கடந்த வியாழன் அன்று, காங்கேயம் வெள்ளகோவில் அருகேயுள்ள ஒத்தக்கடையில் அகத்தியர் கோவிலைப்பற்றி அறிந்தேன். உடனே அந்தக்கோவிலுக்கு சென்று அகத்தியரை வணங்க உள்மனம் வலியுறுத்தியது. எனது கோவை அலுவலகத்திலிருந்து மதியம் எனது வாகனத்தில் கிளம்பினேன். எனது மிதமான வேகத்தில் இரண்டு மணிநேர பயணம்.
காங்கேயம், பிறகு வெள்ளகோவில் சென்று "அகத்தியர் கோவில் உள்ள ஒத்தக்கடை" என விசாரித்ததில், வெள்ளக்கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே ஒத்தக்கடை நிறுத்தத்திலிருந்து நடக்கும் தூரத்தில் அகத்தியர் கோவில் இருந்தது. அது சிறு கோவில்தான், ஆனால் லோபாமுத்ரா சமேத அகத்தியர் என அருளோடு இருந்தது. கோவிலில் நுழைந்தவுடன் ஒரு வயோதிக தம்பதி என்னை இன்முகத்தோடு வரவேற்றார்கள். யாரோ ஒரு ரசவாத வைத்தியர் ஒரு அகத்தியர் சிலை மற்றும் ஒரு சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜித்தாராம். அவர் காலமான பிறகு அவரது பிள்ளைகள் அந்த சிலைகளை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டார்கள். அந்த சிலைகளின் அருட்பார்வையில் பக்திகொண்ட வயோதிக தம்பதி, அதை தம் வீட்டிற்கு எடுத்து வந்து பூஜித்திருக்கிறார்கள். அகத்தியருக்கு கோவில் கட்டவிரும்பிய அவர்களுக்கு ஒரு பெரியவர் தன் இடத்தை தானமாக கொடுக்க, வசூல் செய்து, பலரது காணிக்கையில் கோவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அருளோடு உருவாகிவிட்டது. அந்த வயோதிக தம்பதி கோவிலிலேயே தங்கி அகத்தியருக்கு பூசை செய்து கோவிலை பராமரிக்கிறார்கள். கோவில் முன்பு லோபாமுத்ரா சமேத அகத்தியர் பாதங்களையும் பதித்திருக்கிறார். இறைவன் பாதங்களில் நம் கைகளை வைத்து வணங்கி நான் அரை மணிநேரம் அகத்தியரை தியானம் செய்தேன். அற்புதமாக இருந்தது. பின்பு அவர்கள் ஒரு சுக்கு காபியும் தந்தது மிகவும் உற்சாகத்தையும் தந்தது. எனக்கு சாதாரணமாக ஒருமணி நேரம் வாகனத்தை ஒட்டினாலே கீழ் இடுப்பு வலி ( Low Back Pain ) வந்துவிடும், ஆனால் போக வர நான்கு மணிநேரத்திற்குமேல் வாகனம் ஓட்டியும் எந்தவலியும் அகத்தியர் அருளால் வரவில்லை. வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் அந்த கோவில் நினைவுகள் நீங்கவில்லை. அந்த கோவிலில் அகத்தியர் அருளும், அந்த வயோதிக தம்பதியின் முகங்களில் இருந்த அகத்தியரின் நம்பிக்கை ஒளியும், என் நெஞ்சத்தைவிட்டு இன்னும் நீங்கவில்லை. நான் ஒவ்வொருமுறை தியானம் செய்யும்போதும் அகத்தியர், தன் பக்தர்கள் யாருக்கோ இந்த கோவில் செய்தியை பகிரவிரும்புவதை நான் மிக மிக அழுத்தமாக உணர்கிறேன். யாருக்கு இந்த செய்தி என எனக்கு தெரியவில்லை. அகத்தியர் உத்தரவாக இதை எழுதிவிட்டு அகத்தியர் பாதத்தில் என் மனஅழுத்தத்தை இறக்கிவைக்கிறேன். அகத்தியர் பக்தராக நீங்களோ அல்லது உங்கள் நட்பு சொந்தங்களோ இந்த அகத்தியர் கோவில் அருகிலுள்ள ஊரிலோ, அல்லது அந்த ஊர்வழியாக சென்றாலோ (காங்கேயம், வெள்ளகோவில், கரூர், திருப்பூர், கோவை, பல்லடம், தாராபுரம் ), உங்கள் மனதில் அகத்தியர் அருளினால் கோவிலுக்கு சென்றுவாருங்கள். அவர்களிடம் எந்தவித காணிக்கையோ எதிர்பார்ப்போ இருக்காது. நீங்கலாக விரும்பிய சிறு காணிக்கையை கோவில் பராமரிப்பிற்கு செலுத்தலாம்.
தொடர்பிற்கு : அகத்தியர் கோவில் அடிமை திரு. குருசாமி - ஸ்ரீ அகத்தியர் சிவாலயம், கரூர் மெயின் ரோடு, ஒத்தக்கடை, நாட்ராயன் கோவில் ரோடு, கே.வீ. பழனிசாமி நகர், வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டம்.
இந்த வெள்ளகோவில் ஊருக்கு அருகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற "சிவன்மலை" கோவிலும் உள்ளது.
ஓம் அகத்தீசாய நமஹ.
பிரம்மேந்திரன்.