விண்ணைத் தாண்டி வருவாயா ?
குருநாதர் அருளால் கடந்த ஆறு ஆண்டுகளில் அற்புதமான ஞானியரையும், அருள் ஆற்றல் கொண்ட இயற்கை வைத்தியர்கள் பலரையும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அடியேனுக்கு அதிகமாய் கிடைக்கிறது. இவர்களை நாடி வரும் பெரும்பான்மையானோர் வேண்டி கேட்பது குழந்தை செல்வமே! நடுத்தர குடும்பம் மற்றும் வசதி வாய்ப்புள்ள இந்த தம்பதிகள் பத்து அல்லது பதினைந்து வருடங்களாக "குழந்தை இல்லை" என ஏக்கத்தோடு வாழ்வதை பார்க்கும் போது நமக்கு பரிதாபமாக இருக்கும். நான் தினமும், மிகுந்த வறுமை கொண்ட சேரி பகுதியை கடந்து பெரிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்க வேண்டும். சேரிப் பகுதியில் ஒவ்வொரு குடிசைகளிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் கண்டிப்பாக இருக்கும். இந்த குடிசை பகுதியை கடந்த பின் நெடுஞ்சாலைக்கு வரும்பொழுது, நெடுஞ்சாலை சந்திப்புகளில் வடமாநிலத்தவர்கள் அதிகமாய் பிச்சை எடுத்துக் கொண்டோ அல்லது ஏதாவது ஒரு பொருளை விற்றுக் கொண்டோ இருப்பார்கள். பிச்சை எடுப்போர் பத்து வயதுக்கும் குறைந்த குழந்தைகளும் அதிகமாய் இருப்பார்கள். இந்த வடமாநில குழந்தைகளின் தாய்மார்களும் ஆங்காங்கே சாலையோரமாய் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு பெண்ணின் மடியிலும் ஒரு தாய்ப்பால் குடிக்கும் சிறு குழந்தை இருக்கும். மேலும் 5 வயது ஒத்த குழந்தைகளும் அருகே அதிகமாய் விளையாடிக் கொண்டிருக்கும். பிறந்ததிலிருந்து எண்ணெய் தேய்க்காத பரட்டை தலை, அழுக்கேறிய பழுப்பு நிறம், நைந்த உடை, என வறுமையின் கோரத்தை நாம் நன்கு பார்க்கலாம். இவர்களுக்கு இருக்க இடம் இல்லை சரியான உணவு இல்லை, ஆனால் ஒவ்வொரு பெண்ணிற்கும் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் வெகு எளிதாய் எப்படி பிறந்து கொண்டே இருக்கிறது? என அடியேன் எனக்கு மிகுந்த ஆச்சரியமாய் இருக்கும். ஒவ்வொரு முறை இவர்களை கடக்கும் போதும் நான் குருநாதரிடம் இந்த குழந்தை பிறப்பின் ஏற்றத்தாழ்வை கேட்டுக்கொண்டே இருப்பேன். நல்ல பொறுப்புள்ள, ஓரளவிற்கு சம்பாத்தியம் அல்லது வசதி வாய்ப்புள்ள தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதே இல்லை, ஆனால் இருக்க இடமில்லாத வறுமையின் கோரத்தில் உள்ள தம்பதிகளுக்கு மட்டும் சர்வ சாதாரணமாக குழந்தை பிறக்கிறது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு ?
நம் குருநாதர் இதற்கான பதிலை பாண்டிச்சேரி ஞானாலயத்தின் நூல்கள் வாயிலாக தெளிவாக எனக்கு உணர்த்தினார். இந்த நூல்கள் வால்மீகி மகரிஷி, அகத்திய மகரிஷி, பரத்வாஜர். முருகபெருமான் போன்ற உயர் ஆற்றல்கள் அருளியவை. இது உண்மையா என உங்களுக்கு சந்தேகம் வரலாம். நூல்களை படித்தபின் அதன் ஆழ்ந்த விஞ்ஞான பூர்வமான உண்மைகளை நீங்களும் உணரலாம். நம் குருநாதர் தற்போதைய காலகட்டத்தை கலியுகத்தின் எல்லை என்கிறார். இன்னும் சில ஆண்டுகளில் நாம் அனைவரும் கலி யுகத்தின் கடைசி கட்டத்திற்குள் நுழைகிறோம். சாஸ்திர கணிப்புகளை கடந்து இவ்வளவு விரைவாக கலியுக எல்லைக்கு மனிதர்கள் வர காரணம், ஒட்டுமொத்த மனிதர்களின் மாய கர்ம ஆணவமே. முக்கியமாக மின்னனு கண்டுபிடிப்பு சாதனங்கள், செயற்கை மற்றும் நஞ்சு பொருட்கள், புவி மாசுபாடு மற்றும் பல. என்னடா இவன் உப்பு சப்பில்லாத கதையை எழுதுகிறானே, என யோசிக்கிறீர்களா? இனிமேல் தான் மனிதர்களின் போராட்ட வாழ்க்கை ஆரம்பிக்கப் போகிறது. தற்போதைய கொரானா வெறும் சாம்பிள் தான். முருகப் பெருமான் அருளிய பல ஆச்சரியமான தகவல்களை பதிவின் கடைசியில் குறிப்பிட்டுள்ளேன்.
சரி. இப்பதிவின் கேள்விக்கான பதிலை பார்க்கலாம். கலியுக எல்லைக் காலமான தற்போதைய காலகட்டம் மனிதர்கள் அழிவிற்கானது, பூமியின் புனரமைப்பிற்கான காலம். நல்ல மனித ஆன்மாக்கள் இனி பூமியில் பிறப்பது கடினம். அதாவது வாழ்வதற்கு மிகவும் சவாலான மிகவும் தீய சூழலில் கட்டாயம் வாழ வேண்டும் என்ற விதி கர்மா உடைய மனித ஆன்மாக்களே இனி அதிகம் பிறப்பார்கள். இப்போது உங்களுக்கு விபரீதம் புரியும் என்று நினைக்கிறேன். அப்படியெனில் இந்தப் பதிவை படிக்கும் நம் நிலை என்ன என யோசிக்கிறீர்களா? விரைவில் இறைவனோடு சேர்ந்து விட வேண்டும் என்ற பக்தியோடு தினமும் இறைவனை வணங்கி, இப்பூமியில் அதிக காலம் வாழவேண்டும் என்ற விடாப்பிடியான பற்றை நீக்கிவிட்டு "பற்று அற்ற மனோநிலையில்" தன்னால் இயன்ற நல்ல காரியங்களை செய்து கொண்டு, இயன்ற வரை இறை பக்தியோடு இங்கு வாழ வேண்டும். எதற்கு பிரச்சனை என தற்கொலை செய்துகொண்டாலும், மீண்டும் இந்த கொடிய கலிகாலத்தில் பிறக்க நேரிடும், ஜாக்கிரதை. ஒரே வழி பற்றற்ற நிலையில் அதிகமான இறை பக்தியோடு வாழ்வதே.
ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறக்கவில்லை எனில், கொடிய கலியின் எல்லையில் நல்ல ஆன்மாக்கள் வர தயாராக இல்லை, என்று அர்த்தம். எனவே வரும் கால கட்டத்தில், குழந்தைகள் பிறக்காமல் இருப்பதே சிறப்பு. குழந்தை இல்லாத தம்பதிகள் மகிழ்வோடு இறைவனை வணங்கி ஈச லயத்தோடு வாழ்ந்து, ஈசனை அடைய தங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.
கலியின் எல்லை 2025 ஆக இருப்பதற்க்கான ஒரு ஆய்வுப் பதிவு ஆங்கிலத்தில். இதை எழுதியவர் என்ன படித்திருக்கிறார் என கவனியுங்கள்.
https://grahamhancock.com/dmisrab6/
For the past 2,700 years we have been evolving through the ascending Kali Yuga, and this Yuga is coming to an end in 2025. The end of the Yuga will inevitably be followed by cataclysmic earth changes and civilization collapses, as is characteristic of the transitional periods.
உயர் ஆற்றல்கள் அருளிய ஞானாலய பதிப்புகளில், அடியேனுக்கு கிடைத்த சில குறிப்புகளை மட்டும் கீழே பார்க்கலாம். ஆனால் இந்த நூல்களை வாங்கி முழுமையாக படித்தால் மட்டுமே உங்களுக்கு சரியான புரிதல் கிடைக்கும்.
A) கலியுக காவியம் ஆன்மாவின் சுயசரிதை. அருளியவர் வால்மீகி மற்றும் அகத்திய மகரிஷிகள்.
இதில், கலியுகத்தில் மனிதன் எப்படி தன் வாழ்வை படிப்படியாக பாழாக்கிக்கொண்டான், அது எப்படி புற்றுநோய்க்கு வழிவகுக்கும், இதற்கான தீர்வு என்ன? என விளக்கும் நூல்.
B) மூளை எனும் தலைமை சுரபி.
அருளியவர் முருகப்பெருமான்.
* மூளையின் அழிவு என்பது பிரளய நோய் எனப்படும் புற்றுநோயின் மூலமே உருவாகும். மாந்தர் குலம் அழிவினை நோக்கியே சென்று கொண்டு உள்ளது என்பதனை வளர்ந்து வரும் புற்று நோயினை கொண்டே அறிந்திடலாம். பிரளய நோய் என்று அறியப்படுகின்ற புற்றுநோயானது நில நீர் மூலக்கூறுகளின் தன்மையில் உருவான மாற்றத்தினால் மாத்திரமே பெருகிடும்.
* கலி மானிடர்களில் பலர் சிறுபிராயம் தனிலேயே மூளையின் செயலிழப்பு கண்டுள்ளனர். பல மானுட மூளைகள் சீரற்றே இயங்கிக் கொண்டுள்ளன.
* கலி மானிடர்கள் சுவாசிக்கும் வாயுவினிலே கலந்துள்ள உயர் பிராண வாயு (oxygen) என்பது சிரசின் அணுக்களுக்கு சீராக அடைவதில்லை.
* அமில கழிவுகள் சிரசினிலே கூடினால் அவை யாவும் இணைந்து புற்றுக் கட்டிகளாக உருமாறிவிடும்.
* கலியின் எல்லைப்பகுதியில் உயர் பிராணவாயு ஆக்ஸிஜன் மிகவும் குன்றிவிடும் காரணத்தால் உடலின் பல உறுப்புகளும் ஒருசேர பாதிப்புறும், சிரசிலும் புற்றுநோய் உருவாகும்.
* உறுப்புகள் யாவும் அழுகிய நிலையில் பெரும் பாதிப்பினை உருவாக்கும் ஒவ்வொரு மனிதரும் பெரும் வேதனைக்கு உள்ளாகும் நிலையும் உருவாகி விடும்.
* பூமி கிரகமானது மெல்ல மெல்ல கொதிநிலையில் கூடி, சூரியனைப் போன்று எரி நிலையும் கொண்டிட துவங்கிவிடும். மூளையின் அழிவு என்பது அதிகரித்தால் புவிக் கோளின் அழிவு என்பதும் அதிகரிக்கும். புவியின் புனரமைப்பு நடைபெற்ற பின்னரே உயிரினங்கள் வசிக்க முடியும் கலியின் எல்லைப்பகுதி என்பது கொடியது.
* கழிவுகளில் மிகவும் கொடியது பாதரச கழிவு. கலியுக எல்லையில் மாத்திரமே அவை புவியினை அடைந்திட இயலும்.
* உயர் பிராண படலம் எனும் ஓசோன் லேயர், பாதரச கழிவுகளால் உருவான ஒரு திரைப்படலமாகும். கலியுக எல்லையில் இந்த திரைப்படலமானது அதிக வெப்ப ஆற்றலால் உருகி கரைய துவங்கிவிடும்.
* ஓசோன் லேயர் அழிவதால் ஈசன் எனும் உயர்ந்த காந்த கல்லானது புவியினை விரைந்து அடைந்துவிடும்.
* மானிடர்களின் உடல் உறுப்புகளின் வளர்ச்சி குன்றிவிடும். மானுட உருவ அமைப்புகளும் மாற்றமுறும். இயற்கையை ஒத்த பல செயற்கை உறுப்புகள் மானிடர்களால், உருவாக்கி இணைக்கப்படும். அதன் மூலம் அழிவது ஆன்மாவும் புவிக்கோளும் என்றுமே உணர வேண்டும்.
* பூமியின் நிலப்பரப்பு முழுமையாக மாசடையும். நீர்நிலைகளும் முழுமையாக வற்றிவிடும். உருவான பாதரச கழிவு புவியினில் பெரும் வெப்பத்தை தூண்டும் பெரும் குளிர்ச்சியையும் தூண்டும்.
* புவியின் மேல் பரப்பு, மானுடர்கள் வாழ்ந்திட சாத்தியமற்ற நிலையினை உருவாக்கும். புவியானது கூடிய வேகத்துடன் சுழல்வது நில நீர் வாயுவின் மூலக்கூறுகளை பாதித்துவிடும். வாயுவின் மூலம் தோன்றும் கழிவுகளும் பெருமளவில் மானுட ஆன்மாக்களை பாதிக்கும்.
* மானிடர்களின் சிந்தனைகள் சீர்கேடு அடையும். செயல்களும் கொடியவையாக மாறிவிடும்.
* மூளை சிதைவு என்பது வெவ்வேறு ரூபங்களில் வெளித் தோன்றும்.
*** மூளை வளம் குன்றிய பிள்ளைகள் அதிக அளவில் பிறப்பார்கள். மன அழுத்தம் மன இறுக்கம் போன்றவை மானிடர்களை அதிக அளவில் பாதிக்கும். மூளைப்பகுதியில் உள்ள பாதரச கழிவுகளே இதற்கான மூல காரணமாகும்.
