செவ்வாய், 28 மார்ச், 2017

வாசி பிராணாயாமம்

நண்பர்களே,

குருவருளால் இன்று வாசிபிராணாயாமம் பற்றிய இரண்டு கருத்துக்களை உங்களோடு பகிர்கிறேன்.

1 ) வாசிபிராணாயாம பூரக கும்பக ரேசக மாத்திரை (செகண்ட்ஸ்) அளவு.

      பூரகம் 32 மாத்திரைகள் /   கும்பகம் 64 மாத்திரைகள்  / ரேசகம் 16 மாத்திரைகள்.

      இதில் பூரக ரேசக மாத்திரை அளவுகளில் நிறைய அன்பர்களுக்கு குழப்பம் உள்ளது. இந்த குழப்பத்தை மிகத்தெளிவாக http://www.siddharyogam.com/yoga/yogapalagu/vasiyogam/lesson-12 மற்றும் goo.gl/fjjP1h நூலில் விளக்கியுள்ளார்கள். இதற்க்கு வலுசேர்க்கும் விதமாக, "மதுரை வாலைசாமி - ஞானக் கும்மி" பாடலில் இந்த மாத்திரை அளவை நேரடியாகவே கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருப்பதை படித்து உங்களுடனும் பகிர்கிறேன்.

“63. பூரக முப்பத்திரண்டாகு மனப் பூரண கும்பம் இரட்டியதாம்
கூறவே ரேசகம் எண்ணிரண்டாம் அந்தக் குறிப் பறிந்துகொள் ஞானப்பெண்ணே!

65. அறிந்து கொள்ளு மெழுத்தோடே பவுரனை முதலமா வாசிமட்டும்
மறந்திடாமற் செய் மாத்திரை யின்படி வாசி வசமாகும் ஞானப்பெண்ணே!”



2) கும்பக வாசி பிராணாயாமம் செய்யாமல் வாசியோகம் வசமாகுமா?

  என்குரு மகத்துவம் பொருந்திய அகத்தியர், திருமூலர் மற்றும் பல சித்தர்களும்  கும்பக வாசி பிராணாயாமத்தை தெளிவாக வாசியோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  ஆனால் இன்று பல வாசிகுருமார்கள் கும்பக பிராணாயாமம் இல்லாமல் வெறும் நாடி சுத்தி மட்டும் செய்துவிட்டு வாசி செய்கிறார்கள். இது எந்த அளவுக்கு முழுமையானது என்று எனக்கு தெரியவில்லை. "மதுரை வாலைசாமி - ஞானக் கும்மி" பாடலில் கீழ்கண்ட வரிகளை பார்க்கவும்,


“66. காலாலே கனல் ஏற்றுங்கடி சுழி மேலே கொண்ட முதூட்டுங்கடி

மூலாதாரத் தலங்கேசர மென்று முழங்கிக் கும்மியடியுங்கடி.”



சொந்த புரிதலை அப்படியே சொல்கிறேன்.


ஒரு பெரிய மலையுச்சில் ஒரு இருண்டஅறைக்குள் ஒரு அற்புத ஞானப்புதையல் இருக்கிறது. அந்த புதையல் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது. அப்படி ஒருவேளை கிடைத்தவர் யாரும் வெளிப்படையாக தன்னை எளிதில் காட்டிக்கொள்ளமாட்டார், விவாதத்திற்கும் வரமாட்டார். இந்த சூழலில் ஒருவர் அந்த ஞான மலையில் கீழிருந்து மலைமேல்நோக்கி ஏறினார். எப்படியோ அந்த இருண்ட அறைக்கு அருகில் சென்றுவிட்டார். அப்போதுதான் அவருக்கு ஒரு முக்கிய விஷயம் புலப்பட்டது. இருண்ட அறைக்குள் நுழையவும், புதையலை தேடவும் ஒரு தீப்பந்தம் (கனல்) கண்டிப்பாக தேவை. அதை மறந்துவிட்டு வந்தவர், என்ன செய்வதென்று தெரியாமல், அந்த அறைக்கு முன்னே இருளில் சிறிது உறங்கிவிட்டு வந்துவிட்டார்.


***}
இந்தப் பயிற்சிக்கு விதி இல்லாதவர்கள் இதை செய்யாமல் போகட்டும் என அதே சித்தர்கள் கீழ்கண்ட மறுப்புப் பாடல்களையும் எழுதியுள்ளார்கள்.










அகத்திய பக்தன்

கருத்துகள் இல்லை: