சனி, 10 அக்டோபர், 2020

ஆதிபராசக்தியின் செல்லப்பிள்ளை - பகுதி இரண்டு

 ஆதிபராசக்தியின் செல்லப்பிள்ளை - பகுதி இரண்டு.


        சமீபத்தில் சகோதரர் ஸ்ரீ சக்தி சுமனன் "ராம்பரசாதி காளி மீதான கவிதைகள்" பற்றிய அருமையான facebook பதிவுகளை அடியேன் படித்தேன். மிகவும் அபூர்வமான பாடல்களை தேடி கண்டுபிடித்து அதை அற்புதமாக தமிழில் வடித்து பொருளும் எழுதியிருக்கிறார் . இவர்தம் சிரசின் அணுக்களில் குருநாதரின் அருள் மின்னலாய் பாய்ந்து பாய்ந்து ஒளிர்வதை உணரமுடிகிறது . எனக்கு வழக்கம் போல் நம் குருநாதர் எப்படி ஆதிபராசக்தியோடு ஐக்கியமாகி அவளின் அருளை பெற்றார் என சொல்லத் தோன்றியது . சக்தி சுமனின் பதிவுக்கு கருத்து எழுத முயற்சித்து இங்கே ஒரு தனி பதிவு உருவானது .



        சென்ற பகுதியில், குருநாதர் அய்யா ஆதிபராசக்தியான ஒற்றை அணுவின் அருளை எந்த அளவிற்கு பெற்றவர் என "ஆன்மாவின் சுயசரிதை" என்ற நூலின் சில குறிப்புகளிலிருந்து பார்த்தோம். அதன் தொடர்ச்சியான இந்த இரண்டாம் பகுதியில், குருநாதர் அய்யா எப்படி ஆதிபராசக்தியின் அருளைப்பெற்றார் என்ற ஒரு குறிப்பைப் பார்ப்போம் . நம் குருநாதர் "திரேதா யுக வாசியோகம்" பயிற்சி செய்து ஆதிபராசக்தியின் அருளை பெற்றவர் . ஆனால் அய்யா, தாயின் அருளைப்பெற மிக கடுமையாக உழைத்து பல துன்பங்களை அனுபவித்து சித்தி பெற்றிருக்கிறார் . இதை அய்யாவே தனது "ஞான சைதன்யம் 51" என்ற நூலில் பாடல் 21 -லிருந்து அழகாக விவரிக்கிறார் . இந்த பாடல்கள் மூலம் நாம் பல அபூர்வ தகவல்களை அறியலாம் . அய்யா தாயாரிடம் கண்ணீர்விட்டு கெஞ்சி அழுது அமிர்தம் வாங்கி உண்கிறார் . அந்த அமிர்த போதை தலைக்கேறி அவரை மனதளவிலும் உடலளவிலும் கடுமையான பல பாதிப்புகளை காட்டுகிறது . அத்தனை துன்பங்களையும் தாங்கி, யோகத்தில் தேறி தாயோடு இணைந்து அவளின் பூரண அருளை பெற்றுவிடுகிறார் . அய்யாவின் பாடல் வரிகளை அடியேன் இயன்றவரை கீழே உங்களுக்காக தட்டச்சு செய்திருக்கிறேன் . மேலும் அந்த பாடல் ஒலித்துணுக்கையும் இணைத்திருக்கிறேன் . இதை அருமையாக இசைத்து பாடியவர் திரு. வீரமணி கண்ணன் அவர்கள் . முழுமையான பாடல் தொகுப்பு "மதுரை கீஸ்டு கானத்தில்" கிடைக்கும் .


தீபத்தில் நின்றுகொண்டேன் அநேக காலம்
சிவசிவா நினைத்ததெல்லாம் சித்தியாச்சு
கோபத்தை எள்ளளவும் மனதில் வையேன்
கூவென்று அழுத்திட்டேன் தாயைப் பார்த்து
ஆபத்து என்ன வந்தது என்று சொல்லி
ஆத்தாளும் என் முகத்தை பார்த்து நின்று
ஏமத்த அமிர்தமதை இந்தா வென்று
எனக்கும் அவள் ஈந்திட்டாள் பார்த்திட்டேனே...

