மாற்று உடையில் வலம் வரும். இதை பார்ப்பதற்காகவே நீங்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்வீர்கள். அது தான் கொடுமை.

 



கர்மாவின் பார்வையில்...

 முந்தின பிறவியில் குரங்குகளுக்கு அதிகமாய் துன்பத்தை கொடுத்தவர் குரங்காய்  மாறுகிறார்.


 பெண்களை அதிகமாக அவமானப்படுத்தி துன்பத்தை கொடுத்தவர் பெண்ணாகவே மாறுகிறார் திருநங்கையாக.

 தான் திறமையாக செயல்படுகிறோம் என்ற நினைப்பில் தனக்கும் தனது வம்சத்திற்கும் கர்மாவை சேர்ப்பவரே பலர் இன்று.

 

 ஆண் குழந்தைகளின் நிலை இதுவென்றால், பெண் குழந்தைகளின் நிலை வேறுவிதமான கொடுமைதான். ஒழுக்கமுள்ள வாழ்க்கையிலோ அல்லது பிரம்மச்சரியத்திலோ நம்பிக்கை இருக்காது. மாறாக ஒழுக்கமற்ற சமூக அமைப்பில் அவர்கள் மெல்லமெல்ல இணைவார்கள். கலிபுருஷ பகவானின் உத்தரவிற்கு இணங்க ஒரு இரண்டு எழுத்து வடஇந்திய ஞானி, முன்பே ஒரு ஒழுக்கமற்ற சமூக அமைப்பை உருவாக்கி விட்டார் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டவே. இந்த ஒழுக்கமற்ற தத்துவத்தையே பேரின்ப தத்துவமாக மத்தியில் வைத்து சக்கரவியூகமாய், அதற்கு பாதுகாப்பாக கணக்கில்லாத பல பல தத்துவங்களை சாமர்த்தியமாக அடுக்கி வைத்து விட்டார். 

 நீங்கள் சக்கர வியூகத்தின் மத்தியிலுள்ள பேரின்ப தத்துவம் தவறு, என்றால் அவர் சுற்றிலும் அடுக்கப்பட்ட ஜென் தத்துவங்களை பார்க்கலாமே!! என்பார். சரி, அவர் அடுக்கிய ஜென் தத்துவங்களுக்கு அடுத்தபடியாக என்ன உள்ளது சாமி? எனக் கேட்டால், உடனே அவர் "சக்கர வியூகத்தின் மத்திக்கு வா... சொல்கிறேன்" என்பார். சக்கர வியூகத்தின் மத்திக்கு செல்வோர் மீண்டு வரவே முடியாது.

முந்தைய தலைமுறையினர் ( 1990 க்கு முன்னர் பிறந்தவர்கள் ) இந்த ஞானியின் ஜென் தத்துவங்களை மட்டும் ஏற்கிறேன். சக்கர வியூகத்தின் மத்தியில் இருக்கும் பேரின்ப தத்துவத்தை நான் ஏற்கவில்லை!, என்ற தெளிவில் இருப்பார்கள். அதாவது, எது நல்லது? எது கெட்டது? என பிரித்து உணரும் தன்மையோடு இருப்பார்கள். ஆனால் இந்த நடப்பு தலைமுறை ( 2000 க்கு மேல் பிறந்த கலியுக எல்லை மனிதர்கள் ) உங்களைப் போல், நல்லது கெட்டது என பிரித்து உணரும் தன்மையை தலைகீழாய் புரிந்து வைத்திருப்பார்கள். இந்த தலைமுறைக்கு தந்தையான நீங்கள், அந்த இரண்டெழுத்து ஞானியின் அபிமானி என்றால், அதுவே இன்னும் சாதகமாய் போய்விடும். ஏனெனில் இந்த குழந்தைகளின் மனதில் அந்த ஞானியின் படம் நன்கு பதிந்து இருக்கும். கிராம வாழ்க்கையில் உள்ள குழந்தைகளும் தப்பிக்க முடியாது. அலைபேசியின் ஆதிக்கம் எங்கும் பரவியுள்ளது. 

சரி! இப்போது தீர்வுதான் என்ன? இதையெல்லாம் சரி செய்து, இனிவரும் காலத்தில் நமது தலைமுறை நன்கு வாழும் என நம்புகிறீர்களா?  இனி நேரடியாகவே விஷயத்திற்கு வருவோம். நீங்களும் நானும் பிறவாமையை வேண்டுவதே நமது அடுத்த சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் இந்த கலியுக எல்லையான பாதாள காலத்தில், அடுத்த சந்ததியினருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதே சிறப்பு. அப்படி எனில் "நாமும், நமது அன்புக்குரிய உற்றார் உறவினரும், அவரவர் பிறவி கர்மாவில் இருந்து விரைந்து விடுபட்டு இறைவனோடு சேர வேண்டும்" என்று தினமும் வேண்டுவதே மிகவும் உயர்ந்த பிரார்த்தனையாகும். இது தானாகவே நடக்காது, நாமே மனமுருகி பிரார்த்தனைகளை தினமும் இறைவனிடம் வைக்க வேண்டும். இந்த வேண்டுதலோடு, நமது தினசரி கடமைகளை செய்து கொண்டு இருப்பதே உத்தமம். இந்த ஆய்வும், இந்த வேண்டுதலும் இப்போது முட்டாள்தனமாக தெரியலாம், ஆனால் விரைவில் புரியும். நம் சித்தர்களும் சமீபத்திய ஜீவநாடி பொதுவாக்குகளில் வெளிப்படையாய் சொல்லக் கூசி, மறைமுகமாய் வண்டி வண்டியாய் இன்றய மனிதகுலத்தை திட்டி விளாசுகிறார்கள்.


 ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள் தொகை இப்போது குறைந்து கொண்டே போகிறது எனில் அந்த சமூகத்தின் "ஒட்டுமொத்த கர்மா குறைகிறது" என்று பொருள். எந்த சமூகத்தின் மக்கள் தொகை கூடிக் கொண்டே போகிறதோ, அதுவே அடுத்து வரும் பாதாள யுகத்தின் தலைமுறையினர். இனி நீங்களே பாரத தேசத்தை ஆராய்ந்துகொள்ளுங்கள்.


 அடியேன் நான் எனது தினசரி பிரார்த்தனையை கீழே தனிப்பதிவாக எழுதியுள்ளேன். உங்களுக்கு சரி என்று தோன்றினால், நீங்களும் அவ்வாறு செய்யலாம்.


பொறுப்புள்ள தந்தையின் வேண்டுதல்.

http://fireprem.blogspot.com/2022/03/blog-post_20.html?m=1


இந்த பதிவின் இறுதியாக என் மகள்களில் ஒருத்தி பேசிய பேச்சை கீழே இணைத்துள்ளேன். கேட்டு உணருங்கள்.





 இப்படிக்கு உங்கள்,

 அகத்திய பக்தன்

கருத்துகள் இல்லை: