ஒளியுடல் சாத்தியமே - முருகரின் ஒளி & ஒலி
முருகப்பெருமானின் முதல் வேத நூலான "மூளை எனும் தலைமை சுரபி" படித்தபின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இரண்டு மற்றும் மூன்றாம் வேத நூல்களான "ஒளி மற்றும் ஒலி" நூல்கள் அடியேனுக்கு குருநாதர் அருளால் கிடைத்தது . இந்த கலியுக எல்லைக்காலத்தில் இறைவனே அருளிய வேத நூல்களைப் படிக்கும் பாக்கியம் தந்த குருநாதருக்கு சரணாகத நன்றிகள். இன்றைய கலியுக மனிதர்களுக்கும் "ஒளியுடல் சாத்தியமே" என்ற நம்பிக்கையை நம் அனைவருக்கும் முருகப்பெருமான் அருளுகின்றார்.
ஒளி என்னும் இரண்டாம் வேத நூலில், ஒரு நாள் முழுக்க கிடைக்கும் சூரிய ஆற்றலை தெளிவாக விளக்குகிறார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் கொண்டது. ஒருநாளின் அறுபது நாழிகையில் விண்ணிலிருந்து மண்ணிற்கு நான்கு கனிமங்கள், ஐந்து மூலக்கூறுகளில் ( பஞ்சபூதம் ) கலந்து மூன்று இழைகள் வழியே வருகிறது ( 4 x 5 x 3 = 60 ) . அதிகாலை ( ப்ரம்மமுகூர்த்தம் ) தொடங்கி ஒவ்வொரு நாழிகையில் பெறப்படும் கனிமம் + மூலக்கூறு + இழை கூட்டமைப்பின் பொதுவான பலன்கள், நமது உடலுக்கான பலன்கள் , நோய்களை நீக்கும் நாழிகை , ஆற்றலை பெரும் நுணுக்கம் என வெகுதெளிவாக விளக்கப்பட்டுள்ளது . இந்த நூலுடன் மேலே குறிப்பிட்ட 4x5x3 கூட்டமைப்பு அட்டவணையும் இலவச இணைப்பாக கிடைக்கிறது . இந்த நூலை உணர்ந்து படிப்பவர் "சூரிய ஒளி ஆற்றலை ஜீவஆற்றலாக மாற்றி உபயோகிக்கும் உயரிய கலையை கற்றுக்கொள்வார். எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் படிக்கவேண்டிய அரிய அறிவியல் நூல் இது.
நம் குருநாதர் ஞான சைத்தன்யம் 51 என்ற பழைய வாசியோக நூலில் இருந்து ஒளி பற்றிய சில பாடல் வரிகளை உங்களுக்காக இணைத்துள்ளேன். லிங்கை அழுத்தி கேட்டு மகிழுங்கள்.
https://drive.google.com/file/d/108OezufeKW57yHEJqCjbrOdw8ma8uGnv/view?usp=drivesdk
மூன்றாம் வேத நூலான "ஒலி" எனக்கு பெரும் ஆச்சர்யத்தை தந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக மூடிமறைக்கப்பட்ட "ஒளியுடல் இரகசியம்" கலியுக மக்களுக்கு புரியும் வகையில் முருகப் பெருமான் விளக்கியுள்ளார். ஏன் இவ்வளவு வெளிப்படையாக இந்த நூலில் விளக்கினார் என எனக்கு ஆச்சர்யமும் சிறிது வருத்தமும் இருந்தது . புத்தகத்தை முழுமையாகபடித்தபின் காரணம் புரிந்தது. கலியுக எல்லையில் வாழும் நம்மீது இறை ஆற்றல்கள் இவ்வளவு கருணையோடு இருப்பது பெரும் வணக்கத்திற்குரியது.
ஒரு நாளின் 60 நாழிகை நேரத்தை மூன்று பகுதியாக பிரித்து, முதல் 20 நாழிகை நேரம்"அ" என்ற காந்த ஓசை , இரண்டாம் 20 நாழிகைநேரம் "உ" என்ற வெப்ப ஓசை, கடைசி 20 நாழிகை நேரம் "ம்" என்ற கலி ஓசை என அதற்குரிய பலன்களுடன் விவரிக்கிறார். மேலும் இந்த மூன்றும் இணைந்த "ஓம்காரநாதத்தின்" சூட்சுமத்தையும் கூறியுள்ளார்.
