செவ்வாய், 6 ஜூலை, 2021

புதுவை சித்த ஞானம்

 ஓம் அகத்தீசாய நமஹ.




பாண்டிச்சேரி அன்பாலயம் ஜெயந்தி அன்னைக்கு உயர ஆன்மாக்கள் அருளிய நூல்களில் இருந்து சில முக்கிய குறிப்புகள் மருத்துவம் /  வாழ்வியல் குறிப்புகள்.




மருத்துவ அணுக்கள்- 1

 உடலின் எந்த உபாதைகளுக்கும் உள்ளேயே தீர்வான மருந்துண்டு என்பதனை விளங்கிடுங்கள்.  உடலில் ஒரு நோய்க்கிருமி தோன்றினால், அதனை எதிர்க்க கலியின் வெளிவட்ட அணுக்கள் தன் ஆற்றலை பிரித்து வெளிக்கொணர்ந்து கொடுக்கும்.  அதுவே கிருமியை அழிக்கும் மருந்தாகும். அவ்வாறு நோய்க்கிருமி அழியவில்லை எனில், நோயை அழிக்கும் ஆற்றல் கொண்ட அணுக்களின் மையக்கரு நன்கு வளர வில்லை, போதிய உணவில்லை என்றே பொருள்.


நூல் : ஆத்மாவின் சுயசரிதம்

அத்தியாயம் :  ஆயத்த அணுக்கள்.

###################


மருத்துவ அணு- 2

 அன்றைய காலத்தில் மருத்துவர்கள் கொடுக்கும் பச்சிலைகளும் உணவுகளும் உடலின் நோய்க்கிருமியை போக்குவதற்கு அல்ல, அவை யாவும் நோய் போக்கும் ஆற்றல் கொண்ட அணுக்களுக்கு என்று உணர். அந்த மருந்துகளை உண்டால் அவை சிரசின் அணுக்களுக்கு உணவாகி அவற்றால் உறிஞ்சப்பட்டு பின்னர் மையக்கரு நன்கு வளர்க்கப்பட்டு உடைபட்டு ஆற்றலை கீழிறக்கி நோயினை குணப்படுத்தும். அதற்கு மட்டுமே அக்காலத்தில் மருந்துகள் அளிக்கப்பட்டன. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என அறிந்து செயலாற்றினார் அக்கால மருத்துவர்கள். உடலில் சிறு நோய் தோன்றினால் உடலே அதனை சீர் செய்து கொள்ளும் என்று நீ அறிவாய். எவ்வாறு?  அதன் மருந்துகளாகிய சிரசு அணுவின் மையக் கருவே வெளிப்பட்டு உதவி நிற்கும் அவ்வாறு வெளிப்படவில்லை என்றால்தான் நோய் நீடிக்கும் பின் அவை வெளிப்பட வேண்டும் என்று அதற்கான உணவினை அளிப்பர் அந்தக்கால மருத்துவர்.

நூல் : ஆத்மாவின் சுயசரிதம்

அத்தியாயம் :  ஆயத்த அணுக்கள்.

###################


மருத்துவ அணுக்கள்- 3

 இந்த கலி காலத்தில் அணுக்களிலிருந்து ஆற்றல் பிரிபட்டு வந்து உடலினைச் சீர் செய்ய விடாமல், அதன் ஆற்றல் கொண்டிருக்கும் இரசாயன பொருட்களை நேரடியாக உடலுக்குள் உணவாக்குகின்றான் மனிதன். குறுக்கு வழிப்பாதையே இது. உடலுக்கு நோய் தீர்க்கும் மருந்து சிரசின் அணுக்களில் இருந்து வருகிறதா அல்லது நேரடியாக வெளியிலிருந்து வருகின்றதா என அறிய இயலாது. இவ்வாறு செயற்கையாக உடல் நோயை குணமாக்கக் கற்றுக்கொண்டான் கலியுக மனிதன். 


நூல் : ஆத்மாவின் சுயசரிதம்.

அத்தியாயம் :  ஆயத்த அணுக்கள்.

###################


மருத்துவ அணுக்கள்- 4

முதலில் உணவானது மருந்தாக வேண்டும் சிரசின் அணுக்களுக்கு. பின்னர் அவையே உடலுக்கு மருந்தாக வேண்டும். இவ்வாறு இன்றி முறைதவறி ஆற்றும் மானிட செயல்கள் மூடத்தனம் நிறைந்தவை.

