ஞாயிறு, 20 மார்ச், 2022

பொறுப்புள்ள தந்தையின் வேண்டுதல்

பொறுப்புள்ள தந்தையின் வேண்டுதல்.


அடியேன் அகத்திய பக்தனின் தினசரி வேண்டுதல்கள்.

  1. இறைவனோடு விரைவில் தன் உயிர் சேரவேண்டும் என்ற நோக்கமே ஞானம்.
  2. மேற்கண்ட ஞானத்தோடு தன் அன்றாட கடமைகளை செய்துகொண்டிருப்பதே கர்மயோகம்.
  3. இன்ப துன்பத்தில் கவனம்  வைக்காமல் உற்சாகமாய் இருப்பதே உயர்வு.
  4. இறைவனோடு விரைந்து சேரவேண்டும் என்ற ஞானத்தை, தினமும் தவறாமல் பணிந்து ஏக்கத்தோடு பிராத்திக்கவேண்டும்.
  5. இந்த பிராத்தனையோடுதான் ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கவும் முடியவும் வேண்டும்.
  6. சிறிதும் சந்தேகம் இல்லாமல் உண்மையாக தினமும் இந்த ஞானத்தை வேண்டிப் பிராத்தனை செய்பவருக்கு, இன்பமும் துன்பமும் அடிபணியும். 
  7. இயற்கை உன்னைக் காதலிக்கும்.
  8. மரணத்திற்கு அஞ்சாதவரைக் கண்டு சூழ்ந்திருப்போர்கள் வணங்குவார்கள். தீயோர்கள் அஞ்சுவார்கள்.
  9. நம் ஆன்மா புவியீர்ப்பு சக்தியோடு மும்மலக் கயிற்றால் பிணைக்கப்பட்டுள்ளது.
  10. மும்மலக் கயிற்றை விரைந்து அழிக்கக்கூடியதே மேற்குறிப்பிட்ட ஞானம்.
  11. புவியீர்ப்பிலிருந்து விடுபட்ட ஆன்மாவாய் பூமியில் வாழ்வோரே உயர்குலத்தோர்.
  12. ஆன்மாவை சிறைப்படுத்தும் கர்மா அழியும்போது முதலில் வெளிப்படுவது துன்பம். சோர்ந்து போகாதீர். மேற்குறிப்பிட்ட ஞானத்தை தொடர்ந்து பிராத்தியுங்கள்.
  13. இரண்டாவதாக வெளிப்படுவது செல்வமும் புகழும். மயங்கி விடாதீர்கள். மேற்குறிப்பிட்ட ஞானத்தை தொடர்ந்து பிராத்தியுங்கள்.
  14. மூன்றாவதாக வெளிப்படுவது அமிர்தமான இறையாற்றல். இனி சூழ்ந்திருப்போர் உங்களிடம் பிராத்தனை வைப்பார்கள். அடக்கமாய் அதை இறைவனிடம் சமர்பியுங்கள்.
  15. உங்கள் அன்பிற்குரியவர்களும் விரைந்து இறைவனிடம் சேரவேண்டும் என பிராத்தியுங்கள்.
  16. நீங்கள் வெருப்பவரும் மன்னிக்கப்படட்டும். அவரும் விரைந்து இறைவனிடம் சேரவேண்டும் என பிராத்தியுங்கள்.
  17. ஆன்ம விடுதலை என்பது தற்கொலை அல்ல. ஆன்மாவின் புவியீர்ப்பை விரும்பித் துறப்பது.
  18. ஆன்ம விடுதலை என்பது பரதேசியாய் திரிவது அல்ல. சாமியாராகவோ பிரம்மசாரியாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை.
  19. முந்தைய  பிறவியில் நானே உன்னைப் பெற்று வளர்த்திருப்பேன்.
  20. எனது குழந்தைகளே என்னைச் சூழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  21. எனது குழந்தைகள், ஒழுக்கமும் இறைபக்தியும் கொண்டவர்கள்.
  22. எனது ஆன்ம தொடர்பை விரும்புவோர் என்னை தன் தந்தையாக ஏற்கலாம்.
  23. நாசிக்குக் கீழே என் சுவாசம் முமுமையாக நின்றபின் என்னை நம்பலாம்.









கலியுகத்தின் வீரியத்தை அடியேன் குரு அருளால் உணர்ந்து எழுதிய மற்றொரு பதிவு கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்.


http://fireprem.blogspot.com/2021/05/blog-post.html?m=1



பெரிதினும் பெரிது கேள் ! இறைவனிடம் இறைவனையே கேள் !!.



உங்கள்,

அகத்திய பக்தன்.


கருத்துகள் இல்லை: