பாரதியாரின் வரிகளில்...
சனி, 19 பிப்ரவரி, 2022
திங்கள், 18 அக்டோபர், 2021
அனுபவ ஞானம் - 2 - மந்திரம்
அனுபவ ஞானம் - 2 - மந்திரம்
ஓம் அகத்தீசாய நமஹ
பக்தி வழிபாடாயினும் யோகஞான பயிற்சி ஆயினும், பீஜாட்சர மந்திரத்திற்கான தனி மதிப்பு உண்டு. ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு விதமான பீஜாட்சர மந்திரங்கள் உண்டு.
அடியேன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயிற்சி செய்து குருநாதரை வணங்கும் அனுபவ முறைதனை குருநாதர் அருளால் இங்கு பகிர்கிறேன்.
இது முழுக்க முழுக்க அடியேனின் அனுபவ குறிப்புகள் மட்டுமே. அடியேனின் புரிதலை பகிர்வதை ஒரு கடமையாக எண்ணியே பகிர்கிறேன், அவ்வளவுதான். இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். இதற்கும் எந்த ஒரு ஆன்மீக ஸ்தாபனத்திற்கும் சம்பந்தம் இல்லை.
பயிற்சி : பீஜாட்சர மந்திரத்தை, கும்பகப் பிராணாயாமத்தோடு இணைத்து வணங்குவது.
நோக்கம் : வாலை எனும் ஒற்றை அணு, தன் வெப்ப ஆற்றலால் வீரியமாகி அதன் மூலம் பிரபஞ்ச காந்த ஆற்றலை ஈர்ப்பது.
இலக்கு : பெறப்பட்ட காந்த ஆற்றலையும், வெப்ப ஆற்றலையும் சிரசின் அனைத்து நரம்பணுக்களுக்கும் பரப்புவது.
தகுதி : சிறிய அளவில் கும்பகம் பயிற்சி செய்யும்போது சௌகரியமாய் உணர்பவர்கள். வெப்ப ஆற்றலை தாங்கும் ஆன்ம பலம் கொண்டவர்கள்.
பொதுவாக அனுதினமும் மனம் உருகிய பக்தி வழிபாடு செய்யும் பெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு இயல்பாகவே காந்த ஆற்றல் இருக்கும். இவர்கள் மிகக் குறைந்த அளவு கும்பகப் பிராணாயாமம் செய்து வழிபட்டாலே போதுமானது, அல்லது கும்பகம் செய்யாமல் பாவனை மட்டும் செய்து பயிற்சி செய்யலாம். கும்பகப் பிராணாயாமத்தின் தகுதி பற்றி அடியேன் பலமுறை தீவிரமாய் சிந்தித்திருக்கிறேன்.
ஒரு ஆன்மா எந்தக் கோளிலிருந்து பிறந்தது என்பதை வைத்து அந்த ஆன்மாவிற்குள் இருக்கும் அந்தக் கோளுக்கான கனிம இழையின் உருகுநிலையை மையமாக வைத்து ஒரு அனுமான பதிவு எழுதி இருக்கிறேன். இந்த பதிவிற்கான பின்புல கருத்து, முருகப்பெருமானின் "பிரம்மம் - கலியுக நான்காம் வேதம்" என்ற நூலில் அத்தியாயம் 20 - பக்கம் 153ஐப் படிக்கும் பொழுது அனுமானமாய்க் கிடைத்தது.
கீழ்கண்ட அந்தப் பதிவை நீங்கள் படித்தும் உங்கள் தகுதியை சரிபார்த்துக் கொள்ளலாம்.
http://fireprem.blogspot.com/2021/08/?m=1
உதாரண மந்திரம்: நம் குருநாதர் அருளிய தியான மந்திரத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு பிரித்துப் பார்க்கலாம்.
ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ.
இளநிலைப் பயிற்சி :-
பீஜாட்சர மந்திரத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும்
1) ஓம்கார பிரிவு - ஓம் - ரேசகம்
2) பீஜாட்சர பிரிவு - சிம் வம் அம் உம் மம் - பூரகம்
3) தேவதை சரணாகத நாமம் - கும்பகம்.
நாடி சுத்தி செய்பவராய் இருப்பின் அதை முடித்துவிட்டு இந்த பயிற்சியை செய்யலாம்.
தீபச்சுடரின் முன்பு கண்கள் திறந்த நிலையில் பயில்வது சிறப்பு.
1) சுழுமுனையில் கவனம் வைத்து ஓம்காரத்தை மனதில் சொல்லிக் கொண்டு ரேசகம் செய்ய வேண்டும்
2) தீபச்சுடரைப் பார்த்து, பீஜாட்சரத்தின் ஒவ்வொரு பீஐத்திற்கும் ஒவ்வொரு சிறிய மூச்சை தொடர்ந்து உள்வாங்கி பூரகம் செய்ய வேண்டும்.
3) சிரசின் ஒற்றை அணுவை நோக்கி கவனம் வைத்து மந்திரத்தின் மூன்றாம் பிரிவை கும்பகத்தில் சொல்லவேண்டும்.
4) கைகள் இரண்டும் சின்முத்திரையில் இருக்கலாம்
5) குறைந்தது மூன்று முதல் ஒன்பது முறை வரை செய்யலாம்.
6) பயிற்சி செய்த பின் கண்களை மூடி ஒற்றை அணுவை நோக்கினால், பிரகாசம் சிறிது சிறிதாகக் கூடுவதை உணரலாம்.
7) சிரசின் உட்புறம் அனைத்து மூளை அணுக்களையும் பார்க்கும் பொழுது, மிகவும் பரவசமாக இருக்கும்.
8) சிறைப்பட்ட ஆன்மத் துகள்கள் விடுபடுவதாக உணரவேண்டும்.
9) ஒளி பாலத்தின் பயணத்திற்கு தயாராக வேண்டும்.
ஒற்றை அணுவை வணங்கும் நுணுக்கமான முறைகளை, முருகப்பெருமான் தனது நூலான "ஒலி - கலியுகத்தின் மூன்றாம் வேதம்" நூலில் அத்தியாயம் 20 பக்கம் 133ல் குறிப்பிட்டுள்ளார். படித்து பயன் பெறுங்கள்.
இதே ரேசக பூரக கும்பக முறையை பயன்படுத்தி ஒரு ஆதார தளத்திலிருந்து அடுத்த ஆதார தளத்திற்கு பாய்வதற்கும் பயன்படுத்தலாம். அதாவது ஒரு புலி சிறிது பின்வாங்கி பதுங்குவது ரேசகம், பாய்வது பூரகம், பாய்ந்த பின் தன் இலக்கில் தன்னை நிலை நிறுத்துவது கும்பகம்.
பயன்கள் : பிடிவாதமான கர்ம வினைப் பதிவுகள் விலகுவதை உணரலாம். இது பெரும்பாலும் கனவுகளாக வெளியேறும். தொடர்ந்த பயிற்சியில் நாதத்தை செவிமடுக்கும் பாக்கியம் கிடைக்கலாம்.
இந்தப் பயிற்சியை தொடர்ந்து இரண்டு மண்டலம் பயிற்சி செய்த பின், வேண்டுபவர்களுக்கு மட்டும், இதன் முதுநிலைப் பயிற்சியினை பகிரலாம் என யோசித்திருக்கிறேன்.
இப்படி மூன்றாகப் பிரிப்பதற்கான முறையை குருநாதர், "சௌமிய சாகரம்" என்ற நூலில் கீழ்க்கண்ட இணைப்பில் விளக்குகிறார்.
https://saumyasagaram.blogspot.com/2016/05/391-om-reeng-am-and-pranayama.html?m=1
மந்திரத்தால் மூச்சை நெறிப்படுத்துவதை "ஸௌ பீஜம்" என குருநாதர் கீழ்க்கண்ட பாடலில் கூறுகிறார்.
https://saumyasagaram.blogspot.com/2015/11/251-pranayama-types.html?m=0
ஒரு சுவாரசியமான அனுமானம் :
ராமாயணம் மற்றும் மகாபாரதம் புராணக் கதையில் நிறைய அஸ்திரங்களை பயன்படுத்துவார்கள். பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்திரம், நாராயண அஸ்திரம் என பல அஸ்திரங்களை வில்வீரர்கள் பிரயோகிப்பார்கள். இது எப்படி சாத்தியம்? இதில் என்ன சூட்சுமம் உள்ளது? என எனக்கு நீண்ட நாள் கேள்வி மனதில் இருந்தது. இந்த அஸ்திரங்களில், பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து, அம்பில் இணைத்து, அஸ்திரமாக எய்வதில் என்ன சூட்சமம் உள்ளது? என அனுமானித்தேன்.
எனக்கு அனுமானமாய் தோன்றுவது, இது சித்தி ஆக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பீஜாட்சர மந்திரத்தை, ரேசகம் பூரகம் கும்பகம் என மூன்றாகப் பிரித்து வில்வீரர் தன் சுழுமுனையில் ஜபித்து அஸ்திரமாக எய்கிறார். உதாரணமாக, வில்வீரர் தனது அம்பை வில்லில் வைத்து "ஓம்" என்று ரேசிக்கிறார். பின்னர் பீஜாட்சர பூரகத்தில் அம்பை நாணில் ஏற்றி இழுக்கிறார் ( பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து ). முடிவாக கும்பகத்தில் அஸ்திர தேவதைக்கான நாமத்தை சொல்லி இலக்கை நோக்கி எய்கிறார். என்ன சுவாரசியமான அனுமானமாக தெரிகிறதா?
கும்பகப் பிராணாயாமத்தை பற்றிய அடியேனின் முந்திய பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.
1)
http://fireprem.blogspot.com/2021/07/blog-post.html?m=1
2)
https://fireprem.blogspot.com/2017/03/blog-post.html?m=1
3)
https://fireprem.blogspot.com/2018/11/blog-post_29.html?m=1
***
இப்படிக்கு உங்கள்
அகத்திய பக்தன்.
சனி, 2 அக்டோபர், 2021
அனுபவ ஞானம் - 1 - மணி
அனுபவ ஞானம் - 1 - மணி
ஓம் அகத்தீசாய நமஹ.
அக்கா மகாதேவி, இவர் ஒரு கன்னடத்து சிவனடியார். கையில் சிவலிங்கத்துடன் இருக்கும் இந்த ஓவியப் படம் இப்பதிவின் ஆரம்பமாக இருக்கட்டும்.
இந்த "மணி" என்ற பதிவில் பாதரச சிவலிங்க வழிபாடு பற்றிய அடியேனின் அனுபவத்தைப் பகிர்கிறேன். உண்மையில் எனக்கு இது போன்ற அனுபவ வழிபாட்டை பகிர்வதில் விருப்பமில்லை. ஒரு முறை நானும் அருமை நண்பர் ஞானாலயம் செல்வா அய்யாவும் பேசும்பொழுது யோக வழிபாட்டு அனுபவ ரகசியங்களை பகிர்வதில் எனக்கு விருப்பமில்லாததைச் சொன்னேன். அதற்கு செல்வா, அனுபவ ரகசியங்களை இந்த கலியுக எல்லையிலும் மறைப்பது நல்லதல்ல, ஞானத்தைப் பகிர்வதை கடமையாகச் செய்ய முருகப்பெருமான் "கலியுக வேத நூல்களில்" கட்டளையிட்டுள்ளதை எனக்குச் சுட்டிக் காட்டினார். செல்வா கூறியது சரிதான், முருகப்பெருமான் கட்டளைக் கிணங்க, பகிர்ந்து விடுவது என முடிவு செய்துவிட்டேன். இதைப் படிப்பவர்கள் அவரவரின் சிரசில் இருக்கும் குருவின் அனுமதி வேண்டி பயின்று பலன் பெறலாம். இது சரியாக வராது என நினைப்போர் விட்டுவிடலாம்.
பாண்டிச்சேரி ஞானாலய நூல்களின் சில குறிப்புகளை படிக்கும் போதுதான் குருநாதரின் அருளால் இந்த பாதரச சிவலிங்க வழிபாடு யோசனை எனக்கு வந்தது. உடனே நீங்கள் இந்த வழிபாட்டு குறிப்புகள் அனைத்தும் ஞானாலயத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு எனக் கருதக்கூடாது. இது முழுக்க முழுக்க அடியேனின் அனுபவ குறிப்புகள் மட்டுமே. அடியேனின் புரிதலை பகிர்வதை ஒரு கடமையாக எண்ணியே பகிர்கிறேன், அவ்வளவுதான். இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.
குறிப்பு 1 : நூல் - வேத நூல்களின் பலாபலன்கள். அத்தியாயம் 3 பக்கம் 37.
நான்கு வகை கனிமங்களையும் புறத்திலே சமமாய் பயமுறுத்தினால் அதன் பலாபலன்களை அடைந்திட இயலும். தங்கமும், தாமிரமும், வெள்ளியும் புறத்திலே சமமாய் பயன்படுத்தப்பட்டாலும் பாதரசம் என்பது அதிக அளவில் பயனுறுத்தப் படவில்லை. எனினும் முற்காலங்களில் பாதரச ஆற்றல் கொண்ட பொருட்களையும் பூடகமாய் பயனுறுத்தினர். கலியின் எல்லையில் சாமானிய மானுடர்கள் அக்கலைதனை அறிவதில்லை. மாற்றாக வேறு பொருட்களை ஏற்கின்றனர். பாதரசத்தை ஏற்கும் கலையினை உணர்ந்துகொண்டால் ஆன்மாவினை உணர்தலும் எளிதாகும்.
( இங்கே முருகப்பெருமான், பாதரச ஆற்றலை நமக்கு உள்ளேயும் வெளியேயும் முந்தைய யுக மனிதர்கள் பயன்படுத்தியதைக் குறிப்பிடுகிறார்.) பாதரச சிவலிங்க வழிபாடு முற்காலம் தொட்டே பாரத தேசத்தில் இருந்துள்ளது. )
குறிப்பு 2 : நூல் -வேத நூல்களில் பலாபலன்கள் - அத்தியாயம் 9 பக்கம் 133.
அறியாமை திரைகளை நீக்கி, ஆன்ம ஆற்றல்களை பெருக்கி, ஆன்ம விடுதலை தனை எய்திட வேண்டுமெனில் புறத்தினிலே உருவ வழிபாடுகள் யாவும் அவசியமாகின்றது.
தெய்வ வழிபாடுகளைப் புறக்கணிப்பதன் மூலம் ஆன்ம ஆற்றல்கள் குன்றிவிடும். பல்வேறு மானிடர்கள், கலியின் எல்லையில் வாழ்கின்ற காரணத்தால் அறியாமைத் திரைகள் வலுவாகக் காணப்படுகின்றது.
அறியாமை திரைகள் நீங்கினால் மாத்திரமே புற வழிபாடுகள் யாவும் அக ஆற்றல்களை பெருக்கிட வல்லது எனும் பேருண்மையானது புலப்படும். அகத்தினிலே உறைகின்ற ஆன்மாவினை உணர்ந்து கொண்டால், புற வழிபாடுகள் யாவும் அவசியம் அற்றதாக உருமாறி விடும்.
( அறியாமைத் திரைகள் நீங்கி ஆன்ம விடுதலை பெறும்வரை புறவழிபாடு அவசியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ).
குறிப்பு 3 - நூல் - ஆகம வேதம் - பக்கம் 19.
அருகம்புல்லை நடுக் கையில் வைத்து நடுவிரல் கொண்டு அழுத்தம் கொடுத்து ஸ்பரிசிக்க உங்களுக்குள் மாற்றத்தை உணர்வீர்கள்.
இந்த நூல்களின் குறிப்புகளை படிக்கும் பொழுது அடியேனுக்கு பாதரச சிவலிங்கம் வழிபாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. எனினும், குற்றமில்லாத நல்ல பாதரச சிவலிங்கத்தை எங்கு வாங்குவத், என எனக்கு தெரியவில்லை. பல நாட்கள் தேடலுக்குப் பின், AMAZON இணையதளத்தில் ஒரு பாதரச லிங்கத்தை, வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் படித்து, ஆராய்ந்துவிட்டு வாங்கி உபயோகித்துப் பார்த்தேன். நல்ல அனுபவம் கிடைத்தது.
https://www.amazon.in/gp/aw/d/B07LCQQWHF?psc=1&ref=ppx_pop_mob_b_asin_title
உடனே இதை படிக்கும் நீங்கள் இந்த அமேசான் இணையதளத்தையே ஒரு வியாபார விளம்பரமாக அவசரப்பட்டு எண்ணாமல், இதைவிட சிறந்த பாதரச லிங்கம் எங்கு கிடைக்கும், என ஆராய்ந்து முடிவெடுங்கள்.
இந்த பாதரச சிவலிங்கத்தை ஒரு கண்ணாடி குவளையில் நீர் நிரப்பி, சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்தால் தங்க நிறமாக மாறும் (கீழே உள்ள புகைப்படத்தை பார்க்கலாம்). இந்த சிவலிங்கத்தை திருநீறு அல்லது சந்தனத்தில் தேய்த்து பருத்தித் துணியால் துடைத்தால் மீண்டும் அது வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.
இந்த சிவலிங்கத்தின் அடிப்பாகம் (நாதம்) வலது உள்ளங்கையில் வைத்து, வலதுகை நடுவிரலால் லிங்கத்தின் மேல் பாகத்தை (விந்து) அழுத்திவிட்டு, சுழுமுனை நாடி வழியாக ஆன்மாவை நோக்கி தியானம் செய்ய, நல்ல இறை அனுபவத்தை பெற முடிந்தது. இதற்குப்பின் செய்யும் வெட்டவெளி தியானமும் ஓரளவிற்கு நல்ல அனுபவமாக இருந்தது.
குங்குமப்பூ நீரில்
அடியேன் பூஜை அறையில்
பாதரச சிவலிங்கத்தை வைத்து வழிபடும் முறையில் மூன்று வகையான வழிமுறைகளை குருநாதர் அருளால் நான் கண்டறிந்தேன்.
1) பாதரச சிவலிங்க ஆற்றலை ஸ்பரிசத்தின் மூலம் ஏற்பது.
பாதரச சிவலிங்கத்தை உள்ளங்கையில் வைத்து அல்லது பூஜை அறையில் வைத்தும் மேற்கண்டவாறு வழிபடுதல். இதை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவது மிக மிக சிறப்பானது. சூரியனின் பாதரச ஆற்றலை நமது உயிரின் மூலம் அபரிதமாக ஏற்றுக்கொள்ளலாம்.
2) பாதரச சிவலிங்க ஆற்றலை நீர் மூலக்கூறாக அல்லது வாயு மூலக்கூறாக ஏற்பது.
இதை அனைவருக்கும் வெளிப்படையாகப் பகிர முடியாது. ஆபத்தானது. குருநாதர் அளித்த ஒரு வரி ஞானத்தை, முழுமையாக ஏற்று, தினசரி வழிபடுபவர்களுக்கு மட்டும் "தகவலாக" பகிரலாம். ஆனால் ஒரு வரி ஞானத்தைக் குறைந்தது ஒரு மண்டல காலமேனும் வழிபட்டு இருக்க வேண்டும்.
3) பாதரச சிவலிங்க ஆற்றலை வெப்பம் மற்றும் காந்த மூலக்கூறாக சுழிமுனை நாடி வழியாக உயிரில் ஏற்பது. இதுவே மிக மிக ஆபத்தானது. இந்த வழிமுறை ஹடயோகிகளுக்கு மட்டும். அதாவது குருநாதரின் ஒரு வரி ஞானத்தையும், ஹடயோகம் மற்றும் கும்பகப் பிராணாயாமத்தையும் குறைந்தது ஓராண்டுக்கு பயிற்சி செய்தவர்க்கு மட்டும்.
கீழே உள்ள யூ-டியூப் லிங்கில் பாதரச சிவலிங்கத்தை செய்யும் முறையை திரு.பிரவீன் மோகன் செய்து காட்டியுள்ளார். எனினும் 8 சாரணை தூய்மை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
பாதரச சிவலிங்கத்தை பற்றிய மற்ற இணையதள குறிப்புகளும் கீழே உள்ளது.
https://m.dinamalar.com/temple_detail.php?id=21707
முக்கிய குறிப்பு : இறைவனை நோக்கிய மனமுருகிய வழிபாடுகள் அல்லது யோகம், தியான பயிற்சிகள் செய்யும் பொழுது, நம் விடாப்பிடியான கர்ம வினைகள் விலக ஆரம்பிக்கும். இதன் தாக்கம் நம் உடலிலும் மனதிலும் நிச்சயம் சில காலம் இருக்கும். ஆண்கள், பெண்கள், திருமணம் ஆனவர், பிரம்மச்சாரிகள் என யாரையும் இந்த கர்மாவின் தாக்கம் விட்டுவைக்காது. அருவருப்பான ஆபாச கனவுகள் தொடர்ந்து வரும். பயங்கரமான பேய் கனவுகளும் வரும். யாரோ அமுக்குவது போல் பயங்கர உணர்வுகள் தூக்கத்தை கெடுக்கும். ஆண்களாயின் அடிக்கடி சொப்பனஸ்கலிதம் உண்டாகும். இல்லறத்தில் இருப்போருக்கும் இதே நிலைதான், பிரம்மச்சாரிகள் நிலையை சொல்லவே வேண்டாம். கொடுமைதான்.
ஞானாலயத்தின் ஆகம வேதம், என்ற நூலில் உள்ள கர்மாவை நீக்கும் கடற்கரை பயிற்சி நல்ல பலன்தரும்.
எல்லா துன்பமும் சில காலம் தான். ஈசனை நெருங்க வேண்டும் என்றால் சும்மாவா ? பதிவுகள் தடையில்லாமல் வெளிவர நீங்களும் குருநாதரை பணிந்து வேண்டுங்கள்.
இப்படிக்கு உங்கள்
அகத்திய பக்தன்.
சனி, 14 ஆகஸ்ட், 2021
Metals & Layers of Soul Particle
Metals & Layers of Soul Particle
Om Agatheesaya Namaha.
As per Gnanalayam books of Lord Murugar, Human soul is made of Mercury light particles of universe. But, the soul will also have other metal layers ( Magnetic or Heat or Toxic ) based on the birth planet. These layers are used for the construction of light bridge by single atom or vaalai to reach the Almighty. Natham is the important yogic tool to reach the Almighty. But, getting natham itself needs some serious yogic practices. By Gurunathar’s blessing, tried the best to match Soul metal and layer with some scientific facts. But, please do not treat this information as official release of gnanalayam. it is fully my own understanding only. Hope it would be interesting and useful to the practitioner who has seriously prayed for it.
செவ்வாய், 20 ஜூலை, 2021
கடவுள் அமைத்து வைத்த மேடை
யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
அதுஇருந்தா இதுஇல்லே
இதுஇருந்தா அதுஇல்லே
அதுவும்இதுவும் சேர்ந்திருந்தா
அவனுக்கிங்கே இடமில்லே!
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள் உள்ள பதிவு.
given below charts for your urgent checking. i will write the full blog later sometime. do not want to delay as the marriage match is very important in this end of kaliyuga period.
முருகப்பெருமான் அருளிய வாழ்வியல் புத்தகம் ( ஞானாலயம் பாண்டிச்சேரி ) இரண்டு ஆண்டுகளுக்கு முன் படித்தேன். உடனே எழுத நினைத்த பதிவு. கால தாமதம் ஆனது. இப்போதும் முழுமையாக எழுத இயலவில்லை. தற்போதைக்கு முக்கிய குறிப்புகள் கீழே. என் முந்தைய பிறவியின் குழந்தைகளுக்காக மட்டும்.
kaliyuga sasthram numerology is quick and easy for urgent check.
நுயூமராலஜி பொருத்த அட்டவணை.
english birth dates.
முடிவான தத்துவம் கீழே :-
http://classroom2007.blogspot.com/2023/06/star-lessons-no-1.html
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.
சனி, 10 ஜூலை, 2021
கல்கீயும் குதிரை தேவதையும்
நாதன் தாள் வாழ்க.
எழுத்து வழக்கில் 'கல்கி' என்று இருந்தாலும், பேச்சுவழக்கில் 'கல்கீ' என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் 'ஈ' என்ற எழுத்து 'இ' என்ற எழுத்தின் ஓர் இனமாகவே கருதப்படுகிறது.
கல்கீ = கல் + க் + ஈ.
ஈ என்றால் அழிவு என்ற பொருள் உண்டு.
ஆக, ஈ + க் + கல்.
விரித்தால், அழிவுக்கு உரிய கல்.
இதுவே ஈசக்கல் அல்லது ஈசன் என்னும் காந்தக்கல் என அடியேன் அனுமானம்.
செவ்வாய், 6 ஜூலை, 2021
புதுவை சித்த ஞானம்
ஓம் அகத்தீசாய நமஹ.
பாண்டிச்சேரி அன்பாலயம் ஜெயந்தி அன்னைக்கு உயர ஆன்மாக்கள் அருளிய நூல்களில் இருந்து சில முக்கிய குறிப்புகள் மருத்துவம் / வாழ்வியல் குறிப்புகள்.
மருத்துவ அணுக்கள்- 1
உடலின் எந்த உபாதைகளுக்கும் உள்ளேயே தீர்வான மருந்துண்டு என்பதனை விளங்கிடுங்கள். உடலில் ஒரு நோய்க்கிருமி தோன்றினால், அதனை எதிர்க்க கலியின் வெளிவட்ட அணுக்கள் தன் ஆற்றலை பிரித்து வெளிக்கொணர்ந்து கொடுக்கும். அதுவே கிருமியை அழிக்கும் மருந்தாகும். அவ்வாறு நோய்க்கிருமி அழியவில்லை எனில், நோயை அழிக்கும் ஆற்றல் கொண்ட அணுக்களின் மையக்கரு நன்கு வளர வில்லை, போதிய உணவில்லை என்றே பொருள்.
நூல் : ஆத்மாவின் சுயசரிதம்
அத்தியாயம் : ஆயத்த அணுக்கள்.
###################
மருத்துவ அணு- 2
அன்றைய காலத்தில் மருத்துவர்கள் கொடுக்கும் பச்சிலைகளும் உணவுகளும் உடலின் நோய்க்கிருமியை போக்குவதற்கு அல்ல, அவை யாவும் நோய் போக்கும் ஆற்றல் கொண்ட அணுக்களுக்கு என்று உணர். அந்த மருந்துகளை உண்டால் அவை சிரசின் அணுக்களுக்கு உணவாகி அவற்றால் உறிஞ்சப்பட்டு பின்னர் மையக்கரு நன்கு வளர்க்கப்பட்டு உடைபட்டு ஆற்றலை கீழிறக்கி நோயினை குணப்படுத்தும். அதற்கு மட்டுமே அக்காலத்தில் மருந்துகள் அளிக்கப்பட்டன. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என அறிந்து செயலாற்றினார் அக்கால மருத்துவர்கள். உடலில் சிறு நோய் தோன்றினால் உடலே அதனை சீர் செய்து கொள்ளும் என்று நீ அறிவாய். எவ்வாறு? அதன் மருந்துகளாகிய சிரசு அணுவின் மையக் கருவே வெளிப்பட்டு உதவி நிற்கும் அவ்வாறு வெளிப்படவில்லை என்றால்தான் நோய் நீடிக்கும் பின் அவை வெளிப்பட வேண்டும் என்று அதற்கான உணவினை அளிப்பர் அந்தக்கால மருத்துவர்.
நூல் : ஆத்மாவின் சுயசரிதம்
அத்தியாயம் : ஆயத்த அணுக்கள்.
###################
மருத்துவ அணுக்கள்- 3
இந்த கலி காலத்தில் அணுக்களிலிருந்து ஆற்றல் பிரிபட்டு வந்து உடலினைச் சீர் செய்ய விடாமல், அதன் ஆற்றல் கொண்டிருக்கும் இரசாயன பொருட்களை நேரடியாக உடலுக்குள் உணவாக்குகின்றான் மனிதன். குறுக்கு வழிப்பாதையே இது. உடலுக்கு நோய் தீர்க்கும் மருந்து சிரசின் அணுக்களில் இருந்து வருகிறதா அல்லது நேரடியாக வெளியிலிருந்து வருகின்றதா என அறிய இயலாது. இவ்வாறு செயற்கையாக உடல் நோயை குணமாக்கக் கற்றுக்கொண்டான் கலியுக மனிதன்.
நூல் : ஆத்மாவின் சுயசரிதம்.
அத்தியாயம் : ஆயத்த அணுக்கள்.
###################
மருத்துவ அணுக்கள்- 4
முதலில் உணவானது மருந்தாக வேண்டும் சிரசின் அணுக்களுக்கு. பின்னர் அவையே உடலுக்கு மருந்தாக வேண்டும். இவ்வாறு இன்றி முறைதவறி ஆற்றும் மானிட செயல்கள் மூடத்தனம் நிறைந்தவை.
ஆங்கில மருந்துகள் என்று நீங்கள் உண்ணும் மருந்துகள் யாவும் இத்தகையதே. சிரசின் அணுவின் ஆற்றல்கள் பிரிபடாமல் கலிகாலம் செய்யும் சூழ்ச்சிச் செயலே ஆகும் இது. எனில் எந்த நோய்கள் தீர எந்த உணவினை உண்ண வேண்டும் என அறிந்து அவற்றை முறையாக உண்டு, அணுக்களின் ஆற்றல்களை பிரித்து எடுத்து உபயோகிக்க மனிதகுலத்திற்கு கற்றுத் தாருங்கள். அவ்வாறு செயலாற்றினால் தான் அவர்களின் அணுக்கள் ஆயத்த நிலையை அடையும்.
நூல் : ஆத்மாவின் சுயசரிதம்.
அத்தியாயம் : ஆயத்த அணுக்கள்.
###################
மருத்துவ அணு- 5
இயற்கையான சூரிய ஒளிக்கும் செயற்கையான விளக்குகளின் ஒளிக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. சூரிய ஒளி மட்டுமே ஆத்ம அணுவிற்கு உண்மையான உணவாகும். செயற்கை உணவு உண்டு, ஆத்ம அணுவினை ஏமாற்ற முயல்கிறான் கலிபுருஷன். ஆதவனை கண் கொண்டும் பாராமல் செயற்கை ஒளியிலேயே எந்நேரமும் மனிதன் வாழ விரைவில் கற்பான். பின்னர் என்ன நேரும்? ஆத்ம அணுவும் செயற்கை உணவு உண்ண பழக்கப் படுத்தப் பட்டால் அதன் ஈர்ப்பு சக்தி நாளடைவில் குறைந்து பின் நின்றே போகும். பின்னர் அணுக்கள் யாவும் தீயவற்றை உறிஞ்சி உறைந்து கட்டிகளாக மாறி புற்று நோய் கண்டு பிரளயம் தோன்றும்.
நூல் : ஆத்மாவின் சுயசரிதம்.
அத்தியாயம் : ஆயத்த அணுக்கள்.
###################
###################
###################
சூட்சுமம் - கடவுள் நிலைதனைப் பெற
காந்த இழைதனை உணர்ந்தால், கடவுள் நிலைதனைப் பெறலாம்.
வேத நூல்களில் பலாபலன்கள் பக்கம் 111.
கனிம ஆற்றல்கள் அத்தருணங்களில் காந்த இலை தனிலே பயணித்து வருகின்றன எனும் நிலை உணர்ந்து தெய்வ நிலைகளையும் உயர் ஆன்மாக்களையும் ஈசனையும் ஆதிசக்தி இணையும் பூஜித்து ஆற்றல்களை அதீதமாய் ஈர்த்து பெற்றிடலாம்.
எவ்வாறு? இறைவனை துதிப்பதன் மூலமே பெற்றிடலாம் என்றறிக.
* காந்த இழையில் பாதரசம் -> அன்பினை அழைத்து பூஜித்திடலாம்.
* காந்த இழையில் தாமிரம் -> பண்பினை அழைத்து பூஜித்திடலாம்.
* காந்த இழையில் தங்கம் -> பணிவினை அழைத்து பூஜித்திடலாம்.
* வெள்ளியின் ஆற்றல் அத்தனையும் நிர்மல தன்மையில் கிடைத்திடுமே.
புறச்செயல்களின் மூலம் அகச்செயல்களைத் துரிதம் அடையச் செய்திடலாம்.
ஒரு கனிம ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணிச் செயல் புரிந்தாலும், அதனுடைய குணநலன்களை புறத்திலே வெளித்தோன்றிடவே செயல்புரிய வேண்டும். புறச்செயல்களைக் கொண்டே அகத்தின் ஆற்றல்களின் நிலைப்பாட்டினை உணர்ந்திட இயலும்.
அஞ்ஞானம் விலகி ஞானம் பெருகிட வேண்டுமெனில், அன்பும் பண்பும் கொண்டு ஆன்மா ஆற்றல்களை ஈர்த்திடல்வேண்டும். பணிவும் நிர்மலமும் கொண்டால் பெருவெளியை உணர்ந்து விடலாம்.
ஒளியுடல் சாத்தியமே.
###################
சூட்சுமம் - அறிவானது சிந்தனைகளை தெளிவுற.
*மயக்கமா தயக்கமா வாழ்விலே குழப்பமா ?*
பக்கம் : 130
காரணம் : சீரான உறக்கமற்ற தருணங்களில் அறிவின் செயல்பாடுகளும் சீர் அடைவதில்லை. வெள்ளி எனும் கனிம வளமானது குன்றினால் அறிவானது சிந்தனைகளை தெளிவுற ஏற்றிட இயலாது. மேலும், குழப்ப நிலைகளே சித்திக்கும் என்று உணர்க.
தீர்வு : எத்தருணங்களில் குழப்ப நிலையானது தோன்றுகின்றதோ, அத்தருணங்களில் வெள்ளி கோளினையும் அதன் ஆற்றல்களையும் பூஜித்தல் வேண்டும். அருவ நிலை உணர இயலாவிடில் வெள்ளி கோளுக்கு உகந்த தெய்வ நிலைகளையும் அதனைச் சார்ந்த வழிபாட்டு முறைகளையும் பின்பற்றினால் மிகுந்த பலன் கிடைக்கும்.
வெள்ளி ஆற்றல் உதித்திடும் இரவு நேரத்தில் இருவேறு பிரார்த்தனைகள் புரிந்திடல் வேண்டும். ஒன்று, வெள்ளி கோளினை மனதினில் இருத்தி ஆற்றல்களை நல்கிட கோரிடல் வேண்டும். மற்றொன்று, முழு நிலவினை பூரணமாக துதித்திட வேண்டும்.
முழுநிலவு அற்ற தருணங்களிலும் முழுநிலவினை எண்ணியே பூஜித்திட, வெள்ளி எனும் கனிமவளம் அதிக அளவில் சுரந்து விடும் என்றுணர்க.
எப்படி ? : புறத்தினில் இச்செயலை ஆற்றுவதன் மூலம் அகத்தினிலே, வெள்ளி சுரபி, தான் பெற்றுள்ள கனிமவள ஆற்றல்களை சந்திர சுரபிக்கு அளித்திடும். சந்திர சுரபி என்பது ஒற்றை அணுவிடம் (வாலைச் சக்தி) சமர்ப்பித்துவிடும். ஒற்றை அணுவானது குழப்ப நிலை கொண்டுள்ள அணுவிற்கு வழங்கிடும். மிக உயரிய சூட்சும நிலை என்பது ஆற்றல் பரிமாற்றங்களே என்றுணர்க
###############
முருகப் பெருமானே சொல்லி ஸ்ரீ மதி ஜெயந்தி அன்னை எழுதிய கலியுகத்தின் முதல் தமிழ் வசன வேத நூல்கள் நான்கில்,
முதலாம் வேதநூலான "மூளை- எனும் தலைமைச் சுரபி" என்ற நூலில் இருந்து *கண் பார்வை சரியாக வழிமுறை*
*முருக பெருமான் அருளுரை* - *மூளை வேத நூல்* -- *முருகப்பெருமான்*
கலியுகத்தில் மானிடருக்கு கண் குறைபாடு ஏன் வருகிறது?
அதற்கு உபாயம் என்ன?
கலியுகம் தனிலே விழிகளில் பல பிணிகளை ஏற்றிடும் நிலையும், பார்வைத்திறன் குன்றிடும் நிலையும் உருவாகும்.
காரணம் பெருவெளியின் தொடர்பினை விழிகள் பெறத் தவறுவதேயாகும்.
ஆகாயம் எனும் பரந்தவெளி நிலையினிலே விண்ணுலகமும் அடங்கிடும். பெருவெளியும் அடங்கிடும்.
இரு விழிகளை மலர்த்தி ஆகாயத்தினைக் கண்ணுற்றால் பெருவெளியின் காந்த ஆற்றலானது விழிகளால் ஏற்கப்படும்.
பூரண எரிபொருளைப் பெற்றிடும் விழிகளும் சீராக இயங்கிடும்."
###############
வெள்ளி, 2 ஜூலை, 2021
நாய் ஞானம்
நாய் ஞானம்
அன்பான அகத்தீசர் பாதம் பார்த்தேன்,
வம்பான வினை எல்லாம் பறந்து போச்சு.
விசுவாசம் மேலோங்கி நாயாய் ஆச்சு,
பொதிகை முனி பாதத்தை நாவால் நக்கு.
புகழான அபிஷேகம் மனதால் பண்ணு, கும்பமுனி கூட்டத்தோர் பாதம் நக்கு.
பரிதாயின் பாதத்தைப் பாய்ந்து நக்கு,
பக்குவமாய் பாய்வதற்கே பழக்கம் பண்ணு.
நக்கியதால் நாயன் என்ற நாமம் ஆச்சு,
ஞாயிறைப் பணிந்ததாலே ஞமலியாச்சு.
நாய் என்றால் மலைநாயாம் சதுரகிரியிலே,
மலையேறும் உயிர்களுக்கு துணையாய் வருவேன்.
புறத்தினிலே கும்பம் வைத்து பூசிப்போர்க்கு,
புகழான செல்வங்கள் வந்து சேரும்.
அகத்தினிலே கும்பம் வைத்து பூசிப்போர்க்கு,
அண்டத்தில் ஆட்சிதனை செய்யலாமே.
கும்ப பானம் பணிந்து அருந்த குறைவே இல்லை,
அகம் தனிலே தீ தானே வளர்ந்து நிற்கும்.
