சனி, 31 டிசம்பர், 2016

பிடிவாத வாதத்தை பிடிப்பதெவ்வாறு ?

ஓம் அகத்தீசாய நமஹ.

      பிடிவாத வாதத்தை பிடிப்பதெவ்வாறு ?

மானிடரின் வாழ்க்கையெல்லாம் மாயம்தானே,
மாயத்துள் மாயமென்றால் நோய்கள்தானே.
உட்கார்தே பணிபுரிந்தேன் பலகாலம் நானே,
மதிதன்னை கூராக்கி உழைத்திட்டேனே,
உழைத்ததனால் வந்ததெனுக்கு உயர்வுதானே,
உயர்வோடு கிடைத்தது இடுப்பில் வாதம்தானே.
வாதமென்றால் கொடுவாதம் காலுக்கிறங்கும்,
இப்படியே ஈரைந்து ஆண்டு போச்சு.
சிறுவாதம் என்றாகாள் மூலிகை உண்டு,
கெடியான வாதமென்றால் கொடுமைதானே.
கொடுமையென்றால் இருநாழிகை உட்கார்ந்துவிட்டால்,
வந்துவிடும் வாதமது இடுப்பில் தானே.

எனையீன்ற அற்புதமே! அகத்தியராஜா!
உன்பாதமே சரணமென்று அழுத்திட்டேனே.

"அன்பான என்மைந்தா சொல்லக்கேளு,
கூரான சூட்சுமங்கள் உனக்கு உண்டு,
பரிவாக சொல்லுகிறேன் பணிந்து கேளு.
உந்தனது பகுதியிலே ஒரு ஆசானுண்டு,
வர்மமென்ற புள்ளியிலே வகையுமுண்டு.
கும்பமுனி குழந்தையென்று சொல்லி்ப்பாரு,
சனியான வாதத்தை சாய்ப்பான் பாரு,
கெடியான புள்ளிதனை உனக்கும் சொல்வான்,
பணிவாக கேட்டுப்பார் உன் பிணிதான் போச்சு".

--அகத்திய பக்தன். 

செவ்வாய், 20 டிசம்பர், 2016

my favourite websites



1)     எல்லா கேள்வி பதில்களையும் படித்துவிடுங்கள். மிக முக்கியம். முடிக்க சில நாட்கள் ஆகும்.
http://www.machamuni.com/



http://machamuni.blogspot.in/



2)     நான் மூலாதாரத்தில் மட்டும் வாசி செய்து என் குரு அகத்தியரை எல்லா சக்கரத்திலும் தியானம் செய்வேன். என் சொந்த அனுபவம், இல்லறத்தில் இருப்பவர் மட்டும் செய்தல் நலம். இனி உங்கள் விருப்பம். குரு அருளால் இல்லறம் இனிதாக இருக்கும்.
http://www.siddharyogam.com/yoga/yogapalagu/vasiyogam



3)     அருமையான பதிவுகள்.
http://yogicpsychology-research.blogspot.in/



4)     6 ஆண்டுகளுக்கு முன்  இந்த தளத்தை பார்த்த பிறகுதான் எனக்கு அகத்தியர் மேல் பக்தி வந்தது. அகத்தியரின் லட்சுமி காயத்ரி மந்திரம் பலமுறை ஜெபம் செய்து நிறைய வெளிநாடு வாய்ப்புகள் பெற்று எனது பொருளாதாரத்தை  உயர்திக்கொண்டேன். அகத்தியரின் அனுமன் வாசிக்கட்டு மந்திரம் ஜெபம் செய்து என் தேவை இல்லா பயத்தை போக்கிக்கொண்டேன்.


http://www.siththarkal.com/

my question 1 - கேள்வி

அன்புள்ள அப்பா,

எனக்கு வெகுநாளா ஒரு கேள்வி மனதில் ஓடுகிறது.