நமது சிரசில் உள்ள மிக உயர்ந்த அணுவான "ஒற்றை அணு" எனப்படும் ஆதிசக்தி அல்லது வாலை தேவதை பற்றிய அபூர்வமான நுணுக்கங்களை அதனுடன் தொடர்புடைய சுழுமுனை நாடி மற்றும் சூட்சுமநாடியுடன் தெளிவாக முருகர் விளக்கியுள்ளார். இவற்றின் அமைப்பு , செயல்பாடு , வேறுபாடு மற்றும் வணங்கும்முறைகளை அறிந்துகொள்ள இந்த புத்தகத்தைப் படிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது . சித்த யோக மார்க்கத்தில் செல்வோர் கட்டாயம் படித்தே ஆகவேண்டிய வேத நூல்கள் இவை . ஒற்றை அணுவின் துணை கொண்டு எப்படி "ஒளியுடல்" சித்திக்கும் என்ற நுட்பத்தை நீங்கள் அறிந்துகொள்ள இந்த நூல்களை முருகப்பெருமானை வணங்கி படியுங்கள் .
கடந்த மாதம் ஞானாலயம் குரு அன்னை அருள்திரு.பரிமளா ராஜு முக்தி அடைத்தார். அம்மையாரின் ஒற்றை அணு எப்படி அவரின் முக்திக்கு காரணமானது என்பது பற்றி நமது குருநாதர் ஒரு செய்திவெளியிட்டிருந்தார். இந்த ஒற்றை அணு செயல்பாட்டின் அபூர்வ தகவலை, " ஒலி" நூலின் பக்கம் 89 இல் முருகப்பெருமான் விளக்கியுள்ளார். சாதாரணமாக ஒரு ஒற்றை அணுவினால் தனது ஆன்மாவின் துணை இல்லாமல் ஈசமையத்திற்குள் செல்லமுடியாது . ஆனால், ஆன்ம விடுதலை அடைந்த ஒரு உயர் ஆன்மாவின் ஒற்றை அணுவானது தனியாக "ஒரு முறை ஈசமையம் எனும் சூரிய கோளின் மையப் புள்ளியினைச் சென்று அடைந்துவிட்டால் அண்டத்துப் பாதரசத் துகளாகவே ஒருமாறிட இயலும்"!! அன்னையரின் ஒற்றை அணு அவ்வளவு வீரியம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது . இதனைஅறிந்துகொள்வது சாமானிய மானிடர்களால் இயலாது .
எல்லாம் சரிதான் சார். ஆனால் ஒளியுடல் கொண்ட சித்தரின் ஒரு சிறுசாட்சியாவது உள்ளதா ? என நீங்கள் நினைப்பதை என்னால் புரியமுடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அருள்திரு. சாமி அழகப்பன் அய்யா சதுரகிரி மலையில் படம் பிடித்த ஒரு சிறு பகுதியை கீழே உள்ள இணைப்பில் கவனமாகப் பாருங்கள். ஆச்சர்யமாக உள்ளதா ? ஆமாம் சார் , உடல் உறுப்புகள் எல்லாம் எப்படி செயல் இழந்து உருகிவிடும் என்ற விபரத்தைமுருகப்பெருமான் தனது "ஒலி" என்ற மேலே குறிப்பிட்ட நூலில் விளக்கியுள்ளார் .
உடனே அந்த ஒளியுடல் சித்தரைஅழைத்து வந்து தொலைக்காட்சில் பேட்டி காணலாமா? என கேட்காதீர்கள். உங்கள் கலியுக சங்காத்தமே வேண்டாம் என்றுதான்அவர் சிவனே என்று மலைகளில் உலவிக்கொண்டிருக்கிறார். முடிந்தால் நீங்களே ஒளியுடல் பெற்று அவரிடம் சென்று பேசுங்கள்.
ஒற்றை அணு குரு சரணங்கள் :-
ஓம் அகத்தீசாய நமஹ.
அகத்திய பக்தன்.
1 கருத்து:
மிக அருமையான தகவல் தங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி உள்ளேன்
கருத்துரையிடுக