இரகசியம் கண்டுபிடி
மனோ தத்துவத்திற்கான எனது மானசீக குரு சிக்மண்ட் பிராய்டின் ஆய்வைப் பற்றி நான் படிக்கும்போது எனக்கு ஒரு யோசனை வந்தது. கீழே உள்ள 25 கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிக்க முயற்சி செய்தால் இரகசியம் புலப்படும்.
நீங்கள் என்ன பதிலைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. நீங்கள் பதிலை யோசிக்கும்போதே உங்கள் புறமனதிற்க்கும் ஆழ்மனத்திற்கும் நடுவே ஒரு சிறு சமிக்கை பாயும் என நம்புகிறேன்.
சரி தவறு என கவலைப்படாமல் இயன்றவரை முயற்சி செய்யுங்கள். பதிலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது நமது ஆழ்மனத்தின் தாக்கத்தை உணர ஒரு ஆய்வுப் பதிவு.
1) ஆழ்மனத்தின் நோக்கம் என்ன?
A) கேள்வி புரிகிறது. பதிலை யூகிக்க முடிகிறது.
B) கேள்வி புரிகிறது. ஆனால் பதிலை யூகிக்க முடியவில்லை.
C) கேள்வி புரியவில்லை.
D) கருத்து தெரிவிக்க விருப்பமில்லை
2) மனிதருக்கு ஆழ்மனம் ஏன் தேவைப்படுகிறது?
3) ஆழ்மனதிற்கும், வெளி மனத்திற்கும் என்ன வேறுபாடு?
4) ஆழ்மனம் & வெளிமனம் இரண்டில் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது? ஆற்றல் வாய்ந்தது எது?
5) உயர்ந்தது தாழ்ந்ததை கட்டுப்படுத்த வேண்டுமா? அல்லது தாழ்ந்தது உயர்ந்ததை கட்டுப்படுத்த வேண்டுமா? எது சரி? சிங்கத்திற்க்கு பூனை உத்தரவிட முடியுமா? ஆழ்மனம் பற்றி நீங்கள் யூடூப்பில் பார்த்த போதனைகள் சாத்தியம்தானா?
6) நல்ல மனம் கொண்டவர்கள் நல்லவர்கள், தீய மனம் கொண்டவர்கள் தீயவர்கள். எனில், நல்ல ஆழ்மனம் & தீய ஆழ்மனம் என்ற இரண்டு வகை உள்ளதா?
7) நமது ஆழ்மனம் வாழ்வின் அனைத்தையும் பதிவு செய்து கொண்டே இருப்பதன் நோக்கம் என்ன? ஏன்?
8) உங்கள் ஆழ்மனத்தில் உள்ள 100% தகவலையும் உங்களால் கண்டறிய இயலுமா?
9) உங்களாலேயே (உங்கள் வெளிமனத்தால் ) கண்டுபிடிக்க முடியாத ஒன்று, உங்களுக்குள்ளேயே இருப்பதன் நோக்கம் என்ன?
10) ஆழ்மனம் எந்த நேரத்தில் வெளிப்படும்? எதற்காக வெளிப்படும்?
11) ஆழ்மனம் தனது நோக்கத்தை, வாழ்நாள் முழுமைக்கும் நிறைவேற்ற முடியாத பட்சத்தில், என்ன நடக்கும்? ஆழ்மனம் மரணித்து விடுமா?
12) புரோட்டான் நியூட்ரான் எலக்ட்ரான் இதில் ஆழ்மனம் எந்த வகையைச் சார்ந்தது ?
13) ஆழ்மனம் செயல்படும் பொழுது மூளையின் நரம்பணுக்களில் என்ன வகையான தாக்கம் இருக்கும்?
14) மேற்கண்ட தாக்கம், ஓசை அல்லது அதிர்வாக இருக்குமா?
15) இந்த மூளை அதிர்வை, EEG அல்லது MRI ஸ்கேனில் அளக்க முடியுமா? (ஆல்பா பீட்டா காமா தீட்டா ).
16) ஆழ்மனம், கர்மா(தலைவிதி), கனவு மூன்றையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடியுமா?
17) ஆழ்மனம் ஆண்பாலா? பெண்பாலா?
18) ஆழ்மனத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?
19) ஆழ்மனமும் சூச்சும சரீரமும் ஒன்றா? வேறுபட்டதா?
20) உங்கள் ஜாதகத்தின் நெருங்கிய தொடர்பு ஆழ்மனத்தோடா? அல்லது புறமனத்தோடா?
21) ஆழ்மனத்தால் உங்கள் கர்மவினைகளை எளிதில் வேகமாக கடக்கமுடியும். எனில், கீழ்கண்ட எந்த வேண்டுதல் மிகவும் சரியானது?