C) ஒளி - இரண்டாம் வேதம்.
அருளியவர் முருகப்பெருமான்.
* புவிக் கோள் என்பது தாமிர கனிமத்தை அதிக அளவில் சேமித்தால் அதன் வெப்பமும் பெருகும். அதன் மூலம் அதன் இயக்கமும் பெருகிடும். பூமியானது விரைந்து சுழன்றிட மூலகாரணம் தாமிர கனிமவளமே. அதன்மூலம் புவிக்கோள் என்பது விரைந்து சுழன்று இறுதியில் சூரியனை அடைந்துவிட முயன்றிடும். சூரியனை நெருங்கி சென்றிடவே முனைகின்ற புவியின் செயலுக்கு மூலகாரணம் தாமிர ஒளி ஆற்றலே. புவியின் இச்செயலைக் கண்டு அதன் ஈர்ப்பு விசையின் அதிகரிப்பினை உணர்ந்து, "ஈசன் என்னும் காந்த கல்லானது" புவியினை அடைந்திடவே விரைகின்றது.
* புவியின் புனரமைப்பு நிகழ்ந்திடும் கலியுகம் நிறைவடைந்து சத்திய யுகம் மலர்ந்திடும். தாமிர ஒளி ஆற்றல் பெருமளவில் உதவிடும். தாமிர ஒளி ஆற்றல் ஒன்றே அதிக வெப்பத்தினை நல்கி புவியின் இயக்கம் துரிதம் அடையவும் உதவுகின்றது. புவியானது தாமிர ஒளி ஆற்றலை ஏற்று விரைந்து இயங்கி யுக மாற்றங்களை நிகழ்த்துகிறது.
* அனுதினமும் சூரிய ஒளி ஆற்றலை ஏற்று வாழ்கின்ற ஆன்மாவானது, கலி எல்லையில் சூரிய ஒளி எனும் உணவின்றி வாடும் நிலையும் உருவாகும். பாதாள வாழ்வு என்பது புதையுண்ட வாழ்வாகும். பல்வேறு மானுடர்கள், சூரிய ஒளி ஆற்றலை விழிகளால் ஏற்று விட இயலாத நிலை உருவாகும். புவியின் சுழற்சி எனபதை அறிந்திட இயலாது. இரவும் பகலும் உணர்ந்திட இயலாது. பசி உணர்வு தோன்றாது. அன்பும் கருணையும் உதித்திடாது.
* மானிடர்களின் நிலைப்பாடு என்பது கடும் சோதனைகளுக்கு ஆட்படும். ஆன்மாவானது சூரிய ஒளி ஆற்றலை உணவாகப் பெற்றிட இயலாத நிலையில் உணர்வுகள் யாவும் அற்று விடும்.
* கலியின் எல்லை காலம் தனில் தெய்வ ஆற்றலும் குன்றிவிடும். குருவின் துணையும் நிலைத்திடாது. ஆன்மாவும் ஆற்றல்களை இழந்து சோர்வுறும். அத்தருணத்தில் எழுச்சி கொண்டு இயங்குவது ஞானாலயத்தின் நான்கு வேத நூல்களுமே என்று உணருங்கள்.
* சூரிய ஒளி அற்ற தருணத்திலும் பாதாள வாழ்வு எனும் இருள் வாழ்வு சூழ்ந்தாலும் மானுட ஆன்மாக்கள் ஒளி என்னும் வேத நூலினை கற்று ஆராய்ந்து அறிந்து விட்டால் ஆன்மாவானது விழித்தெழும்.
***
என்ன மக்களே! மேலே உள்ள குறிப்புகளை பார்க்கும்பொழுது பயங்கரத்தை உணர்கிறீர்களா ? அடியேன் எனது நோக்கம் உங்களை பயமுறுத்துவது அல்ல. எனது நோக்கம், முதலாவதாக, உயர் ஆற்றல்களின் நூல் குறிப்புகளை நீங்கள் படித்து முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதே. மேலும் இந்த நூல்களில் கலியுக எல்லையை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்ன தீர்வு என்பது விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
Some approximate calculation based on my personal assumptions :-
The language of Kaliyuga is English. As per wikipedia the age of English language is 1400 years.
This 1400 years is equal to 3 / 4 th of Kaliyuga.
So, the remaining 1 / 4 th = 1400 / 3 = 466 years.
This 466 years covers the gradual destruction of humen souls, reconstruction of earth, stabilization period and final preparation of Sathya yuga to download the reserved souls.
Hmmm, do you think it is a well designed imagination story ? Try to read the above books. The content is well structured and does not look like the imagination of some humen. We may feel the serious heat from year 202x. Let us wait and see.
இப்படிக்கு
அகத்திய பக்தன்.