வியாழன், 6 ஏப்ரல், 2023

மனமது செம்மையானால்...

  மனமது செம்மையானால்

select the page content to read if it is hidden.

ஓம் அகத்தீசாய நமஹ..


 ஏற்கனவே கடந்த பதிவுகளில் சொன்ன தத்துவங்கள் தான்.  எனினும் அனைத்தையும் ஒரே இடத்தில் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்..

 


=> நீ உன்னை புறமனமாகவும் உடலாகவும் உணரும்வரை உன்னை கர்ம வினைகள் வாட்டும். புறமனமாக உன்னை நீ உணர்வதே உனது மாயா கர்மா ஆணவம் ஆகும் .


=> நீ உன்னை ஆழ்மனமாகவும் உயிராகவும் உணர முயற்சி செய்.  உன் முயற்சி விரைவில் நல்வழி காட்டும்.


=> வெளிமனம் செம்மையானால் ( மாயா கர்மா ஆணவ மாசு நீங்கி சிறப்பானால் ), நமது ஆழ்மனதை உணரலாம்.


=> உன் தேவைக்கு இறைவனை வணங்காதே. உன் தேவையே இறைவன் என வணங்கு.


=> இறைவனிடம் முழுமையாக சரணடைந்து வணங்கு.  மனித குருமார்களிடம் சிக்காதே, அடிமை ஆகாதே. இந்த கலியுகத்தில் மனித குருமார்கள் பெரும்பாலும் போலிகள் அல்லது முழுமை அடையாதவர்கள்.


=> உனது உயிரின் இருப்பிடத்தை துல்லியமாக தெரிந்து இரு. இங்கே மனதை வைத்து பிராத்தனை செய். உயிரின் நினைவகம்தான் ஆழ்மனம். இரண்டும் ஒருங்கிணைந்தது ஆகும்.


=> உனது உயிரில் வந்து அருள் செய்பவரே குருநாதர். அவரை மட்டும் வணங்கி பிராத்தனை செய் . மனித குருமார்களிடம் மயங்காதே. ஜாக்கிரதை .


=> உன் அன்றாட கடமைகளை ஒழுக்கத்தோடும் நேர்மையோடும் தொடர்ந்து செய்.


=> தினமும் காலையும் மாலையும் மனமுருகி பிராத்தனை செய் . "இறைவா! உன் பாதத்தோடு விரைந்து சேரவேண்டும்" என்று விருப்பத்தோடு பிராத்தனை செய் . இந்த பிராத்தனை உன் வெளிமனதை கட்டுப்படுத்தி உன் ஆழ்மனதை விழிப்படைய செய்யும் . ஆனால், இந்த வேண்டுதல் ஏதோ சோகத்தின் வெளிப்பாடு அல்லது தற்கொலை  என தவறாக எண்ணவேண்டாம். மாயா கர்மா ஆணவத்தால் உருவான வெளிமனத்தின் மரணத்திற்க்கான சூச்சுமமே இது.


=> மேற்கண்ட பிராத்தனை உன் கடமைகளை எளிதாய் செய்ய உதவும் . விருப்பு வெறுப்பில் சிக்க மாட்டாய். இறைவனோடு ஆன்ம தொடர்பை உணர்வாய் . நிறைவான மகிழ்ச்சியில் இருப்பாய். ஜாதக பலன், கோள்களின் பெயர்ச்சி பலன் உன்னை கட்டுப்படுத்தாது. உன் ஆழ்மனதின் விழிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும். இதன் உச்சக்கட்டத்தில் நீயே தெய்வ நிலைக்கு உயர்வாய்.  அஹம் பிரம்மாஸ்மி.  தத்துவமசி.


=> உன் ஆழ்மனதின் சக்தி மிகவும் ஆற்றல் பெற்றது.  அதுவே ஆதிபராசக்தி ஆகும் .


=> ஆழ்மனதின் விழிப்புணர்வால் அடுத்து நடக்கப்போவதை அல்லது வருங்காலத்தை கணிக்க முடியும் . ஆனால் அந்த அற்புத ஆற்றலால் உலக மாயையில் சிக்காதே. இறைவனோடு சேர்வது ஒன்றே எனது விருப்பம், என்று தொடர்ந்து செல்.


=> உலக மாயையில் ( சுயநலம், புகழ்ச்சி, ஆணவம் ) நீ சிக்கினால், உன் வெளிமனத்தின் விழிப்பு அதிகரிக்கும் , அதனால் உன் ஆழ்மனதின் விழிப்பு குறையும். உலக இன்பத்தை நீ விரும்பினால், துன்பம் உன்னை உரிமை கொண்டாடி இழுக்கும் . ஜாக்கிரதை .


=>நமது உயிரை சிறிதளவேனும் உணர முயற்சித்தால், ஆழ்மனம் விழிப்படையும். அதை உணர முடியும்.


=> நமது தெய்வ பிரார்த்தனை மனதை உருக்குமளவு இருந்தால், ஆழ்மனம் எளிதாய் விழிப்படையும். நமது துன்பங்களை கடக்கவும், வெற்றிபெறவும் ஆழ்மனம் உறுதுணையாய் இருக்கும்.




1 கருத்து:

  1. நீங்கள் சரியான வழியில் செல்கிறீர்கள் குரு அணுக்கள் மாற்றத்தின் மூலம் உள்ளுணர்வு உங்களை வழி நடத்துகிறது இதை சொல்வதும் உள்ளுணர்வு தான் அவன் அருளால் அவன் தாள் வணங்குதல்

    பதிலளிநீக்கு