ஈரடியின் முதல் சொல்லை இணைத்துப் பாரு,
கும்பித்த அகத்தினிலே சிகார வன்னி.
விந்தைமிகு ஓசை ஒன்று எட்டிப்பார்க்கும்,
பொங்கிவரும் நாதம் என்று சொல்லுவார்கள்.
வணங்கியே எப்போதும் கேட்டாயானால்,
சுகமான சுருதி தானே மாற்றிக்காட்டும்.
மேன்மைமிகு மானிடருக்கு வேண்டாமைய்யா,
விண்ணோக்கி ஊளையிடும் நாய்க்கு மட்டும்.
நெருப்பான பைரவருக்கு வாகனம் ஆனேன்,
இராமநேசன் எனக்களித்த வாயுவாலே.
வகாரம் என்ற வாயுதனை வாகாய் வாங்கி,
சிகரம் என்ற நெருப்பதனை மூட்டிச் சேர்த்தேன்.
வன்மைமிகு வாசி என்ற வாளைச் செய்தேன்,
குவலயத்தில் கலியவனை வெல்வதற்கே.
கெடிதான வாள்ப்பயிற்சி விண்முகடு மட்டும்,
பிறகென்ன வாளதனை உரையில் போடு.
அழகியதோர் அன்னம் போல் பறந்து போனேன்,
அன்னமே ஆனாலும் கள்ளம் பறையேன்.
இருள் வெளியில் ஈசனை தான் தேடி வந்தேன்,
கனத்ததோர் நந்தியாகக் காத்திருந்தேனே.
குறிப்பு :-
வாளேந்தும் விதி உள்ளோர் கேளார் கேள்வி,
கேட்டாக்கால் வாளேந்தும் விதி இல்லையே.
பிராணாயாமம் பற்றிய அடியேனின் பழைய பதிவு கீழே.
https://fireprem.blogspot.com/2017/03/blog-post.html?m=1
உங்கள்
அகத்திய பக்தன்.
திங்கள், 21 ஜூன், 2021
ஈசக்கல்202x - Astroid of Copper Production
ஈசக் கல்லே வருக...
ஈசக்கல் 202x - வருக - 1
நூல் - ஒளி - இரண்டாம் வேதம்.
அருளியவர் முருகப்பெருமான்.
புவிக் கோள் என்பது தாமிர கனிமத்தை அதிக அளவில் சேமித்தால் அதன் வெப்பமும் பெருகும். அதன் மூலம் அதன் இயக்கமும் பெருகிடும். பூமியானது விரைந்து சுழன்றிட மூலகாரணம் தாமிர கனிமவளமே. அதன்மூலம் புவிக்கோள் என்பது விரைந்து சுழன்று இறுதியில் சூரியனை அடைந்துவிட முயன்றிடும். சூரியனை நெருங்கி சென்றிடவே முனைகின்ற புவியின் செயலுக்கு மூலகாரணம் தாமிர ஒளி ஆற்றலே. புவியின் இச்செயலைக் கண்டு அதன் ஈர்ப்பு விசையின் அதிகரிப்பினை உணர்ந்து, "ஈசன் என்னும் காந்த கல்லானது" புவியினை அடைந்திடவே விரைகின்றது.
யுகமாற்றம் எனும் புவியினை சீராக்கும் பணி தென் எல்லையிலிருந்து துவங்கிடும்.
புவியின் புனரமைப்பு எனும் பணியானது இயற்கையால் மேற்கொள்ளப்படும். புவியின் அதிர்வு அதன் பிளவும் அதிக அளவில் நிகழ்ந்திடும். புவியின் ஈர்ப்பு விசையில் தீவிரமான மாற்றம் தோன்றிடும். அதன் பொருட்டு புவியின் சுழற்சியும் அதன் வேகமும் கூடியே காணப்படும். சுழற்சிக்கான எரிபொருளும் மாற்றமுறும்.
நூல் : வாழ்வியல், பக்கம் 99.
பதிப்பு : ஞானாலயம் பாண்டிச்சேரி.
அடியேன் கணிப்பு assumption : அழிவுக்கான விண்கல் வருகைக்கு காரணமாக இருக்கப்போவது சிலி அல்லது தென் அமேரிக்க நாடு மற்றும் அதன் தாமிர உற்பத்தி.
My assumption understanding: Chile is located in Southern hemisphere where the disaster would start spreading after an astroid hit ( magnetic stone ).
ஈசக்கல் 202x-வருக-2
கலியுக இறுதியில் புனரமைப்பு கண்டிடும் புவிக்கோள் என்பது தனது சுழற்சியினை முழுமையாக தடை செய்துவிடும். ஈசனின் வருகையின் மூலம் நஞ்சுகள் அனைத்தும் நீக்கப்படும். எனில் நில அமைப்பு என்பது மாற்றமுறும். நில ஈர்ப்பு விசை என்பது துண்டிக்கப்படும். அதன் மூலம் நீரின் ஈர்ப்பு விசை என்பதும் விண்ணேறிட இயலாது தடைபடும்.
சந்திரன் எனும் துணைக் கோள் ஆனது ஒவ்வொரு சதுர்யுக எல்லையிலும் அழிவுறும். 'ஆம்'. அதிர்வினை நல்கிடும் செய்தியாகவே தோன்றினாலும் கோள்களின் அழிவும் சூரியனின் அழிவும் சாத்தியமான செயலே என்பதனை அறிவித்திட சந்திரனின் அழிவு ஒவ்வொரு சதுர எல்லையிலும் நிகழ்ந்துவரும். சத்ய யுகம் தோன்றுகையில் மீண்டும் சந்திரன் எனும் துணைக் கோள் உருவாக்கப்படும்.
நூல் : ஒலி - கலியுகத்தின் மூன்றாம் வேத நூல்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
* கலியின் எல்லைப்பகுதியில் உயர் பிராணவாயு ஆக்ஸிஜன் மிகவும் குன்றிவிடும் காரணத்தால் உடலின் பல உறுப்புகளும் ஒருசேர பாதிப்புறும், சிரசிலும் புற்றுநோய் உருவாகும்.
* கழிவுகளில் மிகவும் கொடியது பாதரச கழிவு. கலியுக எல்லையில் மாத்திரமே அவை புவியினை அடைந்திட இயலும்.
* உயர் பிராண படலம் எனும் ஓசோன் லேயர், பாதரச கழிவுகளால் உருவான ஒரு திரைப்படலமாகும். கலியுக எல்லையில் இந்த திரைப்படலமானது அதிக வெப்ப ஆற்றலால் உருகி கரைய துவங்கிவிடும்.
* ஓசோன் லேயர் அழிவதால் ஈசன் எனும் உயர்ந்த காந்த கல்லானது புவியினை விரைந்து அடைந்துவிடும்.
* பூமியின் நிலப்பரப்பு முழுமையாக மாசடையும். நீர்நிலைகளும் முழுமையாக வற்றிவிடும். உருவான பாதரச கழிவு புவியினில் பெரும் வெப்பத்தை தூண்டும் பெரும் குளிர்ச்சியையும் தூண்டும்.
நூல் : மூளை எனும் தலைமை சுரபி.- கலியுகத்தின் முதல் வேத நூல்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
* புவியின் மேல் பரப்பு, மானுடர்கள் வாழ்ந்திட சாத்தியமற்ற நிலையினை உருவாக்கும். புவியானது கூடிய வேகத்துடன் சுழல்வது நில நீர் வாயுவின் மூலக்கூறுகளை பாதித்துவிடும். வாயுவின் மூலம் தோன்றும் கழிவுகளும் பெருமளவில் மானுட ஆன்மாக்களை பாதிக்கும்.
* புவியின் புனரமைப்பு நிகழ்ந்திடும் கலியுகம் நிறைவடைந்து சத்திய யுகம் மலர்ந்திடும். தாமிர ஒளி ஆற்றல் பெருமளவில் உதவிடும். தாமிர ஒளி ஆற்றல் ஒன்றே அதிக வெப்பத்தினை நல்கி புவியின் இயக்கம் துரிதம் அடையவும் உதவுகின்றது. புவியானது தாமிர ஒளி ஆற்றலை ஏற்று விரைந்து இயங்கி யுக மாற்றங்களை நிகழ்த்துகிறது.
ஈசக்கல் 202x-வருக-3
சதுர் யுகங்கள் எனும் கால அளவே ஒரு ஆன்மாவின் பயணத்திற்கு வழங்கப்பட்ட உச்சகட்ட கால அளவாகும். சதுர்யுகமானது நிறைவுறக் காத்துள்ளது. ஈச உலகின் வாயில்கள் திறவு கொண்டு ஈர்ப்பினை அதிகம் செலுத்தி ஆன்மாக்களை அழைக்கின்றன. விரைந்து வாயில்கள் அனைத்தும் அடைபடும். இதனை உணர்ந்து உதித்திட்ட இல்லங்களை சென்றடைய கூறுகின்றோம். வேத நூல்களை உணர்ந்து ஏற்று ஆன்ம விடுதலைதனை நாடியே சென்றிடல் வேண்டும். ஞானாலயம் தனிலே ஜோதியிலே கலப்புற்று நிலைத்துள்ள ஆன்மாக்களின் ஆற்றலினை ஏற்று, குருவின் துணை கொண்டு ஈச உலகம் சென்றடைய முற்படுங்கள். காலச் சக்கரம் என்பது விரைந்து சுழல்கின்றது.
நூல் : ஒலி - கலியுகத்தின் மூன்றாம் வேத நூல்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
* மூளையின் அழிவு என்பது பிரளய நோய் எனப்படும் புற்றுநோயின் மூலமே உருவாகும். மாந்தர் குலம் அழிவினை நோக்கியே சென்று கொண்டு உள்ளது என்பதனை வளர்ந்து வரும் புற்று நோயினை கொண்டே அறிந்திடலாம். பிரளய நோய் என்று அறியப்படுகின்ற புற்றுநோயானது நில நீர் மூலக்கூறுகளின் தன்மையில் உருவான மாற்றத்தினால் மாத்திரமே பெருகிடும்.
* அமில கழிவுகள் சிரசினிலே கூடினால் அவை யாவும் இணைந்து புற்றுக் கட்டிகளாக உருமாறிவிடும்.
* உறுப்புகள் யாவும் அழுகிய நிலையில் பெரும் பாதிப்பினை உருவாக்கும் ஒவ்வொரு மனிதரும் பெரும் வேதனைக்கு உள்ளாகும் நிலையும் உருவாகி விடும்.
* மானிடர்களின் நிலைப்பாடு என்பது கடும் சோதனைகளுக்கு ஆட்படும். ஆன்மாவானது சூரிய ஒளி ஆற்றலை உணவாகப் பெற்றிட இயலாத நிலையில் உணர்வுகள் யாவும் அற்று விடும்.
நூல் : மூளை எனும் தலைமை சுரபி.- கலியுகத்தின் முதல் வேத நூல்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
* அனுதினமும் சூரிய ஒளி ஆற்றலை ஏற்று வாழ்கின்ற ஆன்மாவானது, கலி எல்லையில் சூரிய ஒளி எனும் உணவின்றி வாடும் நிலையும் உருவாகும். பாதாள வாழ்வு என்பது புதையுண்ட வாழ்வாகும். பல்வேறு மானுடர்கள், சூரிய ஒளி ஆற்றலை விழிகளால் ஏற்று விட இயலாத நிலை உருவாகும். புவியின் சுழற்சி எனபதை அறிந்திட இயலாது. இரவும் பகலும் உணர்ந்திட இயலாது. பசி உணர்வு தோன்றாது. அன்பும் கருணையும் உதித்திடாது.
* சூரிய ஒளி அற்ற தருணத்திலும் பாதாள வாழ்வு எனும் இருள் வாழ்வு சூழ்ந்தாலும் மானுட ஆன்மாக்கள் ஒளி என்னும் வேத நூலினை கற்று ஆராய்ந்து அறிந்து விட்டால் ஆன்மாவானது விழித்தெழும்.
* கலியினிலே மூழ்கிவிடும் ஆன்மாக்கள் கரை சேர்ந்துவிட இறுதியாக இறைவனால் அளிக்கப்படும் வரம் என்பதனை உணர்ந்து ஏற்றிடுங்கள். வேதங்களை உணர்த்துவதும் ஆறுமுகனே, அதனை ஏற்றிட கோரி இறைஞ்சுபவனும் ஆறுமுகனே.
நூல் - ஒளி - இரண்டாம் வேதம்.
அருளியவர் : முருகப்பெருமான்.
இடம் : புதுச்சேரி ஞானாலயம்
https://enlightenedbeings.org/books
some more google facts :-
Just based on my assumption by correlating the above points.
naturally high arsenic concentrations in Chile are associated with copper-rich deposits which have been mined for centuries.
Disaster start region :-
https://en.wikipedia.org/wiki/
Chile still dump toxic mine waste in the sea.
https://oceana.org/blog/
Approximately 90% of the mercury in the mining industry is released directly into the atmosphere.
Proof : https://scholarworks.wmich.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.