மனமது செம்மையானால்
select the page content to read if it is hidden.
ஓம் அகத்தீசாய நமஹ..
=> நீ உன்னை புறமனமாகவும் உடலாகவும் உணரும்வரை உன்னை கர்ம வினைகள் வாட்டும். புறமனமாக உன்னை நீ உணர்வதே உனது மாயா கர்மா ஆணவம் ஆகும் .
=> நீ உன்னை ஆழ்மனமாகவும் உயிராகவும் உணர முயற்சி செய். உன் முயற்சி விரைவில் நல்வழி காட்டும்.
=> வெளிமனம் செம்மையானால் ( மாயா கர்மா ஆணவ மாசு நீங்கி சிறப்பானால் ), நமது ஆழ்மனதை உணரலாம்.
=> உன் தேவைக்கு இறைவனை வணங்காதே. உன் தேவையே இறைவன் என வணங்கு.
=> இறைவனிடம் முழுமையாக சரணடைந்து வணங்கு. மனித குருமார்களிடம் சிக்காதே, அடிமை ஆகாதே. இந்த கலியுகத்தில் மனித குருமார்கள் பெரும்பாலும் போலிகள் அல்லது முழுமை அடையாதவர்கள்.
=> உனது உயிரின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து இரு. இங்கே மனதை வைத்து பிராத்தனை செய். உயிரின் நினைவகம்தான் ஆழ்மனம். இரண்டும் ஒருங்கிணைந்தது ஆகும்.
=> உனது உயிரில் வந்து அருள் செய்பவரே குருநாதர். அவரை மட்டும் வணங்கி பிராத்தனை செய் . மனித குருமார்களிடம் மயங்காதே. ஜாக்கிரதை .
=> உன் அன்றாட கடமைகளை ஒழுக்கத்தோடும் நேர்மையோடும் தொடர்ந்து செய்.
=> தினமும் காலையும் மாலையும் மனமுருகி பிராத்தனை செய் . "இறைவா! உன் பாதத்தோடு விரைந்து சேரவேண்டும்" என்று விருப்பத்தோடு பிராத்தனை செய் . இந்த பிராத்தனை உன் வெளிமனதை கட்டுப்படுத்தி உன் ஆழ்மனதை விழிப்படைய செய்யும் . ஆனால், இந்த வேண்டுதல் ஏதோ சோகத்தின் வெளிப்பாடு அல்லது தற்கொலை என தவறாக எண்ணவேண்டாம். மாயா கர்மா ஆணவத்தால் உருவான வெளிமனத்தின் மரணத்திற்க்கான சூச்சுமமே இது.
=> மேற்கண்ட பிராத்தனை உன் கடமைகளை எளிதாய் செய்ய உதவும் . விருப்பு வெறுப்பில் சிக்க மாட்டாய். இறைவனோடு ஆன்ம தொடர்பை உணர்வாய் . நிறைவான மகிழ்ச்சியில் இருப்பாய். ஜாதக பலன், கோள்களின் பெயர்ச்சி பலன் உன்னை கட்டுப்படுத்தாது. உன் ஆழ்மனதின் விழிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும். இதன் உச்சக்கட்டத்தில் நீயே தெய்வ நிலைக்கு உயர்வாய். அஹம் பிரம்மாஸ்மி. தத்துவமசி.
=> உன் ஆழ்மனதின் சக்தி மிகவும் ஆற்றல் பெற்றது. அதுவே ஆதிபராசக்தி ஆகும் .
=> ஆழ்மனதின் விழிப்புணர்வால் அடுத்து நடக்கப்போவதை அல்லது வருங்காலத்தை கணிக்க முடியும் . ஆனால் அந்த அற்புத ஆற்றலால் உலக மாயையில் சிக்காதே. இறைவனோடு சேர்வது ஒன்றே எனது விருப்பம், என்று தொடர்ந்து செல்.
=> உலக மாயையில் ( சுயநலம், புகழ்ச்சி, ஆணவம் ) நீ சிக்கினால், உன் வெளிமனத்தின் விழிப்பு அதிகரிக்கும் , அதனால் உன் ஆழ்மனதின் விழிப்பு குறையும். உலக இன்பத்தை நீ விரும்பினால், துன்பம் உன்னை உரிமை கொண்டாடி இழுக்கும் . ஜாக்கிரதை .
=>நமது உயிரை சிறிதளவேனும் உணர முயற்சித்தால், ஆழ்மனம் விழிப்படையும். அதை உணர முடியும்.
=> நமது தெய்வ பிரார்த்தனை மனதை உருக்குமளவு இருந்தால், ஆழ்மனம் எளிதாய் விழிப்படையும். நமது துன்பங்களை கடக்கவும், வெற்றிபெறவும் ஆழ்மனம் உறுதுணையாய் இருக்கும்.
1 கருத்து:
நீங்கள் சரியான வழியில் செல்கிறீர்கள் குரு அணுக்கள் மாற்றத்தின் மூலம் உள்ளுணர்வு உங்களை வழி நடத்துகிறது இதை சொல்வதும் உள்ளுணர்வு தான் அவன் அருளால் அவன் தாள் வணங்குதல்
கருத்துரையிடுக