ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

போராளி

 போராளியின் வரவு



 கலிஎல்லை என்னும் இந்த கொடிய காலத்தில், கார்த்திகேயன் எனும் போராளி இல்லத்திற்கு வருகை தரட்டும்.




பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியான, அலைபேசி விளையாட்டுகளும் பயனற்ற கார்டூன் படங்களிலிருந்து குழந்தைகளைக் காக்க ஒரு போராளி வரட்டும்.




அல்லற் படுத்தும் அடங்கா முனியான,  மெகா சீரியலில் இருந்து மூத்த பெண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் போன்ற  பேஸ்புக் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் இருந்து இளம் பெண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் போன்ற நவீன அழகு சாதன பொருட்கள், நவீன உடைகள் மற்றும் அழகு சாதன யூடியூப் சேனல்களில் இருந்து பெண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் ஆன  வட்டித் தொழில், ஷேர் மார்க்கெட் மோகத்தில் இருந்து ஆண்களை காக்க ஒரு போராளி வரட்டும்.


விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் ஆன  அரசியல் மற்றும் சினிமா செய்திகளிலிருந்து அனைத்து மக்களையும் காக்க ஒரு போராளி வரட்டும்.


சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்.







1 கருத்து:

Kavitha சொன்னது…

Super sir ungal uvamai