பார்த்திட்டேன் மதிஅமுதம் தன்னை தின்று
பார் என்றாள் மேல்மூலம் பார்க்கும்போது
வேர்த்திட்டேன் முகமெல்லாம் களையும் ஆகி
விழுந்தேன் நான் போதைதனில் சிக்கிக் கொண்டேன்
ஆப்பிட்டேன் அவள்போதம் தன்னில் சிக்கி
அலறினேன் உளறினேன் ஆத்தாள் தன்னை
கூப்பிட்டேன் போதைதனை சகிக்க மாட்டேன்
புதுமையிது போதுமென்று அழுதிட்டேனே...

அழுதயெனைப் பார்த்த சிவகாமி ஆயி
அம்பரமாம் இடக்கலையில் இறுத்து என்றாள்
பழுதப்போ கலைமாறி போதை போச்சு 
பார்மகனே இன்னும் என்ன கவலை என்றாள்
குளிர்ந்திடவே செல்வம்போல் வந்துநின்று 
கூப்பிட்டாளே என்று திரும்பி பார்த்து
கழலற்ற பால்போலே என்னைத்தானும்    
கண்மணி என்றே சொல்லி முத்திட்டாளே 

முத்திட்டாள் முகத்தோடு முகம் அணைத்து
மோசமில்லை நீ நானும் ஒன்றே என்றாள்
பெற்றிட்டேன் அவள் நானாய் நான் அவளாய்  
பேதமில்லை இருபெரும் ஒன்றே ஆனோம் 
சத்தியமாய் குருமொழியை தவிராதானே
தாய் நானும் ஒன்றானோம் தப்பே இல்லை 
நித்தியமாய் அடிநின்று முடியில் ஏறு
நிர்ணயமாய் சொல்லிவிட்டேன் நிசமாய்த்தானே ...
   


அய்யாவின் பாடல் வரிகளை எளிதில் படிக்கமுடியும் . என்ன ? ஆதிபராசக்தி அவ்வளவு எளிதில் யாரையும் தன்னோடு இணைய விடமாட்டாள், என்று சென்ற பதிவில் படித்தது இப்போது புரிகிறதா ? கீழே உள்ள இணைப்பை அழுத்தி பாடல் துணுக்கை கேட்டு மகிழுங்கள் .


https://youtube.com/clip/UgkxqbnsLvjoTi7ajx_e4ylVGDrob86H_jP9

https://drive.google.com/file/d/10b3NTV_VolNqfcStMXXTrJUKJSZ6hW8I/view?usp=drivesdk


கேள்வி : இந்த திரேதா யுக வாசியோகத்தை நானும் பயிற்சி செய்து சித்தியாகி ஒளியுடல் பெறலாமா ?
பதில் : முடியாது . இந்த கலியுக எல்லைக் காலத்தில் அது சாத்தியமில்லை . ஒளியுடல் பெற்ற மகாசித்தர், குருவாக உங்கள் சிரசில் இறங்கி அந்த சித்தரே உங்கள் வாசியை நடத்தவேண்டும் . இதைப்படித்த உடனே கவலைப்பட வேண்டாம், குழப்பமும் வேண்டாம் . முருகப்பெருமான் ஒளியுடலுக்கான வழிமுறைகளை "கலியுக வேத நூல்களாக" ஞானாலயத்தின் மூலம் வெளியிடுகிறார் . இந்த ஞானாலய நூல்களின் வழிமுறைகள் உயர் ஆற்றல்கள் உங்கள் சிரசில் இறங்க தடையான அணுக்களை நீக்கும் .


கேள்வி : உங்களின் பதிவுகளை மற்றவர் குழுவின் பதிவில் ஊடுருவி இடைபுகுந்து கருத்தாக புகுத்துவது நியாயமா ? நாகரிகமா ?
பதில் : நிச்சயமாக நியாயமில்லை . மேலும் அந்த குழுவின் எரிச்சலையும் சாபத்தையும் அடியேன் நான் சந்திக்க நேரிடும் . சாதாரணமாக நான் எல்லா குழுவிற்குள்ளும் ஊடுருவுவதில்லை . குருநாதரின் அருள்பெற்ற மூன்று குழுக்களில் மட்டுமே குருநாதரை வணங்கி ஊடுருவி பதிவிடுகிறேன் . அதுவும் 2024 -ஆம் வருடம் வரை மட்டுமே .


கேள்வி : அது என்ன 2024 ?
பதில் : நம் குருநாதர், முருகப்பெருமான் மற்றும் பல உயர் ஆற்றல்கள் அருளிய ஞானாலய வெளியீட்டு நூல்களில் ( ஆன்மாவின் சுயசரிதை மற்றும் முருகரின் வேத நூல்கள் ) மூலம் அடியேன் அனுமானமாய் உணர்ந்ததே இந்த 2024 வருடம் . உங்கள் ஆய்வுக்கு உட்பட்டதே . இந்த வருடத்திற்கு பிறகு பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பதை உணரலாம் . யுகமாற்றத்திற்கான ஈசனின் சங்கொலி சத்தம் கேட்க ஆரம்பிக்கும் . இந்த கூடிய சுழற்சி வேகத்திற்கு ஏற்றபடி மனிதர்களின் உடல் உறுப்புகள் மற்றும் மூச்சும் ஒத்துப்போகாமல் பிணிகள் கூடும் . முக்கியமாக கெட்டியான இரத்தம் உடையவர்கள் மிகவும் துன்பப்படுவார்கள் . என்னடா இவன் இஷ்டத்திற்கு கதை காட்டுகிறான் என நீங்கள் நினைக்கலாம் . திடீரெனெ இப்போது உயர் ஆற்றல்கள் கீழிறங்கி கலியுக வேத நூல்களை வெளியிடும் அவசியம் என்ன? என சிந்தித்து பாருங்கள் . இந்த புத்தகங்களை காலம் தாழ்த்தாமல் வாங்கிப் படித்து, உள்ள விபரங்களை எந்த அளவிற்கு அறிவியல் பூர்வமாக உள்ளது என ஆராய்ந்து பாருங்கள் . நமக்கு துன்பம் வந்தால் பரவாயில்லை. ஆனால் நமக்கு பிரியமானவர்களுக்கு நம் கண்முன்னே துன்பம் வந்தால், அதை பார்க்க சகிக்காது . இனி விதி விட்ட வழி .


அடுத்த பகுதியில் நம் குருநாதரை பற்றிய மிகவும் அபூர்வமான தகவல்களை பார்ப்போம் .


ஓம் அகத்தீசாய நமஹ.
அகத்திய பக்தன்.


( பல வேலை பளுவிற்கு நடுவே குருநாதர் எனக்கு இட்ட பணியான பதிவுகளை எழுதுகிறேன் . எழுத்து மற்றும் இலக்கண பிழைகளை அருள்கூர்ந்து மன்னிக்கவும் . அதில் சொல்லவந்த கருத்தையும் அதன் முக்கியத்துவத்தையும், இறைவன் அருள் பெற்ற நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் ). 



செவ்வாய், 6 அக்டோபர், 2020

ஒளியுடல் சாத்தியமே - முருகரின் ஒளி & ஒலி


ஒளியுடல் சாத்தியமே - முருகரின் ஒளி & ஒலி

 

முருகப்பெருமானின் முதல் வேத நூலான "மூளை எனும் தலைமை சுரபி" படித்தபின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இரண்டு மற்றும் மூன்றாம் வேத நூல்களான "ஒளி மற்றும் ஒலி" நூல்கள் அடியேனுக்கு குருநாதர் அருளால் கிடைத்தது . இந்த கலியுக எல்லைக்காலத்தில் இறைவனே அருளிய வேத நூல்களைப் படிக்கும் பாக்கியம் தந்த குருநாதருக்கு சரணாகத நன்றிகள். இன்றைய கலியுக மனிதர்களுக்கும் "ஒளியுடல் சாத்தியமே" என்ற நம்பிக்கையை நம் அனைவருக்கும் முருகப்பெருமான் அருளுகின்றார்.




