எதற்காக இல்லாவிடினும் தமிழுக்காக இன்னூல்களை நீங்கள் விரும்புவீர்கள்.
எனக்கு இதில் எந்த இலாபமோ சுயநலமோ இல்லை.
சரக்கு சித்தர்களுடையது.
அடியேன் தகவல் பகிறும் வேலைக்கார கருவிதான். 🙏🙏🙏
ஒரு புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் உங்களுக்காக.
தமிழும் ஈசனும் # 1
செம்மொழியாம் தமிழ் என்பதே, உள்ளிருக்கும் ஈசனைப் பார்ப்பதற்குச் சமம். ஈசனைப் பார்த்துவிட்டால் போதுமா ?அவரோடு ஒன்றெனக் கலக்க வேண்டுமெனில், தமிழோடும் ஒன்றெனக் கலத்தல் அவசியம். தமிழ் என்ற வார்த்தைக்கே பலநூறு விளக்கம் உண்டு. ஈசனை உள்நோக்கி அடைந்து போற்றிட, தமிழை வெளிநோக்கி போற்றுதல் அவசியம். 'அ' என்ற உயிர் எழுத்தே தமிழுக்கு அச்சாரம். முதல் துவங்கும் o வட்டமதே சந்திரனாம் அறிந்துவிடுவீர். கோடானது கீழிறங்கிச் சூரியனைத் தொட்டு பின் உள்சென்று ஈசனை தரிசித்தால், பின் வெளிவந்து நேர்கோடாய் நின்றிடுமாம். அதுவே சந்திரனையும் சூரியனையும் தாண்டி வெளி வந்து பாதுகாப்பாய் நின்று விடுமாம் அக்கோடு.
தமிழும் ஈசனும் # 2
அகாரம் தொட்டு நின்றதினால் ஆ-வையும் உற்று நோக்குங்கள். தொடங்கிய இடம் அதை விட்டு உள் நோக்கிப் பயணித்து உச்சிதனை தொட்டுவிட்டுப் பின் வெளிவந்து நின்றபேரே ஞானியர் ஆவர். 'அ' என்னும் எழுத்தை ஆராய்ந்து நின்றுவிட்டால் கூடிவிடும் ஓர் கூட்டம். 'ஆ' என்பது அதுவாகும். அனைவரையும் உள்நோக்கி இழுத்துச் சென்று உச்சம் காட்டி வெளி அழைத்து வந்து நின்றால் 'இ' எனும் இளவரசன் ஆகலாம். முழு அரசனாம் ஈசன் குடிகொண்டுள்ள இடமே 'ஈ' ஆகும். உள்ளேயும் வெளியேயும் வட்டமாய் நின்று போற்ற ஈச தரிசனம் உண்டு என்பதை குறிக்கிறது இது.
எழுத்துக்களை அறிந்தால் அன்றி ஞான உற்று காட்டாறாய்த்திரியாது. ஈசனை அடைய இவை எவ்வாறு உதவும் என்ற வினா கேட்கிறது. வெளியே தோன்றும் இவற்றைப் பிரித்து புரிந்தால் அன்றி உள்ளிருக்கும் ஈசனை அடைவது கடினம். உள்ளே வெளியே சரிசமமாய் இருத்தல் அவசியம்.
தமிழும் ஈசனும் # 3
ஆராய்ந்து கற்று விட்டால் உள் விளக்கம் பலவாகப் பல்கிடும். அகரமாகிய சிகரம் தொட்டு வெளிவந்து நின்றுவிட்டால் அகங்காரம் வெளிப்படும் எனில் 'ஆ' வெனும் கூட்டம் அழைத்து இறைவனைக் காட்டி வெளிவர ஈச தரிசனம் பெறலாம். எனவேதான் கற்றதைப் போற்றுங்கள், பகிருங்கள் என்று உரைத்தோம். 'அ' கொண்டு 'ஈ' வரை ஆராய்ந்து நின்றிடுங்கள். கற்றலின் அளவு ஓங்க வேண்டும் எனில் வெற்றிடம் அவசியம். எனில் ஏற்றம் கொள்ளப் பாடுபடுங்கள். உற்றதை உரைப்பேன் என்று யாம் ஏற்றம் கொண்டாலும் பாதுகாக்க உங்களிடம் பெட்டகமாய் வெற்றிடம் இல்லை. எனில் யாம் என்ன செய்வோம்?
தமிழும் ஈசனும் # 4
ஞானம் அளித்து தேற்றம் அடையச் செய்வது ஈசனேயன்றி வேறு யார்?
'ஞா' என்பது மிகப்பெரிய, அளவிட முடியாத என்ற பொருளைத் தரும்.
'ன' என்பது நமச்சிவாயமாகிய ஈசனையே குறிக்கும்.
ம் = அ + ம + ஃ என்பதாகும்.
அ வில் தொடங்கி மத்தியில் சென்று முச்சுடரை அடைவதே ஆகும்.
ஆக, ஞானம் எனில் அளவிடற்கரிய நமச்சிவாயமாகிய ஈசனை மத்தியில் காண்பதே ஆகும். ஒளிபொருந்திய அவன் காட்சியே ஞானம் ஆகும். அவனை அறிந்தவரே ஞானியாவார். அறிவது மட்டுமன்றி அவனோடு ஒன்றெனக் கலப்பதுவே ஞானத்தின் முழுமையாகும்
தமிழும் ஈசனும் # 5
ஞானத்தை முழுமையாக பற்ற விடாமல் செய்யும் மாயையின் வேலையே ஆணவம் ஆகும். ஆணவம் = ஆ + ந + அவம். 'அ' என்ற முதல் எழுத்தில் தொடங்கி 'ஆ' என்ற இரண்டாம் எழுத்தில் பயணித்து 'ந' என்கிற நமச்சிவாயத்தை அடையும் நேரம் அவம் என்கிற தீய மாயை நம்மைப் பற்றிவிட துடிக்கும். பலர் ஞானமடையும் நேரம் இந்த மாயையில் தான் சிக்கிக் கொள்வார்கள். கர்வம் என்று அழைக்கப்படுவதும் இதுவே ஆகும். கரு + அவம் = கருமை நிறத்தாலே நம்மை மூடப்பார்க்கும் அவம் என்கிற மாயையே அது. எனவே தான் யாம் மீண்டும் மீண்டும் உரைக்கின்றோம் ஆணவம், கர்வம் எனும் மாயையிடம் சிக்காமல் பணிவு கொண்டே வென்றிடுங்கள் ஞானத்தை என்று.
தமிழும் ஈசனும் # 6
அற்புதமாய் ஆளவந்த அருட்பெருஞ் ஜோதியைப் போற்றுங்கள். வெற்றிடம் நிற்பது அருட்பெருஞ்ஜோதியாம் நம் பரமனே ஆவார்.
வெற்றிடம் = வெ + அற்ற + இடம்.
வெ = வ + எ = வ + எ + அற்ற + இடம் = வெற்றிடம்.
வ- என்பது வன்மை ஆகும்.
எ- என்பது எண்ணம் ஆகும்.
வன்மை எண்ணம் அற்ற இடமே வெற்றிடம்.
நான் எனும் அகங்காரமே வன்மை ஆகும். எனில் அகங்காரம் அற்ற இடத்தை ஒவ்வொரு மனிதனும் தொடும் நேரம் வெற்றிடத்தை அடைவான்.
வெற்றிடத்தின் மையத்திலே பரமன் வீற்றிருப்பான். ஆகாயமே வெற்றிடம் ஆகும். எனவே அனைவரும் விரைந்து அகங்காரம் என்ற நான் என்னும் எண்ணத்தைத் துறந்து விட்டால் ஆகாயத்தில் பயணிக்கலாம்.
நூல் : ஆகம வேதம்
அருளியவர் : பாரத்வாஜர் மகரிஷிகள்
வெளியீடு : ஞானாலயம், பாண்டிச்சேரி
+++
அகத்திய பக்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக