தெய்வ வாகன ஞானம்
இந்து தெய்வங்களின் வாகனங்களில் இருக்கும் ஞான தத்துவ குறிப்புகளை இங்கு காணலாம்.
1) காளை - நந்தி - யோகியின் உடல்
வால்மீகர் ஞானம் - பாடல்
"சிந்தை தெளிந்து இருப்பவனாம் அவனே சித்தன்
செகமெல்லாம் சிவம் என்றே அறிந்தோன் சித்தன்
நந்தி என்ற வாகனமே தூல தேகம்
நான்முகனே கண் மூக்கு செவி நாக்கு ஆகும்
தந்திமுகன் சிவசக்தி திருமூச்சு ஆகும்
தந்தை தாய் ரவி மதி என்று அறிந்து கொள்ளே"
நம் உடல் - சிவத்தைச் சிமக்கும் நந்தி என்னும் வாகனம்.
more in blog :-
2) சிங்கம் - சிம்மவாஹினி - கேசரி முத்திரை
கேசரி என்றால் சிங்கம் என்று பொருள்படும்.
பராசக்தியை சிம்மவாஹினி என்று அழைத்ததன் பொருள், சிம்மம் என்ற கேசரி முத்திரைக்கு மேலே இருப்பவள், கேசரி முத்திரையை வாகனமாகக் கொண்டவள் என்பதே.
நம் குருநாதர், சௌமிய சாகரம் பாடலில் இவளை "கேசரியாள்" என அழைக்கிறார்.
"பதிவான இடமதுதான் புருவ மத்தி
பரை ஞான கேசரியாள் இருக்கும் வீடு
விதியான வீடறிந்து கெதி என்றெண்ணி
மெஞ்ஞான அமுர்த ரசம் கொண்டாயானால்
மதியான சந்திரகலை ரவியில் சென்று
மகத்தான சோதி பிரகாசங் காணுங்
கெதியான சோதியான பிரகாசங் கண்டால்
கேசரத்தை ஆளுகிற வாசிதானே"
more in blog :-
https://fireprem.blogspot.com/2022/11/blog-post.html?m=1
3) எலி - மூஞ்சூறு - முச்சுடர்
விநாயகர் மூஞ்சூறை ( முச்சுடரை ) வாகனமாகக் கொண்டவர்.
4) காகம் - நெருப்பு - காகபுசுண்டர்
பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நெருப்பு தத்துவம். நெருப்பு மூலக்கூறின் ரூபம். காகபுசுண்டர் கீழ்க்கண்ட தனது பாடலில், தான் பல யுகங்களாய், நெருப்பு ரூபத்தில் ( ஒளி உடலில் ) இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
காகபுசுண்டர் ஞானம் - பாடல் 48
பாரடா இப்படியே யுகங்கள் தோறும்
பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி
ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ?
ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன்
வீரடா விமலரிடஞ் செல்லும் போது
வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்;
காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்!
காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே.
more in blog :- ( மயில், கோழி, ஆந்தை, வல்லூறு ).
https://fireprem.blogspot.com/2022/03/blog-post_27.html?m=1
5) நாய் - ஞமலி - நெருப்பு
பைரவரின் வாகனம்.
more in blog :-
https://fireprem.blogspot.com/2021/07/blog-post.html?m=1
6) மான் (or) கலைமான் - வாயு - மனம்.
வாயுவின் வாகனம் - விசுத்தி
சந்திரனின் வாகனம் - மனம்
காலங்கிநாதர் - கால் என்றால் காற்று என்று பொருள். காற்றை ஆடையாக அணிந்தவர்.
7) குதிரை - பரி - வாசிக்குதிரை.
பிராண சக்தி.
சண்டிகேஸ்வரர் வாகனம் குதிரை.
சண்டிகேஸ்வரர் வாசியோகத்தின் உச்சமான மௌனத்தில் எப்போதும் லயித்திருப்பார்.
8) எருமை - மரணதேவன் எமதர்மனின் வாகனம் - நிதானம்.
மரணம், முக்தி அடையும் வரை நிதானமாக வர வேண்டும். அவசரப்பட்டு வரக்கூடாது. அவசரம் எனில் மீண்டும் பிறந்து விடுவோம் அல்லவா.
9) மேலும் மற்ற வாகன விலங்குகளை, ஒரு யோகியின் மனோபாவத்தில் யோசிக்கவும்.
கேள்வி எழுப்பிய அருமை நண்பர் "அன்பாலயம் செல்வகணேசுக்கு" அனேக நன்றிகளை தெரிவிக்கிறேன்.
இப்படிக்கு,
அகத்திய பக்தன்.