                 ஒளி என்னும் இரண்டாம் வேத நூலில், ஒரு நாள் முழுக்க கிடைக்கும் சூரிய ஆற்றலை தெளிவாக விளக்குகிறார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் கொண்டது. ஒருநாளின் அறுபது நாழிகையில் விண்ணிலிருந்து மண்ணிற்கு நான்கு கனிமங்கள், ஐந்து மூலக்கூறுகளில் ( பஞ்சபூதம் ) கலந்து மூன்று இழைகள் வழியே வருகிறது ( 4 x 5 x 3 = 60 ) . அதிகாலை ( ப்ரம்மமுகூர்த்தம் ) தொடங்கி ஒவ்வொரு நாழிகையில் பெறப்படும் கனிமம் + மூலக்கூறு + இழை கூட்டமைப்பின் பொதுவான பலன்கள், நமது உடலுக்கான பலன்கள் , நோய்களை நீக்கும் நாழிகை , ஆற்றலை பெரும் நுணுக்கம் என வெகுதெளிவாக விளக்கப்பட்டுள்ளது . இந்த நூலுடன் மேலே குறிப்பிட்ட 4x5x3 கூட்டமைப்பு அட்டவணையும் இலவச இணைப்பாக கிடைக்கிறது . இந்த நூலை உணர்ந்து படிப்பவர் "சூரிய ஒளி ஆற்றலை ஜீவஆற்றலாக மாற்றி உபயோகிக்கும் உயரிய கலையை கற்றுக்கொள்வார். எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் படிக்கவேண்டிய அரிய அறிவியல் நூல் இது.


 

நம் குருநாதர் ஞான சைத்தன்யம் 51 என்ற பழைய வாசியோக நூலில் இருந்து ஒளி பற்றிய சில பாடல் வரிகளை உங்களுக்காக இணைத்துள்ளேன். லிங்கை அழுத்தி கேட்டு மகிழுங்கள்.

https://drive.google.com/file/d/108OezufeKW57yHEJqCjbrOdw8ma8uGnv/view?usp=drivesdk



           

மூன்றாம் வேத நூலான "ஒலி" எனக்கு பெரும் ஆச்சர்யத்தை தந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக மூடிமறைக்கப்பட்ட "ஒளியுடல் இரகசியம்" கலியுக மக்களுக்கு புரியும் வகையில் முருகப் பெருமான் விளக்கியுள்ளார். ஏன் இவ்வளவு வெளிப்படையாக இந்த நூலில் விளக்கினார் என எனக்கு ஆச்சர்யமும் சிறிது வருத்தமும் இருந்தது . புத்தகத்தை முழுமையாகபடித்தபின் காரணம் புரிந்தது. கலியுக எல்லையில் வாழும் நம்மீது இறை ஆற்றல்கள் இவ்வளவு கருணையோடு இருப்பது பெரும் வணக்கத்திற்குரியது.

ஒரு நாளின் 60 நாழிகை நேரத்தை மூன்று பகுதியாக பிரித்து, முதல் 20 நாழிகை நேரம்"அ" என்ற காந்த ஓசை , இரண்டாம் 20 நாழிகைநேரம் "உ" என்ற வெப்ப ஓசை, கடைசி 20 நாழிகை நேரம் "ம்" என்ற கலி ஓசை என அதற்குரிய பலன்களுடன் விவரிக்கிறார். மேலும் இந்த மூன்றும் இணைந்த "ஓம்காரநாதத்தின்" சூட்சுமத்தையும் கூறியுள்ளார்.

 

              

நமது சிரசில் உள்ள மிக உயர்ந்த அணுவான "ஒற்றை அணு" எனப்படும் ஆதிசக்தி அல்லது வாலை தேவதை பற்றிய அபூர்வமான நுணுக்கங்களை அதனுடன் தொடர்புடைய சுழுமுனை நாடி மற்றும் சூட்சுமநாடியுடன் தெளிவாக முருகர் விளக்கியுள்ளார். இவற்றின் அமைப்பு , செயல்பாடு , வேறுபாடு மற்றும் வணங்கும்முறைகளை அறிந்துகொள்ள இந்த புத்தகத்தைப் படிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது . சித்த யோக மார்க்கத்தில் செல்வோர் கட்டாயம் படித்தே ஆகவேண்டிய வேத நூல்கள் இவை . ஒற்றை அணுவின் துணை கொண்டு எப்படி "ஒளியுடல்" சித்திக்கும் என்ற நுட்பத்தை நீங்கள் அறிந்துகொள்ள இந்த நூல்களை முருகப்பெருமானை வணங்கி படியுங்கள் .




கடந்த மாதம் ஞானாலயம் குரு அன்னை அருள்திரு.பரிமளா ராஜு முக்தி அடைத்தார். அம்மையாரின் ஒற்றை அணு எப்படி அவரின் முக்திக்கு காரணமானது என்பது பற்றி நமது குருநாதர் ஒரு செய்திவெளியிட்டிருந்தார். இந்த ஒற்றை அணு செயல்பாட்டின் அபூர்வ தகவலை, " ஒலி" நூலின் பக்கம் 89 இல் முருகப்பெருமான் விளக்கியுள்ளார். சாதாரணமாக ஒரு ஒற்றை அணுவினால் தனது ஆன்மாவின் துணை இல்லாமல் ஈசமையத்திற்குள் செல்லமுடியாது . ஆனால், ஆன்ம விடுதலை அடைந்த ஒரு உயர் ஆன்மாவின் ஒற்றை அணுவானது தனியாக "ஒரு முறை ஈசமையம் எனும் சூரிய கோளின் மையப் புள்ளியினைச் சென்று அடைந்துவிட்டால் அண்டத்துப் பாதரசத் துகளாகவே ஒருமாறிட இயலும்"!! அன்னையரின் ஒற்றை அணு அவ்வளவு வீரியம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது . இதனைஅறிந்துகொள்வது சாமானிய மானிடர்களால் இயலாது .





எல்லாம் சரிதான் சார். ஆனால் ஒளியுடல் கொண்ட சித்தரின் ஒரு சிறுசாட்சியாவது உள்ளதா ? என நீங்கள் நினைப்பதை என்னால் புரியமுடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அருள்திரு. சாமி அழகப்பன் அய்யா சதுரகிரி மலையில் படம் பிடித்த ஒரு சிறு பகுதியை கீழே உள்ள இணைப்பில் கவனமாகப் பாருங்கள். ஆச்சர்யமாக உள்ளதா ? ஆமாம் சார் , உடல் உறுப்புகள் எல்லாம் எப்படி செயல் இழந்து உருகிவிடும் என்ற விபரத்தைமுருகப்பெருமான் தனது "ஒலி" என்ற மேலே குறிப்பிட்ட நூலில் விளக்கியுள்ளார் .

https://youtu.be/oG0RZ9rO0AM



உடனே அந்த ஒளியுடல் சித்தரைஅழைத்து வந்து தொலைக்காட்சில் பேட்டி காணலாமா? என கேட்காதீர்கள். உங்கள் கலியுக சங்காத்தமே வேண்டாம் என்றுதான்அவர் சிவனே என்று மலைகளில் உலவிக்கொண்டிருக்கிறார். முடிந்தால் நீங்களே ஒளியுடல் பெற்று அவரிடம் சென்று பேசுங்கள்.

ஒற்றை அணு குரு சரணங்கள் :-






ஓம் அகத்தீசாய நமஹ.

அகத்திய பக்தன்.