 ஆங்கில மருந்துகள் என்று நீங்கள் உண்ணும் மருந்துகள் யாவும் இத்தகையதே. சிரசின் அணுவின் ஆற்றல்கள் பிரிபடாமல் கலிகாலம் செய்யும் சூழ்ச்சிச் செயலே ஆகும் இது. எனில் எந்த நோய்கள் தீர எந்த உணவினை உண்ண வேண்டும் என அறிந்து அவற்றை முறையாக உண்டு, அணுக்களின் ஆற்றல்களை பிரித்து எடுத்து உபயோகிக்க மனிதகுலத்திற்கு கற்றுத் தாருங்கள். அவ்வாறு செயலாற்றினால் தான் அவர்களின் அணுக்கள் ஆயத்த நிலையை அடையும்.


நூல் : ஆத்மாவின் சுயசரிதம்.

அத்தியாயம் :  ஆயத்த அணுக்கள்.

###################


மருத்துவ அணு- 5

 இயற்கையான சூரிய ஒளிக்கும் செயற்கையான விளக்குகளின் ஒளிக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.  சூரிய ஒளி மட்டுமே ஆத்ம அணுவிற்கு உண்மையான உணவாகும். செயற்கை உணவு உண்டு, ஆத்ம அணுவினை ஏமாற்ற முயல்கிறான் கலிபுருஷன்.  ஆதவனை கண் கொண்டும் பாராமல் செயற்கை ஒளியிலேயே எந்நேரமும் மனிதன் வாழ விரைவில் கற்பான்.  பின்னர் என்ன நேரும்? ஆத்ம அணுவும் செயற்கை உணவு உண்ண பழக்கப் படுத்தப் பட்டால் அதன் ஈர்ப்பு சக்தி நாளடைவில் குறைந்து பின் நின்றே போகும். பின்னர் அணுக்கள் யாவும் தீயவற்றை உறிஞ்சி உறைந்து கட்டிகளாக மாறி புற்று நோய் கண்டு பிரளயம் தோன்றும்.


நூல் : ஆத்மாவின் சுயசரிதம்.

அத்தியாயம் :  ஆயத்த அணுக்கள்.

###################




###################





###################

சூட்சுமம் - கடவுள் நிலைதனைப் பெற

காந்த இழைதனை உணர்ந்தால், கடவுள் நிலைதனைப் பெறலாம்.

 வேத நூல்களில் பலாபலன்கள் பக்கம் 111.

 கனிம ஆற்றல்கள் அத்தருணங்களில் காந்த இலை தனிலே பயணித்து வருகின்றன எனும் நிலை உணர்ந்து தெய்வ நிலைகளையும் உயர் ஆன்மாக்களையும் ஈசனையும் ஆதிசக்தி இணையும் பூஜித்து ஆற்றல்களை அதீதமாய் ஈர்த்து பெற்றிடலாம்.

 எவ்வாறு? இறைவனை துதிப்பதன் மூலமே பெற்றிடலாம் என்றறிக.

* காந்த இழையில் பாதரசம் -> அன்பினை அழைத்து பூஜித்திடலாம்.

* காந்த இழையில் தாமிரம் -> பண்பினை அழைத்து பூஜித்திடலாம்.

* காந்த இழையில் தங்கம்  -> பணிவினை அழைத்து பூஜித்திடலாம்.

* வெள்ளியின் ஆற்றல் அத்தனையும் நிர்மல தன்மையில் கிடைத்திடுமே.

 புறச்செயல்களின் மூலம் அகச்செயல்களைத் துரிதம் அடையச் செய்திடலாம்.

 ஒரு கனிம ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணிச் செயல் புரிந்தாலும், அதனுடைய குணநலன்களை புறத்திலே வெளித்தோன்றிடவே செயல்புரிய வேண்டும். புறச்செயல்களைக் கொண்டே அகத்தின் ஆற்றல்களின் நிலைப்பாட்டினை உணர்ந்திட இயலும்.