A) இறைவா! உன் பாதத்தோடு விரைந்து சேரவேண்டும்! என்ற வேண்டுதலோடு தன் அன்றாட கடமைகளை செய்துகொண்டு வாழ்வது.
B) இறைவா! எனது துன்பத்தைப் போக்கி இன்பமான வாழ்வைத் தரவேண்டும்.
C) இறைவா! எனது வாழ்வில் துன்பமோ நஷ்டமோ வரவே கூடாது. எப்போதும் பணமும் செல்வமும் இலாபமும் நிறைய கிடைக்க வேண்டும்.
22) ஒருவர் ஆழ்மனம் / ஜாதகப்படி, வாதாடுவதில் சிறந்த வல்லமை கொண்டவர். அதாவது மிகச்சிறந்த வக்கீலாக உருவாக வேண்டியவர். ஆனால் புறமனத்தின் தாக்கத்தால் வலுக்கட்டாயமாக அவர் ஒரு டாக்டராகவோ அல்லது இன்ஜினியராகவோ வந்தால் என்னவாகும்? அவர் அத்துறையில் சராசரியா? அல்லது பிரகாசிப்பவரா?
23) கீழ்கண்ட கோட்பாடுகளைக் கொண்டவர்கள், ஆழ்மனம் சார்ந்தவரா? அல்லது (வெளி) மனம் சார்ந்து வாழ்பவரா?
A) "இருப்பது ஒரு வாழ்க்கை, இதில் என்ன பெரிதாக?"
B) "வாழ்க்கை வாழ்வதற்கே! Enjoy"
C) சினிமா நடிகர்களை தனக்கு முன் உதாரணமாக ஏற்பவர்.
D) தனது மனம் சொல்வதெல்லாம் சரிதான். தான் என்பது தன் மனமே, என நம்புபவர்.
E) தனக்கு ஆன்மா என்று ஒன்று உள்ளது. தான் என்பது தன் ஆன்மாவே, என நம்புபவர்.
F) தனது மனதின் நோக்கமும், தனது ஆன்மாவின் நோக்கமும் வேறுபட்டது- என நம்புபவர்.
G) தனது ஆன்மாவை உணரும் முயற்சியை வெருப்பவர், பயப்படுபவர், புறக்கணிப்பவர். ( தன் ஆன்மா இருக்கும் இடத்தை 10 நிமிடங்கள் கூட கவனிக்க இயலாதவர்கள் / சளித்துக்கொள்பவர்கள் ).
H) லைப் ஸ் வெரி ஷார்ட் நண்பாஆல்வேஸ் பி ஹாப்பி.
24) மகாபாரதத்தில் : துரியோதனனுக்கு ( வெளிமனம் / அறிவு ) எப்போதும் எப்படியேனும் ஜெயிப்பதிலேயே குறிக்கோள்.
அர்ஜுனனுக்கு ( ஆழ்மனம் / உயிர் ) எப்போதும் தன் இறைவன் கண்ணபிரான் அருகில் இருப்பதிலேயே குறிக்கோள். வெற்றி தோல்வி, இன்பம் துன்பம் என்பதில் கவனம் இல்லை.
எனில் ஜெயிப்பவர் யார்? அர்ஜுனனை எப்படியேனும் ஜெயிக்கவைப்பதில் யாருக்கு முழுப் பொறுப்பு?
இதில் நீங்கள் யார்?
25) போராட்டத்தில், தன்னை உடலாய் உணர்பவன், தான் மரணித்துவிடக்கூடாது என்ற சிறப்பு கவனம் அல்லது பயத்தோடு போராடுவான். தன்னை உயிராய் உணர்பவன் ( கிருஷ்ணர் அர்ஜுனருக்கு உணர்த்தியது ), மரணத்திற்க்கு பயமில்லாது போராடுவான். எனில், யார் பலம் அதிகம்?
என்ன? இந்தக் கேள்விகள் குழப்பமாக உள்ளதா? இந்த கேள்விகள் அவசியம்தானா என்று தோன்றுகிறதா?
உங்களுக்காக ஒரு எளிய குறிப்பை, குருநாதரின் அருளால் தருகிறேன். அதன்மூலம் பதிலை அறிய முயற்சி செய்யுங்கள்.
"ஆழ்மனம் தனது அக உலகின் நோக்கத்திற்காக புற உலகில் செயல்படுகிறது.
புற உலகின் செயல்பாட்டிற்கு வெளிமனம் தேவைப்படுகிறது.
எனில் யார் முதலாளி, யார் தொழிலாளி?
பொறுப்பு மாறிப்போனால் வரும் ஆபத்து என்ன ?
".
உங்கள்,
அகத்திய பக்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக