நாதன் தாள் வாழ்க.
எழுத்து வழக்கில் 'கல்கி' என்று இருந்தாலும், பேச்சுவழக்கில் 'கல்கீ' என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் 'ஈ' என்ற எழுத்து 'இ' என்ற எழுத்தின் ஓர் இனமாகவே கருதப்படுகிறது.
கல்கீ = கல் + க் + ஈ.
ஈ என்றால் அழிவு என்ற பொருள் உண்டு.
ஆக, ஈ + க் + கல்.
விரித்தால், அழிவுக்கு உரிய கல்.
இதுவே ஈசக்கல் அல்லது ஈசன் என்னும் காந்தக்கல் என அடியேன் அனுமானம்.
குதிரை தேவதை தன் மக்களை ஈசனோடு சேர்த்து விட வேண்டும் என்று கவலையுற்றார். நல்லதொரு உபாயம் கேட்டு நாதாக்களை வேண்டினார். தேவதைக்கு சொன்ன உபாயம் தன்னில், நாதம் கொண்டோர் 'நம்மவர்' என்றார். நாதம் அற்றோர் 'மிலேச்சர்' என்றாரே.
ஓம்கார ரதத்திலே ஏழு பீஜ குதிரை பூட்டி, நல்லதோர் நாதத்தை இசைத்திட்டாரே.
சூட்சுமத்தின் ரூபத்திலே குதிரை தேவதை, ஞானாலய ஜோதியிலே காட்சி தருவார். ஈசனின் குழந்தை என்றால் ரதத்தை வாங்க, ஞானாலயம் நாடியே விரைந்து வாரீர்.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்
1 கருத்து:
அறுமை அய்யா 🙏🙏
கருத்துரையிடுக