நாம் கேள்விப்படும் கடந்த 200 ஆண்டுகளில், எத்தனையோ யோகிகள் ஞானிகள் ( ஜட்ஜ் பலராமைய, கன்னையா யோகி, கடப்பை சச்சிதானந்த யோகீஸ்வரர், சித்திரமுத்து அடிகள், மற்றும் நிறைய )  சித்தர்கள் அருளால் வாசி யோகம், காயகற்ப யோகா ஆராய்ச்சி, ரசவேதை பல செய்து பல நூல்களும் எழுதினார்கள். ஒரு சாதாரண கூலிவேலை விவசாயம் செய்யபவன் கூட பழைய சோற்றை உண்டுவிட்டு 100 வருடம் ஆரோக்கியமாக வாழ்த்தை நாம் பல கேள்விப்படுகிரோம். ஆனால் இவ்வளவு வாசி, காயகற்பம், ரசவாதம் செய்த ஞாநி யோகிகளால் ஏன் ஒரு 100 ஆண்டுகள் கூட உயிருடன் வாழ முடியவில்லை ? தாப்பா ஜெகநாத ஸ்வாமிகள் 145 வயதிற்கும் மேல் வாழ்ந்தார் என அறிந்தேன். இந்த அளவுக்கு இல்லாவிடினும், அற்பமான 100 வயதாவது வாழ இயலாமல் இவர்கள் மாண்டுபோவது ஏனோ ? இவர்களின் ஞான அனுபவத்தை நூல்கள் மூலம் அறியமுடிகிறது, ஆனால் ஒரு தாழ்ந்த உலோகத்தை தங்கமாக மாற்றவும், பலருக்கும் ஞான அறிவு அருளவும் ஆற்றல் உடையவருக்கு, ஏன் தன் உடலை ஒரு 100 ஆண்டுகள் உயிருடன் வைக்க முடியவில்லை ?  ஒருவேளை இது கலிகாலத்தில் சாத்தியம் இல்லையா ? பல கோடிபேர்க்கு ஒரேயொரு தப்பா ஜெகந்நாதர் தானா? அனேக வாசி, காயகல்பம், ரசவாதம் செய்த பலன்தான் என்ன ? இவர்கள் ஞானம் எத்தகையது?

தங்கள் மகனான எனக்கு அதிக ஆண்டுகள் வாழ்வதில் பிடிவாத ஆசை இல்லை. விதியை மாற்றும் ஒரு வாசி காயகல்ப ரசவாத யோகிக்கு ஒரு 100 வயதை அளவுகோலாக வைக்கலாமா ?

நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். தங்கள் மகனாக இந்த காரணத்தை அறிய தாழ்மையோடு கேட்கிறேன்.



உங்கள் மகன்.

பிரேம்.

ஆசான் யோகி ராஜா கிருஷ்ணா மூர்த்தி அவர்களுக்கு சிறுவனின் சிறுகவிதை

ஓம் அகத்தீசாய நமஹ.


ஆசான் யோகி ராஜா கிருஷ்ணா மூர்த்தி அவர்களுக்கு சிறுவனின் சிறுகவிதை.


அன்பான அய்யனே என் அருமை தந்தையே !

பதினெண்மர் பாடல்களும் பக்குவமாய் உன் எழுத்தில் !

பூட்டெல்லாம் உடைத்தாயே உன் பெருமை என்ன சொல்வேன் ?

மார்தட்டி சொன்னேனே உன்னைபோல் யாரிங்கே ?

குழம்பிப்போய் திரிந்தவனை அக்கறையாய் தேற்றிட்டாய்,

கதலிப்பூ குண்டத்தில் மட்டும் விளையாட சொன்னீரே !

முக்கோணம் தொட்டுப்பார்த்தேன், வட்டமதை சுற்றிவந்தேன் !

பாய்ததைய்யா மின்சாரம் பதறாமல் வாங்கிக்கொண்டேன்,

இன்பமதை என்னசொல்வேன், இல்லறம்தான் சிறக்குதையா !

நாளும் ஒரு காதல் கொடி நன்றாக பறக்கவிட்டேன்.

அகாரமாய் நான்தானே ! உகாரமாய் அவள்தானே !

உத்தமனாம் அகத்தீசர் முக்கோண குண்டத்தில்,

காந்தமும், இரும்பும் சேரட்டும் என அருளினாரே.



அகத்திய பக்தன்.




குறிப்பு :-
கதலிப்பூ - நான்கு இதழ்கள் கொண்ட ஒரு மலர். மூலாதார சக்கரத்தை குறிப்பது.

மூலாதார சக்கரத்தில் கீழ்நோக்கிய முக்கோணம் இருக்கும்.