 அஞ்ஞானம் விலகி ஞானம் பெருகிட வேண்டுமெனில், அன்பும் பண்பும் கொண்டு ஆன்மா ஆற்றல்களை ஈர்த்திடல்வேண்டும். பணிவும் நிர்மலமும் கொண்டால் பெருவெளியை உணர்ந்து விடலாம்.

ஒளியுடல் சாத்தியமே.

###################


சூட்சுமம் -  அறிவானது சிந்தனைகளை தெளிவுற.

*மயக்கமா தயக்கமா வாழ்விலே குழப்பமா ?*

பக்கம் : 130


காரணம் : சீரான உறக்கமற்ற தருணங்களில் அறிவின் செயல்பாடுகளும் சீர் அடைவதில்லை. வெள்ளி எனும் கனிம வளமானது குன்றினால் அறிவானது சிந்தனைகளை தெளிவுற ஏற்றிட இயலாது. மேலும், குழப்ப நிலைகளே சித்திக்கும் என்று உணர்க.

தீர்வு :  எத்தருணங்களில் குழப்ப நிலையானது தோன்றுகின்றதோ, அத்தருணங்களில் வெள்ளி கோளினையும் அதன் ஆற்றல்களையும் பூஜித்தல் வேண்டும். அருவ நிலை உணர இயலாவிடில் வெள்ளி கோளுக்கு உகந்த தெய்வ நிலைகளையும் அதனைச் சார்ந்த வழிபாட்டு முறைகளையும் பின்பற்றினால் மிகுந்த பலன் கிடைக்கும்.

 வெள்ளி ஆற்றல் உதித்திடும் இரவு நேரத்தில் இருவேறு பிரார்த்தனைகள் புரிந்திடல் வேண்டும். ஒன்று, வெள்ளி கோளினை மனதினில் இருத்தி ஆற்றல்களை நல்கிட கோரிடல் வேண்டும். மற்றொன்று, முழு நிலவினை பூரணமாக துதித்திட வேண்டும்.

 முழுநிலவு அற்ற தருணங்களிலும் முழுநிலவினை எண்ணியே பூஜித்திட, வெள்ளி எனும் கனிமவளம் அதிக அளவில் சுரந்து விடும் என்றுணர்க.

எப்படி ? :  புறத்தினில் இச்செயலை ஆற்றுவதன் மூலம் அகத்தினிலே, வெள்ளி சுரபி, தான் பெற்றுள்ள கனிமவள ஆற்றல்களை சந்திர சுரபிக்கு அளித்திடும். சந்திர சுரபி என்பது ஒற்றை அணுவிடம் (வாலைச் சக்தி) சமர்ப்பித்துவிடும். ஒற்றை அணுவானது குழப்ப நிலை கொண்டுள்ள அணுவிற்கு வழங்கிடும். மிக உயரிய சூட்சும நிலை என்பது ஆற்றல் பரிமாற்றங்களே என்றுணர்க

###############


முருகப் பெருமானே சொல்லி ஸ்ரீ மதி ஜெயந்தி அன்னை எழுதிய கலியுகத்தின் முதல் தமிழ் வசன வேத நூல்கள் நான்கில்,

முதலாம் வேதநூலான "மூளை- எனும் தலைமைச் சுரபி" என்ற நூலில் இருந்து *கண் பார்வை சரியாக வழிமுறை*

*முருக பெருமான் அருளுரை* - *மூளை வேத நூல்* -- *முருகப்பெருமான்*

கலியுகத்தில் மானிடருக்கு கண் குறைபாடு ஏன் வருகிறது?

அதற்கு உபாயம் என்ன?

கலியுகம் தனிலே விழிகளில் பல பிணிகளை ஏற்றிடும் நிலையும், பார்வைத்திறன் குன்றிடும் நிலையும் உருவாகும்.

காரணம் பெருவெளியின் தொடர்பினை விழிகள் பெறத் தவறுவதேயாகும்.

ஆகாயம் எனும் பரந்தவெளி நிலையினிலே விண்ணுலகமும் அடங்கிடும். பெருவெளியும் அடங்கிடும். 

இரு விழிகளை மலர்த்தி ஆகாயத்தினைக் கண்ணுற்றால் பெருவெளியின் காந்த ஆற்றலானது விழிகளால் ஏற்கப்படும்.

பூரண எரிபொருளைப் பெற்றிடும் விழிகளும் சீராக இயங்கிடும்."

###############



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக