ஒவ்வொரு புன்னகைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். சில தெய்வீக புன்னகைக்கு பல அர்த்தங்கள், பல கேள்விகளுக்கு ஒரே பதில்... ஒரு மந்திரப் புன்னகை.
இரு வாரப்பயணமாக சீனதேசம் (Hangzhou) வந்துவிட்டேன். நான் தங்கி இருந்த விடுதிக்கு அருகிலேயே ஒரு பெரிய ஏரி இருந்தது. அடுத்த வாரக்கடைசி விடுமுறையில் பார்க்கலாம் என திட்டமிட்டேன். அலுவலக வேலைகள் நாட்களை வேகமாக ஓடவைத்தது. ஒவ்வொரு நாள் மாலையும் விடுதிக்கு வந்தபின் சிறிது நேரம் அகத்தியர் அருள் வாக்குகளை https://siththanarul.blogspot.in/ படிப்பது வழக்கம். இரண்டு நாட்களில் அனைத்தும் படித்தாகிவிட்டது. ஒவ்வொரு வாக்கும் அற்புதமானது. எனக்கே சொன்னதுபோல் நெஞ்சை ஊடுருவிச்செல்லும்.
எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் "அகத்தியர்" என கூகுளை தேடி, ஏதேனும் ஆர்வமாக உள்ளதா எனப்பார்ப்பேன். அப்படி கிடைத்தது தான் https://siththanarul.blogspot.in/
. இதுபோல் பல நல்ல இணைய தளங்கள் அகத்தியர் அருளால் கிடைத்திருக்கிறது.
ஓரளவிற்கு அனைத்தையும் கூகுளில் படித்தாகிவிட்டது. இப்போது என்ன தேடுவது? என சிந்திக்கையில், "அகஸ்தியர்" என கூகுளை தேடினேன். என் தேடல் வீண்போகவில்லை. ஒரு அற்புதமான இணையப்பக்கம் கிடைத்தது. அது என் சிந்தனையை வேறு ஒரு லேசான அதேசமயம் மிக மிக ஆற்றல் வாய்ந்த பக்கமாக திருப்பிச்சென்றது. அந்த அற்புத இணையப்பக்கம் http://senthilmanickam.blogspot.in/.
இது பிரபச்சத்தின் அனைத்து ஜீவராசிகளையும், ஒவ்வொரு தூசுகளையும் அன்பு என்னும் ஒரே சங்கிலித்தொடரில் இணைக்கும் ஒரு தெய்வீக சூட்சுமத்தை மிக அருமையாக விளக்கும் ஒரு இணையப்பக்கம். இத்தொடரை ஆரம்பத்தில் இருந்து வாசித்தால்தான் அந்த அற்புத மந்திரத்தின் தொழில்நுணுக்கம் எளிதில் புரியும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2015) ஜெர்மனியில், எனக்கு சிறிதும்
தெரியாத ஒரு சூட்சுமத்தை என்னையும் அறியாமல் என்னை செய்யவைத்தார் அகத்திய பரம்பொருள். எனது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக அது இருந்தது.
இதை முந்தய பதிவில் எழுதியிருந்தேன் (link). மிகவும் அனுபவம் வாய்ந்த யோகா ஆசிரியர்களும் கற்றுத்தர
பயப்படும் சூட்சுமத்தை என்னையும் அறியாமல் என்னை ஏன் 2015 ஆம் ஆண்டில் செய்யவைத்தார்
? என பலமுறை நான் யோசித்திருக்கிறேன்.
சில நாட்களுக்குமுன் எதேட்சையாக என் ஜாதக நோட்டை எடுத்துப்பார்க்கும்
போது, ஒரு விஷயம் பளிச்சிட்டது. 2015 ஆம் ஆண்டில்தான் எனக்கு ஞானகாரகனான கேதுவின் திசை
ஆரம்பித்திருக்கிறது !!! கிராமங்களில் பேச்சு வழக்கில் சொல்வார்கள் "எல்லாவற்றிற்கும்
ஒரு நேரம் வர வேண்டும்" என்று. என்னை ஈன்ற
பரம்பொருளை சரணடைய இத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டி உள்ளது. மேலும் கொஞ்சம் கர்மவினையும்
வேண்டும். அதற்குத்தான், பெரியோர்கள் அடிக்கடி தர்மம் செய், ஆலயம் தொழு என்று கூறுகிறார்கள்.
இதே கேது திசையில் தான் பைத்தியம் என்ற பெயரும் கிடைக்கும். பிறகென்ன? மெத்தப்படித்த
மேதாவிகள் நிறைந்த இவ்வுலகில் ஞானம், சித்தர்கள் , கடவுள் என்றால், அவன் பைத்தியம்
தானே ?
முந்தைய பதிவில் குறிப்பிட்ட பயம், அக்னி, உடல் இளைத்தல் அனைத்தும் இந்த திசைக்காலத்திற்கு பொருந்துகிறது, ஆனால் நம் தந்தை அகத்தியர் அருளோடு அரவணைப்போடு கடக்கப்பட்டது. இப்போது வேண்டுதல் என்ன வென்றால், அடுத்து சுக்கிர திசையிலும், மற்ற திசைகளிலும், அவ்வளவு ஏன்? இனி எல்லா பிறவிகளிலும் தந்தை அகத்திய மகாமுனி திருப்பாதங்களையே தொழுது வாழ வேண்டும் என்பதே.
உங்கள் ஒவ்வொருவர் ஜாதகத்திலும் கேதுதிசை ஏழு வருடங்கள் வரும். கேது ஞான காரகன் மோட்ச காரகன். ஒவ்வொரு கிரகத்திற்கும் நல்ல பலனும் உண்டு, சில கெட்ட பலனும் உண்டு. நல்ல இறை வழிபடும், ஒரு சித்த ஞான குருவின் அருளோடும் வாழ்க்கையை நாம் நல்ல வழியில் கடந்து செல்லலாம். சாமியாவது, சித்தராவது... அட! வாழ்க்கையை நல்ல enjoy பண்ணலாம் என்று கர்மா சூட்சுமத்தை உதாசீனம் செய்தால், படுபாதாளத்தில் விழுந்து அழ வேண்டியது தான்.
உதாரணமாக, கேதுவின் காலத்தில் தீய தாக்கம் இருந்தால், கெட்ட சகவாசத்தால் அவமானம், பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
மனித ஜென்மம் எடுத்துவிட்டால் குழந்தைப் பருவம், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பெற்று வளர்ப்பது, பாசம், ஆசை, இன்னும் வாழவேண்டும் என்ற ஏக்கம், இறுதியில் மரணம். இப்படித்தான் பிறந்து பிறந்து மரணிக்கிறோம்.
இந்த கர்மவின் சுழற்சியில், தான் யார், இறைவன் யார், தான் எந்த வகையில் இறைவனோடு சம்பந்தப்பட்டோம்
என்பதை சிந்திக்க இறைவன் நம் அனைவருக்கும் வாய்ப்பு தரத்தான் செய்கிறார். நாம் தாம் அதை பெரும்பாலும் உதாசீனம் செய்கிரோம். (நான் தட்டச்ச்சு செய்யும் மென்பொருள் அதிக எழுத்துப் பிழை செய்கிறது. அருள்கூர்ந்து பொறுத்தருள்க.).
ஞானம் தேடுவதைப்பற்றி எழுதுவதும், படிப்பதும் நன்றாகத்தான் உள்ளது! ஆனால் நடைமுறையில் எளிதா வென்றால்... சிரமம்தான். ஒருவன் தன் பொறுப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல், சதா சாராயம் குடித்துக் கொண்டே இருப்பனாகில், அவனை இந்த சமூகம் "அவன் புத்தி கெட்டு விட்டான், இனியென்ன செய்வது? அடுத்து ஆகுற வேலைய பார்ப்போம்" என சகித்துக் கொண்டு அவரவர் வேலையை செய்வார்கள். அல்லது ஒருவன் அல்பாயுசு நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதில் இறந்து போனால், "அவன் விதி அவ்வளவுதான்" என்று சொல்லி ஒரு பதினாறு அல்லது முப்பது நாட்கள் துக்கப்பட்டுவிட்டு "அடுத்து ஆகுற வேலைய பார்ப்போம்" என்பார்கள். ஆனால், அதுவே ஒருவன் தன்னை அறியும் ஞானத்தில் ஒரு பத்து நிமிடம் மௌனமானாலும், அவனை கொதிக்கும் கல்லில் கிடத்தி கொத்து பரோட்டா போடுவார்கள். இதில் பெரிய சவால் என்னவென்றால், கருணையே வடிவான இறைவனை வணங்கிவிட்டு தன்னை வருத்தம் கொள்ளச் செய்யும் யாரையும் கோபப்படவும் கூடாது, சபிக்கவும் கூடாது. யேசுநாதரைபோல் மறு கன்னத்தையும் காட்டவேண்டியது தான்.
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க விரும்பினால், நாம் கோவில் திறந்த நேரம் தான் செல்லமுடியும். நம் இஷ்டப்பட்ட நேரத்திற்கு சென்றால், கோவில் நடை சாற்றப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிரஹ திசை மற்றும் கிரஹ பெயர்ச்சி காலத்திலும், இறைவன் நமக்கு காட்டும் நல்ல விஷயங்களை கவனமாக எடுத்துக்கொண்டு நமது அன்றாட வாழ்க்கையை சிறப்பொடு எடுத்துச் செல்வோமாக.
சீனாவில் வாரக் கடைசி விடுமுறை வந்துவிட்டது. சனிக்கிழமை காலை என் நண்பர் இந்தியா திரும்ப ஆயத்தமானார். அவர் தன்னிடம் இருந்த சில பழங்களைக் கொடுத்தார். என்னிடம் ஏற்கனவே பழங்கள் உள்ளது, நீங்கள் போகும் வழியில் சாலையோரம் உள்ள ஏழைக்கு தானமாக கொடுங்கள், புண்ணியம் உங்களை காக்கும் என்றேன். ஆனால் நண்பருக்கு விமானம் பிடிக்க நேரம் இல்லாதபடியால், என்னையே தானம் செய்யச் சொல்லிவிட்டு கிளம்பினார். நண்பரை வழியனுப்பிவிட்டு பழங்களுடன் அருகிலுள்ள ஏரியை நோக்கி நடக்கலானேன். அது பூங்காக்களுடன் கூடிய ஒரு பெரிய ஏரி.
நிறைய மரங்கள் சூழ ரம்யமாக இருந்தது. இந்த மரங்கள் தன் நீண்ட கூந்தலை கீழே தொங்கவிட்டு அழகிய இளம் பெண்களாய் அன்போடு நின்றது.
http://senthilmanickam.blogspot.in/ இணையப்பக்கங்களின் பாதிப்பு என்னுள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் மரங்களின் உயிர்த் தன்மையோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தேன். மரங்களோடு இரண்டு மணிநேர ஆத்மார்த்த நடைபயணம்.
பிச்சைக்காரர்கள் யாரையும் காணமுடியவில்லை. விடுதியில் என் அறை துப்புரவு பணிப் பெண்ணிற்கு நண்பரின் பழங்களை குருவை வணங்கி கொடுத்தேன். நடுத்தர வயதுப்பெண். கண்களில் மிகுந்த ஆனந்தத்தோடு அவள் பாஷையில் நன்றி கூறினாள். என் மகளுக்கு பரிசுப்பொருள் கொடுத்தால் எப்படி கண்கள் விரிய ஆனந்தப்படுவாளோ அப்படிதான் இவள் கண்களும் விரிந்தது.
http://senthilmanickam.blogspot.in/ இணையப்பக்கங்களின் பாதிப்பு என்னுள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் மரங்களின் உயிர்த் தன்மையோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தேன். மரங்களோடு இரண்டு மணிநேர ஆத்மார்த்த நடைபயணம்.
பிச்சைக்காரர்கள் யாரையும் காணமுடியவில்லை. விடுதியில் என் அறை துப்புரவு பணிப் பெண்ணிற்கு நண்பரின் பழங்களை குருவை வணங்கி கொடுத்தேன். நடுத்தர வயதுப்பெண். கண்களில் மிகுந்த ஆனந்தத்தோடு அவள் பாஷையில் நன்றி கூறினாள். என் மகளுக்கு பரிசுப்பொருள் கொடுத்தால் எப்படி கண்கள் விரிய ஆனந்தப்படுவாளோ அப்படிதான் இவள் கண்களும் விரிந்தது.
நான்
தங்கியிருந்த சீனா விடுதியில் இலவச wifi உண்டு. ஆனால் என்ன பயன்? வாட்ஸாப்ப், facebook மேலும் பல websites ஆப்ஸ்
இங்கு தடை செய்து விட்டார்கள். ஒவ்வொரு சாபத்திலும் ஒரு வரம் உள்ளது, ஒவ்வொரு வரத்திலும் ஒரு சாபம் உள்ளது.
அதனால் தான் அடியேன் சிறிது சிந்திக்கவும் எழுதவும் குருவருளால் முடிந்தது.
இரண்டு வாரம் முடிகிறது, என் பெட்டியை கட்டுகிறேன்.
வாழ்க வளமுடன்.
ஓம் அகத்தீசாய நமஹ.அகத்திய பக்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக